Saturday, June 7, 2014

எம்.எல்.ஏ சார் நம்ம காதோடு சொன்ன மேட்டரு..


அண்ணே வணக்கம்ணே !
 நம்ம பதிவுகள்ளயும் - முக நூல் நிலை செய்திகளிலும் அப்பப்போ எங்க எம்.எல்.ஏ னு பீத்திக்கிறத கவனிச்சிருப்பிங்க. ஏதோ 2009 எலீக்சன்ல ஏப்ரல் 7 லருந்து 21 வரை ஒரு 14 நாள் டெய்லி பார்த்ததுண்டே தவிர பேசி பழகறது இத்யாதிக்கெல்லாம் சான்ஸே கிடையாது.

நாம போடற லோக்கல் தெலுங்கு பேப்பர் சார்பில் அவரோட ஆதரவாளர்கள் ஸ்பான்சர்ஷிப்போட அப்பப்போ எதையாச்சும் போட்டு சனங்களுக்கு கொடுக்கறது வழக்கம்.

அதுல எதாச்சும் முக்கியமானதா -ஹை பட்ஜெட் ஐட்டமா இருந்தா அவரை பிடிச்சு ஒப்புத்துக்க வச்சு ஓப்பன் பண்ண வைக்கறது உண்டு. அதுக்கும் செமையா கலாய்ப்பாரு "ஏன்யா என் படம் போட்ட காலண்டரை நானே ஓப்பன் பண்ணா நல்லாவா இருக்கும்" அது இதுன்னு எஸ் ஆகவே பார்ப்பாரு. எப்படியோ கோஞ்சாடி வேலை முடிக்கிறது.

நாம அவரை சந்திக்கிற அரிதிலும் அரிதான அந்த மினட்ல நடக்கிற கான்வெர்சேஷனை ஒரு போஸ்டல் ஸ்டாம்ப் பின்னால எழுதிரலாம்.
ஒரு தாட்டி மட்டும் செம கலாய்ப்பு. மேட்டருக்கு வரேன்.
சமீபத்துல ஸ்ரீ அம்மன் சத நாமாவளி பொருள் விளக்கம்னு ஒரு குறுந்தொடரை எழுதினம். ஞா இருக்குல்ல? ஒரு தசராவுக்கு மேற்படி நாமாவளியை பாக்கெட் புக்கா போட்டு சனங்களுக்கு கொடுக்கிறதா ப்ளான் பண்ணி ரெடி பண்ணிட்டம். அவர்ட்ட போயி கொடுத்தம் . ஓப்பன் பண்ணிட்டாரு.

சத நாமாவளி மேட்டர் எல்லாம் ப்ளாக் அண்ட் வைட்லயும் அவரோட ஆதரவாளர்கள் கொடுத்த விளம்பரங்கள் எல்லாம் மல்ட்டிக்கலர்லயும் இருந்தது. இதை பார்த்துட்டு கச்சேரிய ஆரம்பிச்சாரு.

கொஞ்ச தூரத்துல  ரூரல் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு சேர் போட்டு வெயிட்டிங்ல வச்சிருக்காய்ங்க. ரேப்பர்ல அம்மன் படம் கீழே சின்னதா பாக்ஸ் போட்டு ஸ்பான்ஸர்ட் பை சி.கே.ஃபேன்ஸ்னு போட்டிருந்தம் டப்பாவுக்குள்ள குட்டியா அவரோட ஃபோட்டோ.

சின்ன பசங்களை கேட்கிறாப்ல அம்மன் படத்தை காட்டி
"இது யாரு"
"அம்மன் சார்"
தன் படத்தை காட்டி "இவன் யாரு?"
"நீங்க சார்"
"இதுல என் ஃபோட்டோ ஏன் வருது?"
"உங்க ஃபேன்ஸ் தான் இந்த பாக்கெட் புக்கை ஸ்பான்சர் பண்ணியிருக்காங்க"
"அப்ப அவங்க படங்களை போட வேண்டியதுதானே"
"சார் ..அவிக மொத்தம் 32 பேர் இருக்காங்க சார். எல்லார் படத்தையும் ரேப்பர்ல போட முடியாதே "
"சரி .. சத நாமாவளி ப்ளாக் அண்ட் வைட்ல வந்திருக்கு .விளம்பரம்லாம் கலர்ல வந்திருக்கு..இது சரியா?"

"சார் .. அவிக காசு கொடுத்து விளம்பரம் போட்டுக்கறாங்க"

"அப்போ ..அம்மன் காசு கொடுத்தாதான் சத  நாமாவளி கலர்ல வருமா?"
இங்கே ஷாட் கட் பண்ணிக்கலாம்.  நம்ம நெடு நாள் க்ளையண்டு விமலாதித்தன். மேற்படி தசரா பிரசுரத்தை பத்தி போற போக்குல நாம ஒரு ஸ்டேட்டஸ் போட படக்கு ரூ.10 ஆயிரத்தை நம்ம அக்கவுண்டுக்கு மாத்தி விட்டுட்டாரு.

நாம அலறியடிச்சு ..அய்யா நான் போட போறது தெலுங்குல -அதையும் எங்க ஊர் சனங்களுக்கு கொடுக்கிறதா தான் ப்ளான். அதுக்கு ஸ்பான்சரர்ஸ் எல்லாம் ரெடி . நான் சும்மா தகவலுக்காக போட்ட ஸ்டேட்டஸ பார்த்துட்டு இப்டி காசை போட்டுட்டிங்களேன்னு பம்மினேன். ஏன் சார் தமிழ்ல போடக்கூடாதா? தமிழ் மக்களும் தெரிஞ்சுக்கலாமில்லையான்னாரு.
விமல் மட்டுமில்லை இன்னும் சிலரும் அப்போ கான்ட்ரிப்யூட் பண்ணாய்ங்க. லண்டன்ல இருக்கிற ஒரு ரெட்டியாரு, திருவாளர்கள் துரை பாண்டியன், மருதப்பன்,அருள்ராஜ்குமார்,கஜபதி ,கோபி நாத் சிதம்பரம் இவிக கொடுத்த காசுக்கெல்லாம் பேப்பர் வாங்கி போட்டு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டியாச்சு. வீடே ப்ரஸ் மாதிரி ஆயிருச்சு.

அச்சாயிட்டா போதுமா? சனங்களுக்கு போய் சேரனுமே? என்னடா பண்றதுன்னு புலம்பிக்கிட்டிருந்தப்போ நம்ம லோக்கல் நகைக்கடைக்காரர் ஒருத்தரு கிருஷ்ணகிரி வரை போகனும் சும்மா இருந்தா வாய்யான்னாரு. கார் பயணம். ஒடனே நம்ம மேட்டரை சொன்னேன். இவ்ளதானே மூட்டைகளை ஏத்து.பையன் ஒருத்தனை பிக் அப் பண்ணிக்க. போறச்ச நேர கிருஷ்ணகிரி போயிரலாம். வரச்ச எத்தனை ஊரு இருக்கோ எல்லாம் ஊருலயும் நிறுத்த சொல்றேன்.பையன் கொடுக்கட்டும்னுட்டாரு.

இப்படி ரெண்டு தபா போனோம். மேட்டர் ஓவரு. தீர்பாடா உட்கார்ந்து கணக்கு பார்த்தா சனங்க கொடுத்த காசுக்கு இன்னம் 1492 பிரதி போட்டிருக்கனும். சரி அடுத்த மாசம் போட்டுரலாம்னு விட்டன். இதோ வருசங்களே ஓடிருச்சு. இதுக்கு வட்டி போல சொந்த செலவுல ஒரு ரெண்டாயிரம் பிரதி போட்டுரலாம்னு சில வாரங்களாவே ஒரு ஐடியா.

இதுல எம்.எல்.ஏ விட்ட "பொளேர்" வேற ஞாபகத்துல க்ளாஷ் ஆகுது. ஆத்தா காசு கொடுத்தாதான் சத நாமாவளி மல்ட்டி கலர்ல வருமா? ஏன் நாமளே மல்ட்டி கலர்ல போடக்கூடாது? பட்ஜெட் தாங்குமாங்கற சந்தேகம் ஒரு பக்கம். புக் மேக்கிங் மேன்யுவலா பண்றதால காஸ்ட் அதிகம்.இதை விட பெரிய சவால் அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கறதுதான். இப்படி குழப்பிக்கிட்டிருந்த சமயம்

 ரெண்டு நாளைக்கு மின்னே  விமலாதித்தன் ஃபோன் பண்ணாரு "சார் ! மறுபடி சத நாமாவளி போடற ஐடியா இருக்கா?"

ஏற்கெனவே நீண்ட நெடும்பயணம் போயி டாரா கிளிஞ்சு கிடந்தோமா? கொய்யால மறுபடி பயணமா ஆள விடுங்கற ஃபீல் தான் வந்தது. "இல்லை சார்.. நானே ஒரு 1,492 பிரதி பாக்கி -அதை போடவே ரோசிக்கிறேன். டிஸ்ட் ரிப்யூஷன் தான் பிரச்சினை" என்று கழண்டு கிட்டேன்.
ஒரு நெல்ல காரியத்துக்கு காசு கொடுக்கிறேனு ஒருத்தர் முன்வரதே கஷ்டம்.அதை கூட தடுத்துட்டமேனு ஃபீல் ஆச்சு.

எல்லாத்தையும் பைசல் பண்றாப்ல ஒரு ப்ளான் பண்ணியிருக்கன்.
இந்த சத நாமாவளி மேட்டர்ல பங்கெடுத்தவுக எல்லாருக்குமே ஏதோ ஒரு வகையில ஒரு லிஃப்ட் கிடைச்சிருக்கு. அது தெரியும். ச்சும்மா டிசைன் பண்ண என் மவளுக்கே அஞ்சு வருசமா இழுத்துக்கிட்டிருந்த கண்ணாலம் கால் காசு கடனில்லாம ஆயிருச்சுன்னா பாருங்களேன். ஆகவே இந்த வேலைய செய்றது வெட்டியில்ல. லைன் க்ளியர்.

புக் மேக்கிங் ப்ராசசை அவாய்ட் பண்ணனும்னா ப்ரவுச்சர் மாதிரி போட்டுரலாம். புக் மேக்கிங் ப்ராசஸ் காஸ்டுக்கு மல்ட்டி கலர்லயே போட்டுரலாம்.

2000 பிரதி ப்ளாக் அண்ட் வைட்ல போடறதுக்குண்டான காஸ்ட் என்னவோ அதை நான் கான்ட் ரிப்யூட் பண்ணிர்ரன். இது வரை ஓகே.

அடுத்த கண்டம் வினியோகம். இங்க தான் உங்க உதவி தேவைப்படுது. வெள்ளிக்கிழமைகள்ள ராகு காலத்துல எப்படியும் அம்மன் கோவில்ல கூட்டம் அம்மும். அந்த சமயம் யாராச்சும் பையனுக்கு நூறோ நூத்தம்பதோ கொடுத்து நிப்பாட்டிட்டா பக்தாளுக்கு கொடுத்து தீர்த்துருவான்.

அந்த காசு பிரச்சினை இல்லை. நானே அனுப்பி வச்சுர்ரன். பிரவுச்சர் கணக்கா ப்ரிண்ட் ஆன சத நாமாவளியை கூரியர்ல அனுப்பிரலாம்.
ஆனால் பிரதிகளை வீணடிக்காம, பொறுப்பா,சரியான ஆள பிடிச்சு வினியோகம் பண்ண வைக்கனுமே.அதுக்கு யார் தயார்?
ஜஸ்ட் ஒரு பத்து பேர் நான் ரெடின்னா போதும் வேலைய ஆரம்பிச்சுரலாம். நான் ரெடி . நீங்க ரெடியா?

நீங்க ரெடியான பிற்காடு விமலுக்கு தகவல் சொல்றேன். ஆரும் ரெடியில்லின்னா நான் பாக்கியா இருக்கிற 2000 பிரதிகளை ப்ளாக் அண்ட் வைட்லயே புக்கா போட்டு வச்சுக்கிட்டு வாய்ப்பு கிடைக்கிறப்பல்லாம் -தமிழ் நாடு பக்கம் போறப்பல்லாம் நானே வினியோகம் பண்ணி கடனை கழிச்சுர்ரன். அவ்ள தானே உடுங்க ஜூட்டு.

எச்சரிக்கை:
எம்.எல்.ஏ என் கிட்ட ரகசியம் பேசினதால - அதுவும் சர்க்கிள் இன்ஸ்பெக்டரை வெய்ட்டிங்குல வச்சு பேசினதால ஒரு அபலைக்கு நீதி கிடைச்சது தனி கதை. அதை கேட்டவுகளுக்கு சொல்றேன்.