Sunday, June 5, 2011

பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ் சதி !

பாபாவை போட்டு தள்ள காங்கிரஸ்  சதி திட்டம் தீட்டியிருக்கு. அதுக்கான முன்னோட்டம் தான் பாபா உசுருக்கு ஆபத்து. அதனாலதான் உண்ணாவிரத பந்தலை தூக்கினோம்னு பீலா விட்டது. பாபா பின்னாடி பா.ஜ.க இருக்குங்கறது உலகறிந்த ரகசியம் . இப்பம் பூனைக்குட்டியும் வெளியவந்துருச்சு. அதுவேற மேட்டர்.

இது பரபரப்புக்காக போடும் வெத்து குண்டு இல்லிங்ணா. சோசிய கணிப்பு இல்லவே இல்லிங்ணா. ஆனால் பட்சி சொல்லுது. (சாதக பட்சி இல்லிங்ணா சகோர பட்சி ). எதை வச்சு சொல்றிங்கனு கேப்பிக சொல்றேன்.

இன்னம் 6 மாசத்துல பாராளுமன்ற தேர்தல் வராப்ல இருக்கு. எப்படின்னு கேப்பிக ? சொல்றேன்.


ஆந்திராவுல தெலுங்கானா  காங்கிரஸ் எம்பிங்க வாயிதா போயி கிடக்காய்ங்க. தெலுங்கானா ஏரியாவுக்கு போனா மந்திரிகளுக்கே முட்டையடிதேன்.

அவிகளுக்கும் இது உறைச்சுருச்சு. ஜூன்30 க்குள்ள தெலுங்கானா கொடுக்கலின்னா கூண்டோட ராஜினாமான்னு அனவுன்ஸ் பண்ணியாச்சு. இந்த மேட்டர்ல பேக் அடிச்சா நெம்பர் 10, ஜன்பத்லயே சின்னதா வேலை தேடிக்கிட வேண்டியதுதேன்.

மானில அரசாங்கத்துக்கும் டெட் லைன் நெருங்கிக்கிட்டிருக்கு. தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துருச்சு. பத்து நாள்ள அதை பத்தி விவாதம், ஓட்டெடுப்பு நடந்தே ஆகனும். ஜகன் இப்பமே 29 எம்.எல்.ஏங்களை பீராஞ்சு வச்சிருக்காரு. டோட்டலா 55 பேரு டச்சுல இருக்கிறதா பீதிய கிளப்பறாய்ங்க. முந்தா நாள் டெலி கான்ஃபிரன்ஸு கூட நடத்தியிருக்காரு.

மானிலத்துல ஆட்சி போன பிற்பாடு எம்.பி பதவியை வச்சுக்கிட்டு நாக்கை வழிக்கறதா? இது ஒரு பாய்ண்ட். ஒரு வேளை ஜூன் 30 குள்ளே தெலுங்கானா  வரலின்னா தெலுங்கானா எம்பிங்க ராஜினாமா. அட தெலுங்கானா கொடுத்து தொலைச்சு   தெலுங்கானா எம்பிகளை சமாதானப்படுத்திட்டாலும் ஆந்திரா எம்.பிங்க ரேங்கிக்குவாய்ங்க.அவிக இன்னம் ரோசக்காரவுக. டெட்லைன் எல்லாம் கடியாது. டைரக்ட் ராஜினாமாதேன். ( இவிக சொத்து சுகம்லாம் ஹைதராபாத்ல மஸ்தா கீறதா ஸ்கூப்பு)


ஜகன் எம்.எல்.ஏவா நிக்காம எம்.பியா நின்னதுக்கு ஒரு பெரிய பின்னணி இருக்கு. ஜகனுக்கு சரத்பவார் காட் ஃபாதர் மாதிரி. சோனியா தனக்கு ஆப்பு வச்சப்ப தாளி  சென்டர்ல பவர் இருக்கிறதாலதானே இந்த திமிரு. அதையே ஆஃப் பண்ணிர்ரன்னுதான் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டிருக்கிறாப்ல. பா.ஜ.க பெல்ட்டுலயும் ஜகனுக்கு நல்ல கம்யூனிகேஷன் இருக்கு.(அதுக்குன்னு கூட்டெல்லாம் வராது -ஊசிப்போயிரும்ல - இந்த கம்யூனிகேஷன் சென்டர்ல காங்கிரஸை கருவறுக்கத்தேன் ) பவார் ஜஸ்ட் சமயம் பார்த்துக்கிட்டிருக்காரு. பாவம் அவரை ஸ்டவ் மேல உட்கார வச்சு கொத்து பரோட்டாவே போட்டுட்டாய்ங்க சோனியாஜி.

எது எப்படி போனாலும் தேர்தல் கியாரண்டி. ஒரு வேளை எவனும் கவுக்கலின்னாலும் சோனியா முன் கூட்டி தேர்தலுக்கு போக ரெடியாயிட்டது நல்லா தெரியுது. (  நாள் போக  போக - ஒவ்வொரு ஊழலா வெளி வந்துக்கிட்டே இருக்கும். நேத்து அன்னா - இன்னைக்கு ராம் தேவ் - நாளைக்கு ஆரோ/ மொத்தத்துல காங்கிரசுக்கு ஆப்புதேன்)

காங்கிரசோட கவுண்டர் பார்ட் பா.ஜ.க கழுதை தேஞ்சு கட்டெறும்பான கணக்கா ஆயிருச்சு. காங்கிரஸா ஊழல் சேற்றுல மூக்கு வரை  புதைஞ்சு போச்சு. அதனாலதான் காங்கிரஸ்  வாதம்லாம் ஸ்க்ரம்ப்ளர் போட்ட  போன் உரையாடல் மாதிரி கேட்குது.

இப்பம் தேர்தல்ல  ஊழலா? ஊழலுக்கு ஆப்பாங்கற கேள்வி வந்தா காங்கிரஸு நிச்சயம் காணாம போயிரும்.

ஒரு வேளை செக்யுலர் (மதச்சார்பற்ற சக்திகள்)  - நான் செக்யுலர்ங்கற ( மதவாத சக்திகள்) பேட்டர்ன்ல தேர்தல் நடந்தா விதியில்லாத குறைக்கு சனம் காங்கிரஸுக்கு போட்டு தொலைச்சுருவாய்ங்க.

அப்படி ஒரு சிச்சுவேஷன் வந்தா கம்யூனிஸ்டுகளும் - இன்னபிற காங்கிரஸ் எதிர்ப்பு அணிகளும் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க வாய்ப்பிருக்கு.

வரப்போற தேர்தல்ல ஊழல் அம்சத்தை பின்னுக்கு தள்ள காங்கிரஸ் என்ன வேணா செய்யும். இப்பம் ராம்தேவா மேட்டரையே பாருங்க. பின்னணியில பா.ஜ.க இருக்குன்னு தெரியும். பாபாவுக்கு  வேட்டி உருவினா பா.ஜ.க தங்களுக்கு கோவணத்தையே உருவிரும்னு தெரியும். இருந்தாலும் பாபாவை தூக்கினாய்ங்கன்னா என்ன அர்த்தம்?

பா.ஜ.க வை இர்ரிடேட் பண்ணனும். இந்த காவிப்பட்டாளம் துப்பாக்கியில இருக்கிற புல்லெட் மாதிரி. ட்ரிக்கரை ஒரு தாட்டி அழுத்திட்டா அது எங்க போய் முடியும்னு தெரியாது. ட்ரிக்கரை அழுத்தப்போறது பா.ஜ.கவா? காங்கிரஸா?

பா.ஜ.க அழுத்தினாலே இது கதி .  ஒரு வேளை வரும் தேர்தல்ல இருந்து ஊழல் அம்சத்தை பின்னுக்கு தள்ள காங்கிரஸ் அழுத்தினா என்னாகும்னு நினைச்சாலே குலை நடுங்குது.

நாட்டுக்கு நடக்கிறது சூரிய தசை ராகு புக்தி . நமக்கு சுதந்திரம் கிடைச்சப்போ ராகு கேது எந்த நிலையில இருந்தாய்ங்களோ அதே நிலையில இப்பம் இருக்காய்ங்க. ராகுவுக்கு சம சப்தகத்துல கேது.

கேதுன்னா  சன்னியாசி. கேது மிதுனத்தில். மிதுனத்துக்கு அதிபதி புதன். புதன்னா வைணவம். பாபா பேரை பாருங்க ராம் தேவ் பாபா.

இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற நம்ம ப்ரிடிக்சன் இப்படி மெட்டீரியலைஸ் ஆனா நாடு தாங்குமா?

ங்கொய்யால .. பாபா டுபுக்கு - பாபா யாவாரி - பாபா பலாந்து பலாந்துனு புலம்பறாய்ங்க. சரி பாபா ஈயா கூட இருக்கட்டும்.

இங்கன கழிஞ்சு வச்சது நீங்கதானேடா? லல்லுவுக்கு பீதியில  பேதியே ஆயிருச்சு. ஆர்.எஸ்.எஸ் காரவுக சாந்தி காலத்துல வில்லங்கம் பண்ற பார்ட்டிங்கதேன் இல்லேங்கலை . ஆனால் எமர்ஜென்ஸி பீரியட்ல கள்ளுக்கடையில எல்லாம் கேம்ப் அடிச்சு பிரச்சாரம் பண்ணவுக.

எசன்ஷியாலிட்டி இஸ் தி மதர் ஆஃப் இன்வென்ஷன். காங்கிரஸ் ஊழல் அம்சத்தை பின்னுக்கு தள்ள இந்த மதவாத அம்சத்தை ஹைலைட் பண்ண இந்த மூவ் பண்ணியிருக்கு.

ஆனால் கடவுள் சதிகாரன். பஸ்மாசுரன் கதை தெரியும்ல.  பாபாவுக்கு எதுனா நடந்தா காங்கிரஸ் தாபாவுக்கு டாப் என்ன ? பாட்டமும் இருக்காது.

ஆருப்பா அங்கே இத்தாலிக்கு ஃப்ளைட் டைம் விஜாரி.