Thursday, October 16, 2008

மனிதனுக்கு உடல்,மனம்,புத்தியை தாண்டி மற்றொரு பரிமாணம்


ஆன்மீகம் என்றால் என்ன? மனிதனுக்கு உடல்,மனம்,புத்தியை தாண்டி மற்றொரு பரிமாணம் உள்ளது என்பதை உணர்வதே ஆன்மீகம்.இதற்கு மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் உடலை வன்முறையற்ற பிரம்மச்சரியத்தால் அல்லது முறையான,விழிப்புணர்ச்சியுடன் கூடிய உடலுறவாலும் அமைதியுறச்செய்ய வேண்டும். மனதை நல்லெண்ணங்களால்(சர்வே ஜனா சுக்கினோபந்து) ஓய்வு பெறச்செய்யவேண்டும்.புத்தியை விகசிக்கச்செய்து இந்த படைப்பை தன் புத்தியை கொண்டு ஆராய்ந்து படைப்பு தன் புத்திக்கெட்டாதது என்பதை அனுபவ பூர்வமாய் உணர வேண்டும். அப்போது ஆன்ம தளத்தில் புதிய வாழ்வு துவங்கும்.

அல்லது உடல்,மனது,புத்திகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் சிக்க வேண்டும்,உடல், மனம்,புத்தியால் தீர்வுக்கு முயன்று தோற்க வேண்டும். அப்போது ஆன்மாவிழிப்பு கண்டு தீர்வுக்கு உதவ வரும்.

பக்தமானஸ ஹம்சிகா . இது அன்னையின் திருநாமங்களில் ஒன்று. இதற்கு ஒரு பார்ப்பன பத்திரிக்கையில் வரும் தொடர் ஒன்றில் (இதை எழுதுவதும் ஒரு பார்ப்பன ஆண்/பெண்ணாக இருக்கவே வாய்ப்பு அதிகம்)தரப்பட்டிருக்கும் பொருள் பற்றியே இந்த பதிவு.

ஹ‌ம்ச‌ம் என்றால் அன்ன‌ம் என்று பொருள். அன்ன‌ம் த‌ண்ணீரையும் பாலையும் க‌ல‌ந்து வைத்தாலும் பாலை மட்டும் பிரித்து அருந்தும் என்ப‌து கான்செப்ட். ப‌க்த‌ மான‌ச‌ என்றால் ப‌க்த‌னின் ம‌ன‌தில் என்று பொருள் கொள்ள‌லாம். இத‌ற்கு பார்ப்ப‌ன‌ ப‌த்திரிக்கையில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பொருள் அம்மா (ஆத்தா) ப‌க்த‌னின் ம‌ன‌தில் உள்ள‌ ந‌ல்ல‌து கெட்ட‌தில் ந‌ல்ல‌தை ம‌ட்டும் எடுத்துக்கொண்டு அருள் புரிவாளாம். அட‌ங்கொப்புரானே..இவ‌னுங்க‌ என்ன‌ அம்ம‌னுக்கு பி.ஏ வா இல்லே அஃபிஷிய‌ல் ஸ்போக்ஸ்மேனுங்க‌ளா?
ப‌க்த‌னுடைய‌ ம‌ன‌சுல‌யிருந்துக்கிட்டு ந‌ல்ல‌து கெட்ட‌தை பிரிச்சு காட்டுறானு கூட‌ சொல்ல‌லாமே!


ஒருவேளை க‌ல்கி ஆசிரிய‌ர் , ஆசிரிய‌க்குழு உறுப்பின‌ர்க‌ளோட‌ ம‌ன‌சுல‌ இருக்கிற‌ க‌ழிச‌டைக‌ளை மீறி க‌ல்கி மார்க்கெட்ல‌ குப்பை கொட்டுற‌த‌ வ‌ச்சு இப்ப‌டி போட்டுட்டாங்க‌ளோ என்ன‌மோ?


ஒவ்வொரு ஆண்,பெண்ணிலும் ஆண் த‌ன்மை பெண் த‌ன்மை க‌ல‌ந்திருப்ப‌து போல‌வே, ஒவ்வொரு ம‌னித‌னிலும் நான்கு வ‌ர்ண‌ங்க‌ளுக்கான‌ குண‌ந‌ல‌ன்க‌ள் பொதிந்துள்ள‌ன‌.

வீர‌மே உருவான‌ ஆண் அன்பு காட்டுத‌லில் இற‌ங்கி விட்டால் எப்ப‌டி அன்பே உருவான‌ பெண்ணை முந்திவிடுகிறானோ அதே போல் இறைவ‌ழி புகுந்து விட்ட‌ சூத்திர‌ன் பார்ப்ப‌ன‌னை உஃப் என்று ஊதிவிடுவான்.

த‌லை முறை,த‌லை முறையாய் அரைத்த‌ மாவையே அரைத்து இவ‌ங்க‌ளுக்கு அலுத்து போச்சோ என்ன‌மோ, ஒரு சூத்திர‌ப்ப‌ய‌லின் உண்மை ப‌க்திக்கு முன்பு இவ‌ர்க‌ள் ப‌ரிமாறும் உப்பு ஊறுகாய்க‌ள் ஜுஜுபி என்ப‌தை உண‌ர‌ வேண்டும்