Wednesday, February 29, 2012

திருமண தடை: உடல் ,மனத்தடைகள்


அண்ணே வணக்கம்ணே !
ஒரு படத்துல வடிவேலு "ஒரு மனுசன் வீட்ல இருந்து வெளிய வந்து வீடு சேர்ரதுக்குள்ள எத்தீனி கண்டம்டா சாமீ"ன்னு புலம்புவார். கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து பதிவுக்கு வர்ரதுக்குள்ள எத்தீனி டைவர்சனு?

நேத்திக்கு சொன்னாப்ல ஃபேஸ் புக் காரன் ஆப்படிச்சுட்டான். மொபைலுக்கு கோட் அனுப்பறேங்கறான். கோடும் வரமாட்டேங்குது.. லங்கோடும் வரமாட்டேங்குது. இப்பம் என்னடான்னா கோட் லிமிட் தாண்டி போச்சு ஃபர்ஸ்ட் நேம் - லாஸ்ட் நேம் ஃபோட்டோ -டேட் ஆஃப் பர்த் எல்லாம் இருக்கிறாப்ல ஒரு ஐ டி ப்ரூஃப் அனுப்பனுமாம்.

ஜா.ரா ரேன்ஜுக்கு இல்லின்னாலும் நமக்கும் ரெண்டு மூணு பேரிருக்கு. பேங்க்லயே ரெண்டு பேரு (அஃபிடவிட் கொடுத்திருக்கம்) என்னா இழவு இதெல்லாம்? அல்லாரையும் பிளாட்ஃபார வியாபாரி மாதிரி வாங்க வாங்கன்னு ஃபேஸ் புக்குக்கு கூப்டாச்சு. இப்பம் நாமே போகமுடியாத ஆயிருச்சு ( சுமார் 4,000 பேரை கூப்டிருக்கம் - நம்ம கான்டாக்ட்ஸ் அப்படி) பார்ப்பம் பான் கார்ட்ல முருகன் அலியாஸ் முருகேசன் கொடுத்தாப்ல ஞா. நாளைக்கு த்தேன் இந்த இழவை எடுக்கனும்.

நிற்க திருமண தாமதம் மேட்டரை மேரீட் லைஃபுக்கு அப்ளை பண்ணிக்க சொல்லி சொல்லியிருந்தம்.அது எத்தீனி பேரு கண்ல பட்டதோ தெரியலை.

இதுவரை மேற்படி மேட்டருக்கு அப்பா,அம்மா , உ.பிக்கள் காரணமா லொள்ளு இருந்தா என்னா பண்றதுன்னு பார்த்தோம். இன்னைக்கு அசலான மேட்டரு தன் திருமணத்துக்கு தானே தடையா இருக்கிறது. அஸ்கு புஸ்கு அதெப்படினு கேப்பிக. சொல்றேன். Read More


Thursday, February 16, 2012

இந்துத்வா பேசும் இழி பிறவிகள் ..


ஒரு காலத்துல சுஜாதாவும் ரஜினியும் நமக்கு ரெண்டு கண்ணு மாதிரி. அப்பாறம் சுஜாதாவோட எழுத்துக்கள் போன்டா மாதிரி - அதுல ஒளிச்சு வச்சிருக்கிற பிராமணீயம் எலி விசம் மாரின்னு தெரிஞ்சுக்கிட்டு கழண்டுக்கிட்டோம்.

அதே போல ரஜினி மேட்டர்ல அவரை "அவாள்" அண்டர் டேக் பண்ணிட்டாய்ங்கன்னு தெரிஞ்சு ஆளை விட்டா போதும்னு ஜூட் விட்டுட்டம்.

கில்மா கனவுகள் - மனைவி/காதலி உங்க டீலிங் எப்படி மேட்டரையெல்லாம் கடாசிட்டு இன்னாபா இது திடீர்னு ரஜினி -சுஜாதா மேல லவ்வுன்னு கேப்பிக.சொல்றேன்.

உஜிலாதேவியை ஏற்கெனவே உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்தம். ஆனால் எலுக்க தோலு தெச்சி ஏடாதி உத்தி்க்கினா நலுப்பு நலுப்பேங்கற மாதிரி மாற்றமே இல்லை. இன்னம் அழுக்கு தான் சேர்ந்திருக்கு.

மொதல்ல மேற்படி தெலுங்கு கவிதைக்கு ( வேமனா) அருத்தம் சொல்லிர்ரன் .எலித்தோலை கொண்டாந்து வருசம் துவைச்சா கூட விடாது கருப்புங்கறது அருத்தம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டுங்கறாப்ல சுஜாதாவோட கருத்தை மேற்கோள் காட்டத்தேன் இத்தீனி மொக்கை.

அவ்ரு இலங்கை பிரச்சினைய பத்தி சொல்லும் போது "அங்கன மெஜாரிட்டி மக்களுக்கு மைனாரிட்டி ஃபீலிங் இருக்கு"ன்னாரு.

அதே ஃபீலிங்கை இந்தியாவுல நம்மாளுங்களுக்கு ஏற்படுத்த ஒரு பெரிய நெட் ஒர்க் வேலை செய்யுது. அதுல நம்ம உஜிலாவும் ஒரு பாகமா? அல்லது தன்னார்வ தொண்டரா தெரியலை.

நாலணா சோசியம் , அரையணா மாந்திரீகம் தெரிஞ்சு வச்சுக்கிட்டா "உலகத்தை உய்விக்க வந்த" கணக்கா நம்மாளுங்களுக்கு ஃபீலிங் வந்துருது. நாம சோசியரா இருந்தாலும் ஃபர்ஸ் அஃப் ஆல் "மனிதன்" ( ரஜினி ஸ்டைல்ல படிங்க)

உஜிலா சமீப காலத்துல ஒரு பதிவை போட்டிருக்காரு... அதெல்லாம் அவரோட பர்சனல் ஃபீலிங்ஸ்னா அவருக்கு நம்மோட ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒரு வேளை உண்மை தெரிஞ்சும் சர்வைவலுக்காகவோ / கவனம் பெறவோ எழுதியிருந்தா கொஞ்சம் தட்டிக்கேட்டே ஆகனும். இல்லாட்டி ஒட்டு மொத்த இந்துமக்களின் எண்ணமும் இதான்னு பிற மதத்தினர் நினைச்சுரக்கூடிய வாய்ப்பிருக்கு,

//இந்தியா மத சார்பற்ற நாடு நமது அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் இப்படி எல்லோருமே மேடையில் வாய்வலிக்க கூவுகிறார்கள் மதசார்பற்ற நாடு என்றால் என்ன?//

நாட்டுக்கு ரெம்ப தேவையான மேட்டருதேன். ரெம்ப பொறுப்பா ஆரம்பிக்கிறாரு. தொடர்ந்து பாருங்க. எல்லாமே விஷம்.

//அதன் தாத்பரியம் என்ன என்பது இவர்களில் யாருக்காவது தெரியுமா? யாராவது ஒருவர் அந்த உண்மையை உணர்ந்திருக்கிறார்களா? அல்லது அதன் உண்மை பொருளை ஒத்துக்கொள்வார்களா?//

ய..ப்பா டபுள் ஸ்ட் ராங் டீ அடிச்சாப்ல கீது ..ரெம்ப தியரிட்டிக்கலா போறாப்ல ஒரு பம்மாத்து ..

//ஒரு அலுவலகத்தில் நாலுபேர் வேலை செய்கிறார்கள்//

என்னமோ வைட் ஆங்கிள்ள , பேர்ட் வ்யூல கிளிக்கப்போறாருன்னு நினைச்சா ஒடனே டீக்கடையில பேசற கணக்கா இறங்கிட்டாரு ..

//நாலு பேரும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் பல பண்பாடுகளை உடையவர்கள் அவர்களுக்கு அதிகாரியாக இருக்கும் ஒருவர் எப்படி நடந்து கொள்வார் அவர் இவர்களிலிருந்து வேறுபட்ட மொழி கலாச்சாரம் கொண்டவராக இருந்தாலும் தனக்கு கீழ் உள்ள நாலு பேரையும் சமமாக நடத்துவார் அவர்களிடம் பாகுபாடு அற்ற உறவு நிலையையே பாராட்டுவார் அப்போது தான் அந்த அலுவலகம் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக இயங்கும் மாறாக யாரவது ஒரு ஊழியரிடம் தனிக்கவனம் செலுத்தபடுமேயானால் மற்றவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் அமைதியான அலுவலகம் போர்களமாக மாறிவிடும்//

அப்படியே ஹார்ட்டை டச் பண்றாப்ல ஒரு உதாரணம். கொய்யால இதையே ஒரு அம்மா அவளுக்கு நாலு குழந்தைங்க. அதுல ஒன்னுக்கு போலியோன்னு ஆரம்பிச்சா என்னாகும்? அவிக எண்ணம் ஈடேறாதுல்ல.

ஏதோ அங்கே ஒன்னு இங்கே ஒன்னுன்னு குண்டு வெடிச்சாலும் சனம் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கம். உஜிலா மாதிரி பார்ட்டிங்களோட உள்ளார்ந்த எண்ணம் என்னடான்னா அங்கிங்கெனாத படி மதத்தின் பேரால் குத்திக்கிட்டு சாகனும். அதேன். அதுக்கு தேன் இந்த மாதிரி எடுப்பு -தொடுப்பு -தொகையறாவெல்லாம்..

//எதாவது ஒரு மதத்தாருக்கு மட்டுமே சலுகைகளை வழங்கி மற்ற மதத்தினரை நோகடிக்க செய்து தங்களது மதசார்பின்மையை வெளிக்காட்டி கொள்கிறார்கள் //

ஒரு மதத்தாருக்கு சலுகைகள் வழங்கறாய்ங்கன்னா அது மதம் சார்ந்த காரணங்களுக்காக இல்லே. நாட்டின் மக்கள் தொகையில் பின் தங்கியிருக்கிற க்ரூப் ஆஃப் பீப்புளை கை தூக்கி விடத்தேன்.

நாம நல்லா இருக்கனும்னா நம்மாளு ஒவ்வொருத்தனும் நல்லா இருக்கனும். 100 பேர்ல 99 பேர் நல்லாருந்து ஒருத்தன் கெட்டிருந்தாலும் ( சமூக,பொருளாதார அடிப்படையில்) ஒட்டு மொத்த நாடும் சுடுகாடு ஆக ரெம்ப காலம் பிடிக்காது.

// மற்ற மதத்தினரை நோகடித்து//

இன்னைக்கிருக்கிற நிலைமையில தன் ஓட்டுக்கு தானே வேட்டு வச்சுக்கறாப்ல எந்த அரசியல் வாதிக்கும் எந்த க்ரூப்பையும் நோகடிக்கனும்ங்கற எண்ணம் கிடையாது. முன்னேற்றம் பரவலாகனும் . அதுக்கு எந்த க்ரூப் பின் தங்கியிருக்கோ அதை கை தூக்கி விடத்தேன் ட்ரை பண்றாய்ங்க.

அதை பார்த்து ஆரும் நோகறதில்லை. அந்த சலுகை தங்களுக்கும் கிடைக்காதான்னுதேன் ஏங்கறான்.
( பிற்பட்டோர் பட்டியல்ல சேர்க்கனும்னு டிமாண்ட் பண்ணாத சாதி எதுனா இருக்கா?)

//எங்கேயும் இல்லாத கொடுமை இந்த நாட்டில் மட்டும் தான் இருக்கிறது இங்குள்ள மக்கள் பெருவாரியானவர்கள் இந்துக்கள் இவர்களில் ஓட்டுகளை பெற்று தான் பதவிக்கு வருகிறவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள் //

த பார்ரா அப்பம் அன்று முதல் இன்று வரை சென்டர்லயும் - ஆல் ஆஃப் தி ஸ்டேட்ஸ்லயும் பா.ஜ.க தான் ஆளனும். உடைச்சு சொன்னா காதலர் தினத்துல காதலர்கள் பின்னாடி மோந்து கிட்டு போற க்ரூப் தான் ஆளனும். இதுக்கும் இந்துத்வாவுக்கும் என்ன சம்பந்தமோ புரியலை.

மதக்கலவரத்தை உருவாக்க காண்ட்ராக்ட் எடுத்து "வேலை பார்க்கிற" இவிகளை விட காதலர்கள் அப்படி என்ன பஞ்சமா பாதகம் செய்துர போறாய்ங்களோ தெரியலை.

கட்டிலறையில் கறை படும் உடல் குளியலறையில் சுத்தமாயிரப்போகுது. டோண்ட் கண்டம் செக்ஸ் .யூஸ் காண்டோம்ஸ்.

அ ந் நிய முதலீடு மட்டும் வேணம். அ ந் நிய கலாசாரம் வேணாம்னா எப்படி?

//அதிகாரம் கைக்கு வந்ததும் தனக்கு யார் ஒட்டு போட்டார்களோ அவர்களுக்கு விரோதமாக நடப்பது தான் தங்களது கடமை என்பது போல நடந்து கொள்கிறார்கள்//

எல்லா கட்சியும் - ஏன் பா.ஜ.க உட்பட மைனாரிட்டி மக்களின் நலனை தாங்களும் நாடுவதா சொல்லித்தான் ஓட்டுக்கேட்கிறாய்ங்க. அப்பம் மெஜாரிட்டி இந்து மக்கள் தேர்தல்ல ஓட்டே போடக்கூடாதே.

//இந்து மதத்தை தாக்குவதிலும் கேலி செய்வதிலும் இவர்களே முன்னிற்கிறார்கள்//

தமிழகத்துல ஒரே ஒரு திமுகவை தவிர அதுலயும் கலைஞரை தவிர ஆல் இண்டியா லெவல்ல வேற ஆரும் கேலி பண்றதில்லிங்ணா. அது கூட அவருக்கு உள்ள மனசாட்சி உறுத்தல்களுக்கு ஒரு அவுட் லெட்டா வரும். ஆருனா அவரை இர்ரிட்டேட் பண்ணா நூலை பிடிச்சி விளையாடுவாரு. புரணங்களை புகுந்து அடிப்பாரு.மத்தபடி அவிக குடும்பம் மொத்தம் எப்பமோ "அவாள்" கட்டுப்பாட்டுக்கு போயிருச்சு.

//ஒரு அரசியல் தலைவர் எந்த அளவு இந்து மதத்தை தாக்குகிறாரோ அந்த அளவே அவர் முற்போக்குவாதி என்றும் சமூக நீதி காவலர் என்றும் வர்ணிக்கப்படுகிறார்//

உஸ்.. அப்பா .. இப்பமே கண்ணை கட்டுதே.. வர்ணிக்கப்படுகிறார்னு மொட்டையா சொன்னா எப்படி? மீடியா வர்ணிக்குதா? ( 99.99 சதம் அவாள் கையிலதானே இருக்கு - எம்.டி சூத்திரனா இருந்தாலும் அவாள் போட்ட ராஜ பாட்டையிலதானே பத்திரிக்கை நடக்குது)

மக்கள் வர்ணிக்கிறாய்ங்களா? (இதான் உண்மைன்னா மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு பொத்திக்கிட்டு போக வேண்டியதுதானே..

//திரைக்கு பின்னால் கோயில் கோயிலாக ஏறி இறங்குபவர்களும் குலதேவதை கோயில்களுக்கு அபிசேக ஆராதனை செய்கிறவர்களும் மத குருமார்களின் பாதங்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குபவர்களும் //

அப்பம் இதெல்லாம் அடாத செயல்னு இன்டைரக்டா ஒத்துக்கிடறிங்க வாழ்த்துக்கள்

//திரைக்கு முன்னால் வருகிற போது தாங்கள் என்னவோ பரம்பரை பகுத்தறிவு வாதிகள் என்பது போல நாடகம் ஆடுகிறார்கள் இந்த நாடகம் மனசாட்சிக்கு விரோதமானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் //

அவிகளை தானே இந்து மதக்காவலர்கள் /அவாள் எல்லாம் ஆலவட்டம் போட்டுக்கிட்டிருக்கிறாய்ங்க. இப்படியா கொத்த டபுள் கேம் பார்ட்டிங்களுக்கு யாகம் ,ஹோமம் நடத்தப்படாதுன்னு அறிவிக்க சொல்லுங்க (அஸ்கு புஸ்கு பொளப்பு கெட்டுருமேம்பாய்ங்க)

//ஆனாலும் மனம் என்பதே தேவையற்ற பொருள் என்று கருதிவிட்ட அவர்கள் அதன் சாட்சிக்கு பயப்படவா போகிறார்கள்//

மனதிற்கு பிரச்சினை வரும் - மேற்கத்திய கணிப்பு
மனமே பிரச்சினை - கீழை நாடுகளின் கண்டுபிடிப்பு

//ஒரு மனிதனிடமுள்ள கடவுள் நம்பிக்கையும் மத ஈடுபாடும் அவனை குற்றங்கள் செய்ய அச்சப்படுத்தும் சிறிதளவாவது நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருப்பான் என்று உளவியல் சாஸ்திரம் சொல்கிறது //

அப்ப ஏங்க ஜெயேந்திரர் , நித்யானந்தா எல்லாம் காபரே ஆடறாய்ங்க - . ஆளை வச்சு போட்டு தள்றாய்ங்க

//அப்படி இல்லாதவர்கள் எதை பற்றியும் கவலை இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எத்தகைய பாதக செயலையும் செய்ய துணிவார்கள் என்றும் சொல்லப்படுகிறது//

த பார்ரா தந்தியில நியூஸ் ரேஞ்சுக்கு போயிட்டிங்க. நீங்களே நம்பாத ஒன்னை விமர்சிச்சு என்ன ஆகப்போகுது . நோ கமெண்ட்ஸ்.

//இதன் அர்த்தம் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தீமை செய்ய மாட்டார்கள் என்பதல்ல செய்வதற்கு சிறிதாவது தயங்குவார்கள் என்பது தான் //

தயங்கி செய்யறானா - தயங்காம செய்யறானாங்கறதெல்லாம் தேவையில்லாத தகவல். செய்றானா இல்லியா அதான் கேள்வி. செய்வாங்கறது உங்க பதில். வாழ்த்துக்கள்.

//மற்ற மாநிலங்களை விட நமது தமிழ் நாட்டில் நாத்திகம் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்வது பெருமை என்று சில மேதாவிகள் நினைக்கிறார்கள் மேடையில் ஏறிவிட்டால் நாத்திகம் பேசினால் தான் கைதட்டல் கிடைக்குமென்று பலர் தப்புகணக்கு போடுகிறார்கள்//

அதிக கைத்தட்டல் கிடைக்குதுன்னா என்னா அருத்தம். சனம் அதை ஏத்துக்கிடறாய்ங்கன்னுதானே அருத்தம். ஆன்மீக வாதிகள்னு க்ளெய்ம் பண்ணிக்கிறவுக மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை போதிச்சிருந்தா கைத்தட்டல் எப்படி கிடைக்கும்?

//இதனால்தானோ என்னவோ மற்ற மாநிலங்களை விட நமது தமிழநாட்டில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது//

அய்யய்யோ.. அப்படியா? ஊழலுக்கு ரூட்டு போட்டுக் கொடுத்த துறைச்செயலர்கள் , பி.ஏக்கள் ,ஆடிட்டர்கள் இவிகளுமா நாத்திக வாதிங்க..

//பல நேரம் இங்குள்ள அரசியல்வாதிகளை பார்த்து தான் மற்ற அரசியல் வாதிகள் முறைகேடு செய்வதற்கே பழகி கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது//

...சொல்லப்படுகிறது.. உஜிலா ! நீங்க என்ன தந்தி ரிப்போர்ட்டரா? இப்படி நழுவறிங்க..

//அந்த கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை //

அப்பம் ஒன்னு பண்ணுவமா? நாத்திகம் பேசறவுகளையெல்லாம் தூக்குல போட்டுரலாம்.. இருக்கிற சூத்திர பயலுவல்லாம் பொஞ்சாதி தாலிய கூட கழட்டி உண்டியல்ல போடுவான். அந்த உண்டியல் பணத்துல நாடெங்கிலும் ப்ராஞ்ச் ஆஃபீஸ் ஓப்பன் பண்ணி "அவாள்" வாழ பண்ணுவம். இந்தியா உருப்பட்டுரும்..


//நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கும் உயர்ந்த மனப்பான்மை எப்போதுமே கிடையாது//

எல்லா மதத்தையும் சமமா பார்த்தா நமக்குத்தேன் ஆப்பு. உதாரணத்துக்கு பல லட்சம் கோடி வருமானம் இருக்கிற கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிட்டா கர்ப கிரகத்துல வச்சு மட்டுமில்லை - கர்பகிருகத்துல இருக்கிற சாமிக்கே கெட்ட காரியம் பண்ணிருவாய்ங்க.

//சிறுபான்மை மக்களுக்கு அதிகப்படியான தனிச்சலுகைகள் கொடுப்பதாக சொன்னால் அவர்கள் அனைவரும் தனக்கு பின்னால் அணிவகுத்து நிற்பார்கள் என்ற எண்ணத்திலும் அனைத்து ஓட்டுகளும் தனக்கு மட்டுமே கிடைக்குமென்ற ஆசையிலும் போலியான கரிசனத்தை அந்த மக்கள் மீது காட்டுவது//

உம் கருத்தே ஒட்டு மொத்த இந்து மக்களின் கருத்துன்னா சி.பா.ம. சலுகைகளை எதிரிக்கிறவுக எல்லாம் பா.ஜ.க பின்னாடி அணிவகுத்திருக்கனுமே .. இன்னமும் ஏன் அந்த கட்சி சோனியாவே கிடக்கு.

//அவர்கள் இந்து மதத்தை தாக்க வருகின்ற போது கூட கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள்//

மதத்தை ஏங்க தாக்கப்போறாய்ங்க. ஓ .. மதமாற்றத்தை சொல்றிங்களோ ? இந்து மதத்துல இருக்கிற சாக்கடை/மல அடைப்பையெல்லாம் நீக்கி , தூக்கி போட்டு - சாதியை சமாதியாக்கி - ஆன்மீக புரோக்கர்களை மத பிரஷ்டம் பண்ணுங்க இந்து மதம் சேஃப். முதற்கண் இப்படியா கொத்த கொம்பு சீவும் பதிவுகளை எழுதறதை விடுங்க..

( கிளிப்பு தொடரும்)

Wednesday, February 15, 2012

காதலி/ மனைவியுடன் உங்க டீலிங் எப்படி?


அண்ணே வணக்கம்ணே !
இதுக்கு முந்தில்லாம் ஒரு மேட்டர் மாட்டினா அதை பல கோணங்கள்ள அலசி ,பிழிஞ்சு காயப்போட்டு இஸ்திரி போட்டுருவம்.ஆனால் என்னாச்சுன்னே தெரியலை சுஸ்தா இருக்கு. ( உடனே ஜா.ரா அலியாஸ் சுன்டு ஆகா சுடுகாட்டுல நாங்க போட்ட பூஜை தான் காரணமுன்னு டிக்ளேர் பண்ணுவாய்ங்க. அதெல்லாம் டுபுக்கு)

அசலான காரணம் என்னன்னா பணத்துக்கு முக்கியத்துவம் தர்ர பார்ட்டிங்களை கிராஸ் பண்ணும்போது இப்படி ஒரு மன நிலை ஏற்பட்டுரும்.

அடுத்த நாளே இதுக்கு மாறான மனிதர்கள் கிராஸ் ஆனா நம்ம கான்ஷியஸ் உச்சத்துக்கு போயிரும். ப்ரஸ் காரன் பேப்பர் மேட்டர்ல ஒரு எண்ணூறு ரூபா ஆட்டைய போட்டுட்டான். ரேப்பர் ஒன்னுக்கு 3 வருதுன்னா ரெண்டுதான் வரும்னு தீட்டிட்டான்.

அப்பாறம் நாம கோதாவுல இற்ங்கி 3 க்கு அஜீஸ் பண்ணி மிச்சம் பிடிச்சம். இன்னொரு பிக்காலி லாட்டா கொடுத்த வேலைக்கு பாட்டா கம்பெனி கணக்கா பத்து காசு குறைக்கமாட்டேன்னு அடம்பிடிச்சான். ஒரே நாள்ள 3 சம்பவங்கள் .நம்முது கடகலக்னமாச்சா இந்த ரேஞ்சு மன்சாளை பார்த்தா படா பேஜாரா பூடுதுப்பா.

அல்லாருமே அல்லார் கிட்டேயும் அல்லா மேட்டர்லயும் பணத்தை மட்டும் பார்த்திருந்தா ஒலகம் நாறிப்பூட்டிருக்குமே. எஸ்.ரா சொல்றாரு கிளைவ்/ ட்யூப்ளே ரெண்டு பேருக்கும் கடேசியில சமாதி கூட மிஞ்சலியாம். சரி உடுங்கண்ணா மேட்டருக்கு வரேன்.

ஒரு மன்சன் எப்படியா கொத்த பொண்ணை கண்ணாலம் கட்டிக்குவாங்கற மேட்டரை போலவே அவன் தன் லவ்வரு /பொஞ்சாதிய எப்டி டீல் பண்ணுவாங்கற மேட்டரும் அவன் ஜாதகத்துலயே அடங்கியிருக்குங்ணா. அதனோட விளைவு எப்டி இருக்கும்னு குத்து மதிப்பா சொல்லலாங்ணா. அந்த வேலையத்தான் இந்த பதிவுல சொல்லப்போறோம்.

லக்னம் முதற்கொண்டு (அதையும் சேர்த்து எண்ணும் போது 7 ஆவதா வர்ர ராசிதேன் களத்ர பாவம் இதான் லவ்வரு ,பொஞ்சாதியை எல்லாம் காட்டற பாவம்.

இந்த பாவம் எந்த ராசி/அதுல ஆரு இருக்கா / ஆரோட சேர்ந்திருக்கா / அந்த ராசிக்கு ஆரு அதிபதி/அவரு எங்கன இருக்காரு/இதுவரை சொன்ன கிரகங்கள் அந்த ஜாதக லக்னத்துக்கு சுபரா பாபரான்னு 1008 கான்செப்டை வச்சு இறுதி முடிவை எடுக்கனும்.ஆனா இதை எல்லாம் விலாவாரியா எளுதினா ரெம்ப டெக்னிக்கலா போயிரும். உங்க மூளை பஜ்னு ஆயிரும் ( நன்றி:சுஜாதா)

அதனால உத்தாரா/ குன்ஸா /ரஃபா /கொள்கையளவுல களத்ர பாவாதிபதி எங்கன இருக்காருங்கற ஒரே ஒரு பாய்ண்டை வச்சு இந்த பதிவை எழுதறேன்.

1.களத்ராதிபதி லக்னத்தில் நின்றால் :

அவர் லக்னாத் சுபரானால் விஞ்ஞானிகள் சொல்றாப்ல அவிகளுக்கு சம்பந்தப்பட்ட அவுட்லைன் உங்க மைண்டுக்குள்ளயே இருந்து அவிகளை பார்த்ததும் சர்ருன்னு மேலுக்கு வரும். தலைக்கு மேல வச்சு கொண்டாடுவிங்க. தன்னைப்போலத்தான் அவளும்னு சமம்மா பார்ப்பிங்க

பாபரானால் அவிக இறக்கி வைக்கமுடியாத சுமை மாதிரி . கண்ல தூசு ,செருப்புக்குள்ள கல்லு கணக்கா தொல்லை கொடுத்துக்கிட்டே இருப்பாய்ங்க

2.களத்ராதிபதி தனபாவத்தில் நின்றால் :

அவர் லக்னாத் சுபரானால்:

கொடுக்கல் வாங்கல்லயே இவிக கிராஸ் ஆகியிருக்கலாம். அல்லது ஃபேமிலி ஃபங்சன்ஸ். லவ்வர்/மனைவியாரால் பொருளாதாரம் உயரும் . பொளுது போறதே தெரியாம ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக்கிட்டு கிடப்பிக. குடும்பத்துல ஒற்றுமை பெருகும் ,

அவர் லக்னாத் பாபரானால்:

நிலைமை மேற்சொன்ன பலனுக்கு கொய்ட் ஆப்போசிட்டா


3.களத்ராதிபதி 3 ல் நின்றால்

அவர் சுபரானால் அவிகளை நீங்க பிரயாணத்துல/ஏதேனும் போட்டி /இன்டர்வ்யூல சந்திச்சிருக்கலாம்.நீங்க கொஞ்சம் பயந்த ஸ்வபாவமா இருப்பிங்க (ரெம்ப ரோசிப்பிங்க) இதனால அவிக டெசிஷன் மேக்கிங் பண்ணி நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டி வரும். மச்சினி மனைவியா வர வாய்ப்பு. அண்ணன் தங்கச்சி மத்தியில வர்ர ஈகோ மோதல்கள் உங்களுக்கிடையில் வரலாம்.

பாபரானால் நீங்க தில்லு துரையா இருக்கலாம். அவிகளோடயும் மோதலுக்கு அப்புறம் காதல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் உங்களோட அசட்டுத்துணிச்சல் காரணமா அவிக டர்ராகி டல்லாகி டயர்டாயிருவாய்ங்க.

4.களத்ராதிபதி 4 ல் நின்றால்
அவிக உங்க தாயாரின் பெயர்/உருவம்/பேச்சு/பாடி லேங்குவேஜில் எதையாவது பெற்றிருக்கலாம். தாய்மாதிரி டீல் பண்ணுவாய்ங்க. நீங்க மகன் என்ற ரோலை பிடிச்சுட்டா உங்க ஜோடி தூள் பண்ணும்.

உங்க முதல் சந்திப்பு உங்க வீட்ல அ அவிக வீட்ல / கல்விச்சாலையில நடந்திருக்கலாம் . ஒரு வாகன சம்பந்தமா கூட மொதல் டீல் ஆரம்பிச்சிருக்கும்.

சுபரானால் மகனோட ரோலை எடுத்துக்கிட்டு விட்டேத்தியா இருந்துக்கிட்டு லைஃபை எஞ்சாய் பண்ணுவிக
அவிக குட்னெஸ்ஸே அவிகளுக்கு ஆப்படிச்சு ஆயுசை குறைச்சுக்கிட்டே வரும்.

அவர் பாபரானால் "என்ன நீ பாட்டி மாதிரி சதா அட்வைஸ் பண்ணிக்கிட்டு எங்களுக்கும் தெரியும்"னுட்டு முட்டி மோதிக்கிட்டே இருப்பிங்க. உங்க எதிர்ப்பே அவிகளுக்கு பிக்காசில்ஸ் மாதிரி உற்சாகத்தை கொடுத்து ஆயுளை நீட்டிக்கும்.

5.களத்ராதிபதி 5 ல் நின்றால்
கடந்த பிறவியிலான மனைவியே இந்த பிறவியிலும் மனைவியா வரலாம்.இதுக்கு சில ஆதாரங்களும் தரேன்.

ஆதாரம் 1:
அவிகளை பார்த்ததும் கொய்யால இவளை பத்து நிமிசம் கூட சகிச்சுக்க முடியாதுங்கற ஃபீலிங் வரும்
ஆதாரம்2:
லவ் சக்ஸஸ் ஆனாலும் /கண்ணாலமே பண்ணிக்கிட்டாலும் அவரை பற்றி மேலுக்கு ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்) ஆனால் அவிகளுக்கு ஒன்னுன்னா பதறிருவிங்க பதறி..
ஒரு வேளை லவ் ஃபெயில் ஆறது /பிரிஞ்சு போறது நடந்தாலும் அவர் குறித்த நினைவுகள், விவகாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் தரப்பு வில்லங்கமுள்ள சொத்து அல்லது ரீ சேல் மதிப்பற்ற சொத்து தொடரலாம். அல்லது அவர் தரப்பு உறவினர்கள் குறைந்த பட்சம் அவரது நண்பர்களின் தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அவிக உருவம் /பிஹேவியர் உங்க மகளை போன்றதாக இருக்கலாம் .( சைல்டிஷ்)

சுபரா இருந்தா:
ஒன்னு சேருவிக

பாபரா இருந்தா:
பிரிஞ்சுருவிங்க

களத்ர பாவாதிபதி மற்ற பாவங்கள்ள நின்னா என்ன பலன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.. உடுங்க ஜூட்

Tuesday, February 14, 2012

கில்மா கனவுகள் : கன்னி துலாம்


அண்ணே வணக்கம்ணே !
சிஸ்டம் பக்கா. ஜோதிடம் 360 பின்னிங் நடந்துக்கிட்டிருக்கு.அதான் கில்மா கனவுகள் தொடரை ரீ ஸ்டார்ட் பண்ணிட்டம்.

அதுக்கு மிந்தி ஒரு புரளி.

தமிழ்மணம் லேட்டஸ்டாக சந்துருவை பலி போட்டிருக்கிறது. பாவம் .. அசல் மேட்டரு இன்னான்னு அன்னாருக்கு புரியலை. தமிழ்மணம் நிர்வாகிகளோட நோக்கம் இப்பம் காசு பணம் தேன். இப்படியெல்லாம் சொத்தை காரணத்தை சொல்லி ( அரை நிர்வாண படங்கள்) தடை பண்ணிட்டா தமிழ் மணம் வழியாக தாங்கள் பெற்றுவந்த ஹிட்ஸ் குறைய ஸ்பான்ஸர் கேட்டகிரியில வருவாய்ங்கன்னு ஒரு கணக்கு.

அவராச்சு அரை நிர்வாணம்.. நாம எழுதின அஜால் குஜால் பதிவுகளையெல்லாம் விழுந்து விழுந்து அக்ரகேட் பண்ணி பிரபாகரன் சாகவில்லைன்னு அஸ்ட் ராலஜிக்கலா ஒரு கணிப்பை எழுதினதுக்கு டர்ராகி தடை பண்ணிட்டாய்ங்க.. ஹூம் அதெல்லாம் ஒரு காலம்.

நம்ம சைட்டும் ப்ளாகும் ஒரு ரேஞ்சுக்கு வந்துட்டதால இந்த இமிசை எல்லாம் கடியாது. ஏதோ ஓடிக்கிட்டிருக்கு. சந்துரு அவர்களின் மடல் ஒரு கோணத்துல மன்னிப்பு கடிதம் மாதிரியும் இருக்கு -இன்னொரு கோணத்துல கண்டன கடிதமாவும் இருக்கு. தமிழ் மணத்துல சேர்த்துக்கிட்டா ரெம்ப சந்தோசப்படுவார் போல. அன்னாரின் கோரிக்கை நிறைவேற வாழ்த்துக்கள்.

கனவுகளுக்கு போயிருவமா?

கன்னி:
இவிகளோட கில்மா கனவுகளை பத்தி தெரிஞ்சுக்கனும்னா இவிக கேரக்டரை தெரிஞ்சுக்கனும். இவிக கேரக்டர் என்னவோ அதுக்கு நேர் எதிரிடையா கனவுல பிஹேவ் பண்ணுவாய்ங்க (இதானே லாஜிக்)
கேரக்டர்:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள்.
கனவு:
இவிக கனவுகள்ள கண்டதும் காதல் கான்செப்ட் அதிகம் இருக்கலாம். கனவுல வர்ர காதல்கள் எந்த பிரச்சினையும் இல்லாம சுமுகமா முடியறதா இருக்கலாம்.
இவிக கனவுளுக்கான களம் ஆஸ்பத்திரி, கோர்ட், வங்கின்னு இருக்கலாம். சுக்கிரன் இவிகளுக்கு 2/9 க்கு அதிபதிங்கறதால கனவுகள்ள உறவு பெண்கள் அதிலும் தந்தை வழி உறவுப்பெண்கள் அதிகம் இடம் பிடிக்கலாம்.
இவிக ராசியில சுக்கிரன் நீசம்ங்கறதால எரியற ஸ்டவ் மேல வச்ச பால் பாத்திரத்துல ஒரு ஸ்பூன் பாலை ஊத்தின கணக்கா பொங்கி தீர்த்துருவாய்ங்க போல.
இவிகளுக்கு 4 -7 இடங்களுக்கு குருவே அதிபதிங்கறதால இவிக கனவுகள்ள வர்ர பெண்களுக்கும் - இவிக மம்மிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கலாம். (கடகத்துக்கான இலக்கணம் வேறு : வயசு /உருவத்துல அம்மாத்தனம் இருக்கும் அம்புட்டுதேன்) அந்த பெண்கள் கில்மா டைம்ஸ்ல கூட உபதேச மஞ்சரி கணக்கா பேசியே கொல்வாய்ங்க போல.
குரு இவிகளுக்கு பாவிங்கறதால கல்யாண சீன் வர்ரச்ச ஆரோ ஒருத்தரு வந்து தமிழ் சினிமா கணக்கா
" நிறுத்துங்க" ன்னு ஹை டெசிபல்ஸ்ல சவுண்டு விடலாம்.
துலாம்:
கனவுகாணும் வயசு வர்ர வரை உள்ளூர்ல இருந்தாய்ங்கனா கில்மா கனவுகள்ள முன் பின் சென்றறியாத ஊரெல்லாம் வரலாம். நடுவயசுல வர்ர கனவுகளுக்கு களம் நேட்டிவ் ப்ளேஸ் தான்.
இவிக கில்மா பார்ட்டிய மீட் பண்றச்ச கூட இவருடன் ஒரு நண்பர் இருக்க வாய்ப்பிருக்கு(கனவுல சொன்னேன்)
எதிரிகள் குடும்பத்து பெண்ணுடன் உறவாடுவதாக கனவுகள் வரலாம்.கனவுல (மட்டும்) கொடுத்த வாக்கை அப்படியே காப்பாத்துவாய்ங்க போல.
களத்ர பாவாதிபதியான செவ்வாய்க்கு தன பாவாதிபத்யமும் கிடைக்குது. இதனால கில்மா பார்ட்டிகளுடன் கொடுக்கல் வாங்கல் கூட நடத்துவாய்ங்க. கொடுக்கல் வாங்கல் நடத்தற பார்ட்டிகள் கனவுல வரலாம். ஆனால் கனவுலயும் பணக் கணக்குல தகராறு இடம் பெறலாம்.
சுக்கிரனுக்கு அஷ்டமாதிபத்யமும் இருக்கு. இதனால கனவுல வந்த கன்னி கனவுலயே காலமாயிர்ராப்ல வரலாம் அ இறந்து போன பெண்கள் கனவுல வரலாம்.

"ரசனையை" பொருத்தவரை சப் கான்ஷியஸா ரிஷபத்துக்கும் இவிகளுக்கும் பெருசா வித்யாசமிருக்காது. நடை முறை வாழ்க்கையில கொஞ்சம் துணிச்சல் ,மாற்றத்தை விரும்பும் தன்மை ,மேன்லியா இருக்கனுங்கற துடிப்பு இருக்கலாம்.ஆனால் கனவுல ரெம்பவே ரசிப்பாய்ங்க போல. (பெண்ணை மட்டுமல்ல - உணவு ,கலைகள் இப்படி எதையும்..

அடுத்த பதிவுல விருச்சிகம் ,தனுசு ராசியினரின் கில்மா கனவுகளை பார்ப்போம்.

Saturday, February 4, 2012

ஜோதிடபுத்தக அட்டையில் பெரியார்

அண்ணே வணக்கம்ணே !

எப்படியோ இன்னைக்கு இப்பத்தேன் "ஜோதிடம் 360 " புத்தகத்துக்கான மேட்டரை ஃபைனலைஸ் பண்ணேன். ஆனால் அட்டையில தான் வில்லங்கமாயிருச்சு. பெரியாரை வச்சுருக்கேன்.

ஏன் வச்சேன் எதுக்கு வச்சேன்னு சிண்டை பிய்ச்சுக்க தோணுதா? அப்பம் நீங்க கில்மா கனவுகளை மறந்துட்டு இந்த பதிவை படிச்சுத்தான் ஆகனும்.

சோசிய புஸ்த்வத்துல பெரியார் புராணம் ஏன்னு கேப்பிக.சொல்றேன். எனக்கு கிடைச்ச ஜோதிட குப்பைகள்ளருந்து கோமேதகங்களை பொறுக்கி எடுக்க உதவினது என் பகுத்தறிவு. அந்த பகுத்தறிவை கொடுத்தவர் பெரியார். அதனாலதேன் அவருக்கு டாங்க்ஸ் சொல்றதுக்குன்னே இந்த அத்யாயத்தை தந்திருக்கேன்.

குணமெனும் குன்றேறி , தியாகமே உருவாக மூத்திரப்பானையை கையில் தூக்கிக்கொண்டு பட்டி தொட்டியெல்லாம் சுற்றி பகுத்தறிவு பிரச்சாரம் செய்த பெரியாரை ஒரு சித்த புருஷராகவே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது, தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது போன்ற வாதங்களில் இருப்பது எஸ்கேப்பிசம். இது போன்ற வாதங்களை பிரசாரம் செய்ய பெரிய அளவில் அறிவோ, மன உறுதியோ தேவையில்லை.ஆன்மீகம் என்பது மறைமுகமாக தனி மனிதனின் சமூக பொறுப்பை தட்டிக்கழித்துவிடுகிறது. மனிதனை கை விட்டு விடுகிறது. ( நீ ஏழையா இருந்தா அது உன் பூர்வ கருமம்)

ஆனால் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று தன் வாழ்வின் கடைசி நொடி வரை பிரச்சாரம் செய்ய (அதிலும் விஞ்ஞானம் பெரிய அளவில் வளராத அந்த காலத்தில் ) உலகின் அறிவு பெட்டகத்தோடு மலையளவும் உறுதியும் தேவைப்படும். நாத்திகத்தில் எஸ்கேப்பிசமில்லை. நாத்திகம் கடவுளை கைவிட்டதே தவிர மனிதனை கைவிடவில்லை. தன் சமூக பொறுப்பிலிருந்து நாத்திகம் தப்பி ஓடவில்லை.

மனிதனை கைவிட்டுவிட்ட ஆத்திகம் இன் ஹ்யூமன்.( மனித தன்மையற்றது) கடவுளையே கைவிட்டாலும் பெரியாரின் நாத்திகம் ஹ்யூமன் ( மனிதத்தன்மை வாய்ந்தது).

கடவுளை நம்பி வாழறதுலயோ , அப்படி வாழச்சொல்லி பிரச்சாரம் பண்றதுலயோ பாதி பேருக்கு பெரிசா எந்த பிரச்சினையும் வர்ரதில்லை. ஏன்னா கடவுள நம்பி வாழறதா காட்டிக்கிற எவனும் நம்பறமாதிரி தோணுதே தவிர அந்த நம்பிக்கை அவனது உடலின் மேல் தோலை கூட தாண்டறதில்லை.

ஒருத்தன் உண்மையிலயே கடவுளை நம்பிட்டா அவன் கடவுளா மார்ர வரை கடவுள் அவனை விடறதில்லை.கடவுள்னா அவர் உருவமில்லாதவர். அதனால தன் பக்தனையும் அரூபியா,குரூபியா, வத்தல் தொத்தலா மாத்திருவாரு.

கடவுளுக்கு அப்பா,அம்மா, ஆயா, அண்ணன்,தம்பி எவனும் கிடையாது. பக்தனுக்கு இல்லாம பண்ணிர்ராரு .இப்படி ஆயிரம் இருக்கு.

இதுல ஒன்னு ரெண்டு ஸ்டார்ட் ஆனாலே பக்தன் டர்ராயி ஆள விடு சாமினு கழண்டுக்கறான். இதுக்கெல்லாம் பயப்படாம ஸ்டிக் ஆன் ஆனதனால தான் கடவுள் என்னை மாதிரி அரை மெண்டலை கூட சகிச்சுக்கிட்டு கிடக்காரு

ஆனால் பெரியாரோட வாழ்வையும் வாக்கையும் பார்த்தா எனக்கு தோண்றது ஒன்னுதான். அவரு சதா சர்வ காலம் பொது நலத்தையே நோக்கமா கொண்டு , வாழ்ந்ததாலே ஒரே கொள்கைய மனோ வாக்கு காய அளவில் நம்பி வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்ததால அவருக்கே தெரியாம சில யோக அற்புதங்கள் அவருக்குள்ளே நடந்திருக்கனும்.

இல்லாட்டி அவரோட பேச்சும், எழுத்தும் இந்த அளவுக்கு சனங்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்காது. அவற்றில் பல சட்டமாகவும் ஆகியிருக்காது.

ஆத்திகனா வாழவோ, ஆத்திகத்தை பிரசாரம் செய்யவோ கடவுள் குறித்த புரிதலோ ,கடவுளோட அனுமதியோ தேவையில்லை.

ஆனால் நாத்திகனா வாழ , பிரச்சாரம் செய்ய கடவுள் குறித்த புரிதல், அவர் அனுமதி நிச்சயம் தேவை.

பெரியார் இறையருள் பெற்ற மனிதர். சங்கராச்சாரிகளை விட புனிதர். கடவுளை மிகச்சரியா புரிந்து வைத்திருந்தார். தனி மனிதனை அதிலும் ஒடுக்கப்பட்ட மனிதனுக்காகவே தம் வாழ்வை தொலைத்தார். இறைவனுக்கு மனிதன் செய்திட இதைக்காட்டிலும் நற்பணி வேறேதேனும் உண்டா?

ஆஸ்திகர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அவர்களையும் அறியாது இறைவனுக்கு தாங்களே பி.எஸ் என்ற எண்ணம் வந்து விடுகிறது. அந்த எண்ணத்தில் பிறக்கிற பேச்சுக்கள் தான் கேலிக்கிடமாகிவிடுகின்றன.

என் குறுகிய அறிவு, அனுபவத்துக்கு எட்டிய வரையில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது. இருந்தாலும் அதை பரிசீலிப்பதோ, நிர்ணயிப்பதோ மனித யத்தனத்துக்கு மிஞ்சிய செயலாகவே உள்ளது.

கண்டதுக்கும் தியரி சொல்லி டயோரியா வர வைக்கும் எனக்கே ஒவ்வொரு சமயம் குழப்பமாகி மைண்ட் ப்ளாங்க் ஆகிவிடுவதுண்டு. நிற்க.

நமக்கு மோஸ்ட் ஃபேவரட் God மகா கணபதி. நான் கணபதியை எந்த அளவு பக்தியுடன் வணங்குகிறேனோ அதே அளவு பக்தியுடன் வினாயகர் சிலைகளை உடைத்த, பகுத்தறிவு பகலவன் ஈ.வே.ரா அவர்களையும் வணங்குகிறேன். குழப்புகிறேனா?

கணபதி ஊர்வலம் நடத்தி மும்பையிலும், சென்னையிலும் தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கும் கூட்டத்தைத் தான் நான் நாத்திக கூட்டம் என்பேன்.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா..மனுஷ்யர்களுக்காக, அவர்களது மூட நம்பிக்கைகளை ஒழித்து கட்ட வினாயகர் சிலைகளை உடைத்த பெரியார் உண்மையான ஆஸ்திகர்.

சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று தேவையற்ற பதட்டத்தை உருவாக்கி மனுஷ்யர்களுக்கு தொல்லை கொடுக்கும் கூட்டம் தான் நாஸ்திக கூட்டம் என்பது என் கருத்து.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் பெரியாரின் சித்தம் சிவன் போக்கில் செயல்பட்டமைக்கான ஆதாரமாக ஒரே ஒரு சம்பவம்.

பெரியார் ஆட்டோ கிராப் போட காசு வாங்குவாராம். கட்சி நிதி திரட்ட ( அது எதுக்கு பகுத்தறிவு பிரசாரம் செய்யத்தான்) இதுவும் ஒரு வழி. ஒரு ஆட்டோ கிராபுக்கு ஓரணா கட்டணம். ஒரு ஆசாமி அரை அணா கொடுத்து ஆட்டோ கிராப் கேட்டாராம். பெரியார் இனிஷியல் மட்டும் போட்டாராம். ஆசாமி இதுல என்னங்க கஞ்சத்தனம்னு கேட்டார். என் பேனாவுக்கு கட்சி இன்க் போடுதப்பா..கட்சிக்கு எவ்வளவு லாபமோ அவ்வளவு இன்க் தான் செலவழிக்கனும்னாராம்.

ஒரு மனிதன் மாமனிதனாவது கடவுளை ஏற்பதாலோ (அ) மறுப்பதாலோ அல்ல மனிதம்,மனித குலம் காப்பதாலேயே!

தாங்கள் சாதாரண ஆசா பாசங்கள் உள்ள மனிதர்கள்தான் என்பதை உணர்ந்திருந்தாலும், அஜால் குஜால் வேலைகளை செய்து கிட்டே இருந்தாலும் குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்க 24 மணி நேரம் 365 நாள் பீலா விட்டுக்கிட்டு ஏ.சி. கார்ல திரியுற சாமியார்ங்களை துறவிங்கறாங்க.. நான் ஏன் பெரியாரை ஒரு சித்தபுருஷர்னு சொல்ல கூடாது. நான் ஏன் பெரியாரை ஒரு குப்த யோகின்னு சொல்லக்கூடாது.




Wednesday, February 1, 2012

கில்மா கனவுகள் - கடக,சிம்மம்


கடகம்:
பகல்லயே கனவு காண்ற பார்ட்டி இவிக. நிலத்துல கால் பாவாத மேட்டர் எல்லாம் இவிக ஆர்வத்தை அல்வா கணக்கா கிளறி விட்டுரும்..இவிக கனவுகள்ள ஃபேன்டசிக்கு நிச்சயமா ஒரு இடமுண்டு.

அதிபதி சந்திரன் என்பதால் இவிக கனவுகள்ள விசிட் அடிக்கிற பார்ட்டிங்க மாறிக்கிட்டே இருப்பாய்ங்க. மாசத்துல 14 நாள் இவிக கனவுல கூடலும் ,அடுத்த 14 நாள் ஊடலும் இடம் பெறலாம்.

சந்திரன் மாத்ருகாரகன் என்பதால் தாய் வயது/தாயின் சாயல்/தாய் போன்ற உடல் வாகு கொண்ட பெண்கள் விசிட் அடிக்கலாம். கனவுல வர்ர பெண்கள் இவிகளை தங்கள் தாய் போலவே ட்ரீட் பண்ண வாய்ப்பிருக்கு.(ஆருப்பா அது ........பேன் பார்க்க சொல்லுவாய்ங்களோங்கறது?)

.ராசிச்சக்கரத்துல 4 ஆவது ராசி இது தாய்,வீடு,வாகனம் ,கல்வி ஆகியவற்றை காட்டும். நண்டு எப்டி வளைக்குள்ளயே குடித்தனம் நடத்துமோ அப்படி எல்லாமே இன்டோர் ஷூட்டிங் தான். மிஞ்சிப்போனா ஆத்தங்கரை,கடற்கரை தான் வென்யூ.

இயற்கைக்கும் -கடவுளுக்கும் நெருக்கமா இருக்கிற ஒரே ராசின்னு எங்கயோ படிச்சேன்.அது நெஜம் தான் போல. வளர் பிறையில உயர் நிலை ஆன்மாக்களுக்கும் -தேய் பிறையில ஆவிகளுக்கும் கூட நெருக்கமா இருக்கிற ராசி. இதெல்லாம் கனவுல பிரதிபலிக்கும்.

ப்ளாக் ப்யூட்டீஸ் தான் இவிக சாய்ஸ். தலித் பெண்கள், வீட்டு வேலைக்காரிகள்,மாற்று திறனாளிகள் கூட கனவுக்கு விதிவிலக்கில்லைங்கறதுதான் சோகம்


சிம்மம்:
நனவுல சுயமரியாதை வீரர்களா இருக்கிற இவிக கனவுகள்ள கன்னியரோட காலடியிலயே விழுந்து கிடக்க சான்ஸ் இருக்கு. இவிகளுக்கு பிடிச்ச லொக்கேஷன் காடு,மலை பிரதேசம்தேன். அதிபதி சூரியங்கறதால ஊர்ல எவனெவன் முக்காடு போட்டுக்கிட்டு எந்தெந்த வீட்டுக்குள்ள நுழையறானோ அந்த வீட்டு பெட் ரூம்லாம் இவிக கனவுல வரலாம்.

சூரியன் பித்ருகாரகன்ங்கறதால கனவுல கூட அட்வைஸ்லாம் பண்ணுவாய்ங்க. கனவுல பெண்கள் இவிகளை அப்பா கணக்கா ட்ரீட் பண்ண வாய்ப்பிருக்கு.

இது ராசிச்சக்கரத்துல 5 ஆவது ராசிங்கறதால இவிக பேரும் புகழும் பெற்றுவிட்டதாகவும் - குட்டிகள் ஆட்டோகிராஃபுக்காக அலைமோதறாப்லயும் கனவுகள் வரலாம். தை மாசத்துக்கு மிந்தி வர்ர 6 மாச காலம் கலீஜு கனா எல்லாம் வரலாம். தைக்கு பிறவு ஹைஜின் கனவுகள்.

இவிகளுக்கு தங்களை விட பலபடி கீழான நிலையில் (பொருளாதாரம்,படிப்பு) உள்ள பெண்கள் மேல ஈர்ப்பு இருக்கும்.அதனால அவிக அதிகமா விசிட் அடிப்பாய்ங்க

கில்மா கனவுகள்:ரிஷப,மிதுனம்


2.ரிஷபம்:

இந்த ராசி ஆண்களை பெண்கள் ஏறக்குறைய பெண்களாவே ட்ரீட் பண்ணுவாய்ங்க. ஏன்னா அந்த அளவுக்கு கலைகளில் ஈடுபாடு -அழகுணர்ச்சில்லாம் இருக்கும். பெண்களை போலவே மாற்றத்தை எதிர்க்கிறதுல மொத ஆளா இருப்பாய்ங்க. பணம், பேச்சு,குடும்பம்லாம் வெல்லம்.

இதனாலயே கில்மா மேட்டர்ல அட்வென்சர்ஸ் பண்ண துணிய மாட்டாய்ங்க. கில்மாவுக்கு காரகரான சுக்கிரனே இவிகளுக்கு ராசியாதிபதி -மனோகாரகனான சந்திரனுக்கோ இவிக ராசிதான் உச்சராசி. சின்ன வயசுல தூக்கத்துல உச்சா போற குழந்தைகளுக்கு அவிக ஜாதகத்துல சந்திரனோட இம்பாக்ட் நிச்சயம் இருக்கும். சின்ன வயசுல உச்சா . டீன் ஏஜ்ல? மேப் எல்லாம் போட்டு வைப்பாய்ங்க. மேலும் பிரம்மச்சரியம் அது இதுன்னு பினாத்திக்கிட்டு இருந்தா மேப்போட கண்ணாலமான பிற்காடு துரித ஸ்கலித பிரச்சினையும் வந்துரும்.

இது மனம் சார்ந்த விஷயம்.இவிக ராசியில சந்திரன் உச்சமா இருக்கிற நாட்கள்ள மொதல் அனுபவம் ஏற்பட்டுதுன்னா "இது இவ்ளதான்"ங்கற மாதிரி ஒரு ஃபோபியா போல ஆயிரும். இது இவிக கேரக்டர்.

கனவுன்னு பார்த்தா இதுக்கு எதிரிடையா இருக்கும். காதலிக்காக பணம் ,காசு,குடும்பம் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு ரெம்ப மேன்லியா அவிகளை கமாண்ட் பண்றாப்லல்லாம் கனவுகள் வரலாம்.அதே போல பலான மேட்டர்ல நின்னு விளையாடறாப்ல கனவு காணலாம்.

இவிகளுக்கு 7,12 க்கு அதிபதி செவ்வாய்ங்கறதால எதிரி குடும்பத்து பெண், தன்னை எதிரியா பாவிக்கிற பெண்ணொட கெ.கா பண்றாப்ல கனவுகள் வரலாம். அந்த கனவுல போலீஸ்,நெருப்பு,மாடுல்லாம் வரலாம்.

3.மிதுனம்:

மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். இதுக்கு அதிபதி புதன் அலிகிரகம் என்பதால் பெண்கள் மேன்லியாவும்,ஆண்கள் பெண் தன்மையுடனும் இருப்பாய்ங்க.

கனவுகள்ள இவிகளுக்கு நேர் எதிரிடையான காட்சிகள் கிடைக்கலாம். உ.ம் "வா..வா..வாத்தியாரே வா"ன்னு கூப்பிட இவர் எம்.ஜி.ஆர் படம் கணக்கா தத்துவம்லாம் சொல்லலாம். கோவிலுக்கு போறமாதிரி, காட்ல தவம் பண்றமாதிரில்லாம் கூட கனவுகள் வரலாம் (பகல் எல்லாம் பலான நினைவுகளில் திளைத்த குற்ற மனப்பான்மை இப்படி பரிகாரம் தேடும்)

இவிகளுக்கு 7 க்கு அதிபதி குரு. டீச்சர் ஐ லவ் யுன்னு சொல்ற தில் இல்லின்னாலும் மனசுக்குள்ள அப்படி ஒரு எண்ணம் இருக்கலாம்.அது கனவுகளில் வெளிப்படலாம். பஞ்சமாதிபதியே சுக்கிரன்ங்கறதால கலைகளில் ஆர்வம் உள்ள பெண்கள் கனவுகள்ள ஆஜராகலாம்.