Monday, March 26, 2012

மாறன் சகோதரர்கள் அதிமுகவில் சேர்க்கை?

தமிழக பட்ஜெட்டை பற்றிய தலைவர்கள் கருத்தையெல்லாம் கேட்டிருப்பிங்க. எதிர்கால இந்திய ஜனாதிபதியா நம் கருத்தை சொல்லலின்னா எப்பூடி? ( ஜனாதிபதின்னா தாளி ரப்பர்ஸ்டாம்ப் ஜனாதிபதி இல்லிங்னா டைரக்ட் எலிக்சன்ல வர்ர பவர் ஃபுல் ஜனாதிபதி)

* ஒன்றாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இந்த ஆண்டில் இருந்து விலையில்லா காலணிகள் வழங்கப்படும். இந்த திட்டத்தால் 81 லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள்.

இதைவிட ஆரோட குழந்தைங்கல்லாம் 1-10 ஆம் வகுப்பு படிக்கிறாய்ங்களோ அவிகளுக்கு வேலை வெட்டிய கொடுத்திருக்கலாம். ( மேற்படி குழந்தைகளோட அப்பாமாரு ஆல்க்கஹாலிக்ஸா இருந்தா அவிகளுக்கு இலவச டி அடிக்சன் ட்ரீட்மென்ட் )

* ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தக பைகளும், ஆறாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜியாமெட்ரி பெட்டிகள் மற்றும் உலக வரைபட புத்தகமும், ஒன்றாம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வண்ண பென்சில்களும் வழங்கப்படும்.

அடங்கொய்யால.. இன்டர்வெல்ல திங்கறதுக்கு கம்மர் கட்டும் , மாங்கா பத்தையும் தான் தரமாட்டாய்ங்க போல..

குழந்தைங்க படிக்கனுங்கற எண்ணம் அரசாங்கத்தை விட அப்பா அம்மாவுக்கு அதிகம்யா. அவிகளுக்கு வேலை வெட்டிய கொடுத்து - அவிக சம்பாதனையை டாஸ்மாக்கோ , இன்னபிற ப்ளாக் ஹோல்ஸோ முழுங்கிராம பார்த்துக்கிட்டா போதும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களும் வழங்கப்படும்.

பரீட்சை அட்டை, க்ளிப்,ரப்பரு தரமாட்டிங்களா ?

* அரசு ஊழியர்களுக்கான அதிகபட்ச வீட்டு வசதிக்கடன் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அதிகரிப்பு.

இதெல்லாம் சிமெண்ட் கம்பெனி, ஸ்டீல் கம்பெனி செழிக்க மறைமுகமா தர்ரதுங்கோ.. இதை விட இந்த பணத்தையும் காட்ல மேட்ல கொஞ்சம் நிலத்தையும் யூனியன் காரவுக கையில கொடுத்து ஊடு கட்டிக்க சொல்லலாம். ஒரு க்ரூப்பா போயி சீப் அண்ட் பெஸ்டா கட்டிக்குவாய்ங்க.

மேலும், ரூ.4 லட்சம் வரை காப்பீடு கொண்ட திருத்தப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

அது சரி .. கார்ப்போரேட் ஆஸ்பத்திரி காரவுக பிளைக்க வேணாமா? இதெல்லாம் குடிகளுக்கு மருத்துவ வசதி தர்ரதுலருந்து அரசாங்கம் கழண்டுக்க ஒரு வளி. அவ்ளதேன்.

* ஓய்வூதியதாரரின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக அதிகரிப்பு.

* முறைகேட்டை தடுப்பதற்காக, முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு `பயோமெட்ரிக் ஸ்மார்ட் கார்டு' மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

தெரியாமத்தான் கேட்கிறேன். சனத்தொகையில அரசு ஊழியர், ஓய்வு பெற்ற ஊழியர் எத்தனை சதவீதம் இருக்காய்ங்க? அது ஏன் எந்த அரசாங்கம் வந்தாலும் இவிகளுக்கு மட்டும் ஊட்டு ஊட்டுனு ஊட்டிவிடறாய்ங்க.


* மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் பயன்பெறும் நோக்கில், இனிமேல் 45 சதவீத மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

குடிமக்கள் கவலையின்றி வாழ்க்கை நடத்த போதுமான வருவாயுடன் கூடிய - சரியான வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்தா அந்த சமுதாயம் மாற்றுத்திறனாளிகளை கை விட்டுருமா? இதை கூட ஒரு அரசாங்கம் செய்யனுமா?

மக்களுக்கு கொட்டையடிச்சு - சமுதாயத்தை -சமூக உணர்வை சமாதியாக்கிட்டு ஆயிரம் ரூபா உதவிதொகை கொடுத்துட்டா அந்த மாற்றுத்திறனாளியை இன்றைய சமுதாயம் வாழ விட்டுருமா?

* வீட்டு வசதி கடன் பெற்றுள்ள குறைந்த வருவாய் பிரிவினருக்கு 75 சதவீதமும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு 50 சதவீதமும், உயர் வருவாய் பிரிவினருக்கு 25 சதவீதமும் வட்டி தள்ளுபடி அளிக்கும் வகையில் புதிய வட்டி தள்ளுபடி திட்டம் அறிமுகம்.

இந்த வீடு கட்டற பிசினசே சமுதாயத்தின் மீது நம்பிக்கையில்லாதவன் செய்ற வேலை . வீடுங்கறதே டெட் கேப்பிட்டல். சிமெண்ட் கம்பெனி ,ஸ்டீல் கம்பெனி செழிக்கும். கட்டினவன் சாகிறவரை கடன்ல சாவான். இந்த சைக்காலஜியே புரியலைங்ணா..


* குறைந்த நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்டுவதற்காக தளபரப்பளவு (எப்.எஸ்.ஐ) குறியீடு அதிகரிக்கப்படும்.

அரசாங்கம் என்ன சொல்லுதுன்னா வாடகை வீட்ல நீ வசிக்க முடியாது. ரென்ட் கண்ட் ரோல் ஆக்ட் எல்லாம் எங்களால அமல் படுத்த முடியாது . ஹவுஸ் ஓனர் ஹெராஸ்மென்ட்ல இருந்து உன்னை காப்பாத்த மாட்டோம். முடிஞ்சா நீயே ஊடு கட்டிக்கோ.இன்னம் முடிஞ்சா ரெண்டு போர்ஷனா கட்டி நீயும் ஓனராகி வாடகைதாரனை டார்ச்சர் பண்ணு..

* நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.
பத்தாயிரம் கொடுத்தா நான் ஒரு காதை அறுத்துக்கறேன். இதைவிட எங்க ஸ்டேட் போல அடுக்கு மாடிக்கட்டிடம் கட்டி கொடுக்கலாம். ( ராஜீவ் க்ருஹகல்ப்பா)

* அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்படுகிறது.

அது சரி .. விவசாயி தற்கொலை ஆச்சு, நெசவாளி தற்கொலை ஆச்சு . இனி ரியல் எஸ்டேட் காரனும் தற்கொலை பண்ண போறான்.

இதையெல்லாம் ஆந்திராவுல பார்த்துட்டோம்ணே. விக்கிறவன் சாஸ்தியாவான்.வாங்குறவன் குறைஞ்சுருவான். மனைய வாங்க வந்தவன் ஏறின மதிப்பை அசல் மதிப்புல குறைச்சு கேட்பான். விக்கிறவனுக்கு வவுத்து வலின்னா வவுறெரிஞ்சுக்கிட்டே பதிவு பண்ணித்தருவான்.

* 10 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு.
எங்க பக்கம் காப்பீடு செய்தவுகளுக்கு நஷ்ட ஈடு கொடுத்தாய்ங்களே ஏக்கராவுக்கு 23 ரூ 12 பைசா .போங்கடா நீங்களும் உங்க காப்பீடும் .நஷ்ட ஈடும்.

* விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரம் கிடைப்பதற்காக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு வழங்கப்படும் வட்டி இல்லா கடன் ரூ.150 கோடியாக உயர்வு.

ஆமாங்ணா இயற்கை உரம், செலவில்லா விவசாயம்னு நம்மாழ்வார் மாதிரி பார்ட்டிங்க தொண்டை வறள கத்தி -கை வலிக்க எழுதிக்கிட்டிருந்தாய்ங்களே.. அந்த ரூட்ல எதுவும் அறிவிப்பு வரலியா?

* விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

கடேசில தள்ளுபடி பண்ணிருவிங்களா?

* கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும்.

விவசாயம் இருக்கிற இருப்புல எவனும் செலுத்த முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டு என்னா வில்லத்தனம்?

முறையா செலுத்தனும்னா உங்க அட்டூழியத்தையெல்லாம் மீறி விவசாயம் லாபம் தரனுமே. இல்லின்னா மூணு வட்டிக்கு வாங்கித்தான் செலுத்தனும்..

* 12 ஆயிரம் பயனாளிகளுக்கு கறவை பசுக்களும், 11/2 லட்சம் ஏழை பெண்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.

சந்தையிலருந்து வீடு வரைக்குமாவது வந்து சேருமா? வழியலயே புட்டுக்குமா?

* மின்சக்தியில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், மின்சாரத்தை சேமிக்கும் சி.எப்.எல். பல்புகள், தீப்பெட்டி தொழிற்சாலையில் பயன்படுத்தும் மரக்குச்சிகள், மரப்பட்டைகள், சானிடரி நேப்கின் ஆகியவற்றின் மீதான மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.

இது ஒன்னுதான் ஏதோ உருப்படியான அம்சமா தெரியுது.ஆமாம் சைக்கிளை என்ன பண்ணினாய்ங்க?

* தமிழகம் அடிக்கடி இயற்கை இடர்பாடுகளை சந்தித்து வருவதால் அவற்றை திறமையாக சமாளிக்க `மாநில பேரிடர் மீட்பு படை' ஏற்படுத்தப்படும்.

இந்த படை மணல் கொள்ளைய தடுத்து நிறுத்துமா? மரம் வெட்டறதை தடுக்குமா? ஏரி ,குளம்,கம்மாயை ஆக்கிரமிக்கிறதை தடுக்குமா? கக்கா வருமுன் செல்க கழிவறைக்கே செல்லாக்கால் காலோடு போகும் கக்காவே..

* நகர்ப்புறங்களில் வறுமையைப் போக்க `தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம்'. ரூ.200 கோடியில் இந்த திட்டம் தொடங்கப்படும்.

டாஸ்மாக் கடையில சுண்டல் கடை போட்டுக்க தலா 2000 தருவாய்ங்களோ?

* தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான உதவி மையங்கள் ஒரு கோடியே 93 லட்சத்தில் அமைக்கப்படும்.

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையேன்னானாம். தனியார்ல வேலை வாங்கி தர நீங்க என்ன இடையில நாட்டாமை.அதுக்கு அரசுப்பணம் சவரம்..

* மின்சாரத்தை சேமிக்கும் வகையில் 14 லட்சத்து 62 ஆயிரம் குடிசை வீடுகளுக்கு இலவச சி.எப்.எல். பல்புகள் வழங்கப்படும்.

ஹ்ம்.. பரவால்லை

* 60 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.180 கோடி செலவில் சூரிய மின்விளக்குகள். அதுபோல ரூ.50 கோடி செலவில் சூரிய ஒளி மின்வசதியுடன் 20 ஆயிரம் தெரு விளக்குகள்.

ஃப்யூஸ் போனதும் குண்டு பல்பு போட்டுட்டா வேட்டியை உருவிரனும்.

* தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
அதுசரி டென்டர் -கான்ட் ராக்ட் எல்லாம் உண்டுதானே .. வெளங்கிரும்..

* சென்னையில் ரூ.100 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள்.
திறந்து வைக்க கலாமை கூப்டுங்க.. தலைய கலைச்சு விட்டுக்கிட்டு உடனே வந்துருவாரு.

* சென்னையில் விரைவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அரசு கேபிள் டி.வி. தொடங்கப்படும்.
மாறன் ப்ரதர்ஸ் அதிமுகவுல சேர்ந்துட்டா இதுக்கும் மங்களம்தான்

* ரூ.548 கோடி செலவில் புதிதாக 3 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்.
அடடே இதுக்குத்தான் பஸ் கட்டணத்தை ரெட்டிப்பா உசத்தினிங்களா? கமிசன் பணம்லாம் கறாரா வாங்கிருங்க. பய புள்ளைக ஏமாத்திரப்போறானுவ.

* குழந்தைகளுக்கு பண்டை இலக்கியங்களில் உள்ள நற்பண்பு, நீதிநெறிக் கருத்துகளை கதைகள் மூலமாக சொல்லித் தர முக்கிய கோவில்களில் சனிக்கிழமைதோறும் ஆன்மீக, நீதிநெறி வகுப்புகள், சிற்றுண்டியுடன் கற்றுத் தரப்படும்.

கதை கருத்தெல்லாம் சரி ..வென்யூதான் கோயிலுன்னா ஒரு மாதிரியா டர்ராகுது. "அவாள்" என்டர் ஆனா குடுமியறுப்பு அது இதுன்னு அக்கப்போராயிருமே.

* இலங்கை அகதிகள் முகாம்களில் ரூ.25 கோடி செலவில் 2,500 வீடுகள் கட்டித் தரப்படும்.
அது ஏன் முகாம்லயே கட்டனும்?

தகவல் உபயம்: தமிழ் குறிஞ்சி




Sunday, March 25, 2012

உதயகுமார் மீது கஞ்சா வழக்கு

அண்ணே.. வணக்கம்ணே !

சமீபத்துல நாம ஏற்படுத்திக்கிட்ட விதிப்படி வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பை பத்தியும் ,அடுத்த 3 நாள் சோசியத்தை பத்தியும் பதிவெழுதனும். ஆனால் சனம் மட்டும் மறுமொழி எழுத மாட்டாய்ங்க. ஜா.ரா உட்பட. யாவும் நன்மைக்கே. இதுவும் ஒரு சீசன் போல. நடக்கட்டும்.

நாட்டு நடப்புன்னா எழுத எத்தனையோ இருக்கு. ரயில்வே பட்ஜெட்ல டிக்கெட் விலையை ஏத்தினதுக்கு பேயாட்டம் போட்ட மம்தா அக்கா மந்திரியை மாத்தி அதை இறக்கினாய்ங்க. ஆனால் லோக்கலா
எதையெல்லாம் ஏத்தனுமோ ஏத்திட்டதா கேள்வி.அரசியல்னாலே இந்த ரெட்டை வேடம்தான் போல.

முலாயமோட ரெட்டை வேடம் மட்டும் யுபிஏவுக்கு அஜீரணத்தை உண்டாக்கியிருக்கும். ஒரு பக்கம் ஆதரவு கேட்டு வர்ரவுகளை வரவேற்கிறாரு. இன்னொரு பக்கம் இடைத்தேர்தல் வருங்கறாரு. சரத் பவாரு காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை காப்பாத்தலைங்கறாரு..

ஆந்திராவுல இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ்ல குடுமிப்பிடி சாஸ்தியாயிருச்சு.பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு அல்லா தலீவர்களும் தில்லிக்கு காவடி தூக்குவாய்ங்க போல." டீச்சர் டீச்சர் ..இவன் என்னை கிள்ளிக்கிட்டே இருக்கான் டீச்சர்"

கூடங்குளம் விவகாரத்துல நாம ஆரம்பத்துலருந்தே விலகியிருக்க காரணம் அதை தடுத்து நிறுத்தும் சக்தி போராட்டக்காரர்களுக்கோ நமக்கோ இல்லைங்கறதுதேன்.

இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். ரஷ்யா காரவுக வாழ்ந்து கெட்ட பணக்காரன் மாதிரி. அவிக ஏதோ அவிக "பொளைப்பை"ஓட்ட எதையோ ஒன்னை ஒப்பேத்தி வித்து காலத்தை ஓட்டறாய்ங்க.

ரன்னிங்ல உள்ள கம்பெனி ப்ராடக்டை வாங்கினாலே சர்வீஸுன்னு போனா அவன் மூஞ்சி அஞ்சு நயா பைசா மாதிரி ஆயிரும்.

இதுல க்ளோஸ் ஆன கம்பெனி ப்ராடக்டை வாங்கினா நான் சன்னி பைக்கை வாங்கிட்டு அவதி படறாப்ல படவேண்டியதுதான்.

அப்படியா கொத்தது உசுருக்கும், சனம் பிளைப்புக்கும் உலை வைக்கக்கூடிய ஒரு உலையை நம்ம நாடு வாங்குதுன்னா அதுல ஆள்றவுகளுக்கு என்னமோ ஆதாயம் இருந்திருக்குன்னு அருத்தம்.

அமெரிக்காவோட நிலைமை எப்டின்னா எங்க சத்யம் ராமலிங்கராஜு மாதிரி பொய்க்கணக்கு காட்டி கெத்தா காட்டிக்கிட்டு கிடக்கிற நாடு. அவிக காசு பணம் செலவழிச்சு உலைய மூடவைக்கப்பார்க்கிறாய்ங்கன்னா நம்பறது கஷ்டம் ரெம்ப கஷ்டம்.

கேண்டோம் - டு டே காப்ஸ்யூல் - அபார்ஷன் ஸ்டேஜ்ல எல்லாம் தூங்கி வழிஞ்சுட்டு லேபர் வார்ட்ல வந்து அலப்பறை பண்ற அளவுக்கு அமெரிக்கா காரவுக கூமுட்டைன்னா நான் நம்பமாட்டேன்.

மொரார்ஜி தேசாயையே சி.ஐ.ஏ ஏஜெண்டுன்னு சொன்ன காவாலிங்கள கண்ட நாடு இது. உதயகுமாரை ஏன் இன்னும் டிக்ளேர் பண்ணலைன்னு புரியலை.

இப்பத்தேன் தீவிரவாதிங்க ஊடுருவி இருக்காய்ங்கனு ஆரம்பிச்சிருக்காய்ங்க.போனியாகாத பெருமாள் கோவில்ல பூஜை பண்ணிட்டு . உடுப்பி ஓட்டல்ல ஆமை வடை சாப்டுட்டு வெளியவர்ர குடுமி ஐயரை என்கவுண்டர் பண்ணிட்டு செட் ப்ராப்பர்ட்டீஸை அரேஞ்ச் பண்ணி "சீன்" கிரியேட் பண்ண நம்ம போலீஸால முடியும். கஞ்சா கேஸை ஆருமேலல்லாம் போட்டாய்ங்க ஞா இருக்குல்ல.இதெல்லாம் சகஜமப்பா.. உதயகுமார் மேல கஞ்சா கேஸு போடுவாய்ங்கன்னு எதிர்பார்த்தேன். ஏமாத்திட்டாய்ங்க.

எது எப்படியோ இத்தீனி மேட்டர் தெரிஞ்சிருந்தாலும் தடுக்க முடியாத ஒன்னை தடுக்க ட்ரை பண்ணி எதுக்கு சக்தி விரயம்னுதேன் இந்த உலை மேட்டர்ல இருந்து விலகியிருந்தோம். வை.கோவை வருசக்கணக்கா உள்ளாற வச்சாலே நாட்ல நாதியில்லை.

இதுல நாம வாக்கு ஸ்தானத்துல வக்ர சனியை வச்சுக்கிட்டு உளறிக்கொட்டு நம்மை தூக்கி உள்ளாற போட்டா நாறிருவம். நமக்கு எதுக்கு இமிசைங்கற அறிவார்ந்த சுய நலமும் . இதில் அடக்கம்.

கொய்யால பகிரங்க விசாரணை -விசாரணைய தொடர்ந்து தூக்குல போட்டுருவாய்ங்களா கேட்டு சொல்லுங்க கிளிச்சுரலாம். தாளி அவமானப்படுத்திருவானுவ. அதனாலதேன் தயக்கம்.

விக்கிலீக்ஸ் காரனை பண்ணலையா? உதயகுமாரை பண்ணலியா? நமக்கு அவமானம்லாம் தாங்காதுங்கோ.
அதுக்குன்னு அணு உலையை எதிர்க்கிறதே பிற்போக்குத்தனம் போல சிலர் தொடர்ந்து வலை தளங்கள்ள எழுதிக்கிட்டிருக்காய்ங்க.

பிரதமர், நாராயண சாமி மாதிரி பார்ட்டிங்க சொல்றாய்ங்கன்னா அது அவிக தலை எழுத்து .புரிஞ்சுக்கலாம் ( ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்) - கலாம் மாதிரி பார்ட்டிங்க விஷயத்துல கொஞ்சம் சைக்காலஜி தெரிஞ்சா புரிஞ்சுக்கலாம். இதெல்லாம் அம்பது வயசு கிளவி ப்யூட்டி பார்லர் போயி வந்து ஃபோட்டோ ஷூட் பண்றாப்ல ( ஸ்ரீதேவி இப்படித்தேன் போனிகப்பூரை திவாலாக்கிட்டாளாம்)

அட ப்ரிண்ட் மீடியாவை கூட புரிஞ்சுக்கலாம். அவிகளுக்கு ப்ராக்டிக்கலா பல நிர்பந்தங்கள் இருக்கு. ( விற்பனை வருமானத்தை நம்பி எவனும் பத்திரிக்கை நடத்தலை- ப்ரைவேட் அட்வர்ட்டைஸ்மென்டை மட்டும் நம்பி ..ரெம்ப கஷ்டம்.

ஒதகாத அடையாள அட்டை வாங்க இந்த டிபிஆர் ஓ ஆஃபீஸ்ல பண்ற அலப்பறை இருக்கே.அப்பப்பா.. இதைவிட பேசாம திருப்பதியில மொட்டை அடிக்க போயிரலாம். ஆதாரமா பவர் பிடுங்கிட்டா டப்பா டான்ஸ் ஆடிரும்.

ஆனால் இந்த வலையுலகத்துல கூட அணு உலைக்கு ஆதரவா எளுதறாய்ங்கன்னா புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

இதுக்கு காரணம் அறியாமையா? அல்லது வெகுஜன ஊடகங்களின் பிரபாவமா? 3 ஆவது நாய் சைக்காலஜியா ? நெஜம்மாவே புரியலை.

இந்த ரேஞ்சுல ஆங்காங்கே ஒரு சில விசயங்க கண்ல பட்டாலும் இந்த மேட்டர் கொஞ்சம் இர்ரிடேட் பண்ணிருச்சு. அதை மட்டும் பார்த்துருவம்.

//அன்பு நண்பர்களே, சமூக வலை தளங்களில் தொடர்ந்து 'கூடங்குள கூப்பாடு' போட்டு வரும் தோழர்களுக்கு இந்த பதிவின் மூலம் பதிலளிக்க விரும்புகிறேன்//

மேற்படி பத்தியில வர்ர கூப்பாடுங்கற வார்த்தை ரெம்பவே இர்ரிட்டேட் பண்ணிருச்சு. இந்த ஒரு வார்த்தைதான் இந்த பதிவுக்கே உந்து சக்தி.

என்னா நக்கலு?

//இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றிய அனுபவம் உடைய திரு. சி.ஜெயபாரதனின் வார்த்தைகளை அப்படியே இங்கு தருகிறேன் //

நான் கூட சுய இன்பம் ,ஹோமோ ,ஓரல் செக்ஸ்லருந்து , தண்ணி கஞ்சான்னு எல்லாத்தையும் ட்ரை பண்ண பார்ட்டிதான் .

ஸ்வப்ன ஸ்கலிதத்துல சிக்காம தப்பிச்சேன். எய்ட்ஸ் கூட போடா பொங்கின்னுருச்சு, ஆல்க்கஹாலிக் ஆகல்லை. கஞ்சாவுக்கு அடிக்ட் ஆகல்லே.

அதனால நான் எனக்கு ஏதும் ஆகலை.அதனால நீங்களும் சுய இன்பம் ,ஹோமோ ,ஓரல் செக்ஸ்லருந்து , தண்ணி கஞ்சான்னு எல்லாத்தையும் ஒரு ரவுண்டு பார்த்துருங்கன்னு சொல்ல முடியுமா? தப்பித்தவறி சொல்லி அதை நாலு பய புள்ளைக ஃபாலோ பண்ணிட்டா அதுக்கு ஆரு பொறுப்பு?


//இதை படித்த பின்பாவது, இதற்கு பின் இருப்பது பெரிய 'உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு அரசியல் சதுரங்கம் என்பதைப் புரிந்து அமைதி காக்க..! //

அணு உலை விவகாரத்துல உள் நாட்டு வெளி நாட்டு அரசியல் சதுரங்கம், மூணு சீட்டு, உள்ளே வெளிய எல்லாம் இருக்கிறது எங்களுக்கும் தெரியும்

//இப்போதும் திரு. ஜெயபாரதனின் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறார். மருமகனும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார். //

இவரு என்ன சொல்லவராருன்னா .. மேற்படி புதல்வி - மருமகன் ஹார்லிக்ஸ் பேபி கணக்கா இருக்காய்ங்க.அதனால அணு உலையால எந்த ஆபத்தும் இல்லைன்னு ஸ்தாபிக்க முற்படறாரு.

ஹைதராபாத்ல இப்பம் கூட ஸ்வான் ஃப்ளூ கேஸு வருது.டாக்டருங்க ட்ரீட் பண்றாய்ங்க. போன சீசன்ல ட்ரீட் பண்ண ஒரு டாக்டர் டிக்கெட் போட்டுட்டாரு. ஸ்வான் ஃப்ளூ தானா வர்ர தலைவலி மாதிரி. கொய்யால அணு உலை அப்டியில்லையே.. ஹைவேல போற சனியனை வீட்டு ஹாலுக்கு கூப்பிடற மாதிரியாச்சே..

//ஒரு முக்கிய குறிப்பு: இவர்கள் எவருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை. //

இந்த பாராவுல அவர் சொல்ல வர்ர விசயம் என்னடான்னா அந்த ரெண்டு பேருக்கு கதிரியக்கம் பாதிப்பை தரலை. அதனால ஆருக்கும் பாதிப்பு இருக்காதுங்கறதுதேன். என்ன ஒரு கேணத்தனம் பாருங்க.

//“அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது so called அறிஞர்களின் கோமாளித்தனம். //

பீடி சுத்தறவுகளுக்கெல்லாம் காச நோய் -புற்று நோய் வருதுன்னு ஆரும் சொல்லமுடியாது.ஆனால் மேற்படி நோய்கள் பீடிசுத்தறவுகளை அதிக சதவீதத்துல பாதிக்குதுன்னு தான் சொல்றாய்ங்க.


//புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிஎறிந்து விட்டு//

பாட்டி கதை இல்லாததாலதான் கண்ணா .. 13 வயசு பெண் எல்லாம் கர்பமாகுது..

//சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.//
வரப்போற அழிவுக்கு நம்ம நம்பிக்கையோட வேலையே இல்லை. அதும்பாட்டுக்கு வந்தே உடுங்கறதுதேன் சோகம்.

// கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ? அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ? //

பாவாடை நாடாவை ஒரே இடத்துல இறுக்கி கட்டினா ஸ்கின் கான்ஸர் வருதுன்னா அதுக்கு புள்ளி விவரம் தேவையில்லை.

அணு உலையால கான்சர் வருதுன்னா மட்டும் புள்ளி விவரம் தேவை. நல்லா கேட்குறாய்ங்கடா டீட்டெய்லு

//அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர்.
மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக் கைகள் தேவை. அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அந்தப் புற்று நோய்கள், உடல் ஊனங்கள் அணு உலைக் கதிரடியால் உண்டாயின என்பது ஆதாரமோடு நிரூபிக்கப் பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஆறாவது விரல் முளைத்த விந்தைகளைப் பற்றி மக்களிடம் புகாரிடலாம்.//

கட்டிய பின், கட்டுவதற்கு முன் எல்லாம் கணக்கெடுக்கலாம். (ஏற்கெனவே எடுத்தும் இருக்காய்ங்க) கணக்கெடுக்க ஆளிருக்கும்.ஆனால் " நடக்கக்கூடாதது நடந்து தொலைச்சுட்டா" ஆளும் இருக்கமாட்டாய்ங்க.கணக்கும் இருக்காது.

//உலகத்திலே இப்போது இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்று செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும். //

அணு ஒப்பந்த மசோதா பற்றியும் - அதை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டுகள் ஆதரவை வாபஸ் வாங்கியது பற்றியும் - குதிரை பேரம் நடத்தி ஆட்சியை தக்கவைத்துகொண்டதை பற்றியும் அண்ணாச்சிக்கு தெரியாது போல.

ஒரு ஒதகாத போபால் விஷ வாயு மேட்டர்லயே எம்மாம் கறாரா நஷ்ட ஈடு வாங்கினாய்ங்கன்னு பார்த்துக்கிட்டு தானே இருக்கோம்.

//ஆகவே உதயகுமார் போன்ற அணுவியல் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.//

உண்மையில மேற்சொன்ன ஆசாமிகளை விட கட்டுரையாளர் தான் ரெம்ப பயமுறுத்தறாரு.. இந்த அளவு பொறுப்பற்ற எழுத்துக்களை எழுதும் ஆசாமிகள் வாழும் நாட்டில் வாழ்வதை விட தாளி எல்லா அணு உலையும் வெடிச்சு நாம அல்லாரும் செத்து தொலைச்சா என்னங்கற அளவுக்கு கடுப்பாகுது. அதனால இந்த உதவாக்கரை கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதை இத்துடன் நிறுத்துகிறேன்.


தவறவிட்ட பதிவுகள் 2012 மார்ச்

ஆகஸ்ட் 8 முதல் சோனியாவுக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்
http://anubavajothidam.blogspot.in/2012/03/8.html

வடகிழக்கில் தெருக்குத்து : அரசியல் தலைமை
http://anubavajothidam.blogspot.in/2012/03/blog-post_22.html

வடகிழக்கு மூடி இருந்தால் பைத்தியம் ?
http://anubavajothidam.blogspot.in/2012/03/blog-post_21.html

ஜூன் 21க்கு மேல் அணு உலையில் கசிவு
http://anubavajothidam.blogspot.in/2012/03/21.html

கூடங்குளம்: 'ஜெ' வின் பச்சை ... தனம்
http://anubavajothidam.blogspot.in/2012/03/blog-post_19.html

Sunday, March 18, 2012

ஜூலை 12க்கு மேல் இடைத்தேர்தல்


அண்ணே வணக்கம்ணே !
இனி ஒரு விதி செய்வோம்னுட்டு வாரத்துல 3 நாள் ஜோதிடம் - 3 நாள் நாட்டு நடப்புன்னு சொல்லியிருந்தேன். அதை கொஞ்ச நாளைக்காச்சும் பின்பற்ற ஆசை.

நம்ம கணிப்பு நிஜமாகி ஜூலை 12 க்கு மேல் மத்தியில / இலவச இணைப்பு மாதிரி எங்க ஸ்டேட்ல பை எலக்சன் வந்து அடுத்த சர்க்காராச்சும் பெட்டரான சர்க்காரா வருதான்னு பார்த்துக்கிட்டு இந்த விதியை தொடர்வதும் தொடராததும் பத்தி முடிவு பண்ணலாம்.

நம்ம நாட்டு நடப்பே இந்த அரசியல்வாதிகள் கையிலதான் இருக்கு. இவிகளை நினைச்சா ரெம்ப கவலையா இருக்கு. இவிக அல்லாம் தெரிஞ்சுத்தான் செய்றாய்ங்களா? இல்லை எதுனா குட்டிசைத்தான் இவிகளை ஆட்டி வைக்குதா புரியலை.

இவிக முடிவெடுக்கிறதை தள்ளி போடற விதம் - தப்பி தவறி எடுத்தா இவிக எடுக்கிற முடிவு - அதை செயல் படுத்தும் விதம் எல்லாமே பயங்கர கடுப்பா இருக்கு. ரெம்ப கவலையா இருக்கு.

விமானத்துக்கு போடற ஃப்யூயலுக்கு சப்சிடியாம் -ஆனால் மானில அரசு போக்குவரத்து கழக பஸ்ஸுக்கு போடற டீசலுக்கு சப்சிடி கடியாதாம்? விமானத்துல போறவன் மட்டும் தான் இந்தியன். பஸ்ஸுல போறவன்லாம் பாக்கிஸ்தானியனா?

பட்ஜெட்ல திட்டம் சாரா செலவு ( நான் ப்ளான் எக்ஸ்பென்டிச்சர்) ன்னு ஒரு வார்த்தை வரும் ( எத்தீனி பேரு கவனிச்சிங்க? கைய தூக்குங்கப்பா? )

இந்த வருசம் பட்ஜெட்டை ஒரு பறவை பார்வை பாருங்க:

பட்ஜெட் மொத்தம் : ரூ .14 லட்சத்து ,19 ஆயிரத்து ,925 கோடிகள்
திட்ட செலவு : ரூ.5 லட்சத்து ,21 ஆயிரத்து ,25 கோடிகள் ( 36.69 சதவீதம்)
திட்டம் சாரா செலவு : ரூ.9 லட்சத்து ,69 ஆயிரத்து ,900 கோடிகள் (68.30 சதவீதம்)

நாமளும் இன்டர்ல எக்கனமிக்ஸ், காமர்ஸ் ,டிகிரியில ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசினஸ் ஆர்கனைசேஷன்னுட்டு எல்லா இழவையும் எடுத்துட்டு தான் வந்திருக்கம். ஆனால் என் மேதாவிலாசத்தை காட்டி பயமுறுத்தறது நம்ம நோக்கமில்லை.

ரெம்ப டீப்பா கூட போகவாணாம் வாத்யாரே ..சொம்மா பேர் ராசிய வச்சே பார்ப்போம்.

திட்டச்செலவுன்னா என்ன?

பல காலமாகவோ - சமீப காலமாகவோ தன்னிறைவு அல்லது பொருளாதார முன்னேற்றம் இப்படி ஏதோ ஒரு டார்கெட்டை வச்சுக்கிட்டு பண்ணிக்கிட்டு வர்ர செலவு.

திட்டம் சாரா செலவுன்னா என்ன?
மேலே சொன்ன தன்னிறைவுக்கோ அ பொருளாதார முன்னேற்றத்துக்கோ சம்பந்தமில்லாம செய்யற செலவு.

சரி எல்லாம் நாம நினைச்சாப்லயே நடந்துருமா கொஞ்சம் அப்படி இப்படி சைடு வாங்கத்தான் செய்யும்னு சொல்விங்க. சைடு வாங்கினா பரவால்லை.

தாளி ..திட்டச்செலவென்னவோ ..ரூ.5 லட்சத்து ,21 ஆயிரத்து ,25 கோடிகள் தான் . ( 36.69 சதவீதம்)
திட்டம் சாரா செலவு ரூ.9 லட்சத்து ,69 ஆயிரத்து ,900 கோடிகள் (68.30 சதவீதம்)

திட்டச்செலவுக்கும் திட்டம் சாரா செலவுக்கும் வித்யாசம் 4 லட்சத்து , 48 ஆயிரத்து ,875 கோடி. இது உருப்படறதுக்கு அருத்தமா?

இதுல 1லட்சத்து ,85,ஆயிரத்து 752கோடி ரூ அளவுக்கு வேட்டி வேற விழுகுது..

திட்டச்செலவுக்கு ஒதுக்கின நிதியாச்சும் திட்டப்படி செலவழியுங்கறிங்களா? அஸ்கு புஸ்கு..

சரீ.. கவர்மென்டு பட்ஜெட் போடனும்னா பைசா வேணம்ல . அந்த பைசாவை எப்டி வசூலிக்கிறாய்ங்க தெரியுமா? வரி,வட்டி,திரை,கிஸ்தி ..

ஒரு ரூபா வசூல் பண்ண பத்து காசு நிர்வாக செலவு. அதை மறுபடி மக்கள் தேவைகளுக்கு செலவு பண்ண இன்னொரு பத்து காசு நி.செலவு. இதுல ஊழல் ஒரு பத்து காசு ஊழல் நடந்துராம பார்த்துக்கறதுக்கு ஒரு பத்து காசு நி.செலவு , எப்படி உருப்படும்?

சரி எப்டி எப்டியோ சனத்தை ஏமாத்தி ஓட்டுவாங்கி பதவிக்கு வராய்ங்க பட்ஜெட் போடறாய்ங்க. நாசமாக்கறாய்ங்க - இதான் சன நாயகம்னு மனசை தேத்திக்கலாம்னு பார்த்தா.. பிரணப் முகர்ஜி யாரு? மேற்கு வங்க அரசியல்ல போனியாகாம சோனியா காலடியில சக்தி பூஜை பண்ற பார்ட்டி.

சரி ஒழியட்டும் சோனியா அம்மா என்ன பிரதமரா? சனம் சோனியா பிரதமர் ஆகனும்னா ஓட்டுப்போட்டாய்ங்க ? இல்லை..

அப்படி போட்டிருந்தா காங்கிரஸ் கட்சிக்கு டூ தேர்ட் மெஜாரிட்டி கிடைச்சிருக்கும். கு.பட்சம் யுபிஏ வுக்கு டூ தேர்ட் மெஜாரிட்டி கிடைச்சிருக்கும். கிடைச்சுதா? இல்லே.

அப்ப இதென்னத்த ஜன நாயகம் வெங்காயம்? கூட்டுங்கடா பார்லிமென்டை . சீக்ரெட் பாலட் வச்சு தேர்ந்தெடுங்கடா பிரதமரை .. அந்த பிரதமர் நியமிக்கட்டும் நிதியமைச்சரை. அந்த மந்திரி போடட்டும் பட்ஜெட்டை ..

கு.பட்சம் நாங்க ஓட்டுப்போட்ட எம்.பி ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதமரும் -அவர் நியமனம் பண்ண நிதி மந்திரியும் எங்களுக்கு திதி வைக்கட்டும்.

ஆமா அரசியல்வாதிகளை பார்த்தா கவலையா இருக்குன்னு புலம்பறிங்க.. மக்களை பத்தி கவலையில்லியான்னு கேப்பிக ( நமக்கு இந்த கொழுத்த ,கொஞ்சமா கொழுத்த,மேல் தட்டு மத்திய வர்கம், மத்திய வர்கம் ஏன் ஏழைகளை பத்தி கூட பெருசா கவலையில்லை..ஏன்னா இன்னிக்கு இவிக வாழற நாய் பொயப்புக்கு இவிகதான் காரணம் (ஓட்டுப்போட்டாய்ங்கல்ல)

என்னோட கவலையெல்லாம் ஓட்டுப்போட கூட வாய்ப்பளிக்கப்படாத - ஓட்டுன்னா என்னன்னு கூட தெரியாத இந்த ஜன நாயக காட்டேரிக்கு ரத்த தானம் பண்ற மக்களை பத்தித்தான்.

அரசியல் - ஆமைவடைன்னு இந்திய எதிர்காலத்தை வடைகறியாக்கிக்கிட்டிருக்கிற இந்த பன்னாடை பரதேசிகளுக்கு நான் சொல்ல விரும்பறது ஒன்னைத்தான்..

1.கொய்யால உங்கள்ள ஆரு ஆளனும்னாலும் இந்தியா சுதந்திரமா இருந்தாவனும்
2.இங்கன பாதி மக்களாச்சும் உசுரோட இருக்கனும்
3.கு.பட்சம் கிரகவக்ர காலங்கள்ளயாச்சும் ஞானோதயம் வந்து நீங்க அறிவிக்கிற அரைவேக்காடு நலதிட்டங்களை அமல்படுத்தவாச்சும் சோர்ஸ் இருக்கனும் -சுமாரான நிர்வாகம் இருக்கனும்
4.பொடி நடையா ஊருக்குள்ள வந்து டீக்கடையில டீ குடிக்கிற அளவுக்கு இல்லின்னாலும் கு.ப உங்க அஃபிஷியல் ரெசிடன்ஸுக்குள்ள புகுந்து எவனும் தீபாவளி பண்ணிராத இருக்கனும்
5.மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் (அதுலயும் போலீஸு -மிலிட்டரி கூட கிளம்பியிருக்காய்ங்க) நீதிபதிகள் உங்க அதிகாரத்துக்கு சாவு மணி அடிச்சுராம இருக்கனும்.

இந்த அஞ்சு விசயத்தையாச்சும் மனசுல வச்சு நடத்துங்கப்பு உங்க அரசியலை..இல்லாட்டி ..

1.அடிமை இந்தியாவுல - அன்னிய ஆட்சியாளர்களோட அக்குளை நக்கி வாயனும். இங்கன உள் நாட்டு சனம் துப்புவாய்ங்க.

2.கொஞ்ச நாள்ள சனம் மொத்தம் சமாதி ஆயிரும். வேணம்னா ஆவிராஜ்ஜியத்தை ஆளலாம்

3.சுமாரான நிர்வாகம் கூட இல்லின்னா உங்க உசுருக்கும் சங்கு தாண்டி..

4.எந்த திருடனும் சைக்கிள் பெல் கப்புலதான் ஆரம்பிக்கிறான். அவன் தீவிரவாதி ரேஞ்சுக்கு போயிராம தடுக்கவாச்சும் சட்டம் ஒழுங்கை கா(ல்)ப்பாத்துங்கய்யா.

5 நீங்க .ஒளுங்கா அரசியல் பண்ணலை/ நிர்வாகம் பண்ணலைன்னு சாமி,சன்னியாசி ,பண்டாரம்,பரதேசி, அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் (அதுலயும் போலீஸு -மிலிட்டரி கூட கிளம்பிர சான்ஸிருக்கு. ஓட்டை மாத்தி மாத்தி போட்டு ஏமாந்த சனம் ஒரே வாட்டி (ஏ)மாத்திவிட்டுரப்போறாய்ங்க..

Wednesday, March 14, 2012

லக்னம்/லக்னாதிபதி பலப்படுவதால் தீமைகள்


அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி பலம் பெறலின்னா டாரா கிளிஞ்சுரும்னு நானே பல சந்தர்ப்பங்கள்ள சொல்லியிருக்கன். ஆனால் அந்த சீக்வென்ஸ்ல கண்ணாலம் பத்தியோ - மேரீட் லைஃபை பத்தியோ முக்கியமா ஆன்மீகத்தை பத்தியோ பாய்ண்டே ரெய்ஸ் ஆகியிருக்காது.

லக்னாதிபதிங்கறவர் எந்த அளவுக்கு பலம் பெற்றால் ஜாதகருக்கு அந்த அளவுக்கு செல்ஃப் என்ற "சுயம்" இருக்கும்.

இதை இந்த உலகத்துல அன்னாட பொயப்புக்காக "என்னா வேணம்னா" செய்ய தயாரா இருக்கிற அல்லக்கைங்க புரிஞ்சுக்காது. இதை அகங்காரம் -ஈகோன்னு சொல்லிருவாய்ங்க. மத்த கிரகங்கள் பேர் சொல்லும் நிலையில இருந்து இந்த ஜாதகர்கள் சொந்த தொழில் -சொந்த வியாபாரம் கு.பட்சம் ஒரு டீம் லீடர்,டிப்பார்ட்மென்டல் ஹெட் மாதிரி செட்டில் ஆயிட்டா பிரச்சினை வராது.

மத்த கிரகங்கள் ஆப்படிச்சிட்டிருந்தா பார்ட்டி என்னவோ சாதாரண லேபரா இருப்பான். ஆனால் அவனோட செல்ஃப் /சுயம் பக்காவா இருக்கும். லக்னாதிபதி நைசர்கிக சுபனாக இருந்து லக்னாத் பாபனாக இருந்தா தப்பு தண்டாவுக்கு போகமாட்டான். ஆனால் எவனும் இவனை நம்பமாட்டான். இவன் லைஃபே ஒரு பேத்தடிக் ஸ்டோரியா இருக்கும்.

லக்னாதிபதி பாபனா இருந்து -லக்னாத் சுபனாக இருந்தா தப்பு தண்டால்லாம் துணிஞ்சு செய்வான்.ஆனால் அதுலயும் "போட்டு கொடுங்க முதலாளி"ங்கற ஸ்டைல் எல்லாம் இருக்காது. லையன்ஸ் ஷேர் தான் டிமாண்ட் பண்ணுவான்.

நேரம் நல்லாருக்கிற வரை ஓகே. நேரம் கெட்ட நேரத்துல லையன்ஸ் ஷேர் கேட்டா ஆப்படிச்சுருவாய்ங்க. இது தொழில்,உத்யோகத்தை பொருத்தவரை உள்ள நிலை.

நாம எடுத்துக்கிட்டு பிரிச்சு மேஞ்சுக்கிட்டிருக்கிற சப்ஜெக்ட் "திருமணதடை -திருமண வாழ்வில் சிக்கல்-ஆண்மை இழப்பு - தன் சுகத்துக்கு தானே தடையாதல் -ஜாதகம் எப்டியிருந்தாலும் மேற்படி சமாசாரங்களுக்கு தானே ஆப்படிச்சுக்கறது.

இந்த வரிசையில லக்னாதிபதி எங்கல்லாம் இருந்தா ஜாதகர் எப்படி சொந்த செலவுல சூனியம் வச்சுக்குவாருன்னு பார்த்துக்கிட்டே வந்தோம். இதுல லக்னாதிபதி 7 ல நின்னா என்ன கதைன்னு பார்த்தோம். லக்னாதிபதி 7 ல நின்னா "பொஞ்சாதி முந்தானைய பிடிச்சுக்கிட்டு அலையனும். இவனோட பிரபஞ்சத்துல பொஞ்சாதிதான் மையப்புள்ளி"

ஒரு வேளை இவன் ஜாதகத்துல லக்னாதிபதி உச்சமாகி ஏழை பார்க்கிறாருன்னு வைங்க அது அவரோட நீச வீடா இருக்கும்.

ஒதகாத பார்ட்டிய கண்ணாலம் கட்டி - அது இல்லாத. பில்டாப் எல்லாம் கொடுத்துக்கிட்டிருக்கும். இவனா பயங்கர ஈகோயிஸ்ட். என்னாகும்ங்கறிங்க?

ஒரு வேளை இவன் ஜாதகத்துல லக்னாதிபதி நீசமாகி ஏழை பார்க்கிறாருன்னு வைங்க அது அவரோட உச்ச வீடா இருக்கும். வீட்டோட மாப்ளை கேஸ் எல்லாம் இப்படி இருக்க வாய்ப்பிருக்கு. இதுக்கும் மத்த கிரகங்களோட ஒத்துழைப்பு தேவை. அது இல்லின்னா கோசாரத்துல ஒரு ரெண்டரை வருசம் சனி நெல்லா இருக்கறச்ச கண்ணாலமாகி சனி அடுத்த ராசிய பார்க்கிறப்பவே மாமனரோட/மச்சினனோட முட்டிக்கிட்டு -
அல்லது மச்சினிச்சியை கை வைக்க பார்த்து ரோட்ல வந்து கிடக்கவும் வாய்ப்பிருக்கு. தரித்திரனுக்கு வாய்வு வந்தா அர்தராத்திரியில குடைபிடிப்பாங்கற கதையாயிரும்.

இது கொள்கை ரீதியிலான கணிப்புத்தான் புருசன் -பொஞ்சாதி ஜாதகங்களை பக்கத்து பக்கத்துல வச்சிக்கிட்டு தோஷங்கள்,குரு ,சுக்கிர பலம், 7 ஆம் பாவம் ,பெண் ஜாதகத்துல 8 ஆம் பாவம் இப்படி எல்லாத்தையும் பார்த்து சொல்லோனம்.

இங்கன நாம சொல்லவர்ர பாய்ண்ட் ஒன்னுதேன். லக்னாதிபதி பலம் பெற்றால் சொந்த தொழில் வியாபாரத்துல இருந்தா பரவால்லை. ( இவிகளும் BUYERS ,OFFICERS,BANKERS இத்யாதி ஆசாமிகள் கிட்டே கொஞ்சம் வளைஞ்சு நெளிஞ்சு பேசவேண்டியிருக்கும். இல்லாட்டி பல்புதேன்)

இதை எல்லாம் ஃபாலோ பண்ணி தொழில் வியாபாரத்தை மேக் அப் பண்ணிட்டாலும் கண்ணாலம்ங்கற விசயத்துல வரும்போது..

எவளோ வருவாளாம் , அவளுக்கு கட்டில்ல பாதியை ஒதுக்கிரனுமாம். ராத்திரி பத்துக்கெல்லாம் வீட்டுக்கு போகனுமாம், அவளை பெத்தவுக வருவாய்ங்களாம் நாம எத்தீனி டென்சன்ல இருந்தாலும் வாங்க மாமா ,வாங்க அத்தை பிரயாணம் சௌகரியமா இருந்ததான்னு கேட்கனும் -இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகளை கேட்டுக்கிட்டு நமக்கு வாணான்டாப்பா இத இழவெடுத்த கண்ணாலம்னு தேன் தோனும்.

இவிக கண்ணால சப்ஜெக்டை இப்படியே விட்டு தொலைச்சு தலை முழுகிட்டாலும் பரவால்லை. அப்பன் ஆயி, வேலை வெட்டி இல்லாத சித்தப்பு,மாமன் நச்சரிப்பு தாங்காம கண்ணாலம் கட்டிக்கிட்டா அது இவிகளுக்கும் நரகம்.வர்ரவுகளுக்கும் நரகம்.

வர்ர கேஸு பிலோ ஆவரேஜ் ஜாதகம், லோ ஒல்ட்டேஜ் ஜாதகம்னா பரவால்லை. அதுவும் கொஞ்சம் போல விஸயம் இருக்கிற ஜாதகமா இருந்தா "டக் அஃப் வார் "ஆரம்பமாயிரும்.

மேரீட் லைஃப் கூட பரவால்லை. "ஊரு உலகத்துல முக்கா வாசி புருசன் பொஞ்சாதி இப்படித்தானே இருக்காய்ங்க"ன்னு அஜீஸ் பண்ணிட்டு போயிருவாய்ங்க. ஆனால் கில்மா மேட்டர்ல இந்த சுயம்,சுய மரியாதை ,ஈகோ , இழவுன்னு பார்த்தா அசலுக்கு மோசம் வந்துரும்.

லக்னாதிபதி உச்சமா இருக்கிறவுக:

அந்த கிரகம் தொடர்பான தொழில் ,வியாபாரத்தை கு.ப சைட் பிசினஸாவாச்சும் மேற்கொண்டா பேய்க்கு வேலை கொடுத்த கணக்கா அந்த கிரகத்தோட வாக்குவம் குறையும். இவிக ஈகோவும் தேன். உங்க நினைப்பு படி நீங்க எதிர்கால எம்.எல்.ஏ ன்னே வச்சுக்குவம். ஒரு வேளை நாளைக்கு தேர்தல்ல நீங்க நின்னப்ப உங்க பொஞ்சாதியே உங்களுக்கு ஓட்டு போடலின்னா எம்பூட்டு அசிங்கம்? ரோசிச்சு பாருங்கண்ணே..

லக்னாதிபதி நீசமானவுக:

அந்த கிரகம் தொடர்பான தொழில் வியாபாரத்துல இருந்தா கொஞ்சம் கொஞ்சமா விலகிரனும். இல்லாட்டி அந்த கிரக காரகம் கொண்ட நோய்கள் வேற வாட்டும். அந்த கிரகம் தொடர்பான நிறம் கொண்ட பில்லோ கவர் ,பெட் ஸ்ப்ரெட் உபயோகிக்கலாம். நைட் ட்ரஸ் மேற்படி நிறத்துல இருந்தா உத்தமம்.

நாளைக்கு லக்னாதிபதி எட்டுல இருந்தா என்னாகும்? என்ன செய்யலாம்னு பார்ப்போம். உடுங்க ஜூட்.

நேத்திய பதிவை பார்க்காதவுகளுக்கு மறு அறிவிப்பு:

இனி திங்கள்,செவ்,புதன் அரசியல் ,நாட்டு நடப்பு பற்றிய பதிவுகள்

வியாழன்,வெள்ளி ,சனி கிழமைகள்ள மட்டும் தான் சோசிய பதிவுகள்.

விகடன் எமர்ஜென்சிக்கு போட்ட ஜால்ரா

அண்ணே வணக்கம்ணே !

நம்ம ப்ளாக், சைட்டை 400 முதல் 500 பேர் வரை படிசிட்டிருந்த காலத்துல ஆல் இன் ஆல் அழகுராஜா மாதிரி கண்டதுலயும் புகுந்து வந்துக்கிட்டிருந்தம். எப்பம் அனுபவஜோதிடம் டாட்காம்னு ஒன்னை வச்சமோ அன்னைக்கே நமக்குன்னு ஒரு எல்லைக்கோடு போட்டாப்ல ஆயிருச்சு.

அது நம்மையும் ஆத்தாளையும் பிரிக்கிற கோடாவும் ஆயிருச்சு. ஆத்தாளுக்கும் நமக்கும் இன்னாடா அக்ரிமென்டுன்னா

"ஆத்தா .. இந்த பார்ப்பானுங்கோ உன்னை நாலு சுவத்துக்குள்ள வச்சு யாவாரம் பண்றானுங்கோ.. கொய்யால நீ எனக்கு கொஞ்சம் போல கேப் உடு. அல்லா நதிகளையும் இணைச்சுர்ரேன். ஒவ்வொரு குடிசையிலயும் அன்னபூர்ணேஸ்வரியா நீ குடியிருப்பே நோ கிரவுட் .. நோ டென்ஷன் .. நோ கட்டண கொள்ளை , நோ வயித்தெறிச்சல்"ங்கறது தேன்.

ஆனா நதிகளை இணைக்கிறது அந்திம லட்சியம். அதுக்கு நம்ம தலீவருங்களையும், சனத்தையும் மோட்டிவேட் பண்றது நம்ம நிரந்தர லட்சியம். அதுக்குன்னு மத்த அட்டூழியத்தை எல்லாம் கண்டுக்காம விட்டுர முடியுமா? அதனாலதேன் இன்னைலருந்து ஒரு விதி.

திங்கள்,செவ்வாய்,புதன் கிழமைகளில் நாட்டு நடப்பு தொடர்பான பதிவுகள். ( தவிர்க்க முடியாத பட்சத்தில் அஸ்ட்ராலஜிக்கல் அலசலும் இருக்கும்.

வியாழன்,வெள்ளி ,சனி கிழமைகளில் மட்டும் ஜோதிடம் தொடர்பான பதிவுகள். இன்னைக்கு என்ன கிழமை? புதன் கிழமை. அதனால இன்னைக்கு நாட்டு நடப்பை பத்தின பதிவா ஒன்னை போடுவம்.



இன்றைய செய்தி நாளைய வரலாறுன்னு பீலா விடறாய்ங்க. என்னைக்கேட்டா காம்படிட்டிவ் எக்ஸாம்ஸுக்கு ப்ரிப்பேர் ஆவறவங்களை தவிர மத்தவுக வருசத்துக்கொருதரம் பேப்பர் வாங்கினா போதும்னு நினைக்கிறேன். (இந்த காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் மட்டுமில்லே . நம்ம கல்வி முறையே தண்ட கருமாந்திரம்.

கல்விங்கறது எப்படி இருக்கனும்னா ஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ 18 வயசு முடியறதுக்குள்ளாற இந்த உலகம், நாடு, அவன் மானிலம், அவன் மாவட்டம், அவன் தாலுக்கா, அவன் ஊரு,கிராமம், குடும்பம், அப்பா, அம்மா, அவன் உடம்பு, மனசு,புத்தி, ஆத்மா பற்றின தெளிவை கொடுக்கனும். அவனுக்கு/அவளுக்கு 18 வயசு நிறையறதுக்குள்ள தன் மேல் படிப்புக்கோ/கண்ணாலம் கட்டிக்கிட்டா தன் குடும்பத்தை போஷிக்கவோ தேவையான பணத்தை எவன் மேலயும் டிப்பெண்ட் ஆகாம சம்பாதிச்சுக்கற சக்தியை கொடுக்கனும். ஒரு கண்ணாலம் கட்டி ,ஒன்னோ ரெண்டோ பெத்து அதை உத்தமமான இந்திய பிரஜையா வளர்க்கிற அளவுக்கு அவனுக்கு ஸ்டஃபை கொடுக்கனும். அதான் உண்மையான கல்வி.

இந்த இழவெடுத்த கல்வியோட வெளிய வந்தவனுக்கு நடத்தற காம்படிட்டிவ் எக்ஸாம்ஸ் எந்த லட்சணத்துல இருக்கும்னு நீங்களே கெஸ் பண்ணிரலாம். சரிங்கண்ணா ஆரம்பிச்சதுமே டீல்ல விட்டு டைவர்ட் ஆயிட்ட "வருசத்துக்கு ஒரு தரம் பத்திரிக்கை வாங்கினா போதும்" ங்கற பாயிண்டுக்கு வந்துருவம்.

டிசம்பர் 31 ஆம் தேதியோ , ஜனவரி 1 ஆம்தேதியோ அந்த ஒரு வருசத்துல நடந்த முக்கியமான சம்பவத்தை எல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணியிருப்பாய்ங்க

இதுலயும் ஒரு தொல்லை இருக்கு கட்சிப்பின்னணி உள்ள பத்திரிக்கையா இருந்தா 365 செய்திகள்ள தங்கள் கட்சித்தலைவருக்கு ஸ்வப்ன ஸ்கலிதமானது, மெனோஃபஸ் வந்ததை கூட சேர்த்து விட்டுர்ராய்ங்க. சரி கட்சிப்பின்னணி இல்லாத பத்திரிக்கையா இருந்தா நிறுவனர் பிறந்த நாள், இப்ப உசுரோட இருக்கிற பேரன் எவனாச்சும் நிறுவனர் சமாதிக்கு மலர்வளையம் வைக்கிறது மாதிரி செய்திகளை கோர்த்துவிட்டுருவாய்ங்க.

என்னடா முருகேசன் இந்த ரேஞ்சுல கடுப்பாகி ஒரு பதிவு போடறாரேனு நினைச்சுராதிங்க. அடக்கிதான் வாசிக்கிறேண்ணா. இருந்தாலும் அனல் பறக்குதுன்னா என் நெஞ்சத்துல இன்னா மாதிரி கனல் இருக்கும்னு ரோசிங்க. ஒரு காலத்துல நாம எழுதின வார்த்தையோட ஸ்பெல்லிங் எதையாவது சரி பார்க்கனும்னா அது எங்கனா அச்சாகியிருக்கானு பார்ப்பம். இப்ப அப்படி பார்க்கமுடியுமா? நெம்பர் ஒன் செய்திபத்திரிக்கைல கூட அச்சுப்பிழை. எழுத்துப்பிழை.

வரலாறே பிழையாப்போன காலத்துல எழுத்துப்பிழைய பத்தி பேசறயே தலைனு சலிச்சிக்கிராதிங்க. பிள்ளையார் சுழி போட்டுத்தானே ஆரம்பிக்க வேண்டியதா இருக்கு. எனக்கு இந்த மீடியா மேல என்னைக்குமே நம்பிக்கை இருந்தது கிடையாது.

நான் என்ன கலைஞரா ? எனக்கு அனுகூலமா ஒரு செய்தி வந்ததுமே அதை ஸ்கான் பண்ணி போட்டு பார்த்தாயா உடன் பிறப்பேனு கடிதம் எழுத.

எமர்ஜென்ஸி காலத்தை பத்தி நிச்சயம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அப்போ பத்திரிக்கை செய்திகளுக்கு சென்சார் இருந்தது. அப்பத்துல இப்ப மாதிரி கம்ப்யூட்டர் டிடிபி எல்லாம் கிடையாது ஒவ்வொரு எழுத்தா பொறுக்கி அச்சு கோர்த்து ப்ரூஃப் போட்டு ப்ரூஃப் திருத்தி தாலியறுந்துரும். இந்த இழவுல ப்ரூஃபை எடுத்துக்கிட்டு அதிகாரிங்க கிட்ட போய் அவிக அப்ரூவல் வாங்கித்தான் பத்திரிக்கை அச்சிடனும்.

இன்னைக்கு ராகுல், ப்ரியாங்கா, சோனியா,ராஜீவ்னு சஹஸ்ர நாமார்ச்சனை பண்ற பார்ட்டிங்களுக்கு இந்திராவை பத்தி பேச தம்மிருக்கா? எமர்ஜென்சி பத்தி பேசற தாக்கத் இருக்கா? அப்போ அந்த மகராசி போட்ட இருபது அம்ச திட்ட தீம்ல வாரம் ஒரு சிறுகதை போட்டிருக்கு ஆனந்த விகடன். (இவிக ஜன நாயக காதல்ல கொள்ளிய வைக்க) அன்னைக்கு விரைய பிசைஞ்சுருவாய்ங்கன்னு போட்டே ..ஓஞ்சு போவட்டும். அதை பொக்கிஷம் பகுதில ரீ ப்ரிண்ட் பண்ணவேண்டிய அவசியம் என்னா இருக்கு?

சஞ்சய் காந்தி வேற கொசுறுக்கு அஞ்சு அம்ச திட்டம் போட்டாருங்கோ. அதுக்கும் சேர்த்து தூர்தர்ஷன்,ஆல் இண்டியா ரேடியோ, தினசரிங்க,வாராந்தரிங்கல்லாம் வானளாவிய பிரசாரம் செய்தாய்ங்க. அன்னைய தேதிக்கும் இத்தினி பேப்பர் கிடையாது,இத்தீனி சேனல் கிடையாது,இன்டர் நெட் கிடையாது, ப்ளாகிங்,மினி ப்ளாகிங் கிடையாது .இவ்ளோ ஏன் ஒரு எஸ்.எம்.எஸ் தட்டிவிட மொபைல் கூட கிடையாது.

அதாவது அன்னைக்கு இந்திரா சொன்னது தான் வேதம். எமர்ஜென்சிய எதிர்த்து களமிறங்கின லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் கிட்டே ஒரு ....ரும் கிடையாது. பாம்லெட் போட்டா கூட அதை சாராய கடைகள்ள தான் டிஸ்ட் ரிப்யூட் பண்ணனும். (இந்த வேலைய அந்த நாள்ள ஆர்.எஸ்.எஸ் காரவுக செய்தாங்கண்ணா. வாழ்க!)

எலக்சன் வந்தது அப்பு ! சனம் இந்திராவுக்கு வச்சாய்ங்க ஆப்பு. இதுலருந்து இன்னா தெரியுது ? இந்த பேப்பர் காரவுக பண்ற அலம்பல் எல்லாம் எட்டாத தொலைவுல மஸ்தா சனம் கீது நைனா. எட்டினாலும் இவன் தட்டிவிட்டதை எல்லாம் நம்ப சனம் தயாரா இல்லே நைனா.




தி.மு.க கவர்ன்மென்ட் மேல சர்க்காரியா கமிஷன் போட்டாங்களே அப்போத்துலருந்து செய்திகளை படிச்சுட்டுருக்கேன். எம்ர்ஜென்சி அமல்ல இருந்தப்ப என் சித்தப்பு கொண்டுவர்ர முரசொலிய எல்லாம் உ.வசப்பட்டு படிச்சிருக்கேன். ஒரு கட்டத்துல அப்டேட் பண்ணிக்கிறதுக்காக மட்டும் படிக்க ஆரம்பிச்சேன். வயசான கட்டைங்க இளந்தாரிக யாராச்சு மாட்டின உடனே "அந்த காலத்துல"னு ரம்பம் போட ஆரம்பிச்சுர்ராய்ங்கனு நான் கூட பேசியிருக்கேன். ஆனால் அவிக ஏன் அப்படி பேசினாய்ங்கனு இப்பத்தான் புரியுது. அவிக இளந்தாரிகளா இருந்தப்ப அவிகளுக்கு சக்தியின் ஊற்று இருந்திருக்கும். எது வந்தாலும் எதிர்கொள்ற பவர் இருந்திருக்கும். (அட்லீஸ்ட் தன்னம்பிக்கை) அவிக இளமை போன பிறகு முதுமை காரணமா சக்தி வற்றிப்போய் நிகழ் காலத்தை கண்டு அரண்டு போய் தான் அந்த காலத்துலங்கற ட்ரான்ஸுக்கு போயிட்டிருந்தாங்களோ என்னவோ? இது ஒரு கோணம்.

ஆனா அவிக சொல்றதுலயும் நியாயமிருக்கப்பு. காலம் மாறிப்போச்சு. வாழ்க்கை மாறிப்போச்சு.

இந்த சின்ன உதாரணத்தை பாருங்க. ராமன் வனவாசம் போனப்ப அயோத்தி மக்கள் எல்லாம் நீ இல்லாத நாடு சுடுகாடு . அதை விட பெட்டர் நீ இருக்கிற காடுனு கிளம்பி அவரோடயே காடுவரைக்கும் போயிட்டாய்ங்களாம். ராமரா பார்த்து கன்வின்ஸ் பண்ணி திருப்பி அனுப்பினாராம்.

என்.டி.ஆர் அரசை நாதேண்ட்ல பாஸ்கர்ராவ் கவுத்தப்ப ஆந்திர மக்கள் பொங்கி எழுந்தாய்ங்க. ரோட்டுக்கு வந்து போராடினாய்ங்க. இரும்பு பெண்மணி இந்திராவே நாக்கை கடிச்சுக்கிட்டு சட்டசபைய கூட்ட சொல்லிட்டாய்ங்க.

அதே என்.டி.ஆர் அரசை சந்திரபாபு கவுத்தப்ப அதே ஆந்திரமக்கள்கிட்டருந்து அந்த அளவுக்கு ரியாக்ஷன் வரலை. ஏன்?

வாழ்க்கை முறை மாறிப்போச்சு. மருத்துவத்துறைல முன்னேற்றம் காரணமா சாவு குறைஞ்சு போச்சு. சனம் பெருத்துப்போச்சு. கூட்டுக்குடும்பங்கள் உடைஞ்சு போச்சு. மக்க, மனுசா மொகத்தை பார்க்கவே எப்படா வரும் திருவிழானு இருந்த சனம் சலிச்சுக்க ஆரம்பிச்சது. குடும்பங்கள் சிதற விவசாய நிலம்லாம் பிரிஞ்சு பிரிஞ்சு சோளப்பொரி மாதிரி சிதறிப்போச்சு. விவசாயம் காஸ்ட்லி ஆயிருச்சு. இயந்திர மயம், தொழில் மயம், நகரமயம், மேற்கத்திய கலாச்சார தாக்கம், உலக மயம், தனியார் மயம் எல்லாமா சேர்ந்து மக்களுக்கு சொந்த பிரச்சினைகள் அதிகமாயிருச்சு

மக்களை சொல்லி தப்பில்லை.

Sunday, March 4, 2012

ஜாதகம் எப்டி இருந்தாலும் ஆண்மை இழப்பு


அண்ணே வணக்கம்ணே !
இதென்னடா டகுலா கீதுன்னு பேஜாராயிராதிங்க. அல்லா வீட்லயும் ப்ராண்டட் ஆட்டா தான் வாங்கறாய்ங்க. ஆனால் அல்லார் வீட்லயும் சப்பாத்தி ஒரே மாதிரியாவா கீது. நீங்க உபயோகிக்கிற எண்ணெய், ஸ்டவ், வைக்கிற ஃப்ளேம் , போடற உப்பு,அதனோட அளவு இப்படி எத்தனையோ சமாசாரம் சப்பாத்திய சப்பையாக்கிருது. அதை போலவே தான் ஜாதகமும். எந்த ஜாதகத்துல பிறந்தாலும் ஆண்மை இழப்புக்கு வழி இருக்கு.

ஒரு காலேஜ் குட்டிகளுக்கு ஒரு குட்டி பதம்ங்கறாப்ல லக்னாதிபதியோட நிலையை மட்டும் இன்னைக்கு பார்ப்போம்.

1-1
லக்னாதிபதி லக்னத்துலயே இருந்தா../ உச்சம் பெற்றால்:

மன்சனுக்கு சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துரும். தாளி "அஞ்சு மினட்டுக்காக" என்ன இவளுகளை கெஞ்சிக்கிறதுன்னு ஹோமோவா மாறலாம்/ சுய இன்பத்துக்கு அடிமையாகலாம்.

1-2
லக்னாதிபதி ரெண்டுல இருந்தா வெறுமனே பேசியே ஓய்ஞ்சு போயிரலாம்

1-3
லக்னாதிபதி 3 ல இருந்தா ப்ரதர்ஸ் /சிஸ்டர்ஸுக்கு அதிக முக்கியத்வம் கொடுத்து அவிகளை பிரியனுமேங்கறதுக்காவ திருமணத்தை தள்ளி போடலாம். பருவத்தே பயிர் செய்யாத காரணத்தால ஆண்மை இழப்பு ஏற்படலாம்.

1-4
லக்னாதிபதி 4 ல இருந்தால் பலான பரீட்சையில செயிச்ச பிற்காடுதேன் கண்ணாலம்/ டாக்டர் பட்டம் வாங்கினபிறவுதேன் கில்மான்னு திருமணத்தை தள்ளி போடலாம். அம்மா மேல அதீத பாசம் வச்சு வர்ரவ கொடுமை பண்ணா என்ன பண்றதுன்னு தள்ளி போடலாம்.

கச்சாமுச்சான்னு வாகனசுகத்தை அனுபவிக்கலாம்/ கண்ணாலத்துக்கு மிந்தியே ஊடு கட்டி கடனாளி ஆகி கடனை நினைச்சு நினைச்சே ஆண்மை இழப்புக்கு ஆளாகலாம்.

வாகன சுகத்தால இல்லற சுகம் எப்டி பாதிக்கப்படும்?

மனித உடலின் சராசரி உஷ்ண நிலை 98.4 டிகிரி. இதுல உயிரணு உயிர் வாழமுடியாதுனுதான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளிய விட்டிருக்கு.பாடி டெம்பரேச்சர் அதிகமா இருக்கிறப்ப இன்னம் கொஞ்சம் கீழே இறங்கி சூட்டை குறைக்கற ஏற்பாடும் இருக்குது.

ஆண்கள் 24 மணி நேரம் டென்டெக்ஸ் போட்டு/ஜீன் போட்டு விதைகளை அழுத்தி வைக்கிறதால விந்துல உயரணுக்களோட கவுண்ட் குறைஞ்சி போயிருது. இதுல தாளி விழிச்சிருக்கிற நேரம்லாம் வண்டி வாகனத்துல சுத்திக்கிட்டிருந்தா என்ன ஆகும்? இதான் கணக்கு.

1-5
லக்னாதிபதி அஞ்சுல இருந்தா சதா சர்வ காலம் தன்னை பற்றியே யோசிச்சுக்கிட்டு கனவுலகுல சஞ்சாரம். ஆகாய கோட்டை கட்டிக்கிட்டு அதுலயே வாசம். இப்டி இருந்தா என்ன ஆகும்? இவரோட உலகமே வேறயா இருக்கும்.

இங்கன யதார்த்தமா உள்ள உலகம் இவிகளை நெக்லெக்ட் பண்ணிரும். கண்ணாலமாவது கருமாதியாவது.மூச்.

1-6
லக்னாதிபதி 6 லருந்தா கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரின்னு அலையவே நேரம் சரியா பூடும். அந்த சூழல்ல கூட சிலர் "கற்பழிப்பு/கில்மான்னு" போறாய்ங்கன்னா அவிகல்லாம் தெய்வங்க.

1-7
லக்னாதிபதி 7 லருந்தா சதா சர்வ காலம் தன் மனைவி/அவளுடனான கில்மா பற்றியே யோசிச்சுக்கிட்டு கிடப்பாய்ங்க.

இப்படி கீறவனை பொஞ்சாதியே " வேலை வெட்டி எதுனா இருந்தா பாரு - நாலு இடம் சுத்திட்டு வா.. வெறுப்பா கீது"ன்னிருவா.

கண்ணாலத்துக்கு மிந்தி கனவுகள் அதிகமா இருக்கிறதால யதார்த்தம் என்னதான் பாசிட்டிவா அமைஞ்சாலும் கனவை போல இருக்காதே.

1-8

லக்னாதிபதி எட்டுல இருந்தா என்னாகும்? லக்னாதிபதின்னா ஜாதகர். எட்டாமிடம்னா இன உறுப்பு. கூட்டி களிச்சு பாருங்க . ரெண்டு பக்கமும் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி மாதிரி சக்தி விரயம் பண்ணி அசலான நேரத்துல இழந்த சக்தி வைத்தியர்களை தேடி ஓடவேண்டி வந்துரும். மேலும் எட்டுன்னா மரணம். ஜாதகர் முகத்துல பிணக்களை வரனும். அதுக்கு அவர் பல தாட்டி சாகனும். சாக தில்லில்லாதவுக சரணடையறது செக்ஸ்ல தானே.

(லக்னாதிபதி மத்த பாவங்கள்ள இருந்தா ஆண்மை இழப்பு /திருமண தாமதம் எப்டி ஏற்படும்.அதுக்கு என்ன ரெமிடின்னு அடுத்த பதிவுல பார்ப்போம்)

உடுங்க ஜூட்

Friday, March 2, 2012

திருமணம் -தாமதம்-உள்ள உடலியல் காரணங்கள்



அண்ணே வணக்கம்ணே..

நேத்திக்கு நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் ராசிகளில் ஆண் பெண் விவரத்தை தர்ரதா சொல்லியிருந்தன். இன்னைக்கு மொதல்ல அதை பார்த்துருவம்.

Thursday, March 1, 2012

ஆண்மை குறைபாடு:ஜோதிட காரணங்கள்


அண்ணே வணக்கம்ணே !

சமீபத்துல கில்மா கனவுகள்னு ஒரு மினி தொடர் ஆரம்பிச்சம். அதை டீல்ல விட்டுட்டம். ஏன்னா கனவுல்லாம் கலாம் சார் டிப்பார்ட்மென்ட்.

அதனாலத்தேன் திருமணத்தடைங்கற தலைப்பை பிடிச்சம். ஒரு ஜாதகர் தன் ஜாதகத்துல லக்னம் /லக்னாதிபதியோட பலம் போதாம உடல்,உள்ள காரணங்களால தன் திருமணத்துக்கு தானே தடையாக இருக்கக்கூடிய ஒரு அமைப்புக்கு என்ன பரிகாரம்னு இந்த பதிவுல பார்ப்போம்.

நாம என்னமோ இந்த கட்டத்தை தவளைப்பாய்ச்சல்ல கடந்துரலாம்னு தான் நினைச்சோம். ஆனால் ஜா.ரா பயத்துல கமெண்ட் போடலின்னாலும் மெயில் /ஃபோன்ல "விவரமா" எளுதச்சொல்லி ப்ரஷர். Read More