Thursday, October 16, 2008

என் கவிதை மூன்றாவது கண்


நான் சிவன்
என் கவிதை மூன்றாவது கண்
எரிப்பேன் சுரண்டலை
என் ஞானம் செஞ்சடை
கோடை கால கங்கையென‌
பெருக்கெடுத்துவரும் பன்னாட்டு பகாசுரர்களை தடுப்பேன்
என் சடை வழி வழிய விடுவேன்
மணி,மாஃபியா,மீடியா முப்புரமும் எரிப்பேன்
ஓர் புன்னகையால்

நான் சிவன்
பாரதத்தின் சிரசில் தோன்றி பெருக்கெடுக்கும் கங்கையை காவிரியில் கலக்கச்செய்வேன்.

நான் சிவன்
மக்களை மறந்த படைப்புலக பிரம்மாக்களும்,அவர்களை காப்பதே தம் தொழில் என்று துள்ளும்(அள்ளும்) விஷ்ணுகளும் அஞ்சி நடுங்க எடுப்பேன் விஸ்வரூபம்

சமதர்ம சமுதாயம் பிற‌க்க தடையான முடை நாற்ற‌மனிதர்களை எரித்து சாம்பலாக்கி அதன் மீது அரங்கேற்றுவேன் ருத்ரதாண்டவம்