Wednesday, July 2, 2008

பெண்டிர் நேற்று க‌ற்பை விற்றார்


தாயே தனயன் தணலில் தவிக்க
நீயோ கனவிலும் வந்திட மறுக்க
நடப்பது என்ன‌ ஏதும் புரிய‌லை
உன் மேல் ந‌ம்பிக்கை அதுவோ ச‌ரிய‌ல‌
சோம்ப‌ல் ஒன்றே மூச்சாய் இருந்து
இடையில் விழித்து அர‌ற்று கின்றார்
யானே க‌ள்வ‌ன் என்றே தான் தீர்ப்பும் த‌ந்து போகின்றார்

அகில‌ம் வ‌ந்தேன் அகிலாய் தேய்ந்தேன்
உல‌க‌ம் ம‌ண‌க்க‌லை ம‌ன‌ந்தான் ம‌ண‌ந்த‌து

பெண்டிர் நேற்று க‌ற்பை விற்றார்
இன்றோ ஈன்ற சிசுவையும் விற்றார்

நாடு ந‌லியுது நானும் ந‌லிந்தேன்.
நாடு உய‌ர‌ நாளும் உழைத்தேன்

அட்டை போலே உறிந்தார் என்னை
பெட்டை ஆக்கி எறிந்தார் என்னை

ப‌ட்டேன் பாடு ப‌ல‌ கோடி
வ‌ந்தேன் தாயே உனை நாடி

ஓருயிர் கூட‌ என்னை விரும்ப‌லை
என்னில் ந‌ம்பிக்கை ஏதும் அரும்ப‌லை

உன்னைத் தானே நான் அடுத்தேன்
கெட்டு இங்கு அழிவ‌துவோ

உழைக்க‌த்தானே நானும் துடிக்கேன்
விரையை ந‌சுக்கி சிரி என்றே

பாவிக‌ள் என்னை ப‌கைக்கின்றார்
என் நிலை க‌ண்டே ந‌கைக்கின்றார்

நின் புக‌ல் க‌ண்டே ந‌க‌ல் நானும்
ஏழ்மை மீது போர் தொடுத்தேன்

என் வ‌றுமை ஒழிந்தே நான் ஒழிந்தேன்
நாட்டின் வ‌றுமை ஒழிவ‌து எங்க‌ன‌ம்

முத்துக்க‌ள் த‌ம்மை ஏந்தி நின்றேன்
இங்கோ இவ‌ர‌தை உப்பென்றார்

அன்னையுன்னை அடுத்த‌ பின்னும் த‌டை வ‌ந்தால் நான் என் சொல்ல‌
தாயே அருள் செய் நான் வெல்ல‌.