Saturday, June 28, 2014

அணு உலையும் கெயில் பைப் லைனும்

அண்ணே வணக்கம்ணே !

அணு உலை மேட்டரு நமக்கு தெரியாது. ஆனால் வெடிச்சா மட்டும் துடிச்சு சாகற அளவுக்கெல்லாம் டைம் கொடுக்காதுங்கற மேட்டரு தெரியும். ஒரு நூறு வருசத்துக்கு அதனோட பாதிப்பு சுத்து வட்டாரத்துல இருக்குன்னு மட்டும் தெரியும்.

இந்த கெயில் பைப்லைன் மேட்டரு மட்டும் சானல்கள் உபயத்துல ப்ரா போடாத முலை மாதிரி பட்டவர்த்தனமா தெரியுது.

1991 ல போட்ட பைப் லைனாம்.  மெனோஃபஸ் வந்த பொம்பளைக்கு போல 2 மாசமா  லீக் அடிச்சுக்கிட்டே இருந்திருக்கு. ஒரு வாரமா ரிப்பேர் பார்த்துக்கிட்டே இருந்திருக்காய்ங்க.

பேட்டரி அவுட் ஆயிட்ட பர்சன் பலான மேட்டருக்கு வெங்காயம் சேர்த்துக்கறாப்ல இரும்பு பைப்லருந்த ஓட்டையில புளி அடைச்சுட்டு சாரி வெல்டிங் பண்ணிட்டு போயிட்டாய்ங்களாம்.

கூப்பிடு தூரத்துல ஓன்.என்.ஜி.சி இருக்காம்.ராத்திரி முழுக்க லீக் அடிச்சு ஒன்னரை கி.மீ தூரத்துக்கு கியாஸ் பரவி இருந்திருக்கு.

யு.பி.ஏ அரசாங்க மேட்டர்ல சனம் வரட்டும்டா தேர்தல்னு சனம் காத்திருந்தாப்ல காத்துல பரவின கியாஸ் வெய்ட்டிங்.
விடியல் அஞ்சு மணிக்கு ஓட்டல் காரரு அடுப்பு பத்த வச்சிருக்காரு. ஊரு பத்திக்கிச்சு  பைப் வெடிச்சு மத்தியில ஒரு பீசே காணோம். சுற்றிலும் பத்தடிக்கு பள்ளம்.

ஹோட்டல் காரரும் அவர் குடும்பமும் பஸ்மம்.  அந்த வழியா பைக்ல வந்த அப்பா மகள் மெட்டாஷ். ஜஸ்ட் 10 ஏக்கர் தென்னந்தோப்பு காலி . குடிசை வீடுகளோட  கதைய சொல்லவே தேவையில்லை.ஓட்டு வீடுக கூட இருந்த இடம் தெரியாம குப்பை மேட்டா போயிருச்சு.  வாத்து கோழில்லாம் செமி குக்டா கிடக்கு.ஊரோட பேரு "நகரம்" ஒரே நொடியில நரகம் ஆயிருச்சு.
வெடிச்சதுக்கு காரணம் காலாவதியான பைப் லைன்,அதை மாத்த மனசில்லாத  நிர்வாகம். இதெல்லாம் ஒருபக்கம். வெடிச்ச பிறவு நிலைமை என்னடான்னா ..

தகவல் தொழில் நுட்ப புரட்சி காரணமா சனம் கையில செல் ஃபோன் இருந்திருக்கு. விரல் தேய கீ பேட் தேய ஃபோன் மேல ஃபோன் போட்டிருக்காய்ங்க. ஒரே ஒரு டி.எஸ்.பி தவிர ஒரு மயிரானும் ஸ்பாட்டுக்கு உடனே வரல.

கெயில் காரனும் வரல,ஓ.என்.ஜி.சி காரனும் வரல, அட 108 ஆம்புலன்ஸ் கூட வர்லிங்ணா. டாக்டர் ஒய்.எஸ்.ஆர் ப்ரஸ்டீஜியஸா கொண்டு வந்து கறாரா அமல் செய்த திட்டம் அது.அதுக்கும் கருமாதி பண்ணிட்டானுவ போல.
விஷயங்களை எளிமை படுத்தலாம் .ஆனால் ரெம்ப படுத்திரக்கூடாதுன்னு ஒரு சேயிங் ஞா வருது.சரி அவிக யாவாராத்துக்கு எளிமை

படுத்திக்கிட்டாய்ங்க.ஓகே. தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மாறுது.ஆனால் 1991 ல இருந்த  தொழில் நுட்பத்தை (?) பயன் படுத்தி போட்ட பைப் லைனை "சிந்தாம சிதறாம" தொடர்ந்திருக்கான்னா என்ன சொல்ல?
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளாங்கறாப்ல ஊரு உலகத்து மேட்டரை எல்லாம் ஈயடிச்சான் காப்பி அடிக்கிறாய்ங்க.

அது நம்ம நாட்டுக்கு , அதுவும் அடிமைப்பட்டு கிடந்த  நாட்டுக்கு,அதுவும் வர்ணாசிரமதர்மம் அந்த நாள் முதல் இந்த நாள் வரை அமல்ல இருக்கிற இந்த நாட்டுக்கு ,அதன் காரணமா ஒரு மேஜர் க்ரூப் ஆஃப் பீப்புள் இன்னமும் கல்வி,விழிப்புணர்ச்சி இல்லாம இருக்கிற இந்த நாட்டுக்கு சூட் ஆகுமா?னு ரோசிக்க வேணாம்.

இந்தியனாய் இரு -இந்திய பொருளையே வாங்குங்கறாய்ங்க. 

கெயில்,ஓ.என்.ஜி.சில்லாம் என்ன ஜப்பான் நாட்டு நிறுவனமா?
இந்திய பொருளையே வாங்குன்னா  அப்பம் இந்திய முதலாளியை மட்டும் வாழ வைனு அருத்தமா?  அவனவன் தலா 10 எம்பியை  கை வசம் வச்சுக்கிட்டு ஆட்டைய போடட்டும்னு சொல்ல வராய்ங்களா? (கிரிக்கெட் டீம் விலைக்கு வாங்கறாப்ல ஆயிருச்சு நிலைமை)

எம்பியை பிடிச்சு அசலான ஆளை பிடிச்சுன்னு சுத்தல் எதுக்குன்னு இப்பல்லாம் அசலான ஆளையே பிடிச்சு வச்சுராய்ங்க போல. தரம், தந்தூரி சிக்கன்லாம் விளம்பர வாசகங்களுக்கு மட்டுமா?

இயந்திர மயம்,தொழில்மயம் லாம் ஏதோ ஒரு பிரமையில ஆனால் நெல்ல எண்ணத்துல வந்த மாற்றங்கள். இந்த பட்டியல்ல பசுமை புரட்சி ,வெண்மை புரட்சி,நீல புரட்சியை எல்லாம் சேர்த்துக்கலாம். இதுகளோட விளைவு என்னாச்சுன்னா

சுவாமி நாதன் என் வாழ்க்கையில செய்த பெரிய தப்பு பசுமை புரட்சிங்கறாராம். நல்ல எண்ணத்தோட வந்த  மேட்டரே இப்படி பிட்டர் எக்ஸ்பீரியன்ஸை கொடுத்திருக்குன்னா

இந்த உலக மயம், தனியார் மயம்லாம் எதுல போயி முடியுதோ பார்க்கனும். (பொளச்சி கிடந்தா).

இதெல்லாம் வேற சப்ஜெக்ட். என் கேள்வி ஒன்னு தான் .கொய்யால கியாஸ் பைப் லைனையே ஒளுங்கு மருவாதியா போட முடியாத -மெயின்டெய்ன் பண்ண முடியாத நாட்டுக்கு அணு உலை தேவையா?

அட வெடிச்ச பிறவாச்சும் எதுனா கன்ஸ்ட்ரக்டிவா பேசறானா ? திட்டமிடறானான்னா அதுவும்  கிடையாது. மத்திய அரசு,மானில அரசு,கெயில்,ஓ.என்.ஜி.சி எல்லாம் பிச்சு பிச்சு செத்துப்போனவனுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அனவுன்ஸ் பண்ணியிருக்காய்ங்க.

அது எப்பம் அந்த சனங்க கைக்கு போகுமோ ஆண்டவனுக்கு தான் தெரியும். ஆதார் அட்டைக்கு ஆயிரமாயிரம் கோடி செலவழிச்சானுவ. படக்குனு ஒன் ஃபைன் மார்னிங் எல்லாம் கேன்ஸல்னுட்டானுவ.

அணு உலை  மேட்டர்ல மட்டும் செலவழிச்சாச்சு ..நிறுத்த முடியாதிங்கறானுவ. என்னடா லாஜிக் இது? ரேட் கொடுத்து புக் பண்ணிட்டம்னு எய்ட்ஸ் வந்தவளை ...க்க முடியுமா?