Friday, August 31, 2012

சனியும் குதப்புணர்ச்சியும்


அண்ணே வணக்கம்ணே !
சனியின் காரகங்களில் முக்கியமானது ஆசனம்.ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இப்போ என்ன பண்ணனும்னா? சைலன்சர் அடைப்பை நீக்கனும். ஃப்யூச்சர்ல அடைப்பு ஏற்பட்டுராம பார்த்துக்கனும்.ஏற்கெனவே அடைப்பு காரணமா ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரெக்டிஃபை பண்ணிக்கனும்.

இந்த பாதிப்புகளில் ஒன்னுதான் குதப்புணர்ச்சி. அய்.. அதெப்படிம்பீங்க. சொல்றேன். ஜல தோஷம் வர்ர வரைக்கும் மூக்கு இருந்த இடமே தெரியாது.

வீரியம் புரள்ற வரை "அது" இருந்த இடமே தெரியாது. அதே போல பிரச்சினைய கொடுக்கிற வரை ஆசனம் இருந்த இடமும் தெரியாது. பிரச்சினை ஆரம்பிச்சதும் மனம் அங்கே குவியும். அந்த குவிப்பு பாசிட்டிவா இருந்தா பிரச்சினைய தீர்க்க உங்களை உந்தி தள்ளும். அதுவே நெகட்டிவா இருந்தா? குதப்புணர்ச்சிக்கு கூட கொண்டு போகலாம்.

ஆக சனி என்றால் ஆசனம். வண்டிக்கு சைலன்சர் மாதிரி. அது ட்ரபுள் கொடுத்தா இஞ்சினே காலியாயிரும். இதை சால்வ் பண்றது எப்படி?


1.எனிமா எடுத்து வயிறை க்ளீன் பண்ணலாம்.
2.நிறைய தண்ணி குடிக்கலாம்.
3.சனி மலச்சிக்கலை மட்டுமில்லை, பைல்ஸ், நரம்பு பலகீனம் மாதிரி வியாதிகள்ளயும் கொண்டு விட்டுருவார் டேக் கேர். இதுக்கு சொல்யூஷன் கையில ஆயில் கறை,கெரசின் கறை படியற மாதிரி வேலை செய்யலாம். கு.ப் எக்ஸர்சைஸ் செய்யலாம்.
4.காலங்கார்த்தால எண்ணெய்,மசாலா, சீயா,சீச்சி ( நான் வெஜ்) அவாயிட் பண்ணலாம்.இட்லி, தோசை மாதிரி வெறுமனே வேக வச்ச ஐட்டம் தொட்டுக்க பால்,தயிர்
5.சமையல்ல நல்லெண்ணை உபயோகிக்கலாம் ( சனிக்குரியது எள் அதுலருந்து தயாரிச்சது தான் நல்லெண்ணெய்) இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6.சஃபாரி சூட் அணியலாம். வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் தில்லு துரைகள் காக்கி, நீலம் போன்ற நிறங்களில்யூனிஃபார்ம் அணியலாம். ( எனக்கு ஜன்ம சனி இருந்த போது காக்கிச்சட்டை அணிந்தேன்)
7.தூசு படியற வேலைகள் செய்யலாம். ( ஒட்டடை அடிக்கிறது)
8.க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி வேலைகள் செய்யலாம். காலைல டீ,காஃபி போட்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தரலாம். பெண்டாட்டிக்கு சமையல் ரூம்ல எடுபிடி வேலை செய்யலாம்.( கரைச்சு குடுக்கிறது,அரைச்சி கொடுக்கிறது.
9.சனி பிடிச்சாலோ/கேது தசா புக்தி நடந்தாலோ நீங்க போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,சுடுகாடு,கோர்ட் ஆகிய பிரதேசங்களுக்கு போய் தான் ஆகனும். யாராச்சு மேற்படி ஸ்தலங்களுக்கு லிஃப்ட் கேட்டா கொடுக்கலாம். சாவு விழுந்தால் சுடுகாடு வரை போய் வரலாம். நோயாளிகளுக்கு துணையா ஆஸ்பத்திரி போகலாம்.
10. சனிக்கு கருப்பு நிற பொருட்கள் மேல கவர்ச்சி அதிகம். ஸோ டை போடற வயசாயிருந்தா டை போடாதிங்க. இளமைல தலை முடி கருப்பா இருக்கிறதால தான் முதல் சனியான மங்கு சனி போட் கழட்டுது . ரெண்டாவது சனில தலைமுடி வெளுக்க ஆரம்பிச்சிர்ரதால பொங்கு சனி பெட்டர்ங்கறாங்க. மூனாவது சனி பெரிசா எஃபெக்ட் தராதுங்கறதுக்கு காரணம் கூட இதுதான்.

டை போட்டுத்தான் ஆகனும்னா தலைக்கு நீல நிற தொப்பி அணியுங்கள் (இப்போ கோடை வேற கொளுத்துதுல்ல . மேச் ஆயிரும். தொப்பிய லைட் ப்ளூ கலர்ல செலக்ட் பண்ணுங்க ..வெயிலுக்கும் நல்லது)). ஹேண்ட் பை ஹேண்ட் கருப்பு நிற பொருட்களை அவாய்ட் பண்ணுங்க. அதுக்கு பதில் ப்ளூ கலர் திங்க்ஸ் உபயோகியுங்க.

11.சனிக்கு உரிய சுவை கசப்பு. ஸோ அகத்தி கீரை,பாகற்காய் மாதிரி கசப்பு ஐட்டங்களை சாப்பாட்ல சேர்த்துக்கங்க.

இந்தலிஸ்ட் ரொம்ப பெரிசுப்பா.. ச்சொம்மா அப்படி அப்ளை பண்ணி பாருங்க. உங்க அனுபவத்தை எழுதுங்க .இன்னொரு தாட்டி மேட்டரை அப்டேட் பண்ணி டீட்டெயில்டா மீள் பதிவு போட்ருவம்


இந்த தீர்வுகள்ளாம் எந்த புஸ்தவத்துலயும் இருக்காது. ஏன்னா இதை தந்தது என் அனுபவம். ஆகா சொந்த கதைக்கு வந்துட்டான்யானு சலிச்சுக்காதிங்க.

1987 ல சனி என் ராசியான சிம்மராசிக்கு அஞ்சாவது இடத்துக்கு வந்தாரு. அந்த ரெண்டரை வருஷதுல இமேஜுக்கு ஆன டேமேஜை இன்னி வரைக்கும் கூட கம்ப்ளீட்டா பேலன்ஸ் பண்ண முடியலை. ஆனால் இப்ப பாருங்க போன ரெண்டரை வருஷம் ஜன்ம சனி. இப்போ 2009 செப்டம்பர் 16 லருந்து வாக்குல சனி ..சிம்ம ராசியெல்லாம் நாறிக்கிடக்கு. ஆனால் நான் மட்டும் ஜாலாக்கா சைடு கொடுத்துக்கிட்டே காலத்தை கடத்தறேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னா?

1994 ல அப்பா காலி. என்னதான் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனியே அவதி பட்டாலும் ரெண்டாமறம் தெரியாம ஏறத்தள்ளிக்கிட்டிருந்த பார்ட்டி காலியானதுமே பக்கு ஆயிட்டாலும் ,சரி சொத்திருக்கில்லயா பங்கு தராத போயிருவானுகளானு தைரியமா இருந்தேன். பப்பு வேகலை.

மொதல்ல தெரிஞ்சு வச்சிருந்த ஜோதிஷம் உதவியால காலகதி தெரிஞ்சாலும், சம்பவ கண்ணிகளோட முடிவு பெரு வெற்றியில முடியறது புத்திக்கு உறைச்சாலும், என் முயற்சியே, வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டர் தனமாய் எண்ணி தவிக்கும் தன்மையே வெற்றியை எட்டிப்போக செய்வதை உண்ர முடிஞ்சாலும் ஈகோ ஒப்புத்துக்கலை. தோல்வி வெறியை கிளப்ப அதை ஒப்புத்துக்க ஈகோ முன் வராம யுத்தம், வெற்றி வேல் ,வீர வேல்னு முழங்கி ஜீரோ பேலன்ஸுக்கு வந்துட்டன்.

ஆனால் எந்த குருவும் கத்து தராத வித்தைகளை ஏழ்மை கத்து கொடுத்தது. இந்த படைப்பில் நான் தனியோ தனியானவன் என்ற நிஜம் உறைத்தது. என் சர்வைவலே கேள்வியாயிட்ட க்ஷணத்துல உயிர் வாழும் இச்சை பல ஜாலக்குகளை கற்றுத்தந்தது.

அன்றாட பிரச்சினைகள் காரணமா அசலான பிரச்சினைக்கு லீவு விட்டது, நடக்கவிருந்ததை அனுமதிச்சது 2400 சதுர அடி வீடு இருந்தும் ஓட்டை குடிசைல வாழ்ந்தது. இதெல்லாம் கிரகங்களோட பாதிப்பின் வீரியத்தை வெகுவா குறைச்சிட்டதால அம்பேல் வச்சுட்டு ஆட்டத்துல ஒதுங்கிட்டதால, வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சதால நிறைய புரிஞ்சிக்கிட்டேன்.

1997லருந்து ப்ரேக் ஃபாஸ்டை கட் பண்ணிட்டேன். காரம்,சாரம்,மணம்,குணம் நிறைஞ்ச சமையலுக்கு பேர் போன வன்னியர் குலத்து நங்கையான என் மனைவிக்கு உப்பு ,காரம்,புளிப்பு குறைவா போட்டு சமைக்க கத்துக்கொடுத்தேன். மேல் தீனி, நொறுக்கு தீனி,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இதெல்லாம் பக்கத்துல சேர்க்கவிடறதில்லை.

( அன்னைக்கு நான் ஏழை தான்.ஆனால் பத்து நாளைக்கு ஒரு தரமாச்சும் பம்பர் லாட்டரி மாதிரி காசு கொட்டும். ஏக் தின் கா சுல்தான் மாதிரி வாழ்ந்து மறு நாள்ளருந்து மறுபடி பழைய குருடிகதவை திறடிவாழ்க்கைக்கு போயிருக்கலாம். ஆனால் ஒட்டகம் கணக்கா மாறிட்டேன்)

என் ஈகோவுக்கு அடிக்கு மேல அடி. தியாகய்யர் உஞ்ச விருத்தி பண்ண மாதிரி, ஷீர்டி சாயிபாபா பிச்சை எடுத்த மாதிரி ஆயிருச்சு கதை. பசி பட்டினி,சொறி சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு. ஆனால் உடல் எவ்வளவுக்கெவ்வளவு தேஞ்சதோ அந்த அளவுக்கு மூளை தீட்டப்பட்டுருச்சு. கையில ஜோதிஷ ஞானம் இருந்தது, தர்கத்துக்கு ஒத்துவராத சம்பவங்களா சரமாரியா நடந்தது. ரெண்டையும் பொன் வறுவலா வறுத்து அரைச்சி ஓ சாரி சாரி ரெண்டையும் அப்சர்வ் பண்ணி அனலைஸ் பண்ணினதுல ஒரு சில தேவரகசியங்கள் வெளிப்பட்டுது.
தேவ ரகசியம்:

அது என்னடான்னா காலம்ங்கறது ஒரு பைப் லைன். இதுல நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)

அதே மாதிரி பைப்லைன்ல முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).

சிம்பிளா சொன்னா ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான் முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை

கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.

சொந்த வியாபாரத்துல நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வருது, தமிழ்சினிமால ஹீரோவோட அப்பாவுக்கு வர்ர மாதிரி போட் கழட்டுது. இந்த சம்பவங்கள் எந்த புள்ளிய நோக்கி அழுத்தி தள்ளுதுனு சிந்திக்க மூளை கூட தேவையில்லை. கிட்னி போதும்.

இந்த சந்தர்ப்பத்துல என்ன பண்ணனும் ? படக்குனு எல்லாத்தயும் வைண்ட் அப் பண்ணிட்டு ப்ளே கிரவுண்டை விட்டு வெளிய வந்துரனும். வேணம்னா அங்கயே பாப் கார்ன் விக்கலாம். புக்கியாகலாம். அம்பயராகலாம். அட உள்ளாற சமாளிக்க முடியாதுன்னா சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட் ராக்டரா மாறிடலாம். அதை விட்டுட்டு பேட்ஸ் மேனாதான் இருப்பேன்னா டக் அவுட் ஆக வேண்டியதுதான்.

தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும். நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.
தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?

நேத்திக்கு சனியின் லீலைகள்னு ஒரு பதிவை போட்டு அதுல சனி 3,4,5,6,7,8 ல் வந்தா எப்டியெல்லாம் வேலை குடுத்துருவாருன்னு நம்ம நண்பரோட வாழ்க்கைய படம் பிடிச்சு காட்டியிருந்தேன். ஒரு வகையில அதனோட தொடர்ச்சி தான் இந்த பதிவு. வில்லங்கமான தலைப்பு வச்சாத்தேன் ஹிட்ஸ் அள்ளுது என்ன பண்ண?

இந்த சீரிஸ்ல அஷ்டமசனியை பத்தி இன்னம் ரெண்டு வரி சொல்லோனம் அஷ்டமசனிக்கு பலன் சொல்லனும்னா ரெம்ப சிம்பிள். நம்ம சொத்தை அடுத்தவன் அனுபவிப்பான். அடுத்தவன் கடனுக்கு நாம பதில் சொல்லோனம்.

நம்ம ராசியான சிம்மத்துக்கு நடந்த அஷ்டம சனி காலத்தை நினைச்சாலே டர்ராகுது.ஏதோ அந்த காலத்துல ராமனையே நினைச்சு நினைச்சு - ஆஞ்சனேயரை கரெக்ட் பண்ணி வச்சிருந்ததால அவரு ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி கொடுத்ததால மிச்சமானோமே தவிர டிக்கெட் போட ஆயிரம் சாய்ஸ் இருந்த காலம் அது.

தெய்வாதீனமா நம்ம ப்ரமேயமே இல்லாம பல பரிகாரங்கள் நடந்து - நம்மை கரையேத்தி விட்ட கதைய சொன்னா பகுத்தறிவாளர்கள் பாய்ஞ்சுருவாய்ங்க.

ஆக்சுவலா சனி ஆயுள் காரகன் டிக்கெட்டெல்லாம் போடமாட்டாருன்னு ஒரு விதி இருக்கு. இருந்தாலும் இன்ன பிற பாபிகள்,மாரகாளோட பார்வை கிடைச்சா போட்டு தள்ளிருவாருன்னும் ஒரு உப விதி இருக்கு.

இருந்தாலும் எப்பம் ஆரு சனியை பார்க்கிறா, சனி ஆரை பார்க்கிறாருன்னு விளக்கு பிடிச்சு பார்த்துக்கிட்டிருக்க முடியுமா என்ன?

ஆக அஷ்டம சனின்னா உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்குன்னு புரிஞ்சிக்கிடுங்க.உசுருக்கு ஆபத்து இருக்கிறவுகளுக்கு ஆஞ்சனேயர் ஒருத்தருதான் அபயம். ராம நாம சங்கீர்த்தனம் நடக்குமிடத்துலதான் அவரு ஆஜர். நாம அஷ்டம சனியை ஃபேஸ் பண்ண டீட்டெய்ல்ஸை பார்க்கிறதுக்கு மிந்தி கொஞ்சமா மொக்கை.

நிறைய வேலை இருக்கு. வியாழ கிழமையே ராக்கண் விழிச்சு எதையும் கிழிக்க முடியாம மறு நாள் மதியம் வரை கண் எரிச்சலோட காலம் போச்சு. இன்னைக்கு மறுபடி அகலாமா நள்ளிரவு 1.30 க்கு முழிப்பு தட்டிருச்சு. மகளுக்குன்னு செய்த ட்ரஸ்ஸிங் டேபிள் ஃபினிஷ் ஆயிருச்சு. நமுக்குன்னு அடிச்ச கம்ப்யூட்டர் டேபிளையும் ஃபினிஷ்டுன்னு பேர் பண்ணிட்டம்.

என்னடா டேபிள் காலியா இருக்கேனு பார்த்தா ஒரு குடிகார சில்பி - நம்ம நண்பருக்காவ களிமண்ணால் செய்த லட்சுமி சிலைக்கு மராமத்து பண்ற ப்ராஜக்ட் மாட்டிக்கிச்சு. பவர் கட் சமயத்துல நமக்கு பவர் ஏத்திக்க ஒரு வேலை ரெடி.

பணம் அனுப்பி 15 நாள் தாண்டிட்ட கேஸே நாலிருக்கு. ரெண்டு பேருக்கு புஸ்தவம் கூரியர்/ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பனும்.

வினாயகர் சதுர்த்திக்கு யாவாரிங்க உபயத்துல ஊரு சனங்களுக்கு ஒரு பாக்கெட் புக் கொடுக்கிறதா கமிட் ஆயிருக்கேன். ரொட்டீனா மல்ட்டி கலர் இஷ்யூவும் போட்டாகனும். மகள் தனி டோர் நெம்பர்ல ப்யூட்டி பார்லர் திறக்கிறாள். அதுக்கு கொஞ்சம் போல சிரமதானம் செய்யனும்.

பதிவு போடற வேலையை இப்பம் முடிச்சுட்டா நாளைக்கு மேற்படி 4 ஜாதகங்களுக்கான பலன்ல இறங்கிரலாம்னு ஐடியா.

என் வேலைகளை நினைச்சுக்கிட்டே பதிவு போட்டா அது சரியா வராது. சுத்தமா குளிச்சுட்டு பூசைக்கு உட்கார்ந்த பிற்காடு அந்த பக்கம் வந்த பொஞ்சாதியோட இடுப்பை கிள்ளனும் போல இருந்தா கிள்ளிட்டு பூசைய ஒழுங்கா செய்யலாம். தப்பில்லை. இதான் நம்ம ஸ்ட்ரேட்டஜி. இப்பம் நம்ம மைண்டு க்ளியர் பதிவுக்கு போயிரலாமா?

அஷ்டம சனி ஓவர். இப்பம் மீனராசிக்கு ஓடுது. நிறைய பேரு சனி எட்டுலருந்து விலகினாலே போதும் தூள் பண்ணிரலாம்னு நினைக்கிறாய்ங்க. அது தப்பு. அஷ்டம சனிங்கறது கடல்ல அடிச்சுக்கிட்டு போற மாதிரின்னா 9ல சனிங்கறது கரை ஒதுங்கறா மாதிரி. கடல்ல அடிச்சிக்கிட்டு வந்தவுக ஒடனே எந்திரிச்சு ஓடமுடியாதில்லை.

அஷ்டம சனியில நமக்கு சேர வேண்டியதை கேட்டா இல்லை போடாம்பாய்ங்க. 9ல சனி வந்தப்ப கேட்டா வாயால வவுத்த ரொப்பி தரேன்னுட்டு ஊறப்போடுவாய்ங்க. நம்ம பணத்தை சூப்பர் சிம்மா சுவத்துக்கு அடிச்சுட்டு ப்ரின்ஸ் ப்ளேடால சுரண்டின கதை .இதான் பாக்ய சனி.

அஷ்டமசனியில கிடைச்ச லட்சத்து ரெண்டாயிரம் ரூவாயை சனங்க வாய்ல போட்டுட்டு பாக்ய சனி முடியற வரை சுரண்டிக்கிட்டே இருந்தம் அது பெரிய சோகக்கதை.

பத்துல சனி வந்தப்ப வேலைக்காரவுகளோட மாரடிக்கனும். ஏழரையில நாம பண்ண முயற்சிக்கெல்லாம் பலன் 11 ல சனி வந்தப்ப தான் கைக்கு வரும்னு ஒரு கணக்கு. இப்படி எபிசோட் எபிசோடா ஓடிக்கிட்டே இருக்கும்.

நிறைய சொல்லனும்னுதான் நினைக்கிறேன். ஒளிவு மறைவு இல்லாம எல்லாத்தையும் கொட்டனும்னு தான் நினைக்கிறேன். ஆனால் வில் உள்ள சனம் சிலர் நம்ம தளத்தை விட்டு விலகிட்டதால அப்பப்போ கார்ப்பரேட்டர் அடைச்சுக்குது.

நீங்க நினைக்கனும். முருகேசன் மாதிரி ஒரு இ.வா இனி வரப்போறதில்லை. இந்தாளு எல்லாத்தையும் கொட்டனும். அதை நாம ஃபாலோ பண்ணனும் ஏழேழு தலைமுறைக்கு நம்ம வம்சத்தார் கருமத்தை மூட்டை கட்டக்கூடாது. கருமத்தை தொலைக்கனும்னு நீங்க வலுவா நினைக்கனும்.அப்பத்தேன் ஃப்ளோ தொடரும்.

நீங்க பதிவை படிச்சுக்கிட்டே இருந்து படக்குனு ஏசியை கூட்டலாமானு நினைச்சிங்கனா இங்க ஃப்ளோ கட்டாயிரும்.

சரிங்ணா இன்னொரு சந்தர்ப்பத்துல விரிவா பார்ப்போம்.பவர் கட் நேரம் வேற நெருங்குது.ஆளை விடுங்க.





Wednesday, August 29, 2012

பிரச்சினை உங்களோடது -தீர்வு நம்மோடது: 1


அண்ணே வணக்கம்ணே !

ஜாதகமே இல்லாம பிரச்சினைக்கு தீர்வு சொல்றேன்னு அறிவிச்சதும் சூப்பர் ரெஸ்பான்ஸு. இதுல என்னடா பிரச்சினைன்னா அல்லாரும் மெயிலுக்கு வந்துட்டாய்ங்க. போனசா ஜாதகமும் அனுப்பியிருக்காய்ங்க.

இந்த பிரச்சினை தீர்வு அனவுன்ஸ்மென்டுக்கு காரணமே சேவைதான்னு பீலா விட நான் தயாராயில்லை.ஏதோ ஹிட்ஸும் தூக்குமேங்கற கெட்ட எண்ணம் தான். தீர்வை மெயில்ல அனுப்பிட்டா அவிகளே சைட்டுக்கு வராம போற ஆபத்திருக்கு.

அதுக்குன்னு மெயில் மூலமா பதிலே தரலின்னா திமிர் பிடிச்சவன்யான்னிருவாய்ங்க. இது ரெண்டுத்துக்கு மத்தியில ஒரு சொல்யூஷனை நான் கண்டுபிடிச்சேன்.

அஃதாவது கேள்விகளை தொகுத்து தீர்வுகளோட ஒரு பதிவா போட்டுர்ரது. பதிவுக்கான லிங்கை மெயில் மூலம் அனுப்பிர்ரது. இப்படிக்குங்கற இடத்துல அவிக பேருக்கு பதிலா இனிஷியலை போட்டுர்ரது. ஐடியா எப்டி?

மொத கேள்வி:
அண்ணே வணக்கம் !

நான் ஒரு Software Engineer-ஆ வேல பாக்குறேன்.
இப்போ வேல செய்யற கம்பனிக்கு சேர்ந்து நாலு வருஷம் ஆகப்போகுது.
நாலு வருஷத்துல சம்பள உயர்வு பெருசா இல்ல.(நடுவுல recession வேற).

சிம்ம லக்னம்,துலா ராசி - 7-1/2-ல ஜன்ம சனி நடக்குது.
பைரவர் காலடியே கதின்னு கெடக்குறேன். தேய்பிறை அஷ்டமி தவறாம பைரவர் காலடில surrender ஆயிடறேன்.

என்ன செய்யலாமுன்னு சொல்லுங்க. Result வந்ததும் அப்டேட் பண்ணிடறேன்.

என்னோட நண்பர் ஒருத்தருக்கு வேற பிரச்னை இருக்கு அதைப் பத்தியும் அவர் சார்பா நானே mail அனுப்பலாமா ?

நன்றியுடன்,
T.A

தீர்வு:

ஜன்ம சனிக்கு ரெம்ப ஈசியா பாய்லா காட்டலாம்.ஆனா செப்.5 வரை அவரோட இருக்கிற செவ்வாய் தான் ரெம்ப குர்ருன்னு இருக்காரு. அதனால செப்.5 க்கு மேல பரிகாரத்தை ஆரம்பிங்க.

பெரிதாக கல்வியறிவில்லாதவர்கள், காலில்/ நடையில் பிரச்சினை உள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், நீண்ட ஆயுள் படைத்தவர்கள் மேற்சொன்ன சனி தொடர்பான தொழில் செய்பவர்கள். 8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள், தங்கள் இருப்பிடத்துக்கு மேற்கு பகுதியில் வசிப்போர்.கீழ் சாதியினர் எனப்படுவோர். தொழிலாளிகள், காக்கி உடை அ யூனிஃபார்ம் அணிவோருடன் சேர்ந்து ஒன்னுக்கடிக்க கூட போகாதிங்க.

ஆனா மேற்சொன்ன கேட்டகிரியில உள்ளவுகளுக்கு செலவு பண்ணுங்க. தப்பில்லை.

சஃபாரி சூட் ( கருப்பு/ஆஷ் கலர் அ நீல நிறம் - டார்க் /லைட்/ நேவி ப்ளூ/ ஸ்கை ப்ளூ - எதுவானாலும் சரி நீலம்) , ஸ்டீல் செயின், மோதிரம் அணியவும். தையல் விட்டுட்டது, சாயம் போனதுன்னு உள்ள உடைகளை அணியவும்.
ஹேர் டை போடாதிங்க - அசிங்கமா இருந்தாலும் சரி தாடி வச்சுக்கங்க,அப்பப்போ ட்ரிம் பண்ணிக்கலாம். கேஷுவல் ட்ரஸ்ஸுக்கு காக்கி கலர் பெஸ்ட். வீட்லருந்து குளிச்சுட்டு போகாதிங்க.வீட்டுக்கு வந்த பிற்காடு குளிக்கலாம்.

பிரச்சினை: 2
அண்ணே ..வணக்கம்
with reference to the subject, i here with attached my son jadagam.
he is premature baby (7 months). his birth date is 05-03-2010, time 5.49 AM place TRIPELICAN-CHENNAI.
he underwent for eye operation (both eye) at 10 months old. actually he is having RETINA problem by birth-due to prematurity (ROP Retinapathy of prematurity) doctors told that his right eye don't have no power and his left eye having some power-he has to wear power "4" spectacle. now he is 2 1/2" we have to send him to school. but he is not yet speaking fully except amma and appa.
what we have to do for his eye growth and come to normal children life style. thanks in advance. please help us. we have only one child (this is the first baby).
-S.M

தீர்வு:
அய்யா !
லக்னம் கும்பம். வாக்கு -நேத்திர ஸ்தானத்துல சுக்கிரன் உச்சம்.ஆனால் கண்,பேச்சு ரெண்டுலயும் பிரச்சினை. ஏன் இப்படினு கேப்பிக. மேட்டர் என்னடான்னா லக்னாதிபதியே எட்டுல இருக்காரு..
இவருக்கு மரணம் சார்ந்த என்விரான்மென்டை ஏற்படுத்துங்க. ஒடனே சுடுகாட்டுல தூங்க வைக்கனுமான்னு நினைக்காதிங்க. நம்ம சிவன் கோவில் எல்லாம் ஆரோ சித்தர் சித்தியடைஞ்ச இடம் தான். அல்லது தர்காக்கள் இருக்கு. அங்கன ராத்தங்க வைங்க.சொந்தம்,பந்தம்,நட்பு வட்டத்துல மரணம் நிகழ்ந்தால் கடேசி வரைக்கும் இருந்துட்டு வாங்க.
பாவ புண்ணியம் பார்க்காம நிறைய ஸ்ட்ரெய்ன் பண்ண வைங்க. பாடி வியர்வையில நனையனும். எட்டு பேர் உடல் ஊனமுற்றவர்களுக்கு - அது கால் தொடர்பான ஊனம்னா விசேஷம் வயிறு நிறைய சாப்பாடு போட்டுட்டு உங்க கிராம தேவதைக்கு இரும்பு சம்பந்தப்பட்ட கேட்/ஜன்னல் எதாச்சும் செய்து தர்ரதா கமிட் பண்ணிக்கங்க.
நீங்க இருக்கிற இடத்துலருந்து மேற்கு திசையில கருப்பான வைத்தியர்/அ தலித்/ அ கால் ஊனமுள்ள வைத்தியர் அமைவாரு. அவரோட சிகிச்சையின் காரணமா நல்ல தீர்வு ஏற்படும்.
வெறுமனே அம்மா,அப்பான்னு மட்டும் சொல்ற பிள்ளை எதிர்காலத்துல பெரிய பாடகராவோ -பேச்சாளராவோ -வழக்கறிஞராவோ ஆவாருன்னு அடிக்க வருவிங்க.ஆனால் இது நாளைய உண்மை.
இவரோட ராசி துலாம். இப்பம் ஜன்மத்துல சனி உச்சமா வந்திருக்காரு. உங்க கேள்விக்கு முந்தின கேள்விய கேட்ட பார்ட்டிக்கு சொன்ன பரிகாரங்களை இடம் பொருள் ஏவல் வயது அறிந்து பின்பற்றவும் .
ஆல் தி பெஸ்ட்.






உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு


அண்ணே ..வணக்கம்ணே !

நானும் மாஞ்சு மாஞ்சு சோசியத்தை பத்தி எழுதிக்கிட்டே இருக்கேன். நீங்களும் படிச்சிக்கிட்டே இருக்கிங்க. இன்றைய தேதிக்கு 8 லட்சம் ஹிட்ஸை தாண்டி மீட்டர் ஓடுது.

நம்ம எழுத்துக்களால் எத்தீனி பேரு பலனடைஞ்சாய்ங்கன்னு தெரியலை. சனங்க சைக்காலஜி என்னன்னா திட்டனும்னா ஒடனே திட்டிருவாய்ங்க. ஒரு நன்றி சொல்லனும்னா கூட தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு மறந்தே உடுவாய்ங்க.

இலவச ஜோதிட ஆலோசனைன்னு ஒரு பக்கம் ஓடுது. இருந்தாலும் அது ரெம்பவே நேரத்தை தின்னுருது. ஜாதகம் போட்டு - அனலைஸ் பண்ணி பதில் எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்துருது.

ரயில் பெட்டியில ,ரேஷன் கடை க்யூவுல கேட்கிற சனத்துக்கு பதில் சொல்லவே ஒரு மெத்தடை டெவலப் பண்ணி வச்சிருக்கம்.

அதாவது கிரகத்தை வச்சு பிரச்சினைய சொல்றாப்ல பிரச்சினைய வச்சு -அந்த பிரச்சினைக்கு காரணமான கெரகத்தை ஐடென்டிஃபை பண்ணி அந்த கெரகத்துக்கு பரிகாரம் சொல்லிர்ரது. இதை முற்றிலும் இலவசமா தர முடிவு பண்ணியிருக்கேன்.

ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னுன்னு பிரச்சினைகளை அனுப்பினா ஊத்தி மூடிருவன். அதே போல ஒரே பார்ட்டி கச்சா முச்சான்னு கேட்டாலும் இந்த பகுதி அம்பேலாயிரும்.

இது எந்த அளவுக்கு ஆக்யுரேட்டா இருக்கும்னு ஒரு சந்தேகம் வரலாம்.

எங்க என்.டி.ஆர் சி.எம்மா இருக்காரு.அந்த நேரம் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்துக் கிட்டிருக்காரு. பொசிஷனுக்கு வந்து தியானத்துல உட்கார்ராப்ல ஃபோஸ் கொடுக்காரு. படக்குன்னு "கட் கட்"ங்கறாரு.ஏம்பா அங்கன ஒரு பேபி லைட் எக்ஸ்ட் ராவா இருக்கு பாரு அதை எடுத்துருங்கறாரு.
இது எப்டி சாத்தியமாகுதுன்னா எக்ஸ்பீரியன்ஸு. இந்த சம்பவத்தை ஒரு தாட்டி குமுதத்துல படிச்சதா ஞா.

நம்ம ஊருல ஒரு அய்யரு ஃபேமிலி. குழந்தைங்க இல்லின்னு ஒரு பெண் குழந்தைய தத்து எடுத்து வளர்க்கிறாய்ங்க. அது ஸ்கூலுக்கு போற வயசு. பில் குல் ஸ்கூலுக்கு போகமாட்டேங்குது. அப்பம் அய்யரம்மா இதுக்கு எதுனா பரிகாரம் சொல்லுங்கோன்னு கேட்டுது.

பாப்பாவுது மேஷ ராசி. அப்பம் மேஷத்துக்கு வாக்குல சனி. ஒரு கருப்பு கவுத்துல எட்டு ஊக்கு பின்னு கோவுத்து போட்டு விட்டுருங்க. ஸ்கூலுக்கு போகும்னேன். ப்ராப்ளம் சால்வ்ட். இது எப்டி ஒர்க் அவுட் ஆச்சுன்னு ஜூரிங்க ஆருனா சொல்லலாம்.

பிரச்சினை எம்மாம் பெருசோ சொல்யூஷன் கூட அம்மாம் பெருசா இருக்கனுங்கற அவசியமில்லை. சூட்சுமத்துல மோட்சம் இருக்குங்ணா..

உங்க பிரச்சினைய எழுதுங்க. உடனடி தீர்வை உடனடியா சொல்றேன். உடுங்க ஜூட்டு..

பின் குறிப்பு:

சென்னை பதிவர் சந்திப்புல அறிமுகத்துக்கே காலை 10 முதல் மதியம் 2 வீணாப் போயிருச்சு. இதைவிட முன் கூட்டியே பதிவர்கள் படத்தோட ஒரு புக்லெட் ஜெராக்ஸ் அடிச்சு கொடுத்திருக்கலாம்னு கடந்த பதிவுல எழுதியிருந்தன்.

இதை படிச்சு டிசைட் பண்ணாய்ங்களோ அவிகளுக்கே ஸ்ட்ரைக் ஆச்சோ தெரியலை .இப்பம் மேற்படி கன்டென்டோட ஒரு புஸ்தவமே போடப்போறாய்ங்களாம். வாழ்க..

Monday, August 27, 2012

புலிப்பாணி பாட்டு : சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பா?


சோசியருங்க பலன் சொல்லும் போது அப்பப்போ ஒன்னு ரெண்டு பாட்டு எடுத்துவிட்டாத்தான் சனங்களுக்கு திருப்தி.அப்படி சோசியருங்க விடற பாட்டுகள்ள முக்கியமான பாட்டு புலிப்பாணியோட பாட்டு. அதுலயும் அவரு குட் வில்லுக்காக போகர் அருளால் சொன்னேன்னு பாட்டுல டச் பண்ணிக்கிட்டே போவாரு. இதனால இதை கலீஞரும் ,அம்மாவும் சேர்த்து விட்ட ஸ்டேட்மென்டுன்னு நினைச்சுர்ராய்ங்க.

புலிப்பாணி சொன்னதெல்லாம் வேதமுமில்லை.சுப்ரீம் கோர்ட் தீர்ப்புமில்லை. ஆரு சொன்னாலும் ஒட்டு மொத்த சாதகத்தையும் அனலைஸ் பண்ணி சொன்னாத்தேன் ஒர்க் அவுட் ஆகும். அதுலயும் ஜாதகனோட நிறம் ,உடல் வாகு , பேச்சு, குடும்பத்தோட வாழறாரா இல்லியா, ப்ரதர்ஸ்,சிஸ்டர்ஸ், தாய்,வீடு,வாகனம் உண்டா இல்லியா, படிப்பு உண்டா இல்லையாங்கறதை பொருத்து பலன் மாறும்.

ஜாதகர் அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவரா அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவராங்கறதை பொறுத்தும் பலன் மாறும்.பிள்ளைகள் உண்டா இல்லியாங்கறதை பொருத்து பலன் மாறும். குழந்தையே இல்லின்னா ஒரு பலன்.பெண் குழந்தை மட்டும்னா ஒரு பலன்.

வாங்கின கடனை திருப்பி கொடுக்கிற பழக்கம் உள்ளவரா? டீக்கடையில அரசியல் பேசறவராங்கறதை பொருத்து பலன் மாறும்.

கண்ணாலமானவரா? பக்கத்து வீட்டுக்காரன் பெண்டாட்டிய வச்சிருக்காராங்கறதை பொருத்து பலன் மாறும்.பார்ட்டி செயிலுக்கு போயிருந்தா ஒரு பலன், ஐபி போட்டு ஓடியிருந்தா ஒரு பலன்,அங்கஹீனம் ஏற்பட்டிருந்தா ஒரு பலன், இப்படி ஒழுங்கு மரியாதையா சொல்ற பலனே சகட்டுமேனிக்கு மாறும்.


முக்கியமா அடிமை தொழிலா ,அரசு உத்யோகமா,சொந்த தொழிலாங்கறதை பொருத்து பலன் மாறும் அதிலும் முக்கியமா அவரோட ,செக்ஸ் பழக்க வழக்கம் பலனை தலைகீழா மாத்திரும். இதை எல்லாம் கண்டுக்காம விட்டுட்டு புலிப்பாணி பாட்டை அப்டியே எடுத்துக்கிட்டா நாறிரும்.

புலிப்பாணியும் ஒரு சோதிடரா குப்பை கொட்டியிருப்பாரு போல. தன் கருத்தை பாட்டா சொல்லிவச்சுட்டாரு .எதுகை மோனை உபயத்துல அவை லேசில் மறக்காம வாய் வழியா தொடர்ந்து வந்து அச்சுலயும் வந்துருச்சு.

புலிப்பாணியாரோட அனேக கருத்துக்கள் ரெம்ப ஓவரா இருக்கும். பொதுப்படையா இருக்கும்.சில நேரத்துல தலைகீழா இருக்கும்.

உதாரணத்துக்கு செவ் தசை புதபுக்தி அவரு தந்திருக்கிற பலனை பாருங்க:

வெற்றியில்லா சேய் திசை ,சனியன் புத்தி
வீறான நாளதுவும் மாதம் பதின் மூன்று
சத்தியில்லா நாளதுவும் ஒன்பதாகும்
சுகமில்லை அதன் பலனை சூட்ட கேளு
புத்தியில்லா சத்துருவும் ரோக பயமுண்டாம்
பூவையரும் புத்திரரும் புனிதமுடன் மடிவாம்
கத்தியில்லா தர்க்கங்கள் மெத்த உண்டு பாரு
கனதையுள்ள சூனியமும் கனாவுடனே காணும்

இதுக்கு அருத்தம்:

செவ் தசை சனிபுக்தி மொத்தம் 1 வ,1 மா,9 நாள் இது கெட்ட நேரம், முட்டாள்களால் பிரச்சினை வரும். நோய் வரும் . பெண்கள்,பிள்ளைகள் செய்த்துபோயிரலாம். வாதங்கள் உண்டாகும் சூனியங்களால் தொல்லையும் கனாக்களினால் பயமும் ஏற்படும்.

இந்த பலன்ல எங்கயாச்சும் சின்னதாவாச்சும் லாஜிக் இருக்கா பாருங்க. செவ் பலான இடங்கள்ள இருந்து புதன் பலான இடங்கள்ள இருந்தான்னு பாட்டு துவங்கினா ஒரு கணக்கு.

இங்கன அதெலலம் இல்லை. டைரக்ட் ஷாட் செவ் தசையில சனிபுக்தின்னதுமே கெட்ட நேரங்குது பாட்டு.முட்டாள்களால் பிரச்சினை வரும்ங்கறாரு.

செவ் 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருந்தால் செவ் எதிரிக்கு காரகன் என்பதால் எதிரிகள் உருவாவாய்ங்கன்னு சொல்லலாம்.

புதன் கல்விகாரகன். புதன் சரியான இடத்துல இருந்தா ஜாதகனே அறிவாளியாத்தான் இருப்பான். அறிவாளிக்கு முட்டாள்களால் பிரச்சினை வரும்.முட்டாள் தான் இவனுக்கு எதிரியாவான். இதுக்கும் புதன் சரியான இடத்துல இருந்து செவ் தப்பான இடத்துல இருந்தான்னு சொல்ட்டு தானே ரிசல்ட்டை கொடுக்கனும்.

ஒரு வேளை புதன் தப்பான இடங்கள்ள இருந்தா ஜாதகனே முட்டாளாத்தான் இருப்பான். ஒரு முட்டாளுக்கு இதர முட்டாள்களால் என்ன பிரச்சினை வந்துரும்?

அடுத்த பாய்ண்டு நோய்வரும். இதுக்கு அடிப்படையே இல்லை. தசா நாதனான செவ்வாயும்,புத்தி நாதனான புதனும் கெட்டிருந்தா நோய் வரும்னு சொல்லலாம் அதுவேற கதை .ஆனால் புலிப்பாணி இந்த பாய்ண்டையே டச் பண்ணல்லை.

செவ் கெட்டிருந்தா ரத்தம்,எரிச்சல், உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம்.புதன் கெட்டிருந்தால் தோல்,கீல்,அண்டம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

ஆனால் புலிப்பாணியோட பாட்டுல மேற்படி கிரகங்கள் கெட்டிருந்தாங்கற பாய்ண்டே இல்லையே..

அடுத்து ..பெண்கள்,பிள்ளைகள் செய்த்துபோயிரலாம். வாதங்கள் உண்டாகும் சூனியங்களால் தொல்லையும் கனாக்களினால் பயமும் ஏற்படும்ங்கறாரு.

வீட்டு பெண்கள்னா பொதுவா சுக்கிர காரகம், ஸ்பெசலா பார்த்தா மனைவிக்கு சுக்கிரன்.. அம்மாவுக்கு நாலாமிடத்து அதிபதி, நீங்க பகல்ல பிறந்திருந்தா சுக்கிரன்,ராத்திரியில பிறந்திருந்தா சந்திரன்.அக்கா தங்கச்சின்னா செவ்வாய்.

சகோதிரிகள் சாகலாம்னு சொன்னாலும் ஒரு லாஜிக் இருக்கும்.அது கூட செவ் கெட்டு செவ் தசை நடந்தால்னு சொல்லியிருக்கனும்.

அடுத்து பிள்ளைகள். பிள்ளைகள்னு பார்க்கும் போது புத்திர காரகன் குருவை வச்சு எஃபெக்ட் ஆகும் .அல்லது அஞ்சாமிடத்து அதிபதி.

செவ்வாய்க்கோ,புதனுக்கு அஞ்சாமிடத்து ஆதிபத்யம் கிடைச்சு அவிக கெட்டிருந்தா இந்த பாய்ண்ட் ஓகே.ஆனால் புலிப்பாணி சாரு சைக்கிள் கேப்ல போயிங் 77 ஐயே ஓட்டிர்ராரு.

வாதங்கள் உண்டாகும்.. இதுக்கும் புதன் கெட்டிருந்தால்னு சேர்ந்திருக்கனும். புதன் வித்யாகாரகன்.படிச்சவுகதானே வேலை வெட்டிய விட்டுட்டு வாதம் பண்ணிக்கிட்டிருப்பாய்ங்க.

அடுத்த பாய்ண்டு சூனியங்களால் தொல்லை.. சூனியம் நெஜமோ பொய்யோ ..கேது கெட்டிருந்தா எவனோ எனக்கு சூனியம் வச்சுட்டான்யான்னு ஃபீல் ஆகும். செவ்/புதனுக்கு சூனியத்துக்கும் என்ன லிங்க் இருக்கு? ஒன்னம் இல்லை.

எச்சரிக்கை:
நம்ம கண்ல பட்ட இந்த பாட்டும் இப்படி வெத்து வேட்டாயிருச்சு. விசயம் இருக்கிற பாட்டும் இருக்கலாம். இல்லேங்கலை.

மொத்தத்துல நான் சொல்றது என்னன்னா சொல்றது ஆண்டவனாவே இருந்தாலும் வெரிஃபை பண்ணிக்கிட்டுத்தான் ஃபாலோ பண்ணனும்.. ஓகே உடுங்க ஜூட்..

Saturday, August 18, 2012

அதிர்ஷ்ட பெயர் சூட்டுவது எப்படி?

எச்சரிக்கை:1
இந்த முறை புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே ஒர்க் அவுட் ஆகும். வளர்ந்த கிடாக்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது நல்லதல்ல. அனுபவத்தில் சொல்கிறேன்.

எச்சரிக்கை :2

நம்முது சப்ஜெக்டே வேற ஆஸ்ட்ரோ -நேமோ- நியூமராலஜி.அதாவது 3 ஐயும் போட்டு அரைச்சு என்ரிச் பண்ணியிருக்கம். அதனால ஜோதிட.பெயரியல், எண்கணித நிபுணர்கள் உ.வ படாதிருப்பராக.


பெயர் சூட்டுவது:
மொதல்ல குழந்தை பிறந்த தேதிய பாருங்க. உயிர் எண் எது? கூட்டு எண் எது? குறிச்சுக்கங்க. ( குழந்தை பிறந்த தேதியை சிங்கிள் நெம்பராக்கினா அதான் உயிர் எண் - தேதி ,மாசம்,வருசம் எல்லாத்தையும் கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா அதான் கூட்டு எண் )

அந்த ரெண்டு எண்களுக்கிடையில நட்பு இருக்கா பாருங்க. இருந்தா நெல்லது. இல்லின்னா என்ன பண்றது ஃப்ரீயா உடுங்க.

குழந்தையின் உயிர் எண்,கூட்டு எண்ணுக்குரிய கிரகங்கள்ள எதாச்சும் ஒரு கிரகம் அந்த குழந்தையோட லக்னத்துக்கு சுபனா இருந்து பலம் பெற்றிருக்கா? அல்லது பாபி/துஸ்தானாதிபதியா இருந்து முழுமையாக பலம் இழந்துருக்கா பாருங்க.

அப்படி இருந்தா அந்த கிரகத்துக்குரிய காரகத்வத்துல / அந்த கிரகத்துக்குரிய எண்ல பெயர் வர்ராப்ல செட் பண்ணுங்க.

பெயர்ல கிரக காரகம் இருக்கான்னா இருக்கு பாஸ் !

சூரிய காரக பெயர்கள்:

சூர்யா,பாஸ்கர்,ஆதித்யா, மலையரசன்,மலையரசி, கதிர், பழனியப்பன், தேனப்பன்

சந்திர காரக பெயர்:
பெண் குழந்தை என்றால் நதி தொடர்பான பெயர், ஜன்ம நட்சத்திர பெயர் வைக்காதிங்க (பெருசுக சொல்லிவச்சிருக்கு)

சமுத்ரா, முத்து லட்சுமி, சஞ்சலா, எதாச்சும் கப்பலோட பெயர் கிடைச்சா வைக்கலாம்

செவ் காரக பெயர்:
குமாரி,வள்ளி ,சின்னு, வேலாயி, சூலி

ராகு காரக பெயர்:
சர்ப்பகந்தி, நாகமணி, நாக வள்ளி, மது

குரு காரக பெயர்:
சரஸ்வதி,கலையரசி, தன லட்சுமி

சனி காரக பெயர்:
குப்பம்மாள்

கண்டங்கள்/ ஆயுள் பங்கம் இருந்தா கீழ் காணும் விதிகளை கூட சேர்த்து ஃபாலோ பண்ணி ஆஞ்சனேயர்/ராமர் பேரை வைங்க.

இப்படி முக்கி ரோசிக்கனும். ஆனால் பெயர்ல D என்ற எழுத்து வராம ப்ளான் பண்ணுங்க. பேர்ல "ம்"ங்கற சவுண்ட் எஃபெக்ட் வந்தா விசேஷம் உ.ம் ரம்பா, ஏகாம்பரம் .ஆனால் ய பக்கத்துல ம் வரக்கூடாது.
பெயர் கடைசியில தீ,ஆஷ் ,ஏஷ் போன்ற சவுண்டு வரப்படாது. அதே போல sad ,sand மாதிரி அபசகுனம் பிடிச்ச வார்த்தைங்க வரப்படாது.

முதல் எழுத்து:
ஆனால் பேரோட முதல் எழுத்தை மட்டும் நட்சத்திரப்படியே செட் பண்ணிக்கங்க. அதான் நல்லது. இதுல நிறைய சூட்சுமம்லாம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல விரிவா சொல்றேன்

Saturday, August 11, 2012

சனி செவ் சேர்க்கை : 12 ராசிகளுக்கும் திகீர் பலன்



அண்ணே வணக்கம்ணே !
2012,ஆகஸ்ட் 14 முதல் செப்.28 வரை துலா ராசியில் சனி செவ் சேர்க்கையால் 12 ராசியினருக்கு நடக்க விருக்கும் பலனை கீழ் காணும் ப்ளேயரில் ப்ளே பட்டனை அழுத்தி கேட்டு பலன் பெறுங்கள்.

சனி செவ் சேர்க்கை பற்றிய மேலதிக தகவல்களுக்கு இங்கு அழுத்துங்கள்.

Sunday, August 5, 2012

பாக் புதிய பிரதமரும் பதவி இழப்பாரா?


அண்ணே வணக்கம்ணே !

நீங்க நம்மை ஃபேஸ்புக்ல ஃபாலோ பண்ற பார்ட்டியா இருந்தா பக்கத்தை மூடிட்டு போயிருங்க. ஏன்னா இந்த மேட்டரை எல்லாம் பிட்டு பிட்டா (மலையாள பிட்டு இல்லிங்கோ) ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணியிருக்கேன்.

வலைதளம்/வலைப்பூவில் ரீடர்ஸ் -கோ ப்ளாகர்ஸ் பார்ட்டிசிப்பேஷன் குறைஞ்சுக்கிட்டே போறதால ஒரு சேஞ்சுக்கு 15 நாள் ஃபேஸ் புக்ல கேம்ப் அடிக்கலாம்னு சின்னதா ஐடியா.

ஃபேஸ்புக்ல சோசிய மேட்டரு வேணம்னா இங்கே அழுத்தி ஃபாலோ பண்ணுங்க. நாட்டு நடப்பை ஃபாலோ பண்ண இங்கே அழுத்துங்க.

இந்த பதிவுக்கு ஆக்சுவலா தலைப்பு செய்திகள்னு தலைப்பை கொடுத்திருக்கனும். என்னா பண்றது பதிவு போடறதுல நம்ம தெறம எப்டியோ தலைப்பு வைக்கிறதுல மட்டும் ஜூரியாச்சே.பழக்க தோசம்.

வைக்க வேண்டிய தலைப்புக்கு ஏற்பவே நீங்க மிஸ்பண்ணி இருக்கக்கூடிய செய்திகளை -முக்கியமான செய்திகளையும் இந்த பதிவுல தந்திருக்கேன்.


பாக் புதிய பிரதமரும் பதவி இழப்பாரா?
அரசு - நீதித்துறை மீண்டும் மோதல்

ஆமாம்ணே .. முன்னாள் பிரதமரோட ஊழல் தொடர்பா கோர்ட்டு ஸ்விஸ் வங்கிக்கு லெட்டர் போட சொல்லிச்சாம்.

நம்மாளு போடலை. ஊட்டுக்கு அனுப்பிட்டாய்ங்க.

இப்பம் புதிய பிரதமர் "அதிபர் -பிரதமர் மற்றும் சிலருக்கு " நீதிமன்ற அவமதிப்பு வழக்குலருந்து விலக்கு கொடுத்து சட்டம் கொண்டுவந்துட்டாராம்.

இதை எதிர்த்து பொது நல மனுக்கள் தாக்கலாகியிருக்காம். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடக்கப்போகுது.

தலைப்புல சொன்ன மேட்டர் நடந்தாலும் நடந்துரும்.


ஆந்திரத்திலும் அணு மின் நிலையம் - ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவ்வாடாவில் ஒன்னரை லட்சம் கோடி செலவுல - ரெண்டாயிரத்து 438 ஏக்கர் பரப்பளவுல - அமெரிக்க கூட்டு முயற்சியில (கிளிஞ்சுது) - 9000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க போறாய்ங்களாம்.

3 பக்கம் மலை - ஒரு பக்கம் வங்காள விரிகுடா. இதுல ஒரு மலைய ராணுவ பாதுகாப்பு அரணாவும் உபயோகிக்க போறாய்ங்களாம்.

ஜப்பான் பூகம்பம் -சுனாமி -கதிர் வீச்சுக்கப்புறம் எதிர்ப்பு தீவிரமாக அடக்கி வாசிச்சவுக - இந்த மாத இறுதியில் சுற்றுசூழல் க்ளியரன்ஸுக்காக மத்திய சு.சூ துறைக்கு அறிக்கை அனுப்பப்போறாய்ங்களாம்..

கொய்யால ஒளுங்கு மரியாதையா பயோ கேஸ், எரிவாயு, சோலார் பவர் மூலமா பவர் தாங்க. முடியலியா ..சாயந்திரம் 6 லருந்து மறு நாள் காலை ஆறுவரை ப்ளாக் அவுட் அனவுன்ஸ் பண்ணிருங்க. இந்த விசப்பரீட்சையெல்லாம் வேணாம்டா ..

நீங்க கொள்ளையடிக்கவே ஆளவாச்சும் சனம் வேணம்லியா?

_________

நெம்பர் 1 குமுதமா? குங்குமமா? இதுல பவர் ஸ்டார் ஆரு?

__________


30% சதவீதம் இந்தியர்கள் சொந்த நாடு திரும்புகிறார்கள். இதனால் சுதேசி செயல் திறன் பெருகும்

- இன்டர் நேஷ்னம் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட் ப்ரொஃபசர் சதீஷ்.கே.கல்ரா

_____________

பொருளாதார மோசடி - குற்றங்களை பற்றிய விழிப்புணர்ச்சிக்கு www.flame.org.in

_____________

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலத்துக்கு கோர்ட்டு கொடுத்த டெட் லைன் ஆகஸ்ட் 31 . புருசனை பார்த்து தாலி தொட்டு பார்த்துக்கற மாரி மந்திரிங்க குயு கூடுதாம் இன்னைக்கு.

மறுபடி வாய்தா கேட்காதிங்க ராசா.. பாக் மாதிரி இங்கயும் வாய்தா பூடபோகுது.


__________________

போலி எஸ்.ஐக்கு ஒரிஜினல் எஸ்.ஐ கள் ஒத்துழைப்பு

ஆந்திர மானிலம், நல்கொன்டா மாவட்டம் , ஹுஜூர் நகரை சேர்ந்தவரு ஸ்ரீனிவாசராவ். இவர் ஏற்கெனவே தலைப்புல சொன்ன "வித்தைய" காட்டி போலீஸ்ல மாட்னவருதான்.

ஆனால் பழைய எஸ்.ஐ போயி புது எஸ்.ஐங்க வந்த பிற்காடு அவிகளோட நெருங்கி பழகி -கார் எல்லாம் ஓசி கொடுத்து நைஸ் பண்ணிக்கினாராம்.

ஸ்டேஷன்ல ஒக்கார்ந்தே நெறய பஞ்சாயத்தெல்லாம் பண்ணியிருக்காரு. ஒரிஜினல் எஸ்.ஐகளோட சர்வீஸ் ரிவால்வரை கூட யூஸ் பண்ணி செட்டில்மென்ட் பண்ணியிருக்காராம்.

இப்பம் ஒரிஜினல் எஸ்.ஐகளும் சஸ்பெண்ட்.. இப்டியே டெவலப் பண்ணுங்கடா.. நாடு உருப்பட்டுரும்

_________

உயிரை பறித்த பள்ளி பஸ்

அனந்தபுரம் மாவட்டம் ,பத்தில பல்லி மண்டலம், செர்லோ பல்லியை சேர்ந்த சிறுமி சிவலட்சுமி(5) .வழக்கம் போல பள்ளி பேருந்தில் ஏறி ஸ்கூலண்டை இறங்கியிருக்கு. வீட்ல கொடுத்து ஒரு ரூவா பஸ்ஸு கீழே போயிருச்சு. அதை எடுக்கறதுக்குள்ள ட்ரைவர் பஸ்ஸை எடுத்துட்டாரு.

சிவலட்சுமி கைலாசம் -வைகுண்டம் போச்சோ. அந்த ட்ரைவர் -அவனை வேலைக்கு வச்ச கரெஸ்பாண்டெட் மட்டும் ஜெயிலுக்கு போயிருவாய்ங்க.

Saturday, August 4, 2012

நோ கமெண்ட்ஸ் !


அண்ணே வணக்கம்ணே !

ப்ரஸ் மீட்ல ஆருனா ரிப்பபோர்ட்டரு வில்லங்கமான கேள்வி கேட்டு தொலைச்சுட்டா அரசியல் வாதிகளை காப்பாத்தற வார்த்தை நோ கமெண்ட்ஸ்.

ஆனால் நம்ம சைட்டை பொருத்தவரைக்கும் நெஜமாலுமே நோ கமெண்ட்ஸ். ஒன்னு ரெண்டு புண்ணியாத்மாக்களை தவிர ஆருமே கமெண்ட் போடறதில்லை.

ஒரு பதிவை அடிச்சு சைட்ல போட்டு , இன்ட்லி,தமிழ்10,உடான்ஸ்,ஃபேஸ்புக்ல் ஷேர் பண்ணனும்னா குறைஞ்ச பட்சம் 1 மணி நேரம் பிடிக்குது. இந்த ஒரு மணி நேரத்தை செலவழிச்சு 60 விஷயங்களை சொல்ல எதுனா வழி இருக்கான்னு ரோசிச்சேன். ஒரு ஐடியா வந்தது. அதை கடேசியில சொல்றேன்.

மேலும் பதிவுன்னா ஒரே மேட்டரை நை நைன்னு அடிச்சாகனும். அதுலயும் நாம தொடர்பதிவு போடறதால படிக்கிற உங்களுக்கு போரடிக்குதோ இல்லியோ அடிக்கிற எனக்கு போர் அடிக்குது.

இப்படில்லாம் அடிச்சு பிடிச்சு போட்ட பதிவை எத்தீனி பேரு படிக்கிறாய்ங்கன்னு பார்த்தா வெறுத்துபோகுது. லேட்டஸ்ட் பதிவை 200 பேரு படிச்சா பழைய பதிவுகளை படிக்கிறவுக 800 பேரு.

இத்தோட இன்னொரு மனக்குறை என்னடான்னா சனங்களோட வில் பவர் குறைஞ்சு போச்சா அ நம்ம வில் பவர் குறைஞ்சு போச்சா தெரீல.இதுக்கு மிந்தில்லாம் ஒரு பதிவு போட்டா "பாஸ்.. இதை பத்தி நீங்க எழுதினா நல்லாருக்கும்னு நினைச்சேன் ..ஒடனே எழுதிட்டிங்க"ன்னு கமெண்ட்/மெயில்/ஃபோன் இப்படி எதோ ஒன்னு வரும்.சமீபகாலமா இதுவும் இல்லை. ரீடர்ஸ்/ கோ ப்ளாகர்ஸ் பார்ட்டிசிப்பேஷன் ரெம்ப புவர் ஆயிருச்சு..

எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு பார்த்து ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கன். அது என்னடானா இனி ஃபேஸ்புக்ல இருக்கிற அனுபவஜோதிடம் பக்கத்து மேல கான்சன்ட்ரேட் பண்றது. கு.பட்சம் 15 நாளைக்காச்சும் பதிவுகள் போடறதை நிப்பாட்டிட்டு.. ஸ்பான்டேனியஸா சனங்க கேட்கிறதை ஃபாஸ்ட் புட் கணக்கா ஒடனே கொடுத்துர்ரது, மனசுல தோனினதை உடனே போஸ்ட் பண்ணிர்ரது. உடனடி லாட்டரி மாதிரி மேட்டர் ஓவர் ஆயிரும்.

தனிப்பட்ட ஜோதிட கேள்விகளை அவாய்ட் பண்றது பெஸ்ட். அதே சமயம் எதுனா ட்விஸ்ட் இருந்தா கேளுங்க.

அனுபவ ஜோதிடம் முக நூல் பக்கத்துக்கு வர இங்கே க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ் .. கையோட கையா ஒரு லைக்கும் போட்டுருங்கப்பு..