Showing posts with label யோசனைகள். Show all posts
Showing posts with label யோசனைகள். Show all posts

Friday, November 25, 2016

கருப்புப்பண ஒழிப்பு : மேலும் சில யோசனைகள்

அண்ணே வணக்கம்ணே !

மோடி அரசு ரூ.500 ,ரூ.1000 நோட்டுக்களை செல்லாதவையாக அறிவித்து தடாலடியாக - தான் தோன்றித்தனமாக  அரைகுறையாக -அள்ளித்தெளித்த கோலமாக -அடாவடியாக -எந்த முன்னேற்பாடும் இல்லாது அமல் படுத்தி இந்திய பொருளாதாரத்தையே நாசமாக்கியிருப்பது தெரியும் தானே .


இந்த பாழாப்போன யோசனையை 2014 ஜூலையில அனுப்ப - 2015 மார்ச்சுல பிரதமர் அலுவலகம் ரிசீவ்ட் அண்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்னு பதில் கொடுத்ததெல்லாம் தெரியும் தானே?

நாம சோறு   போட சொன்னம். சோத்தை இலை போட்டு தான் போடனுங்கற மினிமம் காமன்சென்ஸ் கூட இல்லாம தரையில சோத்தை போட்டு அது மேல இலையை போட்டா நான் என்ன செய்ய முடியும் பாஸ்?

இந்த ரேஞ்சுல எத்தனை ஒப்பாரி வச்சாலும் போன உசுரு திரும்புமா பாஸ்?

(சோறு =திட்ட அமல் ; இலை =முன்னேற்பாடுகள்)

செரி இதை விடுங்க. இப்ப நாம வெளியிட்ட 4 நூல்களையும் தொகுத்து -எடிட் பண்ணி - டிடிபி செய்து கொடுத்து வெளியீட்டாளரளையும் அறிமுகம் செய்து வைத்த திருவாரூர் சரவணன் அவர்கள் வளரும் எழுத்தாளர். தம் எழுத்துக்கு பிரபல இதழ்கள்,நிறுவனங்களின் விருதுகளையும் பெற்றவர்.

என்ன ஆச்சோ என்னமோ பாவம்  நம்ம  ரூட்ல அஃதாவது  " நாட்டை திருத்தற" கிராஸ் ஆகி  கருப்பு பண ஒழிப்புல சில பல யோசனைகளை நம்ம மெயிலுக்கு அனுப்பியிருக்காரு.

உங்க வலைப்பூவுல போடுங்க பாஸ்னா ஊஹூம் உங்க ப்ளாக்ல தான் போடனும்னு உத்தரவு போட்டுட்டார்.

அன்னார் தந்த யோசனைகள் உங்களுக்காக .

கருப்பு பணத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதுதான் நோக்கம் என்றால் இவற்றையும் கட்டாயம் செய்ய வேண்டும்... இல்லாதவரையில் இது சாமானிய மக்களின் மீதான தாக்குதல் மட்டுமே என்று தோன்றுகிறது.

மிக குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகளிலும், அரசு, தனியார் என்று எந்த துறையிலும் சாமானிய மக்களை சாகடிக்கும் அளவுக்கு லஞ்சம், ஊழல் இல்லாத நாடுகளிலும் வேண்டுமானால் அதிகமான வருமான வரி, அந்த வரி விபரங்களை தாக்கல் செய்வதில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல் என்று இருக்கலாம். (ஆனால் உண்மை அவ்வாறில்லை. பல நாடுகளில் மிகவும் எளிமையான நடைமுறைதான்)

இந்தியா மாதிரி 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாட்டில் மக்களிடம் சிந்துவது, சிதறுவதை சேகரித்து அரசு கஜானாவுக்கு முறையாக செல்ல வழி ஏற்படுத்தினாலே எல்லா கருப்பு பணத்தையும் ஒழித்து விடலாம் என்பதை மனதில் கொண்டு நான் கீழே சொல்லியுள்ள யோசனைகளை சீர்தூக்கி பார்க்கவும்.

நடுத்தர, ஏழை எளிய மக்கள் உட்பட அனைவருமே வரி ஏய்ப்பு செய்வதோடு நிற்காமல் அது தவறில்லை என்ற மன நிலையில் இருக்க முக்கிய காரணம் இதுநாள் வரை வெளிப்படையாக செலவு செய்பவனுக்கு அதிக வரி விகிதமும் கணக்கில் காட்டாமல் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், செலவு செய்யலாம் என்ற அளவில் இருக்கும் வரி விதிப்பு முறைகள்.
எரிபொருள் முதல் பேஸ்ட், பிரஷ் வரை மறைமுக வரியை பொருளின் விலையோடு சேர்த்து சாமானியன் செலுத்தி விடுகிறான். அது அரசுக்கு போய் சேருவதில்தான் பிரச்சனையே ஆரம்பம்.

வரி வசூலில் ப்ரீபெய்ட்:
அது எப்படி வருமானமும் செலவும் உறுதியாகும் முன்பே ப்ரீபெய்ட் டேக்ஸ் வசூலிக்க முடியும்? அப்படி வசூலித்தாலும் அதிகமாக செலுத்தப்பட்ட வரியை திரும்ப பெறுவதற்கு நாலைந்து ஜென்மங்கள் தேவைப்படுமே என்பதுதான் மக்களின் கவலை. இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது ஒரு நபருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக வங்கியில் அல்லது ஏ.டி.எம்.மில் எடுக்கலாம் என்று லிமிட் வைக்க வேண்டும். அதற்கு கூடுதலாக தேவைப்பட்டால் வங்கி தர மறுக்க கூடாது. ஆனால் அந்த ரொக்கத்தில் 10 சதவீதம் வரியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அப்புறம் எவ்வளவு பேர் பணமற்ற பரிவர்த்தனை முறைக்கு மாறுகிறார்கள் என்பதை பாருங்களேன்.

இப்போது தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.5 லட்சமும், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு 2.5 லட்சம் என்று பல நிலைகளில் உள்ளது. இதிலும் மாற்றம் வேண்டும். கார்டு மூலம் மளிகை, ஜவுளி, காய்கறி என்று எதை வாங்கினாலும் அந்த தொகையுடன் வங்கி சேவை கட்டணம் உட்பட 1 சதவீதம் மட்டும் வரி செலுத்த வேண்டும். இப்படி செலவழிப்பது பொதுமக்களுக்கு சிரமமாக தெரியாது. உதாரணமாக ஆண்டுக்கு 3 லட்சம் செலவழிக்கும் ஒருவர் அதை ரொக்க பரிவர்த்தனையாக இல்லாமல் முழுவதும் வங்கி மூலம் செலவழித்திருந்தால் வருமானத்தில் இருந்து கழித்துவிடலாம் என்று விதிமுறை வகுக்கட்டும்... பிறகு வெளிப்படையாக செலவழிக்க யாருமே தயங்க மாட்டார்கள்.

வாடிக்கையாளர்களிடம் கடைகள் வசூலிக்கும் வரி அரசுக்கு தாமதமின்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் 4ஆயிரத்து எழுநூற்று ஐம்பதுக்கு பொருள் வாங்கி அதில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி 250 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். 1 சதவீத வங்கி பரிமாற்ற வரி மூலம் 50 ரூபாய். ஆக கூடுதல் 5 ஆயிரத்து 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டால் தானியங்கி முறையில் 4750 சூப்பர் மார்க்கெட் கணக்கிலும் 250 அரசு வரி வருவாய் இன கணக்கிலும், 50 ரூபாய் வங்கி சேவை உட்பட பரிமாற்ற வரி முறையில் வங்கிக்கு 10 ரூபாயும் அரசுக்கு 40 ரூபாயும் செல்லும் வகையில் வங்கி சாப்ட்வேர் இருந்தால் பிரச்சனை ஓவர்.

காய்கறி, பெட்டிக்கடை, தெருக்களில் இருக்கும் சிறு மளிகைக் கடைகளில் அதாவது சில்லரை கடைகளில் ரீசேல் டேக்ஸ் 1 சதவீதம் என்று இருக்கும்பட்சத்தில் 400 ரூபாய் பில்லுக்கு 4 ரூபாய் ரீசேல் டேக்ஸ், 4 ரூபாய் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று ஆட்டோமேடிக்காக பிடித்தம் செய்யும் வகையில் சிறு மளிகைக்கடை கரண்ட் அக்கவுண்ட்டில் வங்கி சாப்ட்வேர் செட்டிங் செய்யும் முறை மிகவும் எளிது.

அது போகட்டும்... காய்கறி, மீன், பால் வியாபாரிகள் கையில் சிறு அளவில் ரொக்கமாக வாடிக்கையாளர்களிடம் வாங்கினால் அதை எப்படி கணக்கில் கொண்டு வருவது... அதுவும் சின்ன அளவு என்றாலும் கருப்பு பணமாக மாறிவிடுமே என்று கேட்கலாம். அதற்கும் தீர்வு இருக்கிறது. இப்படி சின்ன அளவில் சைக்கிள், தலையில் சுமை தூக்கி சென்று விற்பவர்களால் அவர்களின் விற்று முதல் ரொக்கமாக புழங்குவதில் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடப்போவதில்லை. 

அப்படி அதையும் வங்கி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இப்போது பல வங்கிகள் தினமும் வைப்பீடு வசூல் செய்ய கடைகளுக்கு ஆள் அனுப்பி பில்லிங் மெசின் மூலம் பில் கொடுத்து வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட வியாபாரிகளின் வீட்டிலோ, அந்த இடத்திலோ அன்றைய வியாபார தொகையை 1 சதவீத டேக்ஸ் செலுத்தி அக்கவுண்டில் போட்டுவட்டு மறுநாள் வியாபாரத்திற்கு ரொக்கமாக அல்லது அவர்கள் கொள்முதல் செய்யும் மொத்த கடைகளுக்கு டிரான்ஸ்பர் செய்ய உதவலாம். 

இதற்கு இந்த சிறு வியாபாரிகள் பிழைப்பை விட்டு விட்டு வங்கிக்கு சென்று காத்திருக்க செய்யாமல் அவர்கள் இடம் தேடி வங்கி ஊழியர் வருவதற்கு வழி செய்தால் மட்டுமே இந்த முறை வெற்றியடையும்.  ஏனென்றால் நாடு நலம் பெற ஒரு சில நாட்கள் அல்லது சில வாரங்கள்தான் சிரமங்களை பொறுத்திருக்க முடியும். அதை விடுத்து வருடம் பூராவும் வலியை தாங்க முடியாது.

4 வகை வரி விகித பொருள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் என்ன செய்வது?
ஒரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் ஏ/சிக்கு 28 சதவீத வரி, பேனுக்கு 18 சதவீதம், எல்.இ.டி பல்ப்புக்கு 4 சதவீதம் வரி வசூலிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 

அவர்கள் முறையாக பில் போட்டு வியாபாரம் செய்யும்போது அன்றைய மொத்த விற்பனை 40 லட்சம், வரி 4லட்சத்து 28 ஆயிரம் என்று தெளிவாக டீட்டெய்ல் வந்துவிடும். அந்த வரி தொகையை அவர்கள் நடப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ்.எம்.எஸ் செய்து விட வேண்டும். அப்போது அந்த வரி போக மீதத்தொகை சம்மந்தப்பட்ட கடை கணக்குக்கு வரவு ஆகும். பிடிக்கப்பட்ட வரி நேரடியாக அரசின் வரித்துறை வங்கி கணக்கில் கிரடிட் ஆக வேண்டும். இப்படி செய்யவில்லை என்றால் வாடிக்கையாளர் செலுத்திய 40 லட்சம் விற்பனை தொகையும் கடையின் கணக்கில் காட்டும். அந்த தொகையை டிரான்ஸ்பர் செய்ய முடியாது. ஸ்கிரீனில் மட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முறையில் இருந்தால் எந்த நிறுவனமும் ஏமாற்ற துணியாது.

ஏனென்றால் ஒரு நிறுவனம் ஒரு மாதத்தில் 100 ஏ/சி மெசின் விற்கிறது என்றால் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் வரியை சேர்த்து வசூல் செய்து விட்டு 10 இயந்திரத்துக்கு மட்டும் பில் போட்டுவிடுகிறது. டோல்கேட் உள்ளிட்ட பல தொழில்களில் இப்படித்தான் வரி ஏய்ப்பு உருவாகிறது.

கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலவழித்தால் 1 சதவீத வரி... ரொக்கமாக பணத்தை எடுத்தால் 10 சதவீத வரி. மாதம் 25 ஆயிரத்திற்கு மேல் செலவு அனுமதித்து விட்டு (காப்பீடு, கல்வி, மருத்துவம், நீண்டகால, தொடர் சேமிப்பு நீங்கலாக) அதற்கு மேல் உள்ள தொகையை வருமானமாக கொண்டு 3 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே வரி வசூலிக்க வேண்டும்.

சொத்தின் உண்மையான மதிப்புக்கே பத்திரப்பதிவு செய்தால் 1 சதவீதம் மட்டும் முத்திரைக்கட்டணம் என்று கொண்டு வர வேண்டும். அந்த தொகயை சொத்து வாங்குபவர் கொடுப்பவருக்கு வங்கி மூலமாக செலுத்தினால் 1 சதவீதம் மட்டும் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று வைத்துவிட்டால் போதும். ஏனென்றால் ரொக்கமாக வங்கியில் இருந்து பெற வேண்டும் என்றால் 10 சதவீதம் வரி என்றால் யாரும் கணக்கில் காட்டாமல் பணத்தை செலவழிக்க துணிய மாட்டார்கள்.

இந்த விஷயங்களை அமலாக்காமல் மக்கள் வலி தாங்க வேண்டும் என்று மட்டுமே அரசு சொல்லிக்கொண்டிருக்குமேயானால்.... சாமானிய மக்களை மட்டும் கார்னர் செய்து விட்டு யாரோ ஒரு சில பெரிய தலைகளை மேலும் மேலும் கோ.......................................டீஸ்வரர்களாக வளரச்செய்யும் விஷயமாக கருதிக்கொள்ள வேண்டியதுதான்.

ஆண்டவன் விட்ட வழி.

***********************************************************************************************
இலுமினாட்டிகள் என்ற சிலரைப் பற்றி இப்போது பரவலாக பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நிறுவனத்தை கையகப்படுத்த நினைத்த உடன் எவ்வளவு சகுனி வேலைகள் இருக்கிறதோ அனைத்தையும் பார்த்து 100 கோடி ரூபாய் சொத்தை 40 கோடிக்கு விற்கும் நிலைக்கு வந்த உடன் அந்த 40 கோடியையும் எந்த நாடாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு புதிய நோட்டாகவே அச்சிட்டு அதை எடுத்து கொடுத்து வாங்கி விடுவதாக சொல்கிறார்கள். 

அது தவிர சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் தொழில் உள்ளிட்ட பல வகையிலும் உரிய முறையில் லோன் கிடைத்தால் அதை வைத்து தன்னிறைவு பெற்றுவிட்டால் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக வங்கியில் இருக்கும் தொகைகளை 70 லட்சம் கோடி அளவுக்கு இத்தகைய இலுமினாட்டிகள் கடனாக பெற்று அந்த தொகை சாமானியர்களின் வளர்ச்சிக்கு உதவாத வகையில் பொருளாதாரத்தை மெயிண்டெய்ன் பண்ணுவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது சாமானிய மக்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதை செயற்கையாக உருவாக்கப்பட்ட வியாதிகளுக்கான சிகிச்சை, கல்வி அடுத்து குடியிருப்பு, வணிக நிறுவன வாடகை என்ற அளவில் மக்களை கடனாளியாக வைத்திருக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றன.

இப்படி கிடைக்கும் பல்வேறு தகவல்கள் மிரள வைக்கும் அளவுக்கு இருக்கின்றன. கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற மிக முக்கிய பண்டிகை காலம் தவிர அவர்கள் நகரத்திற்கு வந்து செலவழித்தது மிக மிக அரிது. அதை சுக்கு கோடியாக (சுக்குநூறாக) உடைத்து 500, 1000 ரூபாய் நோட்டு விஷயத்திலேயே கிராம மக்களையும் அல்லாடும் நிலையை பார்த்தால் (இது சாம்பிள் மட்டுமே) உலகம் முழுவதும் இந்த இலுமினாட்டிகள் பின்னியிருக்கும் மாயவலையின் பிரமாண்டத்தை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

இதெல்லாம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பலரும் சொல்லும் யோசனைகளை யாரும் அமல்படுத்த முன்வரப்போவதில்லை. 

சுருக்கமாக சொன்னால், நமது குடும்பங்களில் பெரும்பாலான ஆண்கள், வீட்டில் உள்ள தாய், தங்கை, மனைவிக்கு எதுவும் தெரியாது என்று ஓரம் கட்டிவிட்டு தானே எல்லா முடிவையும் எடுப்பார்கள். பெண்கள் பொறுப்பில் விட்டுவிட்டால் எதாவது பெரிய நஷ்டத்தில் விட்டு விடுவார்கள் என்று சாக்குபோக்கு சொல்வார்கள்.

இலுமினாட்டிகள் விஷயத்திலும் இதுதான். உலக மக்களுக்கு எதுவும் தெரியாது. அதனால் எல்லா பவரையும் நம் இருபது குடும்பங்கள் மட்டும் வைத்துக்கொண்டு உலகை ஆட்டி வைக்க வேண்டும். மக்களை இந்த மாய வலையை விட்டு சுதந்திரமாக இயங்க விட்டால் உலகத்தை வீணாக்கி விடுவார்கள் என்று நினைத்து செயல்படுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.

இதை எல்லாம் பார்க்கும்போது, அதானி, அம்பானிக்கு கூட எதுவும் தெரியாது என்று கூறி அவர்கள் இயக்கிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. அது உண்மையாக இருந்தால் நாமெல்லாம் எந்த மூலை?... எவ்வளவு போட்டி, பொறாமை, வெட்டு, குத்து... உயிரிழப்பு..... தலைய சுத்துது....

இப்படில்லாம் கூட நடக்குமா?

இப்படிக்கு
திருவாரூர் சரவணன்.

Monday, June 23, 2014

மோடிக்கு சில ரோசனைகள்

அண்ணே வணக்கம்ணே !
முக நூல்ல சில நாட்களுக்கு மிந்தி நான் பிரதமராகியிருந்தாங்கற தலைப்புல சில ஐடியாக்களை அள்ளி விட்டிருந்தம்.

அந்தத பட்டியலை கீழே தந்திருக்கன். கொஞ்சம் போல அப்டேட் பண்ணியிருக்கன். ஆருனா இதை இங்கிலீஷ்ல டப்பிங் பண்ணி போட்டா புண்ணியமா போகும்.

இதை எல்லாம் படிச்சுட்டு அட இதெல்லாம் நமக்கு தோனலியேன்னு சிலருக்கு தோனும்.பலர் அட நாம கூட இப்படி எல்லாம் ஒரு சந்தர்ப்பத்துல நினைச்சிருக்கமேன்னு தோனும்.

நான் கொடுத்திருக்கிற ஐடியா எல்லாம் ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை.  இந்த மாதிரி ஐடியால்லாம் வரனும் -தொகுத்து எழுதனும்னா மனசு இருக்கனும். எல்லாரும் நல்லாருக்கனும்ங்கற மனசு இருக்கனும் .அவ்ளதான்.

க்ளோபல் வில்லேஜுங்கறாய்ங்க. உலகமே தெப்பக்குளம் மாதிரி ஆயிருச்சு. எவனோ ஒரு பன்னாடை ஒரு கூழாங்கல்லை தூக்கி போட்டா அலை உங்க படித்துறைக்கும் வரும். டீசல் விலை ஏறினா எனக்கென்ன? ரயில் கட்டணம் ஏறினா எனக்கென்னனு இருக்க முடியாது.

ஒரு முட்டாள் அரசாங்கத்தோட முட்டாள் தனமான முடிவு  நம்ம எல்லாரையும்  நேரிடையா -உடனடியா பாதிக்கும். பெட் ரூம் வரை -கழிவறை வரை வந்து பாதிக்கும்.

இந்த ரோசனைகளை ஆருனா ட்ரான்ஸ்லேட் பண்ணா அதை மோதிஜிக்கு அனுப்பலாம்னு ஒரு கெட்ட எண்ணம்.

பெரீ மன்சங்களுக்கு லெட்டர் போட்டா பதில் வரும்ங்கற தவறான நம்பிக்கையை கொடுத்தது என்.டி.ஆர். ஆப்புமேல ஆப்படிச்சா பதில் வந்தே தீரும்ங்கற நம்பிக்கைய கொடுத்தது சந்திரபாபு.

நீ தலைகீழ நின்னு ரசத்துல மூஞ்சி கழுவினாலும் வராதுன்னு சொல்லாம சொன்னது மம்மி . மோடி என்ன சொல்லப்போறாரு? என்னமாதிரி அனுபவத்தை கொடுக்கப்போறாருன்னு பார்க்கத்தானே போறேன்.

நிர்வாகம்னா அது ஒன்னும் மோடி மஸ்தான் வேலை இல்லை.  கொஞ்சம் தில் வேணம். தில்லுன்னா தகிரியம்னு தெரியும். தில்லுன்னா மனசுன்னு கூட ஒரு அருத்தம் இருக்கு.

சீர் திருத்தம்னு இறங்கிட்டா ஒவ்வொரு அடியையும் சாக்கிரதையா எடுத்து வைக்கனும்.இருக்கிற ஊழியர்களை ஒரு ரேஞ்சுக்கு கொண்டு வரனும்னா மொதல்ல ஆல்ட்டர்னேட்டிவ் அரேஞ்ச் பண்ணிக்கனும்.

காலி இடத்தை எல்லாம் போர்கால அடிப்படையில நிரப்பனும். அவிகளுக்கு உரிய பயிற்சி கொடுக்கனும். புதுசா சேர்ந்தவன் புதுசா இருக்கும் போதே பழைய ஒட்டடைய எல்லாம் தட்டனும்.வேலை நிறுத்தம் அது இதுன்னு இறங்கினாலும் புது வெள்ளத்தை வச்சு சமாளிக்கனும்.

நிர்வாகம்னா பாராளுமன்றமோ -தலைமை செயலகமோ -அங்கன குப்பை தொட்டி வைக்கிறதோ இல்லை. நிர்வாகம்னா மக்கள் பார்வையில  எது நிர்வாகம்னு தெரிஞ்சுக்கனும்.

மக்கள்னா வங்கிக்கடன் வாங்கி லக்சரி டீசல் கார் வச்சிருக்கிறவனும் மக்கள் தான்.ஆனால் அவனை கொஞ்சம் தீர்ப்பாட்டா கவனிக்கலாம்.

டாப் ப்ரியாரிட்டி நடை பாதி வாசி. குடிசை வாசி, ஒண்டு குடித்தனவாசி,

விசிட்டிங் கார்டோ ,பெரீ மன்சங்க லெட்டர் பேடோ ,கார்ப்பரேட் கம்பெனி ஐடியோ இல்லாத அவனை பொருத்தவரை அரசாங்கம்னா லட்டியில தட்டி "யார்ரா நீ"ங்கற போலீஸ் காரர் தான்.

சனத்தை பொருத்தவரை அவன் தினசரி புழங்கற இடம் , வாரம் ஒரு தாட்டி அல்லது மாசம் ஒரு தாட்டி விசிட் அடிக்கிற இடம் பர்ஃபெக்டா இருந்தா போதும் .

அது போலீஸ் ஸ்டேஷனா இருந்தாலும் சரி . தாலுக்காஃபீஸ், கரண்டாஃபீஸ், போஸ்டாஃபீஸ், காய்கறி மார்க்கெட்,அவன் பிள்ளை படிக்கிற ஸ்கூலு .இப்பிடி ஒரு லிஸ்டை போட்டா மொத்தமே இருபது இருபத்தஞ்சு தான் வரும். அந்த இடங்களை ஆசிட் ஊத்தி கழுவி சென்டட் ஃபெனாயில் போட்டு வச்சுட்டா போதும் "சீமான்யா.. என்னமா ஆட்சி நடத்தறான்"னு சொல்ட்டு போயிக்கினே இருப்பாய்ங்க.

இப்பம் " நான் பிரதமாராகியிருந்தா"ங்கற  தலைப்புல கொடுத்திருந்த ஐடியாக்களை பாருங்க.

பாராளுமன்றம்,ஜனாதிபதி மாளிகை,பிரதமர் இல்லம் மூன்றையும் க்ளோபல் டென்டர் மூலம் 99 வருடங்களுக்கு லீசுக்கு விட்டிருப்பன்.
தற்போதைய கரன்சி ரத்து -புதிய கரன்சி அறிமுகம் (கருப்பு பணத்துக்கு காயடிப்பு)

10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் சிறப்பு ராணுவம் கொண்டு நதிகள் இணைப்பு -கூட்டுறவு பண்ணை விவசாயம்

நம் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை ஐ.நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி அதன் பாதுகாப்பை சர்வதேச ராணுவத்துக்கு ஒப்படைப்பு.( சீனா விஷயத்திலும் இதே ஃபார்முலா) அவர்கள் வசம் உள்ள நிலப்பகுதியையும் ஐ. நா நடவடிக்கைகளுக்கு ஒதுக்க சொல்லி அழுத்தம்.
வழிக்கு வரலின்னா சீனா,பாக்கிஸ்தான்,இலங்கை மீது பொருளாதார தடை,ராஜீய உறவுகள் கட்

ராணுவத்துக்கு நதி நீர் இணைப்பில் பங்கு .நதி நீர் இணைப்பில் முதலீடு செய்யும் அன்னிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி.

இந்த நாட்டின் தொழில் விவசாயம்-நாட்டின் அனைத்து சக்தியும் விவசாய மேம்பாட்டிற்கு திருப்பி விடப்படும்.அடுத்த முக்கியத்துவம் விவசாயம் சார்ந்த தொழில்கள்,விவசாய உற்பத்திகள் ஏற்றுமதி

ஒவ்வொரு குடிமகனுக்கும் உயிர் பாதுகாப்பு,உணவு,உடை,இருப்பிடம் செக்ஸுக்கு உத்திரவாதம்.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி

அனைத்து மானிலங்களிலும் தலா ஒரு மாதம் பிரதமர்,தலைமை செயலகம் செயல்படும் (டிஜிட்டல் மயமாக்கி விடுவதால் மனிதர்கள் மட்டும் ரயிலை பிடிச்சு போனா போதும்.

பூரண மதுவிலக்கு -போதை பொருட்களுக்கு தடை
ஒரு வருடத்துக்கு மேற்படிப்புகள்,தொழிற்கல்விக்கு தடை - ஆஃப்டர் அப்டேஷன் ஒன்லி ரீ ஸ்டார்ட்.

படிச்சவனுக்கு அவன் படிச்ச நிறுவனமே வேலை கொடுக்க சட்டம்

ஆறுகள் எத்தனை சின்னதாய் இருந்தாலும் ராணுவம் கொண்டு மீட்பு , கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டால் அன்றி நதியில் விட தடை. சட்டத்தை மீறினால் கொலை வழக்கு பதிவு

பள்ளிகள், கல்லூரிகள்,ஹாஸ்டல்கள்,பிரார்த்தனை ஸ்தலங்கள்,அரசு அலுவலகங்களுக்கு தேவையான மின்சாரத்தை அவிகளே ஜெனரேட் பண்ணிக்கனும் . (சோலார்,பயோ கியாஸ்,காற்றாலை)

பெட்ரோலுடன் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.லக்சரி கார்களுக்கு மானிய விலை டீசல் கட்.

பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டுக்கு டாப் ப்ரியாரிட்டி.வாரத்துல ஒரு நாள் மாசு எதிர்ப்பு தினம். அன்று பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் தவிர்த்து அனைத்து  வாகனங்களுக்கும் தடை .

அரசு அலுவலகங்களில் காகிதங்களுக்கு தடை. நிருபர்கள்,பொதுமக்களுக்கு தகவல் தர மட்டுமே காகிதம்.மற்றபடி அனைத்தும் டிஜிட்டல் மயம்
பீக் ஹவர்ஸில் ஃபோர் வீலர்களுக்கு தடை .18+ வயதுள்ள வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் அனைவருக்கும் இலவச சைக்கிள்.சைக்கிள்களுக்கு மெயின் ட்ராக்

மத,ஆன்மீக நடவடிக்கைகளுக்கு உடலுறவு போன்று சாத்திய கதவுகளுக்குள் மட்டுமே அனுமதி .

கிராமங்கள் உற்பத்தி மையங்களாய்,நகரங்கள் விற்பனை மையங்களாய்
காவலர் பணியிடங்கள் நிரப்புதல் - அப்டேட்டட் ட்ரெய்னிங். 3 மாதங்களில் மொத்த பணியிடங்கள் போல் மேலும் இரண்டு மடங்கு ஆளெடுப்பு. ஷிஃப்ட் சிஸ்டம். காவல் நிலையங்களில் சிசி கேமரா.

அனைத்து மத்திய,மானில அரசு ஊழியர்களுக்கும் மெடிக்கல் டெஸ்ட். ஃபெய்ல் ஆனவுக வீட்டுக்கு. காலியிடங்கள் அனைத்தும் நிரப்புதல்.
ஒவ்வொரு அரசு ஊழியனையும் அரசே தத்தெடுக்கும். A to Z அரசே வழங்கும். பார்த்துக்கொள்ளும்.

லஞ்சம் வாங்கினால் ரிமூவ்ட் ஃப்ரம் சர்வீஸ்

வருடத்தின் 11 மாதங்கள் உழைத்தவர்களுக்கு மட்டும் 1 மாதம் சுற்றுலா அனுமதி .(ஆன்மீக சுற்றுலாவுக்கும் இதுவே விதி)

நோய் தடுப்பு,குற்ற தடுப்பு,விபத்து தடுப்புக்கு டாப் ப்ரியாரிட்டி .
ஸ்விஸ் வங்கி கணக்காய் வங்கி துவங்கி நாட்டின் கடனை எல்லாம் செட்டில் பண்ணிர்ரது. பஞ்சாயத்து பேசி வட்டில்லாம் எகிறடிச்சுட்டு ஒன் டைம் செட்டில்மென்ட்.

காய்கறி மார்க்கெட்,சந்தையில எல்லாம் எஸ்.டி.டி பூத் கணக்கா வங்கி கவுண்டர்கள். காலையில கடன் கொடுத்து மாலையில வசூல்.

ஒருரெண்டு வருசத்துல எல்லாத்துக்கும் வேலைவெட்டி கொடுத்து அவிகளாகவே எங்களுக்கு நல திட்டங்கள் வேணாம்னு கழண்டுக்கனும் .பிறவு நல திட்டங்கள் கை விடப்பட்ட முதியோர்,பெண்கள்,குழந்தைகள்,உடல் ஊனமுற்றோர்,வயதான திரு நங்கைகளுக்கு மட்டுமேங்கற நிலைய கொண்டு வருவம்

ச்சும்மா பாய்லா காட்டாம -ஹார்ட் ஃபுல்லா -பத்து வருடங்கள் இட ஒதுக்கீடு அமல் செய்தால் போதும். இனி எம் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று அவர்களே எழுதிக் கொடுத்துவிடுவார்கள்

எந்த குடிமகன் எந்த மானிலத்துக்கு பெயர்ந்தாலும் அங்கு அவனுக்கு வேலை தங்குமிடம் தயாராக இருக்கவேண்டும்.

100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்கும் வரை ஆளில்லா வாக்கு பதிவு மையங்கள் தொடரவேண்டும் .

ஆறு,ஏரி,குளம்,வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியவர்கள் தம் சொந்த செலவில் அவற்றை தம் கட்டிடங்களின் கீழ் புனரமைக்க வேண்டும்.

கடலில் கலக்கும் ஒவ்வொரு டி.எம்.சி தண்ணீரும் அரசின் அனுமதியின் பேரில் மட்டுமே கலக்கவேண்டும்.

தடுப்பணைகள் கல்லணை ஃபார்முலா கொண்டு அமைக்க வேண்டும்.
கம்ப்யூட்டருக்கு புரியும் வகையில் ஒவ்வொரு குடிமகன் குறித்த டேட்டாவையும் அவனே தரும்படி செய்து -அதை அடிப்படையாக வைத்து மைக்ரோ ப்ளானிங்.தவறான தகவல் தந்திருந்தால் ஏழரை வருட கடுங்காவல்    
தண்ணீர் ,ரயில் போக்குவரத்துக்கு டாப் ப்ரியாரிட்டி. ஏற்கெனவே போட்டு தொலைச்ச சாலைகளை அவை பாழ்பட்டு போன பின் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலைகள்
365 நாளும் 16 மணி நேரம் கோர்ட் வேலை செய்யனும். எவனும் 8 மணி நேரத்துக்கு மேல வேலை செய்யக்கூடாது. நிலுவையில் உள்ள கேஸ் எல்லாம் பைசல் ஆயிட்டா படிப்படியா குறைச்சுர்ரது

படிப்படியாக மத நிறுவனங்கள் அனைத்தும் மதம் சார்ந்த நடவடிக்கைகளை சுருக்கி கொண்டு நாட்டு வளர்ச்சியில், எதிர்கால சந்ததிகளின் உடல்,மன,புத்தி நலனுக்கு செயலாற்றும் வகையில் மாற்றப்படும்

இதை எல்லாம் ஒரு ரெண்டு வருசத்துல பைசல் பண்ணிட்டு நேரிடை ஜன நாயகத்துக்காக அரசியல் சாசன திருத்தம். பிரதமருக்கு வீட்டோ பவர். பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விகிதாச்சார முறை தேர்தல் . நோ இடை தேர்தல் .ஒரு உறுப்பினர் டிக்கெட் போட்டா பட்டியல்ல உள்ள அடுத்த நபர் தேர்வு

படிப்படியாக அதிகாரங்கள் மானிலங்களுக்கு,மானிலங்களிடமிருந்து மாவட்டங்களுக்கு இறுதியில் கிராம சபைகளுக்கு கை மாற்றப்படும்
மத்திய மானில தனியார் நிறுவனங்களில் 52 சதவீதம் இட ஒதுக்கீடு. நாடு சுபிட்சமான பிறவு (என்ன ஒரு 4 வருசத்துல பைசல் ஆயிரும்) இன்னம் என்னெல்லாம் பண்ணலாம்ங்கறதை நாலு வருசத்துக்கு பிறவு சொல்றன்.
   

Sunday, December 19, 2010

வலையுலகில் தேக்கம்

சுஜாதா கதைகள்ள கணேஷ் வசந்துக்கு கீர் (Gear) போடவும், வசந்தே தனக்கு தான் உசுப்பேத்திக்கவும் " நீ அனுமார்ரா உன் பலம் உனக்கு தெரியாதும்பாய்ங்க. இதே வசனத்தை நான் சகபதிவர்கள் கிட்டயும் விட விரும்பறேன்.

சுகுமார்ஜி எந்த ஆக்டரும் சூப்பர் ஸ்டாருல்லே. ரசிகன் தான் சூப்பர் ஸ்டாருன்னு போட்ட பதிவை 499 பேர் பார்த்திருக்காய்ங்க. தமிழ் வெளில டாப் ஒன்ல நின்னிருக்கு. (படத்தை பாருங்க ) இந்த வெற்றி கொடுத்த தகிரியத்துல தான் இந்த பதிவையே போடறேன்.

வீட்லயே நெட் கனெக்சன் வந்துட்டதால,  ஒரு நாளைக்கு 3 தாட்டி பூந்துவர்ரதாலயா என்னனு தெரியலை புது பதிவுகள் குறைஞ்சிட்டே வராப்ல ஒரு சம்சயம். வந்த பதிவுகள்ளயும் புதுமைய லென்ஸ் வச்சு தேட வேண்டியதா இருக்கு.

தர்ம யுத்தம் படத்துல ஸ்ரீதேவி பாடுவாய்ங்களே அப்படி எத்தனாம்பெரிய ஜூரியை கூட போய்யா போய்யா (வலை) உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பான்னு பிரிச்சு மேயற வாய்ப்பு இந்த உலகத்துல இருக்கு. ஆனால் திருப்பி திருப்பி கலைஞரை,ஜெயாவை,ராசாவ கிழிக்கறதோட சரி.   விட்டா சினிமா விமர்சனம். இல்லை சக பதிவர்களை கலாய்க்கிறது ( எப்பவாச்சும் ஃப்ரீன்னா பரவால்லை எப்பவுமே ஃப்ரீன்னா எப்படி?) விட்டா ரஜினி,விஜய்.

என் சிற்றறிவுக்கு எட்டின வகையில வலையுலக புதுமைக்கு சில யோசனைகள் குறைஞ்ச பட்சம்  ஒரு 45  நாளைக்கு அமலாக்கினா போதும்

*ஆரியம்,திராவிடம்,பார்ப்பனீயம் எல்லாத்துக்கும் லீவு
* நோ சினிமா விமர்சனம் - நோ நடிகைகள் காசிப்ஸ்
*இலங்கை மேட்டர்ல விசயம்,விசயத்தோட வீரியம்  தெரிஞ்சவுக மட்டும்      டீட்டெய்ல்டா எழுதனும் -மத்தவுகல்லாம் படிக்கலாம் பரப்பலாம்

*.டிவி நிகழ்ச்சிகள் அதுலயும் சீரியலை பத்தி வேணாங்கண்ணா ..வேணம்னா புதுசா ,சனத்துக்கும் உபயோகமா எதுனா நிகழ்ச்சிகளுக்கு ஐடியா கொடுங்க
*பதிவர்களுக்கான யோசனைகள் தலைப்புக்கு தடை( நம்ம பதிவே கடைசி பதிவா இருக்கட்டும் ஜஸ்ட் 45  நாளைக்கு)















மேலே உள்ள காலியிடம் உங்கள்ள யாராச்சும் சொல்ற யோசனையை சேர்த்துக்கத்தேன்.

என்னெல்லாம் எழுதலாம்:
இந்த துணைத்தலைப்புக்கு கீழே எழுத எனக்கு தகுதி  இருக்கானு தெரியலை. நான் கூட  ஜோதிஷம் ,சைக்காலஜி,செக்ஸாலஜி,அரசியல்னு தேங்கிட்டன். இனி நானும் புதுமையா எதுனா எழுதலாம்னு இருக்கேன். இடையில மருந்தா நோய்க்கு விருந்தான்னு ஒரு தொடர் ஆரம்பிச்சு அது தொங்கல்ல இருக்கு.

என்னமோ போங்க இந்த ஞா கிழமை வந்தாலே எல்லாமே கடுப்படிக்குது...

முடிவுரை:
எனக்கு என்ன தோணுதுன்னா இங்கன பைசா புரள்றதில்லைங்கறதே இந்த தேக்கத்துக்கு காரணமோ? யாராச்சும் நகைக்கடைக்காரவுக வந்து பரிசு கொடுக்க ஆரம்பிச்சா புதுவெள்ளம் வருமோ?