Monday, October 27, 2008
உலக பொருளாதார நெருக்கடியை குறைக்க சில யோசனைகள்
உலக பொருளாதார நெருக்கடியை குறைக்க சில யோசனைகள்
மனிதனின் ஆசைகள் அளவற்றவை. அவற்றினை நிறைவேற்றிக்கொள்வதற்கான வளங்கள் அளவுக்குட்பட்டவை. இதுவே சகல பிரச்சினைகளுக்கும் காரணம். ஒன்று ஆசையை குறைக்க வேண்டும். அல்லது வளங்களை அதிகரிக்க வேண்டும். இரண்டிற்கும் இடையில் மற்றொரு வழியும் உள்ளது. ஜனத்தொகையை குறைக்க வேண்டும்.
ஆசைகள்:
இவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
1.ஸ்தூலமானவை(இன்றியமையாதவை உம்.உணவு,உடை,இருப்பிடம்,செக்ஸ்)
2.மானசிகமானவை உம்.பலான ஓட்டலில் சேமியா பலான ஓட்டல் பாயாவுடன்,பலான் பிராண்ட் இம்போர்ட்டட் ஜீன்ஸ்,வில்லா,அப்பார்ட்மெண்ட் ,பலான குட்டிநடிகையுடன் செக்ஸ்
மனிதர்களின் ஸ்தூல கோரிக்கைகளை அரசே நிறைவேற்றி வைக்கலாம். தமிழக அரசு ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கும் பாணி அல்ல . சுதந்திரமாக வேலை பார்க்கும் வாய்ப்பு.உம். ஒரு தெருவின் இருபுறமும் மரம் வைத்து பராமரிப்பது(பலனை அனுபவிக்கவும் வாய்ப்பு)கொடுத்து அதற்குண்டான ஊதியத்தை மாநில தலைநகரிலிருந்தே அவர் கணக்கில் போட்டு விட,அவர் ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ளலாம்.