எச்சரிக்கை:1
இந்த முறை புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே ஒர்க் அவுட் ஆகும். வளர்ந்த கிடாக்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது நல்லதல்ல. அனுபவத்தில் சொல்கிறேன்.
எச்சரிக்கை :2
நம்முது சப்ஜெக்டே வேற ஆஸ்ட்ரோ -நேமோ- நியூமராலஜி.அதாவது 3 ஐயும் போட்டு அரைச்சு என்ரிச் பண்ணியிருக்கம். அதனால ஜோதிட.பெயரியல், எண்கணித நிபுணர்கள் உ.வ படாதிருப்பராக.
பெயர் சூட்டுவது:
மொதல்ல குழந்தை பிறந்த தேதிய பாருங்க. உயிர் எண் எது? கூட்டு எண் எது? குறிச்சுக்கங்க. ( குழந்தை பிறந்த தேதியை சிங்கிள் நெம்பராக்கினா அதான் உயிர் எண் - தேதி ,மாசம்,வருசம் எல்லாத்தையும் கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா அதான் கூட்டு எண் )
அந்த ரெண்டு எண்களுக்கிடையில நட்பு இருக்கா பாருங்க. இருந்தா நெல்லது. இல்லின்னா என்ன பண்றது ஃப்ரீயா உடுங்க.
குழந்தையின் உயிர் எண்,கூட்டு எண்ணுக்குரிய கிரகங்கள்ள எதாச்சும் ஒரு கிரகம் அந்த குழந்தையோட லக்னத்துக்கு சுபனா இருந்து பலம் பெற்றிருக்கா? அல்லது பாபி/துஸ்தானாதிபதியா இருந்து முழுமையாக பலம் இழந்துருக்கா பாருங்க.
அப்படி இருந்தா அந்த கிரகத்துக்குரிய காரகத்வத்துல / அந்த கிரகத்துக்குரிய எண்ல பெயர் வர்ராப்ல செட் பண்ணுங்க.
பெயர்ல கிரக காரகம் இருக்கான்னா இருக்கு பாஸ் !
சூரிய காரக பெயர்கள்:
சூர்யா,பாஸ்கர்,ஆதித்யா, மலையரசன்,மலையரசி, கதிர், பழனியப்பன், தேனப்பன்
சந்திர காரக பெயர்:
பெண் குழந்தை என்றால் நதி தொடர்பான பெயர், ஜன்ம நட்சத்திர பெயர் வைக்காதிங்க (பெருசுக சொல்லிவச்சிருக்கு)
சமுத்ரா, முத்து லட்சுமி, சஞ்சலா, எதாச்சும் கப்பலோட பெயர் கிடைச்சா வைக்கலாம்
செவ் காரக பெயர்:
குமாரி,வள்ளி ,சின்னு, வேலாயி, சூலி
ராகு காரக பெயர்:
சர்ப்பகந்தி, நாகமணி, நாக வள்ளி, மது
குரு காரக பெயர்:
சரஸ்வதி,கலையரசி, தன லட்சுமி
சனி காரக பெயர்:
குப்பம்மாள்
கண்டங்கள்/ ஆயுள் பங்கம் இருந்தா கீழ் காணும் விதிகளை கூட சேர்த்து ஃபாலோ பண்ணி ஆஞ்சனேயர்/ராமர் பேரை வைங்க.
இப்படி முக்கி ரோசிக்கனும். ஆனால் பெயர்ல D என்ற எழுத்து வராம ப்ளான் பண்ணுங்க. பேர்ல "ம்"ங்கற சவுண்ட் எஃபெக்ட் வந்தா விசேஷம் உ.ம் ரம்பா, ஏகாம்பரம் .ஆனால் ய பக்கத்துல ம் வரக்கூடாது.
பெயர் கடைசியில தீ,ஆஷ் ,ஏஷ் போன்ற சவுண்டு வரப்படாது. அதே போல sad ,sand மாதிரி அபசகுனம் பிடிச்ச வார்த்தைங்க வரப்படாது.
முதல் எழுத்து:
ஆனால் பேரோட முதல் எழுத்தை மட்டும் நட்சத்திரப்படியே செட் பண்ணிக்கங்க. அதான் நல்லது. இதுல நிறைய சூட்சுமம்லாம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல விரிவா சொல்றேன்