அண்ணே வணக்கம்ணே,
இஸ்லாம்ல கடவுளுக்கு " மாக்கிர்"னு ஒரு பேர் உண்டு. இதுக்கு சதிகாரர்களுக்கு சதிகாரன்னு அர்த்தம். ராசாதி ராசா மாதிரி வச்சுக்கங்க. நான் புதுப்பதிவே போடக்கூடாதுன்னு லங்கோடு கட்டிக்கிட்டிருந்தேன். ஆனா பாருங்க மணலுள் புதைந்து வாழ் நுணலும் தன் வாயால் கெடும்ங்கறமாதிரி அவாள் என்னை கிளப்பி விட்டு புதுப்பதிவு போட வச்சிட்டாய்ங்க.அவாளை கிளப்பி விட்டது யாருங்கறிங்க.சாட்சாத் இன்ஷா அல்லாஹ் தான்
நான் பிராமணாள கிழிக்கிறத படிச்சுட்டு மஸ்தா பேரு என்ன முருகேசன் உங்களுக்கு அவிக மேல கோபம்னு கேட்கிறது வழக்கம். அந்த காரணங்களை இன்னொருக்கா இங்கன பட்டியல் போடறதா இல்லை.
நாம எங்கன போனாலும், இருந்தாலும் "கண்ணா! நான் நேத்து வந்தேன் இன்னிக்கிருக்கேன். நாளைக்கு பூடுவேன் ..உங்க பாலிடிக்ஸ் எல்லாம் எனக்கு தேவையில்லே" ங்கறதுதான் நம்ம ஸ்டைல்.
குளிச்சுட்டு பாலத்து மேல நடந்து வர்ர ஆனை மாதிரி பன்னிக்கெல்லாம் சைடு கொடுத்துக்கிட்டு நம்ம ரூட்ல நாம போறோம். ( தனி வழி இல்லிங்கணா.. நமக்கு நிறைய முன்னோடிங்க இருக்காய்ங்க - வெற்றி பெற்ற மனிதரெல்லாம் என்னுள்ளே அடக்கம் வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்"ங்கற வரிகளை சில காலம் ஸ்லோகனா கூட வச்சிருந்தேன்.
எங்கே விட்டேன் ஆங் நம்ம ரூட்ல நாம போறோம். ஆனா போற போக்குல குசும்பை அதுவும் பார்ப்பன குசும்பை காட்டினா செமை கடுப்பாயிர்ரன். முன்னொருக்கா ஓம்கார் ஸ்வாமிகளுக்கு இடைக்காலத்துல ஸ்மார்ட்டுக்கும் பூசை போட்டேன்.
இப்போ டோண்டு. யாருக்கோ ஆறுதல் சொல்றேன் பேர்வழி நம்மை மொக்கை பண்ணியிருக்கு பார்ட்டி. நமக்கு லாஜிக்கே இல்லாம சில பேர் மேல கொஞ்சூண்டு மருவாதி வந்துருமா அதை கடாசி வரைக்கும் மெயின்டெய்ன் பண்ணத்தான் பார்க்கிறோம். வி.........ட மாட்டேங்கிறாய்ங்களே.
அவரோட வரிகளை அப்படியே தரேன் பாருங்க. ( ரெஃபரன்ஸ் டு தி கான்டெக்ஸ்ட் தேவைன்னா இங்கே க்ளிக் பண்ணுங்க
"சித்தூர் முருகேசன் என்னும் பதிவரை எனக்கு நினைவூட்டுகிறீர்கள். அவரும் இப்படித்தான் இந்தியாவை முன்னேற்றுவதற்காக சில திட்டங்களை வைத்துக் கொண்டு எல்லோருக்கும் தபால் போட்ட வண்ணம் உள்ளார். "
இவரு நம்மை எந்த ரேஞ்சுக்கு கொண்டுட்டு வந்துட்டாரு பாருங்க. எந்திரன்ல வசீகரன் ரேஞ்சுக்கு கொண்டுட்டு வந்துட்டாரு. அவரு அப்படித்தானே சிட்டியை எப்படியாச்சும் ராணுவத்துக்கு தள்ளிவிட மெடிக்கல் ரெப் கணக்கா பேசுவாரு.
திட்டங்களை வைத்துக்கொண்டு ( பழக்க தோஷத்துல நான் ஏதோ பூட்டி வச்சிருக்கிறாப்ல சொல்றாரு பாருங்க - 1993 லயே ஜன சக்தி பேப்பர்ல பக்காவா கொடுத்தாச்சு ப்ளானை. ஏதோ திட்டமில்லிங்கண்ணா பக்கா பக்காவா இருக்கேன். தாளி மன்மோகன் சிங் இல்லே அவிக தாத்தா சிங் வந்தாலும் மெட்டாஷ் தான்.
"தபால் போட்ட வண்ணம் இருக்கேனாம்" அடங்கொய்யால .. குறுக்கத்தரித்த குறள் மாதிரி 1986லருந்து என் வாழ்க்கைய,உயிரை பணயம் வச்சு 1997 வரை திட்டத்தை மெருகேத்தி டெக்னிக்கல்,தியரிட்டிக்கல் சப்போர்ட் கொடுத்து ஏறக்குறைய கார்ல் மார்க்ஸ் ரேஞ்சுக்கு சென்ட்ரல் லைப்ரரில குடியிருந்து ஒர்க் பண்ணேங்கண்ணா.
நாரா ( கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா சர் நேம்) சந்திரபாபுவுக்கு அனுப்பினேன் பாருங்க அங்கன இருந்து பிடிச்சது சனி. டோண்டு சாருக்கு வாயு பக்ஷணம்னா புரியும்னு நினைக்கிறேன்.
இந்த ப்ளான் மேட்டர்ல நம்ம ஸ்ட்ரகிள் எதுவரை போச்சுன்னா சி.எம்மோட பி.ஏ வே ஃபோன் பஞ்சாயத்து பண்ற ரேஞ்சுக்கு ஆயிருச்சு. தாளி போலீஸ் ரிப்போர்ட் வாங்கி தூக்கி உள்ளாற போடுங்கடானு இன்ஸ்ட்ரக்சன்.ஏதோ நாம உஞ்ச விருத்தி பிராமணனா ( சாதியில்லிங்கண்ணா) வாழ்ந்துக்கிட்டிருந்ததால "அய்யோ பாவம்"னு லோக்கல் போலீஸ் அஜீஸ் பண்ணி ரிப்போர்ட் அனுப்புச்சு.
இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் எல்லாம் தருவிச்சு பார்த்தும் ஒன்னும் பேரலை. நாரா ( மறுபடி கெ.வார்த்தை இல்லிங்கண்ணா) சந்திரபாபு ஆசனத்துக்கு கீழே (கார் சீட்) க்ளைமோர் பாம் வெடிக்கிறதுக்கு சிலமாசம் முன்னாடி புவனேஸ்வரி அம்மாவுக்கு அஸ்ட்ராலஜிக்கலா அனலைஸ் பண்ணி லெட்டர் போட்டேன் நாம வச்சது வெடிச்சது ( வெடிகுண்டு இல்லிங்கண்ணா - நம்ம ப்ரிடிக்ஷன் ஒர்க் அவுட் ஆனதை என் ஒக்காபுலரில சொன்னேன்) பாபு வீட்டுக்கு பூட்டாரு. தாளி அந்தாளு மட்டும் ஜெயிச்சிருந்தா சங்குதான்.
எதிர்கட்சி ஆனபிற்பாடு கூட என்.டி.ஆர் பவன்ல இருந்து ( தெலுங்கு தேசம் கட்சி தலைமை அலுவலகம்) கொலைமிரட்டல் எல்லாம் வந்துதுங்கண்ணா. லோக்கல்ல சாஞ்சுக்க ஒரு சுவர் வேணம்னு எங்க லோக்கல் எம்.எல்.ஏ வோட புகழ் பாட ஆரம்பிச்சேன்னா மிரட்டல் எந்த ரேஞ்சுல இருந்திருக்கும் கற்பனை பண்ணி பாருங்க
நம்ம ப்ளான் மேட்டரால ஒரு பாடு படலை தாளி ஜில்லா அரசு இயந்திரமே நம்மை ப்ளாக் லிஸ்ட்ல வச்சிருந்தது. ப்ளானுக்காக ஜாயிண்ட் கலெக்டர்,ஜில்லா ஜட்ஜு, கன்ஸ்யூமர் ஃபோரம் நடுவர், ஹ்யூமன் ரைட் கமிஷன் இப்படி ஒருத்தர் கிட்டே இல்லே பல பேர் கிட்டே மோதினேன்.
என்னை பொறுத்தவரை உலகத்துலயே பெரிய்ய அற்புதம் எதுன்னா என்னை என் கவுண்டர்ல போடாம விட்டதுதான். நான் தினசரிகள்ள பாபுவுக்கு எதிரா விட்ட ஸ்டேட்மென்ட்ஸ், என் போராட்டத்தை பத்தி வந்த க்ளிப்பிங்ஸ் இன்னம் என் கிட்டே பத்திரமா இருக்கு.ஸ்கான் பண்ணி , தெலுங்குல உள்ளதை தமிழ்ல தர்ஜுமா பண்ணீ வச்சேன்னா டோண்டுவுக்கு வினோலேக்ஸே தேவையில்லாம வவுறு கலங்கிரும்.
ஏதோ ஒய்.எஸ்.ஆர் வந்து ஜலயக்னம் ஆரம்பிச்சதால, ஓஞ்சுபோவட்டு ஸ்டேட் லெவல்லயாச்சும் அப்ளை ஆகுதேனு கொஞ்சம் போல சாஃப்ட் ஆயிட்டேனே தவிர இன்னம் நம்ம நெஞ்சுல மாஞ்சா கீது வாத்யாரே.
அழகிரியின் நண்பர்கள் பதிவை பார்த்திங்கல்ல. ங்கொய்யால இன்னா நடந்துரும் "உள்ளே போடுவாய்ங்க - சோத்து பிரச்சினை தீரும் , தூக்குல போட்டாய்ங்க வாழ்க்கை பிரச்சினையே தீர்ந்து போயிரும்.
டோண்டு டோன்ட் ப்ளே ட்ரிக்ஸ். ஒவ்வொரு நெஞ்சுலயும் ஒரு ரணம் இருக்கு. அதை டச் பண்ணகூடாது. பண்ணா பிரளயம் தான்.
நான் நோண்ட ஆரம்பிச்சா நாறிரும். டேக் கேர்.