Thursday, October 16, 2008

எனது ப்ளாக் ஹோல் தியரி

நேற்று சித்தூர் சிந்தூரி ஓட்டலுக்கு சென்றிருந்தேன். திருமலை செல்லும் க்ரூப் போலும் பட்டுப்புடவைகள் என்ன..தக தகக்கும் தங்க நகைகள் என்ன..இவர்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?

எனது ப்ளாக் ஹோல் தியரியை விவரிக்க முடியுமா? ப்ளாக் ஹோல் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு சிறு குறிப்பு:

கருந்துளை என்பது அதனுள் செல்லும் எதையும் காணாமல் போகச்செய்யும். அதனுள் எது சென்றாலும் சக்தி உறிஞ்சப்பட்டு சக்கையாக்கப்படும்.

மணி(money) மார்க்கெட்டிலும் இது போன்ற கருந்துளைகள் உண்டு. உதாரணமாக:
நான் 55 ஆயிரம் செலவழித்து ஒரு டூ வீலர் வாங்குகிறேன். 3 மாதத்திலேயே திடீர் என்று பண நெருக்கடி விற்கப்போகிறேன். 23 ஆயிரத்துக்குதான் விற்க முடிகிறது. மீதி 22 ஆயிரம் என்னாச்சு?

என் மகன் இன்டரிலேயே குண்டு. அவனுக்கு மெடிக்கல் சீட் வாங்கி(விலைக்கு)படிக்க வைக்கிறேன். கடைசி வருடம் சக மாணவனை கொன்று ஜெயிலுக்கு போய்விடுகிறான். அவனுக்கு செலவழித்த பணம் எல்லாம் கருந்துளைக்குள் நுழைந்தாற்போலத்தானே.

அமெரிக்க வங்கிகள் டுபாக்கூர் பார்ட்டிகளுக்கெல்லாம் வீட்டு வசதி கடன் கொடுத்ததும் திவாலானதும் தெரியுமல்லவா? மது,மாது,சூது,லஞ்சம்,கொள்ளை இதெல்லாமே கருந்துளைகள் தான்.

பணம் என்பது ரத்தம் மாதிரி ஃப்ரீயாக சர்க்குலேட் ஆக வேண்டும். இல்லை என்றால் கதை கந்தல் தான்.