Thursday, November 3, 2011

அல்லாருக்கும் சில்லறை : 2


அண்ணே வணக்கம்ணே !

நேத்து அல்லாருக்கும் சில்லறை புரளாம இருக்கிறதுக்கு காரணங்களை மட்டும் லிஸ்ட் அவுட் பண்ணி சூ காட்டி விட்டுட்டன். அந்த லிஸ்ட்ல வாஸ்து மேட்டரை கடேசில பார்ப்போம். இன்னைக்கு சாபங்கள்ங்கற சப் ஹெடிங்ல உள்ள சமாசாரங்களையும் (ரிவிஷன்) பரிகாரங்களையும் பார்ப்போம்.


பொருளாதார முடக்கத்துக்கு காரணமாகும் சாபங்கள்:

1.அப்பா ,அம்மா வழி உறவில் ( சித்தப்பா,பெரியப்பா/ சித்தி,பெரியம்மா) அகால மரணம் ( ஐ மீன் 40 வயசுக்குள்ள மரணம்) துர்மரணம் ( ஐ மீன் விபத்து,தற்கொலை,கொலை)

2.உங்களுக்கு முந்தைய தலைமுறை/ உங்கள் தலைமுறையில் அங்கஹீனம் கொண்டவர்கள் பிறப்பது / பெரிய விபத்து/தீ விபத்தில் சிக்குவது /துர்மரணம் அடைவது.

3.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் திருமணத்துக்கு முன்பே இறப்பது/ஒருவருக்கு ஒன்றுக்கு மேல் திருமணங்கள் ,சின்ன வீடு எக்ஸ்ட்ரா

4.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் வாரிசின்றி போவது - பக்கவாதம் போன்ற வியாதிகள் வந்து பிறர்கையை எதிர்பார்த்து வாழ வேண்டி வருவது

5.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் தோல் வியாதிகள் , விரைவாதம்,புத்திகுழப்பம்,பெண்கள் என்றால் அண்டம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுவது.

(இந்த பட்டியலை நேத்தே பார்த்திருக்கிங்க ) அப்படி பார்த்த அதே செகண்ட்ல கொய்யால .. போன தலைமுறைல நடந்ததுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்னு ஒரு கேள்வி தாது புஷ்டி லேகியம் சாப்பிட பிறகு கிளம்பின ............... மாதிரி கிளம்பியிருக்கும். ( நான் சொல்ல வந்தது கில்மா தாட்டுங்கண்ணா)

இப்பத்து ட்ரெண்டுக்கு உதாரணம் சொல்லனும்னா ஏழாவது அறிவை சொல்லலாம். பல தலைமுறைகளுக்கு பிறகு பிறந்தவனோட ஜீனை தூண்டி என்ரிச் பண்ணினா பல தலைமுறைகளுக்கு மிந்தி செத்துப்போன ஒரு மூதாதையோட டேலன்டை எல்லாம் ரெக்கூப் பண்ணலாம்ங்கறது மேற்படி சினிமாவுல வருது. ( சினிமாவுக்கு போனவுங்கல்லாம் தலைவலிதான் வருதுங்கறாய்ங்க- அது வேற மேட்டர்)

புதுசா ஒரு குழந்தை பிறந்ததும் அத்தை மூக்கு ,அப்பன் மூஞ்சி,ஆத்தா வாயின்னு பட்டியல் போடறாய்ங்க.
போடறாய்ங்களா இல்லியா? அந்த குழந்தை கொஞ்சம் வளர்ந்து கைய காலை திருப்பினா " த பாரேன் அப்படியே எங்கப்பன் மாதிரியே"ங்கறோம். அது எதையாவது தூக்கி வீசினா " த பாரு ..அப்படியே உன் ஆத்தாக்காரியோட கோபம் சிந்தாம சிதறாம வந்து விடிஞ்சிருக்கு"ன்னு பொஞ்சாதி முகவாய் கட்டைய தோள்ள இடிச்சுக்கறா. இடிச்சுக்கறாளா இல்லியா?

ஆக மூதாதையரோட மணம்,குணம்,காரம்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஜீன்கள் வழியா கடத்தப்படுது.

தாத்தாக்கிட்டேருந்து அப்பா, அப்பாக்கிட்டே இருந்து உங்களுக்கு, உங்க கிட்டேருந்து பாப்பாவுக்கு அஞ்சலாகும்னு தான் நினைச்சிருப்பிங்க.அதான் ராங்கு.

டார்வின் இன்னா சொல்றாருன்னா ஒவ்வொரு மனிதன்லயும் - இயற்கையிலான எல்லா புழு,பூச்சி,பறவை,விலங்குகளோட மணம்,குணம்,காரம்லாம் பொதிஞ்சிருக்குங்கறாரு. பாரதியார் கூட ஒவ்வொரு குணம் கொண்ட மனிதனையும் ஒவ்வொரு மிருகத்துக்கு ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியிருக்காரு. நெட்ல கிடைச்சா சுட்டு அதனோட சுட்டியை தாங்கண்ணா.. ரெம்ப த்ரில்லிங்கா இருக்கும். அல்லாரும் படிக்கட்டும்.

க்லைஞரோட குடும்ப உறுப்பினர்களை நெட்ல கிளை வாரியா ( நெல்லா கவனிங்க கிளை வாரியா -கிளைங்கறது மரத்துக்கு இருக்கக்கூடிய ஒன்னு) மேப் போட்டு வச்சிருக்காய்ங்க .இதை சமஸ்கிருதம் ,தெலுங்கு மொழிகள்ள வம்ச விருட்சம்னு சொல்வாய்ங்க.

ஒரு ஆறு இருக்கு. அந்த ஆத்துல தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிக்காம அப்படியே விடறாய்ங்கனு வைங்க., அப்பம் அந்த ஆற்றங்கரையோரமா வளர்ர எல்லா விருட்சமும் (மரமும்) அந்த தண்ணிய உறிஞ்சித்தானே உயிர் வாழும். அந்த மரங்களோட எல்லா கிளைகளும் -உபகிளைகளும் - இலைகளும் அந்த கழிவு நீரால பாதிக்கப்பட்டுத்தானே தீரும்.

இதே இழவுதேன் இந்த தலைமுறைகள் மேட்டர்லயும் ஒர்க் அவுட் ஆகுது. உசரம், கண் ,மூக்கு , நியூமரிக்கல் எபிலிட்டி,ஹேண்டி க்ராஃப்ட் மட்டுமில்லிங்கண்ணா அவிகளோட லைஃப் ஸ்பான், வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களும் அப்படியே பேக் அப் ஆகி , நம்ம லைஃப்லயும் ரிப்பீட்டு. இது ஒரு கோணம்.

இன்னொரு கோணத்துல பார்க்கும் போது நாம இந்த பூமியில் இல்லாத காலமே கடியாதுன்னு ஒரு சித்தாந்தம் சொல்றாய்ங்க. உங்க தாத்தா சகட்டுமேனிக்கு கண்டவளை கை வச்சிருந்தாருனு வைங்க. அதே புத்தி உங்களுக்கும் வருதுன்னு வைங்க. இதை ஜெனடிக் காஸ்னும் சொல்லலாம். அந்த தாத்தாவோட மறுபிறவிதான் நீங்கன்னும் சொல்லலாமில்லையா? புனரபிமரணம் புனரபி ஜனனம்.

ஜியாமிட்ரில ஒரு பாய்ண்ட் வரும். எல்லா படுக்கை கோடுகளும் ஒரு வட்டத்தின் பாகங்களே . நியூட்டன் இன்னா சொல்றாரு "ஃபார் எவ்ரி ஆக்சன் தேர் ஈஸ் என் ஈக்வல் ரியாக்சன்"

முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்"னு சொல்றாய்ங்க. அது செயல் செய்யப்பட்ட அதே நாளின் பிற்பகல்னு நினைச்சுராதிங்க. கால ஓட்டத்துல பல்லாயிரக்கணக்கான வருடங்களும் ஒரு நாள் மாதிரி தேன்.

இப்பம் ஓரளவாச்சு கன்வின்ஸ் ஆகியிருப்பிங்கனு நினைக்கிறேன். நீங்க கன்வின்ஸ் ஆனாலும் ஆகாட்டாலும் விளைவை சந்திச்சுத்தான் ஆகனும். தாத்தா இன்னைக்கும் நான் தான் முதலமைச்சர்னு நினைச்சுக்கிட்டா ஆச்சா? ஊஹூம். அதே போலதான் இதுவும். நான் சொன்ன மேட்டரெல்லாம் டுபுக்குன்னு நீங்க டிக்ளேர் பண்ணிரலாம். ஆனால் விளைவுகள்?

தாத்தா வேணம்னா இன்னைக்கும் நான் தான் சி.எம்னு நினைச்சுக்கலாம்.ஆனால் மார்ட்டின் நினைக்கமாட்டாரே. திரைக்கதை வசனத்துக்கு ரூ.25 லட்சம் சன்மானம் தரமாட்டாரே. அப்டி நீங்க இந்த விசயம்லாம் பீலான்னு நினைச்சுக்கிட்டாலும் யதார்த்தத்துல இதற்கான பலனை அனுபவிச்சே தீரனும்.

எச்சரிக்கை:
யாருடைய வமிசா வளியில் கீழ்காணும் நிகழ்வுகள் நடந்திருக்கோ அவிகல்லாம் சிரமப்பட்டுத்தான் தீரனும்னுல்ல கோடிகள் குவிக்கவும் கூடும். ஆனால் இந்த சம்பவங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்துக்கிட்டே இருக்கும். ( சில கேஸ்ல ஒரு தலைமுறை விட்டு ஒரு தலைமுறை நடக்குங்கோ)

யாருடைய வமிசா வளியில் கீழ்காணும் நிகழ்வுகள் நடந்திருக்கோ அவிகள்ள பலர் இவற்றின் வீரியத்தை உணராம பணம் பணம்னு அலைஞ்சு பறை சாற்றி நாசமா போறதும் உண்டு. ( ஐ மீன் அகால மரணங்கள்/துர்மரணங்களுக்குள்ளாவது)

ஒரு சிலர் குருவருளாலோ, திருவருளாலோ,அப்பா அம்மா ஆசியாலோ, ஜாதகத்திலான இதரகிரகங்களின் பலத்தாலோ ஏழ்மையில் இருப்பார்கள் - வரவுங்கறது தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு இருக்கும் .ஆனால் பெரிய இழப்புகள் இருக்காது ( ஐ மீன் அகால மரணங்கள்/துர்மரணங்கள்)

( வேண்டுகோள்: இந்த மேட்டர்லாம் பல தடவை வெரிஃபை பண்ணி, பல நூறு தடவை நேர்ல பார்த்து ,கேட்டு எழுதின மேட்டருதான்.

இருந்தாலும் இந்த பதிவை படித்த உங்கள் வட்டத்தில் இது போன்ற கேஸ்கள் இருந்தால் ஊர்,பேரை குறிப்பிடாம சொல்லுங்க.

ஒரு வேளை உங்க குடுமபம் / உங்க வமிசாவளியில் நடந்திருந்தா எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில்னு ஆரம்பிச்சு சொல்லலாம்.

நமக்கு தேவை டேட்டா தான். விவரம் கடியாது. இதெல்லாம் எதுக்குன்னா நாளைக்கு நான் தரப்போற பரிகாரங்களை இன்னம் கொஞ்சம் நம்பிக்கையோட சனம் ஃபாலோ பண்ணி ரிலீஃப் பெற வசதியா இருக்கும்)

இப்பம் பதிவின் ஆரம்பத்தில் தந்த அதே அம்சங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு பரிகாரங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.

பரிகாரங்களை இந்த பதிவிலும் தராம சஸ்பென்ஸ் தொடர்வதற்கு சாரிங்ணா. நாம சொல்ற மேட்டர் மேல மொதல்ல சனத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்தாம மளிகை கடை லிஸ்ட் மாதிரி பரிகாரங்களை அள்ளி விடறது வீண் வேலைங்கண்ணா.

அப்படி செய்தா சொன்ன நமக்கும் புண்ணியமில்லை - படிக்கிற சனத்துக்கும் புண்ணியமில்லை. ஜஸ்ட் 24 ஹவர்ஸ் .. நாளைக்கு ஏ To ஜெட் பரிகாரங்களை ஒரே மூச்சா கொடுத்துர்ரன்.