குண்டு வெடிப்புகளுக்கு குண்டு வைக்கனும்னா அதுக்கு ஒரு வழி இருக்கு
1.வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை. எனவே நாட்டில் உள்ள இந்து முஸ்லீம் இளைஞர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை தரவேண்டும். என்ன வேலை? நதிகளை இணைக்க கால்வாய் வெட்டும் வேலை.(வட நாட்டுல வெள்ளம்..தென்னாட்டுல குண்டி கழுவ தண்ணி கிடையாதுங்கோவ்)
2.இந்தியாவில் பொது இடங்களில் மதம்,மத நிகழ்ச்சிகளை தடை செய்துரனும். மதம் தனிப்பட்டவரின்,தனிப்பட்ட விஷயம். அந்தரங்கமா மலம் கழிக்கறாப்பல உடலுறவு கொள்வது போல மத நிகழ்ச்சிகள் நடை பெறணும். க்ரூப் செக்ஸுக்கு எப்படி அனுமதியில்லையோ அதே போல கூட்டு வழிபாடு,பொரியல் வழிபாட்டுக்கெல்லாம்தடை போட்டுரனும்(அப்பவாச்சும் உண்மையான ஆன்மீகம் தழைக்குதா பார்ப்போம்).
3.மதம் லங்கோடு மாதிரி. அது உள்ளத்தான் அணியப்படனும். அணியாட்டா விரை நசுங்கிரும். அதே நேரத்துல சூப்பர்மேன் பேண்டுக்கு மேல ஜட்டி அணியறாப்பல அலப்பறை பண்றாங்கப்பா..
4. பண்டிகைக்கு லீவு,தாடி வளர்ப்பு ,மொட்டை இத்யாதிக்கெல்லாம் தடை.(மண்டையில ஆப்பரேஷன்னா விதிவிலக்கு)
5.மனிதனை மனிதனா நினைச்சு ஆட்சி செய்யறாங்க(கொஞ்சமாச்சும்) அதனால தான் இந்த குண்டுவெடிப்பெல்லாம் நடந்துகிட்டே இருக்குது. மனிதன் மிருகம். என்னதான் பேண்ட்,சட்டை போட்டாலும் உள்ள மணி அடிச்சுட்டுதான் இருக்கு. உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் தான் வன்முறையா வெடிக்குது. முதல்ல விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும், மாவட்டத்துக்கு ஒரு மண்டலத்தை அதுக்குன்னே ஒதுக்கிரனும் (அவிங்களுக்கு/அதாங்க அழகிகளுக்கு செக்ஸ் கல்வி,நோய் தடுப்பு,எய்ட்ஸ் பத்தியெல்லாம் நல்லா ட்ரெயினிங் கொடுத்து வுட்டுரனும்
Sunday, July 27, 2008
அபய க்ஷேத்திரத்துக்கு அபயம் அளிப்போம் !
அன்புடையீர்,
நான் 1987 முதலே பத்திரிக்கைகளுக்கு எழுதி வந்தவன் நான். 1987 லேயே எனது முதல் சிறுகதை பாக்யா இதழில் பிரசுரமாகியது. தொடர்ந்து கல்கி,கவிதாசரண்,வாசுகி போன்ற இதழ்களில் எனது படைப்புகள் பிரசுரமாயின. இருந்தாலும் ஒரு சில கசப்பான அனுபவங்களால் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதையே விட்டு விட்டேன். இருந்தாலும் திருப்பதியை அடுத்துள்ள ரேணிகுண்டா ரயில்வே கேட் அருகிலான அபயக்ஷேத்திரத்தை பார்வையிட்ட பின்பு அது குறித்து எழுதாமலிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் என் விரதத்தை கைவிட்டு இந்த கட்டுரையை எழுதி அனுப்புகிறேன். அபயக்ஷேத்திரம் உடல் ,உள்ள ஊனமுற்றோருக்கான சேவை நிறுவனம். அரசு வகையில் பைசா உதவியின்றி ஒரு இளம் இஸ்லாமிய பெண் இதை நடத்திவருகிறார். அவருக்குள்ள தகுதிகளுக்கு அக்கடா என்று வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டால் சில்லரையோ சில்லரை தான். இருந்தும் அவர் இந்த புனிதப்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
இக்கட்டுரையை பரிசீலித்து பிரசுரிக்க கோருகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
சித்தூர்.எஸ்.முருகேசன்
அபயக்ஷேத்திரம்
"ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" இதற்கு பொருள் இறைவன் மனிதர்கள் ரூபத்தில் எதிர்படுவான் என்பதே. இதனால் தான் பெரியோர் " மக்கள் சேவையே மகேசன் சேவை" என்று கூறியுள்ளனர். முழுமையான உடல்,மன நலம் கொண்ட மனிதர்களுகு புரியும் சேவையே மகேசன் சேவை என்றால் .. சமூகத்தால்,பெற்ற தாய் தந்தையரால் கூட நிராகரிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு புரியும் சேவையை என்னைன்பது? மனித வாழ்வின் பொருள் என்பதா? கருப்பொருள் என்பதா?
சித்தூர் மாவட்டம், திருப்பதி புறநகர் பகுதியான ரேணிகுண்டா ரயில்வே கேட் அருகில் உள்ள அபயக்ஷேத்திரம் ஆசிரமத்தையும், சிறகொடிந்த பறவைகளாய் இருக்கும் 40 உடல் ஊனமுற்றோர்,மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளோரையும், அவர்களது தொண்டுக்கே தமது வாழ்வை அர்ப்பணித்துகொண்ட தஸ்லிமாவையும் பார்க்கும் பொழுது ஒரு கணத்தில் இத்தனை எண்ணங்கள் உங்கள் மனதில் வட்டமிடும். சர்வ மத சாரம் இது தானா என்ற ஞானோதயமும் ஏற்பட்டுவிடும்.
இத்தனைக்கும் தஸ்லிமா அரசகுமாரியுமல்ல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பெண்ணுமல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தஸ்லிமாவின் தந்தை ஒரு டெய்லர். தனது 6 குழந்தைகளை காப்பாற்ற குவைத் சென்றார். அவர்களை படிக்க வைத்தார். தஸ்லிமாவின் தந்தை அடிக்கடி கூறுவார் :" சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதே அல்லாவுக்கு நாம் காட்டும் மரியாதை "
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை இது ஆன்றோர் வாக்கு.தந்தையின் சொல் தஸ்லிமாவின் மனதில் கல்வெட்டாய் நின்றுவிட்டது. தஸ்லிமா மனோதத்துவம் படித்தார். கேட்கும் திறன் குறைந்தவர்களைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் குறித்த சிறப்பு கல்வியையும் பயின்றார். மகளிர் பல்கலை கழகத்தின் கோல்ட் மெடலையும் பெற்றார் தஸ்லிமா.
மனிதத்தை மண்ணாக்கி வரும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மனிதர்களுக்கு அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு தமது கல்வி பயன் பட வேண்டுமென்ற நோக்கத்துடன் கல்வி பயின்ற தஸ்லிமா, கல்வி என்பது பொருளீட்டத்தான் என்று எப்படி நினைப்பார். அவர் பெற்ற கல்விக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தனையோ வாய்ப்புக்கள் கதவை தட்டின. இருந்தாலும் சிறிது காலம் //DEPEP//லும் ஒரு தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றிய தஸ்லிமா மாவட்டமெங்கும் அதிர்வுகளை கிளப்பி வரும் அபயக்ஷேத்திரத்தை ஆரம்பித்தார்.
ராஜவம்சத்தினரும்,பணக்காரர்களும் ஃபேஷனுக்காகவோ,தற்பெருமைக்காகவோ சேவை(?) புரிவது வழக்கம் ஆனால் தஸ்லிமா ஒரு நடுத்தர குடும்பத்து வாரிசு மட்டுமே இருந்தாலும் அவர்
திருப்பதி பால மந்திரில் படித்துகொண்டிருந்து தூரத்து உறவினர் ஒருவரால் அழைத்துச்செல்லப்பட்டு பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மனைவியாக சித்திரவை அனுபவித்த 13 வயது சிறும
மன நிலை பாதிக்கப்பட்டு,பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளாலேயே நிராகரிக்கப்பட்டு திருப்பதி தெருக்களில் அநாதையாக விடப்பட்ட சுலோச்சனம்மாள்(70)
ஏதேனும் பஸ் முன்னே தன் மகளை தள்ளி விட்டால் நஷ்ட ஈடுகிடைக்குமே என்று துடித்த தந்தை வடிவிலான எமனிடமிருந்து தப்பிய 5 வயது சிறுமி சிரிஷா
உடல் ஊனமுற்றவராயிருந்தும் பி.ஏ, பி.எட் படித்தும் வேலை கிடைக்காது வேலையில்லாமை என்னை தவணையில் கொல்கிறது,அது முழுவடுமாக என்னை கொன்று விடும் முன் நானே சாக அனுமதியுங்கள்,என்று மனித உரிமைகள் கமிஷனுக்கு கடிதம் எழுதிய இளைஞர்.
இது போன்ற 40 பேருக்கும் தஸ்லிமா தாயானார். எந்த தாயும் தான் பெற்ற குழந்தைகளை மட்டும்தான் காப்பாற்றுவாள். ஆனால் தஸ்லிமாவோ நமதுஅன்னையரை ஈன்ற அன்னையாம் அம்பிகையை போல் இவர்களை காத்து ரட்சித்து வருகிறார். அரசு தரப்பிலிருந்து எவ்வித உதவியும் எதிர்பாராது ,தந்தை வழி சொத்து, தனது சொந்த பணம், யாரேனும் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடைகளின் உதவியுடன் அபயக்ஷேத்திராவை நிர்வகித்து வருகிறார். ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு வெறுமனே உணவு ,உடை,இருப்பிடம் அளிப்பதோடு தஸ்லிமாவின் பணி முடிந்துவிடவில்லை. உடல் ஊனமுற்றோரின் நெஞ்சங்களில் தன்னம்பிக்கையை துளிர்விடச் செய்ய அவ்ர்களுக்கு பிஸியோ தெரஃபி, ஸ்பீச் தெரஃபி அளிக்கப்படுகிறது. சாதாரணர்களுக்கு சமமாக இவர்களை வடித்தெடுக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
ஆண்மகன் ஒரு குழந்தையை பெற்ற பிறகே தந்தையாகிறான். ஆனால் பெண் குழந்தையோ பிறக்கும்போதே தாயாகத்தான் பிறக்கிறது
என்பதற்கேற்ப தஸ்லிமாவின் வாழ்க்கை அமைந்துள்ளது. முழு ஆரோக்கியத்துடன் பூவாய் சிரிக்கும் பள்ளிக் குழந்தைகளின் மீது கூட எரிந்து விழும் டீச்சர்கள் அநேகம். இந்நிலையில் ஒருவருக்கு கேட்கும் திறனில்குறையிருக்கலாம். மற்றவருக்கு வேறேதேனும் குறையிருக்கலாம். இருந்தாலும் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் 40 பேரையும் கண்ணுக்கு இமையாய் இருந்து அன்றலர்ந்த மலராய் புன்னகை சிந்தியபடி வளைய வரும் தஸ்லிமாவை பார்த்தால் உருகாத நெஞ்சமும் உருகும்.
உண்மையில் இது நாம் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய சீரிய பணி. சிறுவயதில் ப்ரேயர் ஹாலில் தினசரி நாமெல்லோருமே " இந்தியர் அனைவரும் என் சகோதர சகோதிரிகள் " என்று பிரமாணம் செய்திருக்கிறோம். நம் சகோதரருக்கோ,சகோதிரிக்கோ ஊனம் ஏற்பட்டால் அவனை/அவளை அநாதையாக விட்டு விடுவோமா? //No Never !//
அபய க்ஷேத்திரத்தில் உள்ள அந்த 40 பேர் நம் சகோதர சகோதிரிகள் இல்லையா? அவர்களது சுமையை தமது மெல்லிய தோள்களில் சுமக்கும் தஸ்லிமா நம் சகோதிரியல்லவா?
வெறுமனே இருளை சபிப்பதுமூடத்தனம். சிறு தீபம் ஏற்றுவோம் !
அபய க்ஷேத்திரத்துக்கு அபயம் அளிப்போம் !
தானம் வருமான வரி தள்ளுபடியை பெற கோடீஸ்வரர்கள் பின்பற்றும் வழி மட்டுமல்ல
நாம் மனிதர்கள் என்றும் , நம்மில் மனிதம் இன்னும் உயிருடன் தான் உள்ளதென்றும், நம் உள்ளத்துக்கும்,இந்த உலகத்துக்கும் பறை சாற்றும் முயற்சி தானம்.
நித்தமும் ஆசைகளின் ஊஞ்சலில் அலைபாயும் மனம் ஒரு கணம் அந்த உதய சூரியனில் லயிக்கும் தங்கக்கணம் தானம்.
எவ்வளவு சிறியது..எவ்வளவு பெரியது..என்பதெல்லாம் கேள்வியே அல்ல . காதலை போலவே தானத்திலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எந்த நோக்கத்துடன் செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.

Thursday, July 10, 2008
தெய்வம் நின்று கொல்லும் நேரமிது
காற்றுக்கென்ன வேலி ..கடலுக்கென்ன மூடி இது கண்ணதாசனின் வைர வரிகளில் ஒன்று. தாளி .. காதல் கொண்ட நெஞ்சுக்கு மட்டுமில்லை ..நாட்டின் இழிநிலை கண்டு வீறு கொண்டு எழுந்த நெஞ்சுக்கும் இது பொருந்தும்.
என் லட்சியம் நதிகளை இணைப்பது. முதல்வர் செய்து வருவது ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்டும் சரித்திர சிறப்பு வாய்ந்த் பணி. இதை நான் பாராட்டியே ஆகனும். நான் போய் ராஜசேகர ரெட்டியை பார்த்து விஷஸ் சொல்வது வீண் வேலை. என் நன்றியை இங்குள்ள அவர் கட்சி எம்.எல்.ஏ வுக்கு ஆதரவு தருவதன் மூலம் தெரிவிக்கிறேன். இதை எந்த நாய் தடுத்தாலும் சரி விடுவதாயில்லை. சித்தூர் தெலுங்கு தேசம் தலைவர்களுக்கு வெள்ளை சாம்பார்கள் என்ற ஒரு பெயராவது இருந்து வந்தது. சி.கே பாபு(எங்கள் தொகுதியின் ஹேட்ரிக் எம்.எல்.ஏ) மீது துப்பாக்கி சூடு நடத்தியும், கண்ணிவெடி வைத்தும் அவரை கொல்ல முயன்றதில் அந்த பெயரும் காலி.
சந்திரபாபு நன்றிக்கு ஸ்பெல்லிங் தெரியாத பார்ட்டி. தெய்வம் நின்று கொல்லும் நேரமிது. தேவேந்திரகவுடு விலகினால் மட்டும் பார்ட்டிக்கு எங்கயோ எரியுது. அன்னைக்கு என்.டி.ஆரை நட்டாற்றில் விட்ட போது என்ன ஆனது இந்த தருமம் நியாயமெல்லாம். இந்த தொகுதியில் உள்ள எல்லா தெ.தே தலைவர்களையும் ரொம்பவே அருகில் இருந்து கண்டிருகிறேன். ஒவ்வொரு ஆசாமி பற்றியும் ஒரு வண்டி சொல்லலாம். இந்த அழகில் நான் என் எழுத்திலான வேகத்தை குறைக்க வேண்டுமாம். சந்திரபாபுவையும் தெ.தேசத்தையும் விமர்சித்தால் பரவாயில்லையாம். இங்குள்ள உத்தம புத்திரர்களை ஏதும் சொல்லக்கூடாதாம்.
நானும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன் என்வாழ்க்கை போக்கை. "ஆத்தா" நினைச்சுட்டா நான் கோதாவில் இறங்கிவிட்டால் இந்த இன்ஸ்டண்ட் காபிங்க (சிரஞ்சீவிய சொல்றேன்) எல்லாம் நாறிப்புடாது. வர்ரன்.

Thursday, July 3, 2008
A Letter to Chief Minister Ex
அய்யா ! நீங்க படிச்சவர் ,பட்டதாரி. காங்கிரஸ் ஆட்சியில மந்திரியா இருந்தவர். என்.டி. ஆர். உங்களுக்கு பெண்ணை கொடுத்தார். உங்க பதவி போயிருச்சு. உங்களை மறுபடி மந்திரிசபைல சேர்த்துக்க சொல்லி கேட்க என்.டி.ஆர் இந்திரா காந்தி அம்மையாரை சந்திச்சாரு. அதுக்கு அவங்க மறுத்துட்டாங்க. என்.டி. ஆர் கட்சி ஆரம்பிக்க இதுவும் ஒரு காரணம்னு அப்போ அரசியல் வட்டாரங்கள்ள பேசிக்கிட்டாங்க.
ஆனால் நீங்க காங்கிரஸ்லயே இருந்திங்க. என்.டி. ஆர் கட்சி ஆரம்பிச்சு பட்டி தொட்டியெல்லாம் திரிஞ்சு தொண்டை தண்ணி வற்ற பேசி பிரச்சாரம் செய்தார். தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்துருச்சு. அப்புறமாத்தான் நீங்க கட்சிக்குள்ள வந்திங்க.
நாதேண்ட்ல பாஸ்கர் ராவ் என்.டி. ஆருக்கு துரோகம் செய்து கட்சியை பிளந்தப்போ நீங்கதான் உங்க நரித்தந்திரத்தையெல்லாம் உபயோகிச்சு என்.டி. ஆர் சட்டசபைல மெஜாரிட்டிய நிரூபிக்க உதவி பண்ணிங்க. அதுக்கு மறுபடி உங்களுக்கு நன்றி.அதுக்கப்புறம் என்.டி. ஆர் சட்டமன்றத்தை கலைக்க சொல்லி தீர்மானம் போட்டு தேர்தல் வரவச்சு ஜெயிச்சு வந்தது சரித்திரம். ஆனால் அந்த நாள் முதலாவே எம்.எல்.ஏக்களோட மனசுல என்.டி. ஆர் பேர்ல ஒரு அவநம்பிக்கை விதை விழுந்துருச்சு அதை தண்ணி ஊத்தி வளர்த்துக்கிட்டே வந்திங்க.வாத்தியார் இல்லாத க்ளாஸ்ல சட்டாம்பிள்ளை அதிகாரம் செலுத்தறாப்பல நீங்க கோஷ்டி சேர்க்க ஆரம்பிச்சுட்டிங்க.
கட்சில நெம்பர் டூவா இருந்திங்க. நீங்க நெம்பர் ஒன் துரோகிங்கற விஷயம் என்.டி. ஆருக்கு தெரியாம போயிருச்சு. நாங்கூட நிறைய பேருக்கு சொல்லியிருக்கேன். என்.டி. ஆர் மழை மாதிரி. சந்திரபாபு தோட்டக்காரன் மாதிரின்னு.அந்த 5 வருசம் கழிச்சு எலக்ஷன் வந்தது. மக்கள் ஓட்டை மாத்தி போட்டுட்டாங்க.
நீங்க மட்டுமில்ல..என்.டி. ஆர் வாரிசுகள் உட்பட எல்லாரும் அவரை திராட்டுல விட்டுட்டிங்க.மனைவியை இழந்து,ஆட்சியை இழந்து,பைபாஸ் ஆப்பரேஷன், பக்கவாதம் போன்ற பல காரணங்களால் தனிமைல தவிச்ச என்.டி. ஆருக்கு லட்சுமி பார்வதி அறிமுகமானாங்க. என்.டி. ஆர் அவங்களை வச்சுக்கல. கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அடுத்த தேர்தல்ல தம்பதி சமேதரா தான் என்.டி. ஆர் பிரச்சாரம் செய்தார். மக்கள் அவரோட 2 ஆவது திருமணத்தை ஏத்துக்கிட்டாங்க சூப்பர் டூப்பர் மெஜாரிட்டியோட ஜெயிக்க வச்சாங்க.

Wednesday, July 2, 2008
பெண்டிர் நேற்று கற்பை விற்றார்
தாயே தனயன் தணலில் தவிக்க
நீயோ கனவிலும் வந்திட மறுக்க
நடப்பது என்ன ஏதும் புரியலை
உன் மேல் நம்பிக்கை அதுவோ சரியல
சோம்பல் ஒன்றே மூச்சாய் இருந்து
இடையில் விழித்து அரற்று கின்றார்
யானே கள்வன் என்றே தான் தீர்ப்பும் தந்து போகின்றார்
அகிலம் வந்தேன் அகிலாய் தேய்ந்தேன்
உலகம் மணக்கலை மனந்தான் மணந்தது
பெண்டிர் நேற்று கற்பை விற்றார்
இன்றோ ஈன்ற சிசுவையும் விற்றார்
நாடு நலியுது நானும் நலிந்தேன்.
நாடு உயர நாளும் உழைத்தேன்
அட்டை போலே உறிந்தார் என்னை
பெட்டை ஆக்கி எறிந்தார் என்னை
பட்டேன் பாடு பல கோடி
வந்தேன் தாயே உனை நாடி
ஓருயிர் கூட என்னை விரும்பலை
என்னில் நம்பிக்கை ஏதும் அரும்பலை
உன்னைத் தானே நான் அடுத்தேன்
கெட்டு இங்கு அழிவதுவோ
உழைக்கத்தானே நானும் துடிக்கேன்
விரையை நசுக்கி சிரி என்றே
பாவிகள் என்னை பகைக்கின்றார்
என் நிலை கண்டே நகைக்கின்றார்
நின் புகல் கண்டே நகல் நானும்
ஏழ்மை மீது போர் தொடுத்தேன்
என் வறுமை ஒழிந்தே நான் ஒழிந்தேன்
நாட்டின் வறுமை ஒழிவது எங்கனம்
முத்துக்கள் தம்மை ஏந்தி நின்றேன்
இங்கோ இவரதை உப்பென்றார்
அன்னையுன்னை அடுத்த பின்னும் தடை வந்தால் நான் என் சொல்ல
தாயே அருள் செய் நான் வெல்ல.
Tuesday, July 1, 2008
மனிதனின் ஒவ்வொரு செயலிலும் செக்ஸ் இருக்கிறது.
மனிதனின் ஒவ்வொரு செயலிலும் செக்ஸ் இருக்கிறது. எழுத்துக்கு உபயோகிக்கும் பேனா, ஓவியத்துக்கு உபயோகிக்கும் பிரஷ்,சிற்ப வேலைக்கு உபயோகிக்கும் உளி இப்படி மேஜரான கருவிகள் யாவும் ஆண்குறி வடிவிலேயே இருப்பதை கவனியுங்கள். அதனால் தான் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பெண்கள் பேனா,பிரஷ்,உளியை பிடிக்கிறார்கள். ஆனால் பிறப்பிலேயே ஆண்மை மிக்க ஆண்கள் மேற்படி பேனா,பிரஷ்,உளியை ஆணுறுப்புக்கு மாற்றாக பயன் படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இப்போது தண்ணீர் பாக்கெட்,ஜூஸ் பாக்கட் இத்யாதி அதிகம் விற்க காரணம் அவற்றில் தண்ணீர் அல்லது ஜூஸ் அருந்தும்போது முலையிலிருந்து பாலருந்தும் திருப்தி கிடைப்பதே என்று நினைக்கிறேன். ஆக்சுவலி ஆண் பெண்ணின் கருப்பைக்குள் புக விரும்புகிறான். (யோனி வழி தன் உறுப்பை செலுத்தி முயற்சிக்கிறான்.) அதே போல் பெண்ணும் ஆணை தன் கருப்பைக்குள் புதைத்துக் கொள்ளத்தான் விரும்புகிறாள். இதற்கெல்லாம் அடிப்படை நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்பதே !
ஒவ்வொரு பெண்ணும் ஒரு தாய். ஒவ்வொரு ஆணும் ஒரு மகன். இதை உணர்ந்து பெண்களை தாயாக பாவிக்க கற்றுக்கொண்டுவிட்டால் செக்ஸ் என்பது வம்ச விருத்திக்கும், வீரியம் புரளும்போது ஆஸ்வாசப்படுத்திக்கொள்ளவும் மட்டும் போதும் என்ற நிலை ஏற்படும்.
ஒரு பெண்ணை தாயாக பாவிப்பதில் பிராக்டிக்கலாய் சில பிரச்சினைகள் இருக்கலாம் எனவே அந்த "சக்தி"யையே தாயாய் பாவித்து, பெண்களில் அந்த சக்தியை காணக்கற்றுக்கொண்டு விட்டால் "கறந்த இடத்தை நோக்குவதும், பிறந்த இடத்தை பார்ப்பதும் " நின்று விடும்.

Subscribe to:
Posts (Atom)