Thursday, March 28, 2013

நவகிரகங்களுடன் பேட்டி : குரு

அண்ணே வணக்கம்னே !
அமாவாசை இருட்ல  பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழிங்கறாப்ல இந்த தொடர்  போயிட்டிருக்கு. எப்படியோ ஆரம்பிச்சுட்டம். எப்படியோ ஒன்னு முடிச்சுட்டா போதுங்கற நிலைக்கு வந்துட்டன். ஆருனா புண்ணியாத்மாக்கள்  நாம போட்டுக்கிட்டிருக்கிற பதிவுகளை சாதி பிரிச்சு தலைப்பு -சுட்டினுட்டு கொடுத்தா புண்ணியமா போகும்.

நண்பர் தான்  துவக்கின கன்னிமரா லைப்ரரி வலைதளத்தோட டொமைனை ரென்யூவல் பண்றதுல அக்கறை காட்டலியா நாம அதை சொந்தமாக்கிக்கலாங்கற முடிவுக்கு வந்துட்டம். கடந்த பாராவுல சொன்னாப்ல தலைப்பும் -சுட்டியுமா தொகுத்து இந்த வலைதளத்துல ஷோ பண்ணலாம்னு உத்தேசம். ஆத்தா உத்தரவு எப்படியோ தெரியலை.

குருவை பற்றி தெரிஞ்சுக்கனும்னா நம்ம வாழ்க்கைய ஒரு க்ளான்ஸ் திரும்பி பார்த்தாலே போதும்.  நாம நாசமா போக எத்தீனி வாய்ப்புகள் தேவையோ எத்தீனி சூழல் தேவையோ அத்தனையும்  நமக்கு இருந்தது. லக்னம் கடகமாகி லக்னத்துல புதன் -சூரியன் .புதன் 3-12 க்கு அதிபதி .  புதன் 3 க்கு அதிபதிங்கறதால எதையுமே சாலஞ்சிங்கா எடுத்தக்கறது ,அண்ணன் தம்பிகளோட வெட்டுப்பழி -குத்துப்பழி .

சாலஞ்சிங்குன்னா ஒங்க வீட்டு எங்க வீட்டு சாலஞ்சிங் இல்லிங்கோ ஒரு தாட்டி ஒரு குட்டிய கணக்கு பண்ண அவிக ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வரவழைச்சோம் - அந்த வீட்டு கிணறு ரெண்டு வீட்டுக்கு பாகம். ரெண்டு ராட்டினம் -ரெண்டு கயிறு  போட்டு குறுக்கால கதவிருக்கும்.

எதுனா அசந்தர்ப்பம்னா இந்த பக்கம் நுழைஞ்சு அடுத்த வீட்டுக்குள்ளாற போயிரலாம்னு ப்ளான். (அடுத்த ஊட்டுல நமக்கு ஃபுல் லைசென்ஸூ)  சுஜாதா கதையில வசந்த் கணக்கா குட்டியை மூலையில தள்ளி வாசனை பார்க்கிற தூரத்துக்கு கூட போகலை. அவளோட அம்மா இந்த ஊட்டுக்குள்ள நுழைஞ்சிட்டிருக்கா.

காவலுக்கு வச்சிருந்த இந்த ஊட்டு பையன் பே பேங்கறான். அம்மாக்காரிக்கு இன்னம் டவுட்டு சாஸ்தியாயிருச்சு.

நேர உள்ளாற வந்துக்கிட்டிருக்கா.வராந்தா ..ஹாலு ..கிச்சன். அடுத்தது பாத்ரூம் தான். அங்கன தான் கிணறு.அம்மாக்காரி முன்னேறி வர வர நாம அப்டியே பேக் டு தி பெவிலியன். கிணத்தாண்டை பார்க்கிறோம். கொய்யால ..கிணத்துக்கு குறுக்கால இருக்கிற கதவு அந்த பக்கம்  லாக் ஆகியிருக்கு.

என்னா பண்றது? ஒரே செகண்டுதான். படக்குனு ஸ்பார்க் ஆச்சு. கவுறை தூக்கி ராட்டினத்துல ஒரு முடிச்சை போட்டு கயிறை புடிச்சிக்கிட்டு பட படன்னு உள்ளாற இறங்கியாச்சு.  அம்மாக்காரிக்கு சந்தேகம் இன்னம் தீரலை. கக்கூஸு வரை போயிட்டு தான் ஒரு போய் தொலைஞ்சா.  அன்னைக்கேதோ நம்ம வெயிட்டு 48 கேஜிங்கறதால ஓகே. இன்னைக்குன்னா (120 கேஜி) மணிக்கட்டே கழண்டிருக்கும்.

இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை. புதனோட ராசிகள் எவை? மிதுனம் - கன்னி . மிதுனம்னா என்ன? மைதுனம். மைதுனம்னா என்ன? வேறென்ன கில்மா தான். கன்னி? ராசிச்சக்கரத்துல ஆறாவது ராசி. சத்ரு ரோகம் ருணம். இதான் நம்ம வாழ்க்கைய ஒட்டு மொத்தமா ஆக்கிரமிச்சிருந்தது.

லக்ன சூரியனை டீல்ல விட்டுட்டமா? வரேன். சூரியன்  உலகத்துக்கெல்லாம் ஒளி தராரு. பெட் ரமாக்ஸ் லைட்டுக்கு கூட பாடிகை தராய்ங்க. சூரியனுக்கு ?
சூரியன் ஒலகத்தையே தட்டி எளுப்பறாரு. அவரு தூங்க முடியுமா? ஊஹூம்.

அதுலயும் அவருக்கு சொந்த வீடு சிம்மம். சிம்மத்துக்கு மிந்தின வீடு கடகம். நீங்க காலையில ரெடியாகி வேலைக்கு போறிங்க.  நாளெல்லாம் மாரடிச்சுட்டு வீடு திரும்பறிங்க. அந்த சந்தர்ப்பத்துல உங்க வீட்டு கிராஸுக்கு மிந்தின கிராஸுல உங்க மன நிலை எப்படி இருக்கும்? எப்படா ஊட்டை போயி சேருவம்னு தான் இருக்கும்.

அந்த மினிட்ல உங்களால எதையாவது டிசைட் பண்ண  முடியுமா? டிக்ளேர் பண்ண முடியுமா ?ஊஹூம். இந்த நிலையில உள்ள சூரியன் லக்னத்துல இருந்தா எப்டி இருக்கும்? ரோசிச்சு பாருங்க.

எந்த காரியத்தை எடுத்தாலும் முடிக்கிறதை பத்திதான் மைண்டு ரோசிக்கும். ஒன்னை ஆரம்பிக்கும் போதே இதை எப்படி முடிச்சு வைக்கிறதுன்னு தான் யோசிக்கும். இந்த வரிகளை டைப் பண்ணும் போது கூட ஆன் லைன் ஜோதிட ஆலோசனை - பதிவுகள் போடறது இது ரெண்டையும் எப்படி முடிச்சு வைக்கிறதுன்னு தான் எண்ணம் ஓடுது.

எதுனா சீரியல்ல மாமா, சித்தப்பா மாதிரி ஒரு ரோல் கிடைச்சா ரெண்டு வருசம் தாங்கும். லைஃப்ல செட்டிலாயிர்ரது,  வாரத்துல ஒரு நாள் இலவ ஜோதிட ஆலோசனை (மட்டும்) - நாளிதுவரை நாம எழுதின பதிவுகளை எல்லாம் ஒழுங்கு படுத்தி கன்னிமராலைப்ரரி டாட் கோ டாட் இன்ல வச்சுர்ரது .
இதையெல்லாம் மீறி .. எங்கன உருப்படறது? அதுலயும் சூரியன் பாப கிரகம் - பாபனோட சேர்ந்த புதனும் பாவி. லக்னத்துல ரெண்டு பாபிகளை வச்சுக்கிட்டிருந்தா என்ன ஆகும்? நோ பீஸ் ஆஃப் மைண்ட் னுட்டு பாட்டு பாடவேண்டியதுதான். மைண்டு ஒரு பக்கம்னா பாடி என்னத்துக்காகும்.

குருவை சூரியன் கண்ட்ரோல் பண்றாரு. சூரியனை புதன் கண்ட்ரோல் பண்றாரு. ஆக லக்னத்துல ஆக்டிவா இருக்கிறது புதன் தான்.புதன் விரயாதிபதி. என்னா இழவு இது? குரு மட்டும் யோக்கியமா என்ன? டபுள் ஆக்டு . இந்த பக்கம் பார்த்தா ரோகாதிபதி -அந்த பக்கம் பார்த்தா பாக்யாதிபதி.
குரு நின்ற இடத்தை விட பார்க்கும் இடம் விருத்தியாகும். குருவுக்கு 5-7-9 ஆம் பார்வைகள் உண்டு. இதில் 5-7 பார்வைகள் விசேஷம்ங்கறது விதி.கடகத்துல குரு உச்சங்கறது தெரிஞ்ச கதைதானே.

ஜஸ்ட் லக்னத்துல மட்டும் இத்தீனி ஓட்டை. இன்னம் லக்னாதிபதி வாக்குல நின்னு எட்டை பார்க்கிறது.. ரெண்டாமிடத்துல பாதகாதிபதியான சுக்கிரன் நிக்கிறது, நாலாமிடத்துல செவ் கேதுல்லாம் எக்ஸ்ட்ரா. இதையெல்லாம் மீறி டப்பு இருந்தாலும் -இல்லின்னாலும் , ஜெபம்,தியானம்,யோகா இத்யாதி தெரியாத காலத்துலயும் சரி - ஓரளவு தெரிஞ்ச இந்த காலத்துலயும் சரி  வண்டி ஓடிக்கிட்டுத்தான் இருக்கு. கொஞ்சம் மருவாதி, ஸ்விம் சூட் மாதிரியாச்சும் சிக்கனமா புகழ் எல்லாம் இருக்கு.

இதையெல்லாம் கொடுத்துக்கிட்டிருக்கிறது லக்ன குருவும் அவரோட அஞ்சு -ஒன்பதாம் பார்வைகளும் தான். ஹி ஹி இந்த சொந்த கதையை முன்னுரையா வச்சுக்கங்க. நாளையிலருந்து ஜரூரா குருவை படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்கலாம்.ஓகேவா உடுங்க ஜூட்டு.