Monday, October 25, 2010

மனிதன் என்பவன் வாழும் மிருகம்

நாய் எலும்புக்காக தோண்டி 
தானே புதைந்து போனால்
அப்படித்தான் இருக்கிறது
இப்போதைய பொருளாதாரமும்
மக்களின் வாழ்வும். ....

வரவேண்டியதும் வருவதில்லை, கேட்டாலும் கிடைப்பதில்லை. தவறிய வார்த்தைகள் கிடைப்பதுபோலவே நமது வார்த்தைகளும் தவறுகின்றன. ஒரு நியாயம் ஒரே நியாயமாக இருப்பதில்லை.

என்ன சிக்கல் என்றால், நாணயத்தோடு, நாணயமும் சேர்ந்து கொள்வதால் 'பேரு' தள்ளாட்டம் ஆடுகிறது. இக்கரைக்கு அக்கரை ப(ச்)சை போல, ஒவ்வொரு வாசலும் ப(ச்)சையாகவே தெரிகிறது.

தகவல் தொடர்பியலில் ஒரு வார்த்தை உண்டு, மனிதன் என்பவன் வாழும் மிருகம், (உபயம் சாக்ரெடீஸ்)

வேட்டை அறிந்த, தன் இனத்திற்குள்ளேயே வேட்டையாடும் குணமறிந்தவன். அடேங்கப்பா! எத்தனையாயிரம் வேட்டைகள், இன்னமும் முடிந்தபாடில்லை. இப்போதைய மனிதன் தானே காணச் சகியாத முகமூடி அணிந்திருக்கிறான், வெளியே அல்ல, தனக்குள்ளே.

அது ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்கதையாகிப்போவதுதான் வேதனை.

வேட்டை பைரவர்களுக்கு மத்தியில் வெள்ளாடுக்கு மதிப்பேது? அப்படி இருந்தால்தான் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்கிற நிலைதான் எல்லோரிடமும்.

இது எந்த வயதில் ஆரம்பிக்கிறது?

அது ஒரு பேருந்து நிறுத்தம். நான் கல்லூரி செல்லும் பேருந்துக்காக நிற்கிறேன். என் அருகில் இரு சிறார்கள்.(ஆ இல்லையா என்பதை பிறகு முடிவு செய்தால் சிறப்பு). ஒருவனை விட ஒருவனுக்கு இரண்டு, மூன்று வருட வயது வித்தியாசம், வயது பத்தும், ஏழும் இருக்கலாம். பத்து வயதுடையவனுடைய(!) முகம் சிறுத்(தை)து, அதீத கண்காணிப்பு கொண்ட கண்களோடு கல்லெறிந்த குளத்துநீர் கலக்கத்தோடும் அதிர்வுளோடும் முகத்தில் தகப்பனை(?) உருவகித்திருந்தான். இன்னொருவனுக்கோ கல்லெறியாத குளத்துநீர் போல அமைதியான முகம் (அம்மாவோட முகமோ?.) இவன் எது சொன்னாலும் அவன்...

'அப்படி இல்லடா, ஃபூல்', 'இப்படித்தான்டா ஃபூல்' என்று மறுதலளித்தவாறே வந்தான்.

நான் இருபது நிமிடம் முன்னதாகவே பேருந்து நிறுத்தம் வந்து விடுவதால் இது போல சில நிகழ்வுகள் காணக்கிடைக்கும். (நான் ஏறிச் செல்லுகிற பேருந்துக்கு சரியான நேரமே கிடையாது. முன்னதாகவும், சரியாகவும், தாமதமாகவும் வரலாம், வராமலுமிருக்கலாம்.)

'டேய், தள்ளி நில்லுங்கடா' குரல் கவனம் கலைத்தது.

பேருந்து நிறுத்தம் அருகிலிருந்த பெட்டிகடைக்காரர், நான் நடைபாதையின் மேலே நின்றிருந்தபடியால் அது என்னை குறித்ததல்ல. தினமும் என்னை பார்ப்பதனாலும் இப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. திறந்த கடையின் வாசல்(?) குப்பையை விலக்கியபடி (ஆமா, விளக்குமாறா, விலக்குமாறா? விளக்கம் வேண்டுமே) சொன்னார்.

அந்த பெரிய சிறுவன்(ர்) முறைத்த பார்வையை பெட்டிகடைக்காரர் கவனித்து விட்டார்.

'டேய், என்னடா பார்க்கிற' பெட்டிகடைக்காரர் கொஞ்சம் இறங்கிவிட்டார் போல.

'வாசல் கூட்றேன்ல, மேல நின்னா என்னடா?'

'ஏன், இது உங்க ரோடா? இது கார்பரேசன் ரோடு'

'டேய், ரொம்ப பேசாத'

'பப்லு, வேணான்டா'

'நீ சும்மாயிருடா, ஃபூல்'

பெட்டிகடைக்காரர் வியந்த முகத்தோடு என்னை பார்த்தார், நான் மெலிதாக புன்னகைத்தேன்.

'பாருங்க சார், எப்படி பேசுறான் பாருங்க'

அந்த பெரிய சிறுவன்(ர்) இப்போது என்னை பார்த்தான்(ர்).

நான் மீண்டும் மெலிதாக புன்னகைத்தேன்.

'ம், ஊரு ரொம்ப கெட்டு போச்சு சார்' வாசலில் நீர் தெளித்தபடி பெட்டிகடைக்காரர்.
அந்த பெரிய சிறுவன்(ர்) உர்ர் என்றிருந்தான்.

தெளிக்கும் நீர் அவன் மேல் பட்டுவிட கூடாது அவரிருக்க, பட்டா தெரியும் சேதி என்று அவனிருந்தான். நல்ல வேளையாக பேருந்து வர, ஏறிக்கொண்டோம். மூன்று நிறுத்தங்கள் வரை 'ஃபூல்' ஒலித்துக்கொண்டிருந்தது ...

Sunday, October 24, 2010

பாராட்டு மழையில் நனைய

வணக்கம் தலைவா!
சுஜாதா கிட்டே எனக்கு பிடிச்சதே தன் எழுத்துக்களில் போகிற போக்கில் அவர் புதுமுகங்களை அறிமுகம் செய்ததே. நம்ம பிராபல்யத்தை மறுபடி மறுபடி சொல்ல சலிப்பா இருக்கு.. இருந்தாலும் இன்னொரு தாட்டி சொல்லி உடறேன். 2009 மே முதல் நாளிதுவரை உள்ள 17 மாதங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஹிட்ஸ் பெற்றிருக்கிறேன்.

என்னதான் வர்ர சனத்தை விரட்டற மாதிரியே எழுதினாலும் தமிழ் 10 ரேங்கில் ஐம்பதுக்குள், உலவு ரேங்கில் பத்துக்குள் நிற்கிறேன்.

இதை தெரி/புரிஞ்சிக்கிட்டவுக தங்களோட பதிவுகளை எனக்கு மெயில் மூலம் அனுப்பறாய்ங்க. நமக்கு வயசு 43. மானிட்டரை ஒரு மணி நேரத்துக்கு மேல பார்க்க முடியறதில்லை. அதுலயும் பிரவுசிங்னா நம்ம கப்பாசிட்டி 45 நிமிஷம் தான்.

அதனால என் பாராட்டை பெற விரும்பறவங்களுக்கு என் ப்ரியாரிட்டி என்னனு சொல்ட்டா அவிகளோட வியய,பிரயாசைகள் வீண் போகாதுன்னு சின்னதா ஒரு அபிப்ராயம்.

என் ப்ரியாரிட்டிஸ்:

1.மனித உயிர்களுக்கு ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்

2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் - சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள்  - உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் - ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை

3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்

4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை - அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் - கல்வித்தரம்

5.வேலையின்மை,  சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.

6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்

7.சுற்றுச்சூழல் - பொல்யூஷன் -காரணங்கள் - விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.

8.மக்கள் பிரச்சினைகளை பேசி - தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு - ஹ்யூமன் வேல்யூஸ்

9. மிஸ்டிக் சைன்ஸஸ் - ஜோதிடம் -வாஸ்து -கைரேகை  முதல் டெலிபதி வரை

10. ஆன்மீகம் - தியானம் -யோகா

இதையெல்லாம் ஒர்க் அவுட் பண்ணனும்னா மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் மாற்றம் வரணும். முதல்ல மக்களை சிந்திக்க வைக்கக்கூடிய நம்ம மாதிரி பார்ட்டிகள்ள மாற்றம் வரனும். இந்த மாற்றம் தான் ஒரு மவுன புரட்சிக்கு அடிகோலும்.

இந்த கன காரியங்களை நான் ஒருத்தனே செஞ்சு கிழிச்சுர முடியும்னு நான் நினைக்கலை. அதனால இந்த காரியங்களை யார் செய்தாலும் பாராட்ட, ஊக்கப்படுத்த ப்ரமோட் பண்ண காத்திருக்கிறேன்.

நிபந்தனை:

1.உங்க பதிவு படிக்க வைக்கிறதா இருக்கனும் அதாவது ஜோவியலா , எளிய  நடையில் , நச்சுனு இருக்கனும். (விரட்டறதா இருக்ககூடாது)
2.இந்த பதிவின் கீழே கமெண்ட் ஃபார்மில் சின்ன முன்னோட்டத்தோட உங்க பதிவின் லிங்கை கொடுத்தா போதும்

பாராட்டு மழையில் நனையலாம். ( நாம பாராட்டறதுல பெரிய கஞ்சனுங்கோ.ஏறக்குறைய பெரியார் மாதிரி - நம்ம பாராட்டை பெறுவது வசிஷ்டர் கையால பிரம்ம ரிஷி பட்டம் வாங்கற அளவுக்கு கஷ்டமுங்கோ.

பலன்:
எனது வலைப்பூவின் சைட் பாரில்  தங்கள் வலைப்பூவின் பேனர் வைக்கப்பட்டு உங்க ப்ளாகுக்கு லிங்க் தரப்படும்.  பேனர்களின் எண்ணிக்கை 10 ஐ தாண்டும்போது முதலில் வைக்க ப்பட்ட பேனர் நீக்கப்படும்


ஓகேவா உடு ஜூட்

"சிங்கம்ல " - மீதான எதிர் வினைகள்

நைனா முரசு!
கற்பூர வாசனை தெரியாத ..ன்னு ஆரம்பிச்சிருக்கனும். என்ன பண்ண நாகரீகம் தடுக்குது.

நேத்து சுகுமார்ஜி போட்ட சிங்கம்ல்ல பதிவை படிச்சுட்டு 108 டிகிரி ஜூரம். நான் 1,500 க்கும் மேலான பதிவுகள்ள முயன்றும் பட்டவர்த்தனமா சொல்லமுடியாத மேட்டரை ஒரேபதிவுல போட்டு தொலைச்சுட்டதை நினைச்சு டர்ராயிருச்சு. ஆனால் பாருங்க முரசுன்னு ஒரு பார்ட்டி  மரு மொழி போட்டிருக்கு ( எ.பிழை இல்லிங்கண்ணா மருதான்)

//சார்...எப்படி சார் ....எப்படி!!!!!!!

நீங்களே ஒரு வசூல் ராஜா...ஜோதிடம்...வாஸ்து...பில்லி சூனியம்...ஊரை ஏமாத்தி வசூல் பண்ணறீங்க....//

த பார்ரா முரசு கண்ணா .. நீ கொடுத்த ஸ்டேட்மென்டை நூறே பேர் டிஃபெண்ட் பண்ணட்டும் தொழிலையே விட்டுர்ரன். கண்ணா.. பெரியார் ஜோசியம் சொன்னா எப்படி இருக்குமோ அந்த ரேஞ்சுல பகுத்தறிவோட இருக்கும். .. நைனா நம்ம ப்ரிடிக்சன். உங்க தொழிலை ஏன் எனக்கு லிங்க் பண்ணிவிடறிங்க (பில்லி சூனியம்). நமக்கு தொழில்  நாட்டுக்குழைத்தல். . அப்பாறம் தான் ஜோசியம். டுப்புக்கு !  நீ அடங்கு !!

//இப்போ உங்க நண்பரும் ஏதோ கிராபிக்ஸ்...பேனர்...லோகோ...அது இதுன்னு ஊரை ஏமாத்த கிளம்பிட்டார் ....//

பார்ட்டி! நீ யாருனு உடை. பங்காரு அடிகளார் க்ரூப்பா..இல்லை கலைஞர் தாத்தா ஆளா? இல்லே எந்திரன் இயக்கிற எந்திரமா? ங்கொய்யால நேரா வா பிரதர். உனக்கு எங்க வலிக்குதுன்னு சொன்னா மருந்து போடுவம்ல. அதை விட்டுட்டு பினாத்தறியே. ஜோசியமாச்சும் சந்தேகாஸ்பதமான சமாசாரம் - நான் வாங்கிற காசு அதுக்காக நான் செலவழிக்கிற நேரத்துக்குண்டான  காம்பன்சேஷன் தான்- கிராஃபிக்ஸ் பேனர் லோகோ எல்லாம் கண்ணு எரிய,முதுகு குறுக்கு வலிக்க பண்ற வேலை தம்பி..

//நல்ல சரியான ஜோடிதான் போங்க...//

உன் மருமொழிலயே இதுதான் பக்கா.

//ஏற்கனவே உங்க ப்ளாக் சீந்துவார் யாருமில்லை.//

நைனா உனக்காகவே தான்  ஹிட் கவுண்டர்,ஸ்பெஷல் விட்ஜெட் எல்லாம் வச்சிருக்கு. எந்தெந்த பதிவை எத்தீனி பேர் படிச்சாய்ங்கனு கூகுல் ஸ்டேடிஸ்டிக்ஸோட ஸ்க்ரீன் ஷாட்டை வச்சிருக்கேன் பாரு.

//இதுல இந்த மொக்கை பதிவெல்லாம் போட்டா வர்ற நாலு பேரும் வரமாட்டார்கள்...//

த பார்ரா .. நாலும் தெரிஞ்சவன்னா நாலு பிட்டில்லை வாத்யாரே ..எல்லாம் தெரிஞ்சவனு அர்த்தம். நாலு பேர் வராய்ங்கன்னா நிறைய பேர் வராய்ங்கனு அர்த்தம் - அப்படி அண்டர்ஸ்டாண்டிங் பண்ணிக்கிறேன்.

//சும்மா சொல்ல கூடாது...நீங்க 100 ரூபாய் கொடுத்து போட்ட ஒரு பேனருக்காக உங்க நண்பர் நல்லாவே கூவுறார்...//

அப்பாறம்... வாணாம் பதிவு எழுதறது வேற கை. இது நாற வாய். ஏன்யா ரஜினி எந்திரனுக்கு பைசா வாங்கலேன்னா நம்பற பார்ட்டிங்க.. பேனருக்கு சுகுமார்ஜி காசு வாங்கலைன்னா நம்பவா போறிங்க..தூத்தேரிக்க

//ஏற்கனவே ஒரு வெட்டி ஆபிசர் தொல்லை தாங்க முடியலை.//

வெட்டி ஆஃபீசர்தான் ஞான வெட்டியான் ங்கற பேரை கேள்விப்பட்டிருக்கியா நைனா .. அந்த ரேஞ்சு நம்முது

//அதுல ரெண்டாவது அரை கிறுக்கு வேறையா...........//

உன்னை மாதிரி ஆரோக்கியமான மன்சங்க வாழறதால தானே நாட்ல காவால பாலும் தேனும் ஓடுது .. உங்க ஆரோக்கியம் எங்களுக்கு வேணா சாமி..கிறுக்காவே இருந்துட்டு போறம்.. ஞான கிறுக்கு.

//போங்கசார் போய் எதாவது வேலை வெட்டி இருந்தா பாருங்க//
 நம்ம வேலை நாட்டுக்குழைத்தல்னு சொல்லியாச்சுல்ல. வெட்டின்னா ஆமாம் வெட்டித்தான் ஆகனும் உன்னை மாதிரி பார்ட்டிங்க மைண்டல் செழிச்சு வளர்ந்திருக்கிற மடமைங்கற பார்த்தினீயத்தை. வெட்டினா போறாதுங்கோ எரிக்கனும்..

//அப்படி எந்த வேலையுமே இல்லாட்டி 4-5 மரமாவது வைத்து பராமரியுங்க //
ஏன் பாஸ் நீ தனி தானா? கூட நாலு பேரை சேர்த்துக்க பாஸ்.  நீங்க இருக்கிறச்ச மரம் வேற எதுக்கு தெண்டம்?

//நாடுக்காவது ஒரு பிரயோசம் இருக்கும்....//

ஓ சாலை விரிவாக்கத்தின் போது வெட்டித்தள்ளவா? அல்லது வெட்டி ஓட்டி கொட்டிக்கிட்டு திங்கவா..

மொதல்ல கொஞ்சமாவாச்சும் மாத்தி யோசிங்க. குறைஞ்ச பட்சம் அப்படி யோசிக்கிறவுகளையாச்சும் ஃபாலோ பண்ணுங்க. சுய புத்தியும் இல்லாம சொல்புத்தியுமில்லாம எதுக்குண்ணே லந்து பண்ணி வாங்கி கட்டிக்கிறிங்க.

//உங்க கவிதை 07 ப்ளாக் ஒன்னும் குட்டி சுவர் இல்லை ....கண்ட கண்ட ஜந்து எல்லாம் பதிவு என்ற பெயரில் வந்து சிறுநீர் கழித்து செல்ல...//

கரீட்டுதான் உன்னைதானே சொல்றே.. சின்ன திருத்தம் பதிவு இல்லை . கமெண்ட். அடப்போய்யா .. நீயும் உன் ரசனையும்..

Saturday, October 23, 2010

சிங்கம்ல்ல... On Survival of the fittest

 சுகுமார்ஜி பக்கங்கள் :)


 நம்மை  கூண்டில் இருத்தி நமக்கு நம்மை தெளிவு செய்யும் சுகுமார்ஜியின் அற்புத பதிவு .டோன்ட் மிஸ் இட். ப்ளீஸ் ஷேர் இட் டு யுவர் ஃப்ரெண்ட்ஸ் ‍ 

- சித்தூர் .எஸ்.முருகேசன்
கூண்டுக்குள் இருந்த சிங்கம் சொல்லிக்கொண்டது...

'காட்டுக்குள்ள வந்து கேட்டுப்பாருங்கடா! நான் தான்டா காட்டுல ராஜா...'

சிங்கம் கேனத்தனமாக சொல்லுவதாக இருந்தது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்களில் பலரும் 'அப்படியா?' என்றனர்

அந்த 'அப்படியா?' வில் இருந்த கிண்டல் அந்த அப்பாவி சிங்கத்திற்கு புரியவில்லை... ஒரு வேளை அதை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் வரவில்லை போலும்...

ஒருவேளை அது இன்னமும் மனிதனாக மாறாது, மிருகமாகவே இருப்பதுதான் காரணமோ!...

சிலர் நெருங்கி வந்து 'அப்போ ஏன் கூண்டுல இருக்க?' என்று கேட்டனர்.

'உண்மைதான் சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட் ல தான் இங்கே வந்து மாட்டிகிட்டேன்' சிங்கம் பதிலளித்தது.

பரிதாபத்துடன் ஒருவர் கேட்டார்

'உன்னை யாராவது கொடுமை படுத்துறாங்களா?'

சிங்கம் முகம் திருப்பிக்கொண்டது... "கொய்யால... கூண்டுக்குள்ள இருக்கேன்... அதே உனக்கு தெரியலையே... சொன்னா புரியுமா?" கொட்டாவி விட்டபடி சிங்கம் தன் நாவால் மூக்கை ஈரப்படுத்திக்கொண்டது.

கேள்வி கேட்ட நபர் ' இந்த சிங்கத்துக்கு கொழுப்பை பாரேன்...மெனக்கெட்டு கேட்டா மூஞ்ச திருப்பிகிச்சு' என்னவாறே கூண்டை கடந்து சென்றான்.

'ஹாய்!'

குதூகல குரல் கேட்டு சிங்கம் தலைதிருப்பியது.

ஒரு சிறுவன் ஓடிவந்து கைக்கெட்டா தூரத்தில் நின்றவாறு...

'ஹாய் சிங்கம், எப்படியிருக்க?' என்றான் சிநேகத்துடன்...

சிங்கம் சட்டென எழுந்து நின்று பதிலுரைக்க விழைந்தது...

சிறுவன் திடுக்கிட்டு பின் தள்ளி நின்றவாறு பின்னால் திரும்பி பார்த்தான். அவனை நோக்கி வந்த ஒருவர், அருகில் வந்த பிறகு...

'பயப்படாதே சன்... நானிருக்கேன்...'

'நோ டாட், இந்த சிங்கம் லெசன்ல இருக்கிற விடவும் பயங்கரமா இருக்கு... ஐ லவ் திஸ் லைன் டாட்'

'ஆமா, அதுனால தான் கூண்டுல இருக்கு'

சிங்கம் அந்த தகப்பனை கண்கள் சுருக்கிக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தது.

'டாட், அது ஏதோ உங்க கிட்ட பேசுற மாதிரி இருக்கு. அதோட லாங்வேஜ் உங்களுக்கு தெரியுமா?'

'எனக்குத்தெரியாமலிருக்குமா? நானும் இது போல சிங்கமா இருந்தவன் தானே!'

சிறுவன் வியப்போடு பார்த்ததை போலவே சிங்கமும் தன் புருவம் உயர்த்தி வியந்தது.

'சன், இந்த சிங்கத்தை பார்த்தால் உனக்கு என்ன தோன்றுது?'

'சிங்கத்தோட வலிமை, கர்ஜனை, வேகம், ஆளுமை, வேட்டைத்திறன், ஆக்ரோசம் இதெல்லாமே டாட்'

சிங்கம் கண்கள் சுருக்கி புன்னகைத்தது.

'யா சன்... ஆனா இது எதுவுமே சிங்கத்திற்கு உதவாது தெரியுமா?'

சிங்கம் அதிர்ச்சிக்குள்ளாகியது...

'ஆமா, சன்... சர்வைவல் ஆஃப் த பிட்டஸ்ட், சிங்கத்திற்கு தெரியல்ல...'

'எனக்கு புரியல டாட்...'

சிங்கமும் தலை தொடங்கி வால் வரை சிலுப்பிக்கொண்டது.

'நீ குட்டிடா, நீ சிங்கமாகும் பொழுது நான் புரிய வைக்கிறேன்...'

'ஒகே டாட்... ஒரு சந்தேகம்... நீங்க சிங்கமா இருந்ததா சொன்னீங்க... அப்ப நீங்களும் கூண்டுல இருந்தீங்களா?'

'ஆமா, கொஞ்ச நாள்... பிறகு வெளிய வந்துட்டேன்'


சிங்கம் ஒருகண் சுருக்கி எப்படி என்பதாக பார்த்தது.

'இப்போ என்னவா இருக்கீங்க டாட்?'

'நான் இப்போ பாஃக்ஸ்... குள்ளநரி மை சன்...'

சிங்கம் கர்ஜித்தது...

'அப்போ உங்களுக்கு கூண்டு இல்லையா டாட்?'

'குள்ளநரிகள் கூண்டில் இருக்கமுடியாது... அப்படியே கூண்டில் போட்டாலும் தந்திரத்தால் தப்பிவிடும்... பொதுவா குள்ளநரிகள் நாட்டில், சுதந்திரமாத்தான் இருக்கும்.'

சிங்கம் தன் காலை தேய்த்துக்கொண்டு ஆக்ரோசமானது...

'அப்போ இந்த சிங்கமும், குள்ளநரியா மாறிட்டா வெளிய வந்திடுமா டாட்'

'நல்லா புரிஞ்சுகிட்டயே... ஆமா, மை சன்... ஆனா இந்த சிங்கம் கொஞ்சம் அடங்க மறுக்கிற சிங்கமா இருக்கு... இது வாழ்நாளெல்லாம் கூண்டிலேயே கழிக்க வேண்டியதுதான்...'

சிங்கம் இப்பொழுது நிலை கொள்ளாமல் அலைந்தது...

சிறுவன் சொன்னான்...

'என்ன சிங்கம், இது கூட தெரியாதா உனக்கு? உன்னப்போய் காட்டுக்கு ராஜான்னு யாரு சொன்னாங்க?'...

சிங்கம் ஆவேசத்தோடு கூண்டு கம்பியில் அறைந்தது. கூண்டுக்குள்ளிருந்து தப்பும் வகையில் அலைக்கழித்தது...

'வா... சன்... அதுக்கு கோபம் வந்திடுச்சு... நாம் போய்டலாம்...'

சத்தம் கேட்டு மேனேஜிங் டைரக்டர் காரில் வந்து இறங்கியவாறே....

'எவ்வளோ சொன்னாலும் நீ திருந்த மாட்டியா?' சொல்லியபடி தன் கைகளில் வைத்திருந்த பைஃல்களால் சிங்கத்தை அடிக்க முனைந்தார்...

தந்தையோடு போய்க்கொண்டிருந்த சிறுவன் திரும்பி பார்த்தபடி கேட்டான்...

'யாருப்பா அவர்?'

'அவர்தான் டிரைனர்... குள்ளநரியா மாத்தறாரு...'

'நீயும் அடிவாங்கிருக்கியா டாட்'

'இல்லவே இல்லை' குள்ளநரி சொன்னது

'சிங்கம்... பாவம் டாட்... '


பின் குறிப்பு; சிங்கத்திற்கு பதிலாக அவ்விடத்தில் உங்களை பொருத்திக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...

சேர்ந்து வாழ சுப்ரீம் கோர்ட் நிபந்தனை

கண்ணாலம் கட்டாமயே சேர்ந்து வாழனும்னா அதுக்கு நீங்க சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளை பின்பற்றனும்

1.ரெண்டு பேருக்கும் திருமண வயது வந்திருக்கனும் ( மைனர் பெண்ணோட வாழ்ந்தா களிதான்)
2.ரெண்டு பேருக்கும் வேற பார்ட்டியோட கண்ணாலமாகியிருக்க கூடாது ( அப்போ அது அடல்ட்ரி)

3.ச்சொம்மா வீக் எண்ட்ல மட்டும் கட்டிக்கிட்டு படுத்தா போதாது குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கனும்.

4.கணவன் ,மனைவிங்கற ஃபீலிங் வந்திருக்கனும்

5.ஊர் உலகமும் உங்களை கணவன் மனைவியா அங்கீகரிச்சிருக்கனும்

( என் பாலிசி என்னன்னா கண்ணாலமானவங்க எல்லாம் கண்ணாலமே நடக்கலைன்னு  நினைச்சு சேர்ந்து வாழறது பெட்டர். அதுலயும் இன்னொருத்தன் கிட்டே விவாகரத்து வாங்கிட்டு வந்த பார்ட்டினு நினைச்சா இன்னம் த்ரில்லா இருக்கும் )

பட்டா இல்லாத நிலத்துல எவ்ளதான் உழுதாலும் வெள்ளாமை வீட்டுக்கு வந்து சேருமா?

முக்கியமா நிலத்துக்கு சொந்தக்காரவுக ரோட்ல போறவனை எல்லாம் நிலத்துல இறக்கி விட்டுட்டா ..பஞ்சாயத்துக்காரன் தானே மண்டைய பிச்சிக்கனும் . ரோசிங்கப்பா..

விலங்கு வேணாம்னு தானே விலங்கா வாழறது. அப்பாறம் என்னத்தை ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டுக்கு போறதும் - கேஸு நடத்தறதும் - ஜட்ஜுங்க பாவம் .. அயோத்தி பஞ்சாயத்து மாதிரி நடுவாந்தரமா தீர்ப்பு கொடுக்க எந்த அளவு மண்டைய உடைச்சிக்கிட்டாய்ங்களோ?

Friday, October 22, 2010

இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்...

 சுகுமார்ஜி பக்கங்கள் ( ரொம்ப முக்கியம்...!? )

இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்... இல்லாதவர்கள் தள்ளி போகலாம்... (சொந்த மூளையை உபயோகிச்சா உங்களுக்குத்தான் பிடிக்காதே)

ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி விடிவதில்லை, ஒரே ஆற்றில் இரண்டு முறை நீராட முடியாது (ஓஷோ ) ஆனால் மனிதன் படுத்தால் இப்படி, என்ன மனநிலையில் படுத்தானோ அதே நிலையிலேயே எழுகிறான்.

எனக்கொரு எண்ணம் முன்னாட்களில் எழும்...
மனிதன் எப்போது திருந்துவான்? கண்டிப்பாக இறக்கும் தருவாயில் அவன் தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து வருந்துவான். ஆனால் மறுநிமிடமோ, மறுநாளோ அவன் இறந்து விட யாருக்கு லாபம்? ஒரு தாத்தா செய்த அதே தவறுகளை மகன் செய்கிறான் (சிலர் விதி விலக்காக) அதே தவறுகளை பேரனும் செய்கிறான்.

ஆனால் மனிதர்கள், அவர்களின் மனநிலையும் வேடிக்கையானது...
தான் பெற்ற கஷ்டம் குழந்தை படக்கூடாது என்று எண்ணி வளர்த்தால் பிள்ளை வேறு மாதிரி வளர்கிறான் ...
கஷ்டங்களை பெற்றே வளரட்டும் என்று தந்தை நினைத்தால், அப்பனையே வெட்டி செய்கிறான் பிள்ளை...
அப்போ தவறு எங்கே?

நாமெல்லாம் வளர்ந்த கில்லாடிகள், குழந்தைகள் வளரும் கில்லாடிகள்! கில்லாடிக்கு  பிறந்தது   கில்லாடியகத்தானே இருக்கும்.

ஆனால் நான் இங்கே சொல்ல தயாரானது வேறு... மனிதன் 6to60 ன்னு   வச்சிக்கோங்க ... எல்லாம் ஸ்பார்க் மாதிரி இருக்காங்க... எதுல ஸ்பார்க்னு கேக்கலியே? அப்படி ஒரு கேள்வி கேக்கவே கூடாது... கொய்யால... எவன்கிட்ட போனாலும், மண்ணெண்ணையை வாயில ஊத்தி பக்னு நெருப்ப ஊதின மாதிரி நம்ம முஞ்சில ஊதுறன்கப்பா...

ஏன்டா இப்படி இருக்கிங்க?
நான் மட்டுமா? நக்கலா எதிர் கேள்வி கேக்குறாங்க...

அலுவலகத்தில் திட்டு வாங்கிட்டு, பொண்டாட்டியை புரட்டுன மாதிரி தொடர் கதையா போய்கிட்டே இருக்கு...

இருக்கிறதிலே எவன் நல்லவன் அப்படின்னு கேட்க  கூடாது? எவன் கொஞ்சமா தப்பு பன்றவன்னுதான் கேட்கணும். ஆனால் ஒருவர் கேட்டார் " என் பிள்ளையை நீ சொல்லுற மாதிரி வளர்த்தா, இந்த உலகத்தில  என் பிள்ளை இளிச்சவாயனா  போயிடுமே?"

கவனிங்க... ஒரு குழந்தைய நல்லவனா வளர்க்கிறது கெட்ட விஷயமா போய்டுச்சு...
துணிகளுக்கு ஒரு வாசிங் மிசின் இருக்கிறப்புல மனுஷன் மூளைக்கு யாராவது  ஒரு வாசிங் மிசின கண்டு பிடிங்களேப்பா...

இப்போதான் எல்லா வகையான தொழில்  நுட்ப வல்லுனர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள், தலைவர்கள், தொண்டர்கள், மாணவர்கள்,  அதித மூளை குழந்தைகள் இருக்கிறார்களே... கொஞ்சம் மூளையை கசக்கினால் கண்டு பிடித்து விடலாம் ....

அட.... யாருப்பா அது " அப்ப மனுசங்களே இல்லையானு கேக்கிறது" கம்முனு கிடங்க ...

Thursday, October 21, 2010

ஓம்சக்தி அடிகளாரின்(?) மகன் புதுக்கட்சி

மேல் மருவத்தூர் ஓம் சக்தி  பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன் தமது பிறந்த நாளன்று புதுக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக கல்கி செய்தி வெளியிட்டுள்ளது. அவிக காலேஜ்ல ரெய்டு நடந்த பிற்பாடு தங்களுக்கும் ஒரு அரசியல் பின்னணி இருக்கனும்னு நினைச்சு இந்த ஏற்பாட்டை செய்யறதா பக்தர்கள் சொல்றாய்ங்களாம்.

(கீழே  உள்ள அடிகளார் படத்தை பாருங்க தலைக்கு பின்னாடி ஆரா என்னா சூப்பரா இருக்கு - அடங்கொய்யால  ஆல் லைட்ஸ் ஆஃப்னுட்டு இன்ஃப்ரா ரெட் கேமரால  பெரியாரை படம் எடுத்திருந்தா ஒளி வெள்ளத்துக்கு நடுவுல தெரிஞ்சிருப்பாரு.  இதை நான் எப்படி கன்ஃபார்மா சொல்றேன்னா எண்ணம் செயலாகனும்னா அளவற்ற ஆத்ம சக்தி இருக்கனும். பெரியார் எண்ணங்கள் நூத்துக்கு நூறு சதவீதம் இல்லைனாலும் எந்த அளவுக்கு செயல் வடிவம் பெற்றிருக்குன்னு சரித்திரத்தை புரட்டிப்பாருங்க..

இந்த பங்காரு அடிகளாரோட  ஃபோட்டோ பின்னாடி இருக்கிற ஆரா ஜஸ்ட் டிஜிட்டல் டச்சுங்கண்ணா)

அரசியல் சாசனப்படி இந்திய குடிமகனா உள்ள , மேஜரான  எவன் வேணம்னா  கட்சி ஆரம்பிக்கலாம். ஆனா கன்ஷிராம் சொன்ன எம்3 ( மணி,மாஃபியா,மீடியா) இருக்கிற பிக்காலி எல்லாம் கட்சி ஆரம்பிச்சுட்டா நாடு தாங்காது பாஸ். 

மணி:(Money)

வெறும் மணி (தெரு நாய் பேரு கிடையாதுப்பா.. பணம்-பைசா-ருப்யா-மால்) பலத்தோட கட்சி ஆரம்பிச்ச பன்னாடையெல்லாம் தாராந்து பூட்டது இந்திய ஜன நாயகத்தோட வலிமைய காட்டுது.

என்னதான் ஜன நாயகம் கெட்டு கீரை வழியாகியிருந்தாலும் வெறும் மணி பலத்தை வச்சிக்கிட்டு கட்சி ஆரம்பிச்சா நாக்கைத்தான்  வழிக்கனும் . இந்த ஃபார்முலா சக்ஸஸ் ஆகியிருந்தா டாட்டா,பிர்லா,அம்பானி,வாடியா எல்லாம் ஆளுக்கு அரை டஜன் கட்சி ஆரம்பிச்சுருப்பாய்ங்க.

மாஃபியா :

இதுவும் மணி மாதிரி தான் வெறுமனே மாஃபியாவை வச்சு எவனும் சக்ஸஸ் ஆக முடியாது. கூடவே மாமா,மச்சான், அக்காவை வச்சிருக்கிறவன் எவனாச்சும் ஏற்கெனவே லாஞ்ச் ஆகியிருந்தா அவன் குண்டி பின்னாடி நின்னு ஒர்க் அவுட் பண்ணி அப்பாறம் தனியா வந்து பேர் சொல்லலாம்.

மீடியா:

சக்ஸஸ் ஆக 00.01% வாய்ப்பிருந்தா கூட விகடன் க்ரூப்ஸ் எம்.டி.விட்டிருப்பாரா? இல்லே  நைனா அதனாலதான் விட்டு வச்சிருக்காய்ங்க. தேவி மாதிரி ஒரு பத்திரிக்கைய வச்சுக்கிட்டு ஒரு மெர்க்கன்டைல் வங்கி விவகாரத்துலயே  ஜெயிச்சு வர முடியலை. கட்சி ஆரம்பிச்சு சக்ஸஸ் ஆறதெல்லாம்  ச்சொம்மா புஸ்ஸு தான்

கன்ஷிராம் போய் சேர்ந்துட்டாரு. அவரு உசுரோட இருந்திருந்தா எம்3 யோட இன்னொன்னை சேர்த்திருப்பாரு. அதென்னாடான்னா மிஸ்டிசம் அதாவது சாமியாருங்க. ராம் தேவ் பாபா கட்சி ஆரம்பிக்கிறேன்னாரு ( ஆரம்பிச்சுட்டாரா தெரியாது.. இப்போ பங்காரு


நான் இன்னா பண்ணட்டும் பாஸ் . சப்ஜெக்ட் தானா வந்து மாட்டுது. ஜோதிஷம்னு குறிப்பிட்டா அதை ஜோதிஷமா ஜோதிடமானு திருத்த சனம் இருக்கு. "சாமி"ன்னா அது வெள்ளை சாம்பார் மாதிரி இருக்கு.ஸ்மாமின்னா ஓனர்னு அர்த்தம். எவனொருத்தன் தனக்கு தானே ஓனரா கீறானோ அவன் தான் உண்மையான ஸ்வாமி/சன்யாசி/காட் மேன் .(God Man ங்கற வார்த்தைய தமிழ்ல படிக்கிறச்ச Cot Manன்னு கூட படிக்கலாம். அதனாலதான் நிறைய God Man Cot Man ஆயிட்டானுவ. Cotன்னா  கட்டில் ( ஞா வருதே ஞா வருதே - நித்யானந்தா..)


சன்னியாசி பூனை வளர்த்த கதை தெரியுமா? தெரியாதவுகளுக்கு சொல்றேன். ஒரு சன்யாசி தன்னோட கோவணத்தை எலி கடிச்சுருச்சுன்னு பூனை வளர்க்க முடிவு செய்தாராம். அதுக்கு பால் வேணுமேன்னு பசு வளர்த்தாராம். அதைபார்த்துக்க ஆள் வேணமேனு ஒரு பொம்பளை ஆளை போட்டாராம்.  கடேசில பார்த்தா ஏதோ கசமுசா நடந்து  சம்சாரியாவா ஆயிட்டாராம். அந்த கதையாத்தான் இருக்கு அடிகளார் கதை.

பொஞ்சாதிக்கு நகராட்சி சேர்மன் பதவி (தேவையா?) காலேஜு தேவையா? இன்னைக்கு அது புதுக்கட்சில கொண்டு வந்து விட்டிருக்கு. பூனை வளர்க்க போயி சம்சாரியான கதைதான்.

எனக்கு ஒரே ஒரு சின்ன மேட்டர் புரியமாட்டேங்குது பாஸ். இந்த மாதிரி காட் மேன் எல்லாம் நம்ம பத்தி என்னதான் நினைச்சிக் கிட்டிருப்பாய்ங்க. கேணைங்கன்னா?  அது நெஜமோ என்னமோ தெரியலை. நான் தான் ஆதிபராசக்திங்கற பார்ட்டி பொஞ்சாதிய நகராட்சி சேர்மனாக்கித்தான் நல்லது பண்ணனுமா என்ன?

சரி ஓஞ்சு போவட்டும் காலேஜ் ஏன் நடத்தனும். நடத்தினா போகுது .கணக்கு வழக்கெலாம் கரீட்டா வச்சுக்க வேண்டியதுதானே. ரெய்ட்ல மாட்டற மாதிரி ஏன் திருட்டு கணக்கு எழுதனும்?

நீ தி.க எழுதினே ரெய்டு உட்டாய்ங்க. நீ காட் மேனோ இல்லையோ அட்லீஸ்ட் மென்டல் மெச்சூரிட்டி இருக்கிற பார்ட்டியா இருந்தா என்ன பண்ணனும் கணக்கு வழக்கையெல்லாம் ஒழுங்கா வச்சிக்கிற வழிய  பார்க்கனும். அதை விட்டுட்டு மகனை விட்டு கட்சி ஆரம்பிக்கசொல்றேன்னா என்ன அர்த்தம்?

உனக்கு ஃப்யூச்சர்ல கூட ஒழுங்கா கணக்கு வச்சுக்கிற ஐடியாவே இல்லை. திருட்டு கணக்கு எழுதற நீ சக்தி அவதாரமா?   நாம ஹார்ட்வேர் வச்சிருக்கலைன்னாலும் எதை எழுதினாலும் "ஆணி"த்தரமா எழுதித்தான் வழக்கம்.

அடிகளாரை பத்தி மேலதிக தகவல் எதாச்சும் பெயருதா பார்ப்போம்னு கூகுல்ல தமிழ்ல அடிச்சு  தேடினா 2 விஷயம் ரிப்பீட்டு. ஒன்னு ரெய்டு,இன்னொன்னு ஒரு கோடி ரூ  நலதிட்ட உதவி. ரெண்டுமே அடிகளாரோட பண வசதியைத்தான் காட்டுது.

மேலும் முக்கி முக்கி தேடினதுல பூகம்பத்துக்கு 25 லட்ச ரூ கொடுத்த மேட்டர் சிக்கி மேற்சொன்ன வசதி பாயிண்டைத்தான் உறுதி படுத்துது.

மேலும் தேடினதுல மங்கையர் உலகம் "அம்மாவின்" புகழ் பாடுது. அப்பாறம் ஒரு விண்டோ சைஸுக்கு "அம்மா" படத்தோட ஒரு ப்ளாக் மாட்டுச்சு. தாளி வரலாறுன்னு அடிச்சி தேடினா ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

சுகுமார்ஜி கரீட்டா சொன்னாரு. இணையமே ஒரு குப்பை. அதுல நாம தேடறது மட்டும் கிடைக்காது.. இப்போ தினமணி சைட்ல  வசம்மா  மாட்டிக்கிச்சு .

அதை ஒரு ஓட்டு ஓட்டுவம்.


//தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்மருவத்தூர் என்ற சிறிய கிராமத்தில், 3.3.1941}ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் கோபால நாயகர், தாயார் பெயர் மீனாம்பிகை அம்மாள். அவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். அடிகளார் குடும்பத்தில் இரண்டாவது மகன்.//

நானே கடவுள்ங்கறது ஒரு மனவியாதி. கமல் ஒரு படத்துல சொல்வாரு. கடவுள் இருக்கிறாருங்கறவனை கூட நம்பிரலாம். நான் தான் கடவுள்ங்கறவன் ரெம்ப டேஞ்சர். அவன் மட்டும் நம்பினா அவனுக்கு மட்டும் டேஞ்சர் . ஊரே நம்ப ஆரம்பிச்சுட்டா நாட்டுக்கே டேஞ்சர். இந்த மனவியாதி அடிகளாருக்கு வர மொத காரணம் : அவர் பிறந்தது சின்ன  கிராமத்துல அதுவும் பி.ப குடும்பத்துல அதுலயும் விவசாய குடும்பத்துல.

ஏழ்மை கியாரண்டி. அவமானங்கள்  நிச்சயம், ஃப்ரீ ஹவர்ஸ் அதிகம்.இத்தனை பாயிண்ட் ஒன்னு சேர்ந்தா என்னாகும்? இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அதுலருந்து வில் டு பவர். அதுலருந்து கலாம் சொன்ன கனவு காணுதல். எல்லாமா சேர்ந்து ஒரு வழியாக்கிருச்சு.

//அருள்திரு அடிகளாரிடம் இளமையிலிருந்தே கல்வியில் அதிக ஆர்வம் இல்லை//

இருந்திருந்தா பாவம் கலெக்டராகி  யாராச்சும் மந்திரி ஆசிரமத்துக்கு போக அவர் செருப்புக்கு காவலா இருந்திருப்பாரு. கல்வியில ஏன் ஆர்வமில்லைன்னா கனவு,கற்பனை.

//உலக வாழ்க்கைக்காக இளநிலை ஆசிரியர் தகுதி பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார்.//

ஸ்கூல் வாத்தியாருங்களுக்குன்னே ஒரு செனேரியோ இருக்கு தெரியுமா? அதுலயும் இவிக ரிட்டையர் ஆயிட்டாய்ங்கனு வைங்க கொலை பண்ணிருவாய்ங்க. அடிகளார் மூலமா ஆத்தா பேசலை நைனா .அந்த கால ஆசிரியர் தான் பேசறாரு..

//1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசிரியர் பணியைத் துறந்து முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட்டார். //

வில் டு பவர், ஈகர் டு பவர் ,கனவு கற்பனை உள்ளவன் ப்ராக்டிக்கல் லைஃப்ல சூட் ஆக முடியாது.

//தான் பட்டம் பெறாவிட்டாலும் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க, பிற்காலத்தில் ஆன்மிகத்தோடு கல்விப் பணியை மேம்படச் செய்து மேல்நிலைப் பள்ளி முதல் மருத்துவக் கல்லூரி வரை பன்னிரெண்டு கல்வி நிறுவனங்களை நிறுவினார். ஆன்மிகத்தில் இருந்து கொண்டு கல்விக்கு அடிகளார் ஆற்றும் தொண்டு மிகவும் போற்றுதலுக்குரியது.//

பாவம் தொண்டு ரெம்ப ஓவரா போயிட்டதாலத்தான் ரெய்டு. அடங்கோத்தா கல்விங்கறது லைசென்ஸ்ட் க்ளப், பார் அண்ட் ரெஸ்டாரண்ட் மாதிரி ஒரு வியாபாரமாகி பல யுகமாகிப்போச்சு. இதுல சேவை, கார சேவைல்லாம் எங்க வருது.

அடிகளாருக்கு படிப்பு ஏறலை, வாத்தியார் வேலைல தொடர முடியல. நார்மல் பீயிங்ஸ் எல்லாம் வேற வேலை பார்க்க போயிருக்கும்.ஆனால் அடிகளார் மாதிரி கேரக்டர் எல்லாம் எசன் ட் ரிக்.. தாளி எனக்கா படிப்பு வராது வாத்தியாராகி காட்டறேன். தாளி என்னையா வாத்தியார்  வேலைலருந்து தூக்கறிங்க ( ஓடிப்போக வைக்கிறிங்க) - நானே ஸ்கூல்,காலேஜ் நடத்தறேம்பாருங்கற கேரக்டர் இதெல்லாம்.

இத்தீனி வருஷம் அருள்வாக்கு சொல்லியும் இந்த கேரக்டர் மாறலை பாருங்க. தாளி எனக்கா ரெய்டு விடறிங்க. நான் விடறேன் ரெய்டுங்கற சைக்காலஜி இது. ( ஆமாங்கண்ணா ஜா -ஜெ பீரியட்ல ஜானகி அம்மாவுக்கு ஆசியெல்லாம் வழங்கினாரே அப்பாறம் ஏன் ஜா பாவம் போணியாகாம போயிட்டாய்ங்க.

// அருள்மிகு அடிகளாரின் பேச்சு சாதாரண நடையில்தான் இருக்கும். ஆனால் அவர் அருள்வாக்குக் கூறுமிடத்து நடை மாறிவிடும். //

இதெல்லாம் மனவியாதில, சைக்காலஜில சகஜமப்பா..


//தத்துவங்கள் சரளமாகவும், வேகமாகவும் இருக்கும்//

ஒன்னு ரெண்டையாச்சும் எடுத்துக்கிட்டு கிழிக்காம விடுவமா என்ன? வெய்ட் ப்ளீஸ்

//அருள்வாக்கைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினம்தான். எல்லோருக்கும் ஓரளவுக்குத்தான் புரியும். மகளிர் அறநிலைக்கு அருள்வாக்கு கூறும்போது மெதுவாகவும், வேகமாகவும் கூறும்போது புரிந்துகொண்டு எழுதுவது சற்றுக் கடினமாக இருக்கும்.//

த பார்ரா இதான் சக்ஸஸ் ஃபார்முலாவா.. இனிமே ஜாதக பலன் எழுதறப்ப இதையே ஃபாலோ பண்ணீர வேண்டியதுதான். மன நிலை பாதிக்கப்பட்டவனோட பேச்சு புரிஞ்சிக்கிற மாதிரியா இருக்கும்

//அருள்மிகு அடிகளார் கடுமையான விரதங்கள் இருப்பதில்லை.//

விரதம்னு போயிட்டா சொந்த ஊர்ல பத்துவட்டிக்கு கடன் வாங்கி, வளையல் மூக்குத்தி அடகு வச்சி மருவத்தூர் வந்து சனங்க  கொட்டிட்டு போறதை எல்லாம் அனுபவிக்கிறது எப்படியாம்?

//விழா நாட்கள், விசேட நாட்கள், அமாவாசை, பெüர்ணமி ஆகிய நாட்களில் மெüன விரதம் இருப்பார். மெüன நாட்களில் அவசியம் ஏற்பட்டால் சுவற்றிலும், கையிலும் வலதுகை ஆட்காட்டி விரலால் எழுதிக் காட்டுவார்.//

த பார்ரா.. உண்மையான மவுன விரதம்னா என்ன?  மைண்ட்ல எண்ணங்களே நின்னு போயி அதனால பேச வேண்டிய அவசியமே இல்லாம போயிர்ரதுதான். இவரு விரல்ல எழுதிக்காட்டுவாராம். இந்த மயித்துக்கு டிவி கேம்பியர்ங்க மாதிரி பேசித்தள்ளவேண்டியதுதானே .என்ன  மயித்துக்கு மவுன விரதம்?

அடிகளார் படம் தனியா கிடைக்கும். ஆனா ஆதிபராசக்தி படம் தனியா கிடைக்காது. ஜூவியும் அடிகளாரும் ஒரு தாட்டி காட்டா குஸ்தில இறங்கின மேட்டர் ஞா வருதா?

சிகப்பாடையோட எஃபெக்ட் என்ன? இவர் ப்ரிஸ்க்ரைப் பண்ற திஷ்டி முதல் தியானம் வரை மக்களுக்கு எந்தளவுக்கு உதவுது  . இந்த க்ரூப்ல சேர்ரவுக நோக்கம் என்ன? அவிக சைக்காலஜி என்ன? ஓம் சக்தி க்ரூப்ல மட்டும் அடல்ட் ரி ஏன் அதிகமா நடக்குது .இது மாதிரி   நிறைய வில்லங்கமான கேள்விகளுக்கெல்லாம் பதில் .....
( அடுத்த பதிவில்

ரஜினியும் (அய்யரும்) ஃபில்ட்டர் காஃபியும்

ரஜினி மேட்டர்ல என்னதான் அடக்கிவாசிக்கனும்னு நினைச்சாலும் ரஜினி பக்தர்கள் விடமாட்டாய்ங்கபோல. இன்னைக்கு "ரஜினி  எனும் அதிசயம்!- விவாதமும் விதண்டாவாதமும்!"  ங்கற பதிவு நம்ம கண்ணுல பட்டுது. ரெம்ப டீப்பா போகாம ஒரு வரி ரெண்டு வரி கமெண்டுல கதைய முடிச்சுர்ரண்ணே.

//என்டிடிவி – இந்துவில் ரஜினி எனும் அதிசயம்: சூப்பர் ஸ்டார் பவரா அல்லது அசுரத்தனமான மார்க்கெட்டிங்கா? //ங்கற தலைப்புல ஒரு டிஸ்கஷன் நடந்திருக்கு. அதை பார்ட்டி கிழிச்சிருக்காரு. இந்த வில்லங்கத்தனமான  டிஸ்கஷனே ஒரு அசுரத்தனமான மார்க்கெட்டிங்க் தான். எத்தனையோ நல்ல படம்லாம் வந்திருக்கு. அதுக்கெல்லாம் இப்படி ஒரு டிஸ்கஷ்ன் நடக்குமா? காது.

//இருக்கும்போது ஒரு விஷயத்தின் அருமை விளங்குவதே இல்லை// இந்த பாய்ண்டை நானே பல தடவை சொல்லியிருக்கேன். இந்த தாட்டி  ஒரே ஒரு வரியை  சேர்த்து சொல்றேன். ஏகத்துக்கு சிலும்பி அலம்பல் பண்ணும் சில தக்கை மேட்டருங்களால தான் //இருக்கும்போது ஒரு விஷயத்தின் அருமை விளங்குவதே இல்லை//. யந்திரனோட இரைச்சலால எத்தனையோ காற்றினிலே வரும் கீதங்கள் ரசிகர்கள் செவிகளை அடைய முடியாதே போயிருச்சுங்கண்ணா.

//எம்ஜிஆர் என்ற மனிதர் பிறப்பால் மலையாளத்தவராக இருந்தாலும், வளர்ப்பால், உணர்வால் ஒரு தமிழராகவே வாழ்ந்தார். தமிழர் திருநாளை மட்டுமே கொண்டாடினார், தமிழிலேயே எம்ஜி ராமச்சந்திரன் என்று கையெழுத்துப் போட்டார். அவரை மக்கள் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர வைத்துவிட்டனர்.//

எம்.ஜி.ஆர் புலி. அந்த புலியை பார்த்து எத்தினியோ நரிங்க சூடு போட்டுக்குச்சு. ஒரு ம....ரும் பேரலை.ஏண்டான்னா எம்சியாரு ஒன்னு அட்வான்ஸா ப்ளான் பண்ணி செய்துருக்கனும் அ அவருக்குள்ள ஒரு சின்சியாரிட்டி நெஜமாலுமே இருந்திருக்கனும்.

ரஜினி ஆந்திரா போனா என்.டி.ஆர், ஏ.என்.ஆர், கர்னாடகா போனா ராஜ்குமார், இங்கன வந்தா எம்சியார் சிவாஜி, மஹாராஷ்டிரா போனா பால் (பல் போன) தாக்கரேனு  அந்தர் பல்ட்டி அடிக்கிறாருங்களே அதையும் சொல்ல வேண்டியதுதானே..

//ஆனால் அறிவு ஜீவிகள் என்ற மக்கள் விரோத கூட்டமிருக்கிறதே… அது அவரை விமர்சனம் என்ற பெயரில் அவமானப்படுத்தியது கொஞ்சமல்ல. //

விமர்சனங்கற வார்த்தையையும் உபயோகிச்சுட்டு அப்பாறம்  அவமானப்
படுத்தியதுங்கற வார்த்தை எதுக்கு?

நாலு பேர் தூக்கிப்பிடிக்கறதாலயே அவிக விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவுக ஆயிருவாய்ங்களா என்ன?

//ரஜினி படங்களை ரஜினிக்காக மட்டுமே பார்க்கிறார்கள் ரசிகர்கள்//
அப்ப என்ன மயித்துக்கு ஐஸ்வர்யா ராயி, ஏ.ஆர் ரகுமானு ,ஷங்கருனு கூட்டு சேர்ரது, என்ன மயித்துக்கு சன் பிக்சர்ஸ் ஷூவை நக்கறது?

பேசாம ஸ்ரீராகவேந்திரர்,வள்ளினு எடுத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதானே. சினிமாங்கறதே டீம் ஒர்க் பாஸ்.

ஆனந்த விகடன்ல  நம்ம கண்களை ஐஸ்வர்யாவை விட்டு ரஜினி பக்கம் திருப்பவே முடியலைனு விமர்சனம் எழுதியிருக்காய்ங்களே.. அதுக்கும் ஒரு பதிவு போடுவிங்களாண்ணா

//ஆனால் சாமியே இல்லாமல் வெற்றாக ஒரு கோயிலிருந்தால், விழா எடுத்தால்… யாராவது வருவார்களா?//

மசூதி,சர்ச்லல்லாம் இப்படித்தான் பண்றாங்கண்ணா.

//ஞாநி, சுதாங்கன் வகையறாக்கள் சாமியை விட்டுவிட்டு பூசாரியை பூஜிக்கிற மூடர்களைப் போலவே பேசுகிறார்கள். //

என்னங்கண்ணா படக்குனு ட்ராக் மாறிட்டிங்க ஐஸ்வர்யா ராயி, ஏ.ஆர் ரகுமானு ,ஷங்கரு,சன் பிக்சர்ஸையெல்லாம் ஒயிலாட்டம் ரேஞ்சுக்காச்சும் சொல்லிக்கிட்டிருந்து படக்குனு பூஜாரி ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டிங்க?

//ரஜினிக்கு எதிரான வயிற்றெரிச்சல் கோஷ்டியின் மொத்தப் பிரதிநிதிகளாகவே இந்த இருவரும் வந்திருந்தனர்.//

ரஜினிக்கும் எங்களுக்கும் வரப்பு தகராறு வாய்க்கா தகராறா இருக்கு.வயிறெரிய. மனுஷன்  நாசமா போறாரே, புலி மேல சவாரி பண்றாரே அந்த புலியே தின்னுரப்போகுதுங்கற பரிதாபம் தான் . மேலும் கூவற கழுதை மேயற கழுதைய கெடுத்த கணக்கா ஒரு லீடிங் பர்சனா இருந்துக்கிட்டு தானும் கெட்டு தன் பின்னால வரப்போற ஹீரோக்களையும்  படங்களையும் கெடுக்கறாரேனு ஒரு ஆதங்கம்

//சொந்தக் காசில் போய் யாராவது கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றைச் செய்வார்களா? //

நிச்சயமா செய்வாய்ங்க. ( நானே மிட்டாய் இறைச்சிருக்கேன்) எதுவரை? 20 வயசு வரை, மிஞ்சிப்போனா 30 வயசுவரை. அரிசி,பருப்பு விலை தெரிஞ்சவன் தெரிஞ்ச பிற்பாடு செய்வானா? அப்படியும் செய்தா அவனுக்கு ஏதோ ஹிடன் அஜெண்டா இருக்குனு அர்த்தம்.

//பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கிவிட்டனவாம்.//
இல்லையா பின்னே. அன்னைய தேதிக்கு கலைப்புலி இன்டர் நேஷ்னல்ஸ் தான் கார்ப்போரேட் கம்பெனி. கலைப்புலி தாணு கொடுத்ததுதானே சூப்பற ஸ்டார் பட்டம்.

இதைப்பத்தி ஒரு பதிவே போட்டிருக்கேன் படிச்சு பாருங்க "ரஜினிக்கு ஒரு சவால்" ( ச்சொம்மா கூகுல்ல அடிச்சி தேடுங்க வாத்யாரே)


//ஆஹா, ரஜினியையே எதுத்துப் பேசறான் பாருய்யா” என்று பெயர் வாங்க நினைக்கும் அற்ப புத்தி இது.//

அய்யோ அய்யோ .. (வடிவேலு மாடுலேசன்)  இன்னைக்கு எதிர்ப்பு நாளைக்கே வீரலட்சுமிங்கறதெல்லாம் காமெடி பீஸு குரு! அதை போயி எதுக்கவேண்டியிருக்குதேனு வருத்தம் தேன்.

//முத்து, படையப்பாவின் வெற்றிக்கு காரணம் என ஒன்றைச் சொன்னார் பாருங்கள் அந்த ‘அஞ்ஞாநி’… உண்மையாகவே பக்கென்று சிரித்துவிட்டேன். அதுவும் மீனா, ரம்யா கிருஷ்ணனுக்காகத்தான் ஜப்பானின் அந்தப் படங்கள் ஓடின என்கிறாரே… இதைவிட முட்டாள்தனமான வாதம் இருக்க முடியுமா?//

பார்க்க: ஆனந்த விகடன் விமர்சனத்திலிருந்து நான் கொடுத்துள்ள குறிப்பை. ரஜினி என்னைக்காச்சு ஸ்டார் நைட் பண்ணியிருக்காரா? ரஜினியோட வீச்சு ஒரு விதம் .ரம்யா மீனாவோட வீச்சு ஒரு விதம் இதைத்தான் ஞானி சார் அனலைஸ் பண்ணியிருக்காரு

//இந்திய நாட்டின் பிரதமரே, ஜப்பான் நாடாளுமன்றத்தில் ரஜினியை வானளாவப் புகழ்ந்து, ‘இந்திய – ஜப்பானிய கலாச்சார உறவுக்குப் பாலம் எங்கள் நாட்டு ரஜினி’ என்று கூறினாரே, அதெல்லாம் இந்த அசட்டு ஆசாமிகளுக்குத் தெரியுமா..?//

யாரு.. நம்ம பிரதமரா .. கொஞ்சம் இருங்க வாய் விட்டு சிரிச்சிக்கிறேன். ஆந்திராவுல ஜகன் போர்கொடி தூக்கினதுமே சிரஞ்சீவிய கூப்டு சரண்டர் ஆன பார்ட்டிங்கப்பா.. நாளைக்கு என் கையில பத்து எம்.எல்.ஏ இருந்தா அ பத்து பேரை எம்.எல்.ஏ ஆக்கற சரிஸ்மா இருந்தா என்னையும் பாலம் ,ஓவர் பிரிட்ஜுனு சொல்லுவாய்ங்கப்பா. (சோகம் என்னடான்னா ரஜினியால  ஒரே ஒரு கவுன்சிலரை ஜெயிக்க வைக்கமுடியாது.. - அவரு பார்ட்டி வைக்க ஆத்துல ஒத்துக்க மாட்டாய்ங்களே..)

//நீலாம்பரியாக யாரும் நடிக்கலாம்… ஆனால் படையப்பாவாக ரஜினி மட்டுமே நடிக்க முடியும்//

ஆ...........மா படையப்பா தில்லானா மோகனாம்பாள் ஷண்முக சுந்தரம் மாதிரி ஒரு ஜீவனுள்ள படைப்பு. அதுல ரஜினி மட்டுமே நடிக்க முடியும்.

//இதே எந்திரன் ஓடாமல் போயிருந்தால்//

அப்படித்தானே தகவல்

//ஆனால் ரஜினி மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேல் உச்ச நடிகராகவே இருக்கிறார். //

தபார்ரா சில காலம் ராமராஜன் கூட டாப்புல இருந்தாருப்பா

உலக திரையுலகம் இருக்கட்டும்.. லோக்கலை பார்ப்போம்.

//வட இந்தியர்கள் ரஜினிக்கும் ஷங்கருக்கும் தலை வணங்குகிறார்கள்.//

அப்ப ஏங்கண்ணா  எந்திரன் இந்தி பட போஸ்டர்ல ரஜினி  மூஞ்சி என்ன  ,பேரை கூட போடலியாமே சன் பிக்சர்ஸ் காரவுக

//இந்த விவாதத்தின் முடிவில், “ரஜினி என்ற நட்சத்திரத்தின் பவர்தான் இன்றைய வெற்றிகளுக்குக் காரணம் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை!” என்று கூறி எதிர்ப்பாளர்களின் முகத்தில் கரி பூசினார் தொகுப்பாளர் சஞ்சய்.//

இதுக்கு பேர்தாங்கண்ணா அசுரத்தனமான மார்க்கெட்டிங்

//எப்போதெல்லாம் ரஜினி பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதோ அப்போது டிஆர்பியும் கூடுகிறது.//

அண்ணா .. நான் இதுவரை 1,500 பதிவுகளுக்கு மேல எழுதியிருக்கேன் ஆனா லதாரஜினிகாந்தும் என் எதிரிகளும்ங்கற பதிவு தான் சூப்பர் ஹிட். இதுக்கு என்ன அர்த்தம்னா ரஜினிக்கு அந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்குனு அர்த்தம்

//அதுதான் ரஜினி சாரின் பவர்//

இல்லிங்கண்ணா ரஜினி சாருக்குள்ள எதிர்ப்புக்கான பவர்

//தமிழ்நாட்டையும் இரண்டு விஷயங்களையும் பிரிக்கவே முடியாது. அவை ஃபில்டர் காபி… ரஜினிகாந்த்!” என்றார் சஞ்சய்.//

ரஜினி காந்து சரிங்கண்ணா ( அவிக மார்க்கெட்டிங் உத்தேசமே அதான்) அதென்னா ஃபில்ட்டர் காபி ? அய்யரம்மாவை மணந்து மகளை மடில உட்கார்த்தி வச்சு தாரை வார்த்து கொடுத்ததால ரஜினியை அய்யராவே ஆக்கிட்டிங்களா?


படிக்கவும்: ரஜினி அய்யராத்து திருமணம்

அப்போ அவரோட குண்டி சூட்டை தாங்கி தூக்கி வச்சு ஆடின சூத்திரனுக்கெல்லாம்  அஸ்கு புஸ்குதானா?

Monday, October 18, 2010

பார்ப்பன குசும்பு : லேட்டஸ்டா டோண்டு சார்

அண்ணே வணக்கம்ணே,
இஸ்லாம்ல கடவுளுக்கு " மாக்கிர்"னு ஒரு பேர் உண்டு. இதுக்கு சதிகாரர்களுக்கு  சதிகாரன்னு அர்த்தம். ராசாதி ராசா மாதிரி வச்சுக்கங்க. நான் புதுப்பதிவே  போடக்கூடாதுன்னு லங்கோடு கட்டிக்கிட்டிருந்தேன். ஆனா பாருங்க மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடும்ங்கறமாதிரி அவாள் என்னை கிளப்பி விட்டு புதுப்பதிவு போட வச்சிட்டாய்ங்க.அவாளை கிளப்பி விட்டது யாருங்கறிங்க.சாட்சாத் இன்ஷா அல்லாஹ் தான்

நான் பிராமணாள கிழிக்கிறத படிச்சுட்டு மஸ்தா பேரு என்ன முருகேசன் உங்களுக்கு அவிக மேல கோபம்னு கேட்கிறது வழக்கம். அந்த காரணங்களை இன்னொருக்கா இங்கன பட்டியல் போடறதா இல்லை.

நாம எங்கன போனாலும், இருந்தாலும் "கண்ணா! நான் நேத்து வந்தேன் இன்னிக்கிருக்கேன். நாளைக்கு பூடுவேன் ..உங்க பாலிடிக்ஸ் எல்லாம் எனக்கு தேவையில்லே" ங்கறதுதான் நம்ம ஸ்டைல்.

குளிச்சுட்டு பாலத்து மேல நடந்து வர்ர ஆனை மாதிரி பன்னிக்கெல்லாம் சைடு கொடுத்துக்கிட்டு நம்ம ரூட்ல நாம போறோம். ( தனி வழி இல்லிங்கணா.. நமக்கு நிறைய முன்னோடிங்க இருக்காய்ங்க - வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம் வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்"ங்கற வரிகளை சில காலம் ஸ்லோகனா கூட வச்சிருந்தேன்.

எங்கே விட்டேன் ஆங் நம்ம ரூட்ல நாம போறோம். ஆனா போற போக்குல குசும்பை அதுவும் பார்ப்பன குசும்பை காட்டினா செமை கடுப்பாயிர்ரன். முன்னொருக்கா ஓம்கார் ஸ்வாமிகளுக்கு இடைக்காலத்துல ஸ்மார்ட்டுக்கும் பூசை போட்டேன்.

இப்போ டோண்டு.  யாருக்கோ ஆறுதல் சொல்றேன் பேர்வழி நம்மை மொக்கை பண்ணியிருக்கு பார்ட்டி. நமக்கு லாஜிக்கே இல்லாம சில பேர் மேல கொஞ்சூண்டு மருவாதி வந்துருமா அதை கடாசி வரைக்கும் மெயின்டெய்ன் பண்ணத்தான் பார்க்கிறோம். வி.........ட மாட்டேங்கிறாய்ங்களே.

அவரோட வரிகளை அப்படியே தரேன் பாருங்க. ( ரெஃபரன்ஸ் டு தி கான்டெக்ஸ்ட் தேவைன்னா  இங்கே க்ளிக் பண்ணுங்க
"சித்தூர் முருகேசன் என்னும் பதிவரை எனக்கு நினைவூட்டுகிறீர்கள். அவரும் இப்படித்தான் இந்தியாவை முன்னேற்றுவதற்காக சில திட்டங்களை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் தபால் போட்ட வண்ணம் உள்ளார். "

இவரு நம்மை எந்த ரேஞ்சுக்கு கொண்டுட்டு வந்துட்டாரு பாருங்க. எந்திரன்ல வசீகரன் ரேஞ்சுக்கு கொண்டுட்டு வந்துட்டாரு. அவரு அப்படித்தானே சிட்டியை எப்படியாச்சும் ராணுவத்துக்கு தள்ளிவிட மெடிக்கல் ரெப் கணக்கா பேசுவாரு.

திட்டங்களை வைத்துக்கொண்டு ( பழக்க தோஷத்துல நான் ஏதோ பூட்டி வச்சிருக்கிறாப்ல சொல்றாரு பாருங்க - 1993 லயே ஜன சக்தி பேப்பர்ல பக்காவா கொடுத்தாச்சு ப்ளானை. ஏதோ திட்டமில்லிங்கண்ணா பக்கா பக்காவா இருக்கேன். தாளி மன்மோகன் சிங் இல்லே அவிக தாத்தா சிங் வந்தாலும் மெட்டாஷ் தான்.

"தபால் போட்ட வண்ணம் இருக்கேனாம்" அடங்கொய்யால .. குறுக்கத்தரித்த குறள் மாதிரி 1986லருந்து என் வாழ்க்கைய,உயிரை பணயம் வச்சு 1997 வரை திட்டத்தை மெருகேத்தி டெக்னிக்கல்,தியரிட்டிக்கல் சப்போர்ட் கொடுத்து ஏறக்குறைய கார்ல் மார்க்ஸ் ரேஞ்சுக்கு சென்ட்ரல்  லைப்ரரில குடியிருந்து ஒர்க் பண்ணேங்கண்ணா.

நாரா ( கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா சர் நேம்) சந்திரபாபுவுக்கு அனுப்பினேன் பாருங்க அங்கன இருந்து பிடிச்சது சனி. டோண்டு சாருக்கு வாயு பக்ஷணம்னா புரியும்னு நினைக்கிறேன்.

இந்த ப்ளான் மேட்டர்ல நம்ம ஸ்ட்ரகிள் எதுவரை போச்சுன்னா சி.எம்மோட பி.ஏ வே ஃபோன் பஞ்சாயத்து பண்ற ரேஞ்சுக்கு ஆயிருச்சு. தாளி போலீஸ் ரிப்போர்ட் வாங்கி தூக்கி உள்ளாற போடுங்கடானு இன்ஸ்ட்ரக்சன்.ஏதோ நாம உஞ்ச விருத்தி பிராமணனா ( சாதியில்லிங்கண்ணா) வாழ்ந்துக்கிட்டிருந்ததால "அய்யோ பாவம்"னு லோக்கல் போலீஸ் அஜீஸ் பண்ணி ரிப்போர்ட் அனுப்புச்சு.

இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் எல்லாம் தருவிச்சு பார்த்தும் ஒன்னும் பேரலை. நாரா ( மறுபடி கெ.வார்த்தை இல்லிங்கண்ணா) சந்திரபாபு ஆசனத்துக்கு கீழே (கார் சீட்) க்ளைமோர் பாம் வெடிக்கிறதுக்கு சிலமாசம் முன்னாடி புவனேஸ்வரி அம்மாவுக்கு அஸ்ட்ராலஜிக்கலா அனலைஸ் பண்ணி லெட்டர் போட்டேன் நாம வச்சது வெடிச்சது ( வெடிகுண்டு இல்லிங்கண்ணா - நம்ம ப்ரிடிக்ஷன் ஒர்க் அவுட் ஆனதை என் ஒக்காபுலரில சொன்னேன்) பாபு வீட்டுக்கு பூட்டாரு. தாளி அந்தாளு மட்டும் ஜெயிச்சிருந்தா சங்குதான்.

எதிர்கட்சி ஆனபிற்பாடு  கூட என்.டி.ஆர் பவன்ல இருந்து ( தெலுங்கு தேசம் கட்சி தலைமை அலுவலகம்) கொலைமிரட்டல் எல்லாம் வந்துதுங்கண்ணா. லோக்கல்ல சாஞ்சுக்க ஒரு  சுவர் வேணம்னு எங்க  லோக்கல் எம்.எல்.ஏ வோட புகழ் பாட ஆரம்பிச்சேன்னா மிரட்டல் எந்த ரேஞ்சுல இருந்திருக்கும் கற்பனை பண்ணி பாருங்க

நம்ம ப்ளான் மேட்டரால ஒரு பாடு படலை தாளி ஜில்லா அரசு இயந்திரமே நம்மை ப்ளாக் லிஸ்ட்ல வச்சிருந்தது. ப்ளானுக்காக  ஜாயிண்ட் கலெக்டர்,ஜில்லா ஜட்ஜு, கன்ஸ்யூமர் ஃபோரம் நடுவர்,  ஹ்யூமன் ரைட் கமிஷன் இப்படி ஒருத்தர் கிட்டே இல்லே பல பேர் கிட்டே மோதினேன்.

என்னை பொறுத்தவரை உலகத்துலயே பெரிய்ய அற்புதம் எதுன்னா என்னை என் கவுண்டர்ல போடாம விட்டதுதான். நான் தினசரிகள்ள பாபுவுக்கு எதிரா விட்ட ஸ்டேட்மென்ட்ஸ், என் போராட்டத்தை பத்தி வந்த  க்ளிப்பிங்ஸ் இன்னம் என் கிட்டே பத்திரமா இருக்கு.ஸ்கான் பண்ணி , தெலுங்குல உள்ளதை தமிழ்ல தர்ஜுமா பண்ணீ வச்சேன்னா டோண்டுவுக்கு வினோலேக்ஸே தேவையில்லாம வவுறு கலங்கிரும்.

ஏதோ ஒய்.எஸ்.ஆர் வந்து ஜலயக்னம் ஆரம்பிச்சதால, ஓஞ்சுபோவட்டு ஸ்டேட் லெவல்லயாச்சும் அப்ளை ஆகுதேனு  கொஞ்சம் போல சாஃப்ட் ஆயிட்டேனே தவிர இன்னம் நம்ம நெஞ்சுல மாஞ்சா கீது வாத்யாரே.

அழகிரியின் நண்பர்கள் பதிவை பார்த்திங்கல்ல.  ங்கொய்யால இன்னா நடந்துரும் "உள்ளே போடுவாய்ங்க - சோத்து பிரச்சினை தீரும் , தூக்குல போட்டாய்ங்க வாழ்க்கை பிரச்சினையே தீர்ந்து போயிரும்.

டோண்டு டோன்ட் ப்ளே ட்ரிக்ஸ். ஒவ்வொரு நெஞ்சுலயும் ஒரு ரணம் இருக்கு. அதை டச் பண்ணகூடாது. பண்ணா பிரளயம் தான்.

நான் நோண்ட ஆரம்பிச்சா நாறிரும். டேக் கேர்.

கேளுங்கள் தரப்படும்

அண்ணே வணக்கம்ணே,
இன்னைலருந்து நம்ம வலைப்பூவுல கேளுங்கள் தரப்படும்னு ஒரு ஃபீச்சர் ஆரம்பமாகுது.வித்யாசமான  கான்செப்ட் ஒன்னும்  இல்லிங்கண்ணா நீங்க கேள்வி கேட்கலாம்.

அதுக்கு நான் பதில் தருவேன்.

மத்தவுகளும் பதில் தரலாம். 

கேட்டவுகளுக்கு எது பெட்டரா படுதோ அதை ஃபாலோ பண்ணிக்கட்டும்.

வெறும் ஜோதிஷம்னே இல்லே எதைப்பத்தி வேணம்னா கேட்கலாம். சூரியனுக்கு கீழே, மேலே எது எத பத்தி வேணம்னா கேட்கலாம்.
கச்சா முச்சானு கேட்கலாம். எடக்கு மடக்கா கேட்கலாம்.

ஜோதிஷ பத்தி கேக்கறவுக  தனிப்பட்ட கேள்விகளை  கேட்கவேணாம். அது பெரிய ப்ராசஸ்ணே. மண்டை காஞ்சுரும்.

வேணம்னா உங்க ஜாதகத்துல உள்ள அம்சங்களை தனி தனியா கேளுங்க. நோ ப்ராப்ளம். ரெம்ப பர்சனல்னா என் நண்பருக்குனு ஆரம்பிச்சு கேட்டா போகுது. கமெண்ட் ஃபார்ம்லயே உங்க கேள்விகளை கேளுங்க.

நானும் கமெண்ட் ஃபார்மல்யே பதிலை சொல்றேன்.  ( 500 பேர் சேர்ர வரை புதுசா பதிவுன்னு  போடறதா உத்தேசமே இல்லை. இது கூட வலையுலக  நண்பர் ஒருத்தர் கொடுத்த ஐடியாதான். )

அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நம்ம வலைப்பூவுல புதிய பதிவுகள் வெளியாகறதில்லை இருந்தாலும் ஹிட்ஸ் மட்டு கூடுதே தவிர குறையலை ( ஆனா இவ்ள ஆர்வமா படிக்கிறவுக ஏன் சைட்ல ஜாய்ன் பண்ணமாட்டேங்கறாய்ங்க புரியலை)  யாரோ ஒரு பார்ட்டி  ஆளில்லாத டீக்கடைன்னிட்டாருங்கறதுக்காக நான் 500  மெம்பர்ஸை கேட்கலிங்கண்ணா.

நாம அன்னைக்கு இன்னைக்கு என்னைக்குமே பெஸ்ட் செல்லர் தான். 1991ல "உங்களை யார் விரும்புவார்கள்"னுட்டு அட்வான்ஸ் புக்கிங்கோட ஒரு பாக்கெட் புக் போட்டவன்  நானு. டார்கெட்டுக்கு அதிகமா காசு வந்துட்டதால ஒன்+ஒன் கொடுத்தவன் நான்.( 1000+1000)

இங்கன மட்டும் ஏன் நொண்டியடிக்குதுனு சின்னதா ஒரு மனக்கசப்பு தட்ஸால்.  நம்ம டாப் டென் போஸ்டுகளுக்கு வந்த ஹிட்ஸை காட்டற ஸ்க்ரீன் ஷாட்டை பாருங்க.( டீட்டெயில்ஸ் தெரியலைன்னா படத்து மேல க்ளிக் பண்ணுங்க அப்பாறம் கண்ட்ரோல் ப்ளஸ் கீஸை அழுத்துங்க படம் டெவலப் ஆகும் .ஓகே. உடுங்க ஜூட்)

இதை பார்த்தாச்சும் சைட்ல ஜாய்ன் பண்ணுங்கண்ணா