காற்றுக்கென்ன வேலி ..கடலுக்கென்ன மூடி இது கண்ணதாசனின் வைர வரிகளில் ஒன்று. தாளி .. காதல் கொண்ட நெஞ்சுக்கு மட்டுமில்லை ..நாட்டின் இழிநிலை கண்டு வீறு கொண்டு எழுந்த நெஞ்சுக்கும் இது பொருந்தும்.
என் லட்சியம் நதிகளை இணைப்பது. முதல்வர் செய்து வருவது ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்டும் சரித்திர சிறப்பு வாய்ந்த் பணி. இதை நான் பாராட்டியே ஆகனும். நான் போய் ராஜசேகர ரெட்டியை பார்த்து விஷஸ் சொல்வது வீண் வேலை. என் நன்றியை இங்குள்ள அவர் கட்சி எம்.எல்.ஏ வுக்கு ஆதரவு தருவதன் மூலம் தெரிவிக்கிறேன். இதை எந்த நாய் தடுத்தாலும் சரி விடுவதாயில்லை. சித்தூர் தெலுங்கு தேசம் தலைவர்களுக்கு வெள்ளை சாம்பார்கள் என்ற ஒரு பெயராவது இருந்து வந்தது. சி.கே பாபு(எங்கள் தொகுதியின் ஹேட்ரிக் எம்.எல்.ஏ) மீது துப்பாக்கி சூடு நடத்தியும், கண்ணிவெடி வைத்தும் அவரை கொல்ல முயன்றதில் அந்த பெயரும் காலி.
சந்திரபாபு நன்றிக்கு ஸ்பெல்லிங் தெரியாத பார்ட்டி. தெய்வம் நின்று கொல்லும் நேரமிது. தேவேந்திரகவுடு விலகினால் மட்டும் பார்ட்டிக்கு எங்கயோ எரியுது. அன்னைக்கு என்.டி.ஆரை நட்டாற்றில் விட்ட போது என்ன ஆனது இந்த தருமம் நியாயமெல்லாம். இந்த தொகுதியில் உள்ள எல்லா தெ.தே தலைவர்களையும் ரொம்பவே அருகில் இருந்து கண்டிருகிறேன். ஒவ்வொரு ஆசாமி பற்றியும் ஒரு வண்டி சொல்லலாம். இந்த அழகில் நான் என் எழுத்திலான வேகத்தை குறைக்க வேண்டுமாம். சந்திரபாபுவையும் தெ.தேசத்தையும் விமர்சித்தால் பரவாயில்லையாம். இங்குள்ள உத்தம புத்திரர்களை ஏதும் சொல்லக்கூடாதாம்.
நானும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறேன் என்வாழ்க்கை போக்கை. "ஆத்தா" நினைச்சுட்டா நான் கோதாவில் இறங்கிவிட்டால் இந்த இன்ஸ்டண்ட் காபிங்க (சிரஞ்சீவிய சொல்றேன்) எல்லாம் நாறிப்புடாது. வர்ரன்.