Monday, March 26, 2012

மாறன் சகோதரர்கள் அதிமுகவில் சேர்க்கை?

தமிழக பட்ஜெட்டை பற்றிய தலைவர்கள் கருத்தையெல்லாம் கேட்டிருப்பிங்க. எதிர்கால இந்திய ஜனாதிபதியா நம் கருத்தை சொல்லலின்னா எப்பூடி? ( ஜனாதிபதின்னா தாளி ரப்பர்ஸ்டாம்ப் ஜனாதிபதி இல்லிங்னா டைரக்ட் எலிக்சன்ல வர்ர பவர் ஃபுல் ஜனாதிபதி)

* ஒன்றாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இந்த ஆண்டில் இருந்து விலையில்லா காலணிகள் வழங்கப்படும். இந்த திட்டத்தால் 81 லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள்.

இதைவிட ஆரோட குழந்தைங்கல்லாம் 1-10 ஆம் வகுப்பு படிக்கிறாய்ங்களோ அவிகளுக்கு வேலை வெட்டிய கொடுத்திருக்கலாம். ( மேற்படி குழந்தைகளோட அப்பாமாரு ஆல்க்கஹாலிக்ஸா இருந்தா அவிகளுக்கு இலவச டி அடிக்சன் ட்ரீட்மென்ட் )

* ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தக பைகளும், ஆறாம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜியாமெட்ரி பெட்டிகள் மற்றும் உலக வரைபட புத்தகமும், ஒன்றாம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வண்ண பென்சில்களும் வழங்கப்படும்.

அடங்கொய்யால.. இன்டர்வெல்ல திங்கறதுக்கு கம்மர் கட்டும் , மாங்கா பத்தையும் தான் தரமாட்டாய்ங்க போல..

குழந்தைங்க படிக்கனுங்கற எண்ணம் அரசாங்கத்தை விட அப்பா அம்மாவுக்கு அதிகம்யா. அவிகளுக்கு வேலை வெட்டிய கொடுத்து - அவிக சம்பாதனையை டாஸ்மாக்கோ , இன்னபிற ப்ளாக் ஹோல்ஸோ முழுங்கிராம பார்த்துக்கிட்டா போதும்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்களும் வழங்கப்படும்.

பரீட்சை அட்டை, க்ளிப்,ரப்பரு தரமாட்டிங்களா ?

* அரசு ஊழியர்களுக்கான அதிகபட்ச வீட்டு வசதிக்கடன் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அதிகரிப்பு.

இதெல்லாம் சிமெண்ட் கம்பெனி, ஸ்டீல் கம்பெனி செழிக்க மறைமுகமா தர்ரதுங்கோ.. இதை விட இந்த பணத்தையும் காட்ல மேட்ல கொஞ்சம் நிலத்தையும் யூனியன் காரவுக கையில கொடுத்து ஊடு கட்டிக்க சொல்லலாம். ஒரு க்ரூப்பா போயி சீப் அண்ட் பெஸ்டா கட்டிக்குவாய்ங்க.

மேலும், ரூ.4 லட்சம் வரை காப்பீடு கொண்ட திருத்தப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

அது சரி .. கார்ப்போரேட் ஆஸ்பத்திரி காரவுக பிளைக்க வேணாமா? இதெல்லாம் குடிகளுக்கு மருத்துவ வசதி தர்ரதுலருந்து அரசாங்கம் கழண்டுக்க ஒரு வளி. அவ்ளதேன்.

* ஓய்வூதியதாரரின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக அதிகரிப்பு.

* முறைகேட்டை தடுப்பதற்காக, முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு `பயோமெட்ரிக் ஸ்மார்ட் கார்டு' மூலம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

தெரியாமத்தான் கேட்கிறேன். சனத்தொகையில அரசு ஊழியர், ஓய்வு பெற்ற ஊழியர் எத்தனை சதவீதம் இருக்காய்ங்க? அது ஏன் எந்த அரசாங்கம் வந்தாலும் இவிகளுக்கு மட்டும் ஊட்டு ஊட்டுனு ஊட்டிவிடறாய்ங்க.


* மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் பயன்பெறும் நோக்கில், இனிமேல் 45 சதவீத மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

குடிமக்கள் கவலையின்றி வாழ்க்கை நடத்த போதுமான வருவாயுடன் கூடிய - சரியான வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்தா அந்த சமுதாயம் மாற்றுத்திறனாளிகளை கை விட்டுருமா? இதை கூட ஒரு அரசாங்கம் செய்யனுமா?

மக்களுக்கு கொட்டையடிச்சு - சமுதாயத்தை -சமூக உணர்வை சமாதியாக்கிட்டு ஆயிரம் ரூபா உதவிதொகை கொடுத்துட்டா அந்த மாற்றுத்திறனாளியை இன்றைய சமுதாயம் வாழ விட்டுருமா?

* வீட்டு வசதி கடன் பெற்றுள்ள குறைந்த வருவாய் பிரிவினருக்கு 75 சதவீதமும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு 50 சதவீதமும், உயர் வருவாய் பிரிவினருக்கு 25 சதவீதமும் வட்டி தள்ளுபடி அளிக்கும் வகையில் புதிய வட்டி தள்ளுபடி திட்டம் அறிமுகம்.

இந்த வீடு கட்டற பிசினசே சமுதாயத்தின் மீது நம்பிக்கையில்லாதவன் செய்ற வேலை . வீடுங்கறதே டெட் கேப்பிட்டல். சிமெண்ட் கம்பெனி ,ஸ்டீல் கம்பெனி செழிக்கும். கட்டினவன் சாகிறவரை கடன்ல சாவான். இந்த சைக்காலஜியே புரியலைங்ணா..


* குறைந்த நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகள் கட்டுவதற்காக தளபரப்பளவு (எப்.எஸ்.ஐ) குறியீடு அதிகரிக்கப்படும்.

அரசாங்கம் என்ன சொல்லுதுன்னா வாடகை வீட்ல நீ வசிக்க முடியாது. ரென்ட் கண்ட் ரோல் ஆக்ட் எல்லாம் எங்களால அமல் படுத்த முடியாது . ஹவுஸ் ஓனர் ஹெராஸ்மென்ட்ல இருந்து உன்னை காப்பாத்த மாட்டோம். முடிஞ்சா நீயே ஊடு கட்டிக்கோ.இன்னம் முடிஞ்சா ரெண்டு போர்ஷனா கட்டி நீயும் ஓனராகி வாடகைதாரனை டார்ச்சர் பண்ணு..

* நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும்.
பத்தாயிரம் கொடுத்தா நான் ஒரு காதை அறுத்துக்கறேன். இதைவிட எங்க ஸ்டேட் போல அடுக்கு மாடிக்கட்டிடம் கட்டி கொடுக்கலாம். ( ராஜீவ் க்ருஹகல்ப்பா)

* அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்படுகிறது.

அது சரி .. விவசாயி தற்கொலை ஆச்சு, நெசவாளி தற்கொலை ஆச்சு . இனி ரியல் எஸ்டேட் காரனும் தற்கொலை பண்ண போறான்.

இதையெல்லாம் ஆந்திராவுல பார்த்துட்டோம்ணே. விக்கிறவன் சாஸ்தியாவான்.வாங்குறவன் குறைஞ்சுருவான். மனைய வாங்க வந்தவன் ஏறின மதிப்பை அசல் மதிப்புல குறைச்சு கேட்பான். விக்கிறவனுக்கு வவுத்து வலின்னா வவுறெரிஞ்சுக்கிட்டே பதிவு பண்ணித்தருவான்.

* 10 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு.
எங்க பக்கம் காப்பீடு செய்தவுகளுக்கு நஷ்ட ஈடு கொடுத்தாய்ங்களே ஏக்கராவுக்கு 23 ரூ 12 பைசா .போங்கடா நீங்களும் உங்க காப்பீடும் .நஷ்ட ஈடும்.

* விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரம் கிடைப்பதற்காக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு வழங்கப்படும் வட்டி இல்லா கடன் ரூ.150 கோடியாக உயர்வு.

ஆமாங்ணா இயற்கை உரம், செலவில்லா விவசாயம்னு நம்மாழ்வார் மாதிரி பார்ட்டிங்க தொண்டை வறள கத்தி -கை வலிக்க எழுதிக்கிட்டிருந்தாய்ங்களே.. அந்த ரூட்ல எதுவும் அறிவிப்பு வரலியா?

* விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

கடேசில தள்ளுபடி பண்ணிருவிங்களா?

* கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும்.

விவசாயம் இருக்கிற இருப்புல எவனும் செலுத்த முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டு என்னா வில்லத்தனம்?

முறையா செலுத்தனும்னா உங்க அட்டூழியத்தையெல்லாம் மீறி விவசாயம் லாபம் தரனுமே. இல்லின்னா மூணு வட்டிக்கு வாங்கித்தான் செலுத்தனும்..

* 12 ஆயிரம் பயனாளிகளுக்கு கறவை பசுக்களும், 11/2 லட்சம் ஏழை பெண்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.

சந்தையிலருந்து வீடு வரைக்குமாவது வந்து சேருமா? வழியலயே புட்டுக்குமா?

* மின்சக்தியில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், மின்சாரத்தை சேமிக்கும் சி.எப்.எல். பல்புகள், தீப்பெட்டி தொழிற்சாலையில் பயன்படுத்தும் மரக்குச்சிகள், மரப்பட்டைகள், சானிடரி நேப்கின் ஆகியவற்றின் மீதான மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.

இது ஒன்னுதான் ஏதோ உருப்படியான அம்சமா தெரியுது.ஆமாம் சைக்கிளை என்ன பண்ணினாய்ங்க?

* தமிழகம் அடிக்கடி இயற்கை இடர்பாடுகளை சந்தித்து வருவதால் அவற்றை திறமையாக சமாளிக்க `மாநில பேரிடர் மீட்பு படை' ஏற்படுத்தப்படும்.

இந்த படை மணல் கொள்ளைய தடுத்து நிறுத்துமா? மரம் வெட்டறதை தடுக்குமா? ஏரி ,குளம்,கம்மாயை ஆக்கிரமிக்கிறதை தடுக்குமா? கக்கா வருமுன் செல்க கழிவறைக்கே செல்லாக்கால் காலோடு போகும் கக்காவே..

* நகர்ப்புறங்களில் வறுமையைப் போக்க `தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம்'. ரூ.200 கோடியில் இந்த திட்டம் தொடங்கப்படும்.

டாஸ்மாக் கடையில சுண்டல் கடை போட்டுக்க தலா 2000 தருவாய்ங்களோ?

* தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான உதவி மையங்கள் ஒரு கோடியே 93 லட்சத்தில் அமைக்கப்படும்.

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையேன்னானாம். தனியார்ல வேலை வாங்கி தர நீங்க என்ன இடையில நாட்டாமை.அதுக்கு அரசுப்பணம் சவரம்..

* மின்சாரத்தை சேமிக்கும் வகையில் 14 லட்சத்து 62 ஆயிரம் குடிசை வீடுகளுக்கு இலவச சி.எப்.எல். பல்புகள் வழங்கப்படும்.

ஹ்ம்.. பரவால்லை

* 60 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.180 கோடி செலவில் சூரிய மின்விளக்குகள். அதுபோல ரூ.50 கோடி செலவில் சூரிய ஒளி மின்வசதியுடன் 20 ஆயிரம் தெரு விளக்குகள்.

ஃப்யூஸ் போனதும் குண்டு பல்பு போட்டுட்டா வேட்டியை உருவிரனும்.

* தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
அதுசரி டென்டர் -கான்ட் ராக்ட் எல்லாம் உண்டுதானே .. வெளங்கிரும்..

* சென்னையில் ரூ.100 கோடி செலவில் பிளாஸ்டிக் சாலைகள்.
திறந்து வைக்க கலாமை கூப்டுங்க.. தலைய கலைச்சு விட்டுக்கிட்டு உடனே வந்துருவாரு.

* சென்னையில் விரைவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அரசு கேபிள் டி.வி. தொடங்கப்படும்.
மாறன் ப்ரதர்ஸ் அதிமுகவுல சேர்ந்துட்டா இதுக்கும் மங்களம்தான்

* ரூ.548 கோடி செலவில் புதிதாக 3 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்.
அடடே இதுக்குத்தான் பஸ் கட்டணத்தை ரெட்டிப்பா உசத்தினிங்களா? கமிசன் பணம்லாம் கறாரா வாங்கிருங்க. பய புள்ளைக ஏமாத்திரப்போறானுவ.

* குழந்தைகளுக்கு பண்டை இலக்கியங்களில் உள்ள நற்பண்பு, நீதிநெறிக் கருத்துகளை கதைகள் மூலமாக சொல்லித் தர முக்கிய கோவில்களில் சனிக்கிழமைதோறும் ஆன்மீக, நீதிநெறி வகுப்புகள், சிற்றுண்டியுடன் கற்றுத் தரப்படும்.

கதை கருத்தெல்லாம் சரி ..வென்யூதான் கோயிலுன்னா ஒரு மாதிரியா டர்ராகுது. "அவாள்" என்டர் ஆனா குடுமியறுப்பு அது இதுன்னு அக்கப்போராயிருமே.

* இலங்கை அகதிகள் முகாம்களில் ரூ.25 கோடி செலவில் 2,500 வீடுகள் கட்டித் தரப்படும்.
அது ஏன் முகாம்லயே கட்டனும்?

தகவல் உபயம்: தமிழ் குறிஞ்சி