அய்யா ! நீங்க படிச்சவர் ,பட்டதாரி. காங்கிரஸ் ஆட்சியில மந்திரியா இருந்தவர். என்.டி. ஆர். உங்களுக்கு பெண்ணை கொடுத்தார். உங்க பதவி போயிருச்சு. உங்களை மறுபடி மந்திரிசபைல சேர்த்துக்க சொல்லி கேட்க என்.டி.ஆர் இந்திரா காந்தி அம்மையாரை சந்திச்சாரு. அதுக்கு அவங்க மறுத்துட்டாங்க. என்.டி. ஆர் கட்சி ஆரம்பிக்க இதுவும் ஒரு காரணம்னு அப்போ அரசியல் வட்டாரங்கள்ள பேசிக்கிட்டாங்க.
ஆனால் நீங்க காங்கிரஸ்லயே இருந்திங்க. என்.டி. ஆர் கட்சி ஆரம்பிச்சு பட்டி தொட்டியெல்லாம் திரிஞ்சு தொண்டை தண்ணி வற்ற பேசி பிரச்சாரம் செய்தார். தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்துருச்சு. அப்புறமாத்தான் நீங்க கட்சிக்குள்ள வந்திங்க.
நாதேண்ட்ல பாஸ்கர் ராவ் என்.டி. ஆருக்கு துரோகம் செய்து கட்சியை பிளந்தப்போ நீங்கதான் உங்க நரித்தந்திரத்தையெல்லாம் உபயோகிச்சு என்.டி. ஆர் சட்டசபைல மெஜாரிட்டிய நிரூபிக்க உதவி பண்ணிங்க. அதுக்கு மறுபடி உங்களுக்கு நன்றி.அதுக்கப்புறம் என்.டி. ஆர் சட்டமன்றத்தை கலைக்க சொல்லி தீர்மானம் போட்டு தேர்தல் வரவச்சு ஜெயிச்சு வந்தது சரித்திரம். ஆனால் அந்த நாள் முதலாவே எம்.எல்.ஏக்களோட மனசுல என்.டி. ஆர் பேர்ல ஒரு அவநம்பிக்கை விதை விழுந்துருச்சு அதை தண்ணி ஊத்தி வளர்த்துக்கிட்டே வந்திங்க.வாத்தியார் இல்லாத க்ளாஸ்ல சட்டாம்பிள்ளை அதிகாரம் செலுத்தறாப்பல நீங்க கோஷ்டி சேர்க்க ஆரம்பிச்சுட்டிங்க.
கட்சில நெம்பர் டூவா இருந்திங்க. நீங்க நெம்பர் ஒன் துரோகிங்கற விஷயம் என்.டி. ஆருக்கு தெரியாம போயிருச்சு. நாங்கூட நிறைய பேருக்கு சொல்லியிருக்கேன். என்.டி. ஆர் மழை மாதிரி. சந்திரபாபு தோட்டக்காரன் மாதிரின்னு.அந்த 5 வருசம் கழிச்சு எலக்ஷன் வந்தது. மக்கள் ஓட்டை மாத்தி போட்டுட்டாங்க.
நீங்க மட்டுமில்ல..என்.டி. ஆர் வாரிசுகள் உட்பட எல்லாரும் அவரை திராட்டுல விட்டுட்டிங்க.மனைவியை இழந்து,ஆட்சியை இழந்து,பைபாஸ் ஆப்பரேஷன், பக்கவாதம் போன்ற பல காரணங்களால் தனிமைல தவிச்ச என்.டி. ஆருக்கு லட்சுமி பார்வதி அறிமுகமானாங்க. என்.டி. ஆர் அவங்களை வச்சுக்கல. கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அடுத்த தேர்தல்ல தம்பதி சமேதரா தான் என்.டி. ஆர் பிரச்சாரம் செய்தார். மக்கள் அவரோட 2 ஆவது திருமணத்தை ஏத்துக்கிட்டாங்க சூப்பர் டூப்பர் மெஜாரிட்டியோட ஜெயிக்க வச்சாங்க.