Friday, November 4, 2011
செல்வம் பெருக பரிகாரங்கள்
அண்ணே வணக்கம்ணே!
பொருளாதார முடக்கத்துக்கு என்ன காரணம்னு ஒரு பதிவுல சொல்லி - அதுக்கான் தர்கத்தை இன்னொரு பதிவுல விளக்கி உங்களை சீட் நுனிக்கே கொண்டு வந்துட்டன். இன்னைக்கு நிச்சயமா உங்களை ஏமாத்தாம எல்லா பரிகாரங்களையும் அவுத்து விட்டுர்ரன்.
மொதல்ல பொருளாதார முடக்கத்துக்கு என்னெல்லாம் காரணமா இருக்கும்னு ஒரு பட்டியலை தந்தேனே அதை புதிய வாசகர்கள் வசதிக்காக இங்கன ரிப்பீட்டு.
1.அப்பா ,அம்மா வழி உறவில் ( சித்தப்பா,பெரியப்பா/ சித்தி,பெரியம்மா) அகால மரணம் ( ஐ மீன் 40 வயசுக்குள்ள மரணம்) துர்மரணம் ( ஐ மீன் விபத்து,தற்கொலை,கொலை)
2.உங்களுக்கு முந்தைய தலைமுறை/ உங்கள் தலைமுறையில் அங்கஹீனம் கொண்டவர்கள் பிறப்பது / பெரிய விபத்து/தீ விபத்தில் சிக்குவது /துர்மரணம் அடைவது.
3.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் திருமணத்துக்கு முன்பே இறப்பது/ஒருவருக்கு ஒன்றுக்கு மேல் திருமணங்கள் ,சின்ன வீடு எக்ஸ்ட்ரா
4.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் வாரிசின்றி போவது - பக்கவாதம் போன்ற வியாதிகள் வந்து பிறர்கையை எதிர்பார்த்து வாழ வேண்டி வருவது
5.உங்கள் தலைமுறை/முந்தைய தலைமுறையில் தோல் வியாதிகள் , விரைவாதம்,புத்திகுழப்பம்,
பெண்கள் என்றால் அண்டம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுவது.
பரிகாரங்கள்? வரேன் வரேன். ஒரு பெரிய கோட்டை இருக்குன்னு வைங்க. அந்த கோட்டை முழுக்க இருட்டுல மூழ்கியிருக்கு. அந்த இருட்டை விரட்ட கோட்டையத்தனை பெரிய பல்பா போடனும்? ஊஹூம்.
அதே மாதிரி சூட்சுமத்துல மோட்சமாத்தான் இந்த பரிகாரங்களை தந்திருக்கேன். ஒட்டகத்து மேல பாரம் ஏத்தின கதை தெரீமா?
ஆன பாரத்தையெல்லாம் சுமந்துக்கிட்டு நின்ன ஒட்டகம் கடேசியில போட்ட துடைப்ப குச்சியால பர்ஸ்ட் ஆகி -போடாங்கொய்யாலன்னு மொத்தத்தையும் உதறிடுமாம்.
அதனால ஒட்டகத்தை ஏமாத்த பாரமெல்லாம் ஏத்திட்டு ஒதகாத சாமான் ஒன்னை கஷ்டப்பட்டு தூக்கி கீழே போட்டுருவாய்ங்களாம். ஒடனே ஒட்டகம் "ஸ் அப்பாடா பெரிய பாரத்தை குறைச்சுட்டானேன்னு உற்சாகமா நடைபோடுமாம்.
அப்படித்தான் இந்த சாபங்களும். இப்படி ஒரு சாபமிருக்குன்னு நீங்க உணர்ந்தாலே -உணர்ந்து ஃபீல் பண்ணாலே 10 சதவீதம் ரிலீஃப் கிடைச்சுரும். நான் சொல்லப்போற பரிகாரத்தை செய்திங்கன்னு வைங்க இன்னொரு 10 சதவீதம் ரிலீஃப் ஆயிரும். வண்டி ஓட ஆரம்பிச்சுரும். அசலான பரிகாரத்தை தேடிக்க வழி ஏற்படும்.
நான் தந்திருக்கிற பரிகாரம்லாம் ஏர்கூலர் மாதிரி. சாபத்தோட வெப்பம் ஓவரா போச்சுன்னு வைங்க ஏ.சியை ஆன் பண்ணிரவேண்டியதுதேன்.
பிரச்சினை பெருசுங்கறதால சொல்யூஷன் கூட பெருசா இருக்கனுங்கற நினைப்பை உதறிப்போடுங்க. பரிகாரம்தானே? ஹி ஹி ..ஆடியோவா தந்திருக்கேன். கீழ்காணும் ப்ளேயர்ல உள்ள ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.
நெட் ஆக்சஸ் ஸ்லோவா உள்ளவுக இங்கன அழுத்தி டவுன்லோட் பண்ணி மொபைல்ல கூட போட்டுக்கிட்டு காதலிகிட்டே பேசறாப்ல ( ஐ மீன் அவிக பேசறதை கேட்கறாப்ல படம் காட்டிக்கிட்டு ஆராமா கேட்டுக்கலாம்)
உடுங்க ஜூட்.
குறிப்பு:
மேற்படி பட்டியல்ல அஞ்சாவதா சொன்ன சாபத்துக்கு பரிகாரமே சொல்லலை. அதை ஆருனா கிராஸ் பண்ணி கமெண்ட் போட்டா சொல்லிருவம்ல .