இதுவும் பதிவுதான்
நாலு நாளைக்கு முன்னே சித்தூர் அரசு மருத்துவமனை ப்ளட் பேங்க்லருந்து ஃபோன் வந்ததுங்கண்ணா " நீங்க வாலண்டரி ப்ளட் டோனரு முருகேசன் தானே.. நீங்க ப்ளட் கொடுத்து எவ்ள காலமாச்சு? ஆங் ஒரு வருஷமாச்சா. இப்போ நீங்க வந்து கொடுத்தா நல்லாருக்கும்"
1992லருந்து வருசத்துக்கு ரெண்டு தாட்டி கொடுத்திருக்கேன். 2002 ல ரத்ததானம் பண்ண பிறவு உன் ரத்தத்துல பலானது பலானது ரெம்ப குறைச்சலா கீது. பொம்பளைங்க பாடில கீற ரேஷோல கீது. இனி நீ வருசத்துக்கு ஒரு தரம் கொடுய்யான்னிட்டாய்ங்க.
அடடா புவனேஸ்வரி அம்மனோட மாயா பீஜத்தை ஜெபிச்சதால ஆத்தா ஆவாஹனம் ஆயிட்டாப்ல இருக்கு.அதான் ப்ளட்டே மாறிப்போனாப்ல கீதுனு பாசிட்டிவா நினைச்சுக்கிட்டு வூட்டுக்கு வந்துட்டேன் பாஸு.
அன்னைலருந்து வருஷத்துக்கு ஒரு தாட்டி தான் கொடுக்கறது. ஃபோன் வேற வந்துதா..சரி இன்னைக்கு தாத்தா பொறந்த நாளு வேறயா ( காந்தியைத்தான் சொல்றேன். அவருக்கும் நமக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து இருந்தாலும்.. அந்தாளை விட பெட்டரா ஒரு பர்சனாலிட்டிய கண்டுபிடிக்க முடியாம அஜீஸ் பண்ணிக்கினு கீறோம்.
பார்ட்டி மேல கீற கவுரதையால ஆப்பரேசன் இந்தியா2000க்காக உ.விரதம் ஆரம்பிக்க தாத்தா பிறந்த நாளைத்தான் சூஸ் பண்ணேன்.
சரி மொக்கை போதும் மேட்டருக்கு வரேன். நவகிரகங்கள்ள செவ்வாய் தான் ரத்தத்துக்கு அதிபதி. செவ்வாய் கெட்டுப்போனா வெட்டு,குத்து,கொலை,விபத்தெல்லாம் ஜுஜுபி. இந்த மாதிரி கேஸெல்லாம் ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணிக்கினு ரத்ததானம் கொடுத்தா செவ்வாய் கூல் ஆயிருவாரு.
எங்கனயோ காட்ல ,மேட்ல,உச்சி வெய்யில்ல, தார் ரோட்ல ரத்த இழப்பை தவிர்க்க ஏ.சி அறைல ரத்த தானம் பண்றது அறிவுடைமை இல்லியா.
ஊருக்கு உபதேசம் , படிக்கிறது ராமாயணம் இடிக்கிறது பாபர் மசூதின்னு ரெட்டை வேடம்லாம் நம்ம ஜாதகத்துலயே கிடையாதுங்கோ... ( மனசுல எப்பவாச்சும் குழப்பம் வர்ரதுண்டு. இப்படி அவுட் டேட் ஆயிப்போன தர்ம நியாயங்களை நம்பிக்கிட்டு குப்பை கொட்டறமே இது சரிதானான்னு)
அதனால ரத்ததானம் கொடுக்க புறப்பட்டேன்.
நல்லா படிச்சவுகளுக்கு கூட ரத்ததானம் கொடுக்கிறதுல நிறைய தயக்கம் சந்தேகம்லாம் இருக்கு. 1986ல மூணு வேளை மூக்கு பிடிக்க தின்னபடி அடிஷ்னலா மதியம் பீஃப் ஃப்ரை, மாலை பீஃப் சாப்ஸ்,அரை டஜன் வாழைப்பழம்லாம் சாப்பிட்டு எக்ஸர்சைஸ் பண்ணியிருக்கேனே தவிர வெயிட் மாத்திரம் அன்னைலருந்து 2007 வரை 48 கிலோ தான். ஆனாலும் வருசத்துக்கு ரெண்டு தாட்டி ரத்ததானம் பண்ணியிருக்கேன். எந்த எஃபெக்டும் கிடையாது. என்ன ரத்தம் கொடுத்துட்டு வந்த உடனே டெலிவரி ஆன தாய்குலம் மாதிரி கொஞ்சம் சுஸ்தா இருக்கும். வீட்டுக்கு வந்து சூடா சாப்பிட்டு ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்தா டோட்டலா ஃப்ரெஷ்ஷா ஆயிரும்.
ஒரு வாரம் வரை ப்ரெயின் ப்ளெசன்டா இருக்கும். தாளி வேலை வெட்டி பார்த்தமா சாப்டமா தூங்கினமான்னு இருக்கும். எட்டாவது நாள்ளருந்து பழைய குருடி கதவை திறடினு ஆயிரும்.
சாமானிய சனங்க/ விவரம் புரியாத சனங்க என்ன நினைப்பாய்ங்கன்னா bodyங்கறது ஒரு அணைக்கட்டு மாதிரி அதுல எம்மாம் ரத்தம் சேர்ந்தா அவ்ளோ நல்லது.
நீங்க ரத்த தானம் பண்ணாலும் பண்ணலைன்னாலும் தினசரி பல லட்சக்கணக்கான சிவப்பணுக்கள் அழிஞ்சுரும். மறுபடி புதுசா உருவாகும்.
மாகாபாரதத்துல கர்ணன் குந்திக்கு " அர்ஜுனனை தவிர வேற யாரையும் கொல்லமாட்டேன். நானோ அர்ஜுனனோ ஒருத்தர் உனக்கு மிஞ்சுவோம். எப்படி பார்த்தாலும் அஞ்சுதான்"னு வாக்கு கொடுத்தாப்ல. நீங்க ரத்ததானம் பண்ணாலும் பண்ணலைன்னாலும் ரத்த அணுக்கள் அழியறதும் மறுபடி உருவாகறதுமா இருக்கும்.
(இதையெல்லாம் குத்து மதிப்பா நான் எழுதறத விட விவரம் தெரிஞ்சவுக அ கூகுல்ல தேடிப்பிடிக்கிற பொறுமையிருக்கிறவுக பக்காவா ஒரு ஐட்டம் போட்டா நல்லது)
மேட்டருக்கு வரேன். எப்படியோ ப்ளட் பேங்குக்கு போய் "கூப்டிங்கல்ல வன்டேன். எடுத்துக்கங்க" னு கைய நீட்டினா ரத்தம் எடுக்க ஆள் இல்லியாம்.
இதுவாச்சும் பரவால்லை. துணைக்கு வந்த தம்பிக்கிட்டே வயிறெறிஞ்சு நிர்வாகத்தை திட்டித்தீர்த்துக்கிட்டே கீழே இறங்கி வரேன். எங்களுக்கு முன்னாடி ஒரு பார்ட்டி நடந்து போயிக்கினு கீது. எங்கனயோ பார்த்தாப்ல இருக்கேனு ரோசிக்கிறேன்.பாஸாயிருச்சு.
அப்பாறம் வார்ட் பாயை கேட்டேன் " ஆரு தலை?"
அவர் சொன்னாரு " ஹாஸ்பிட்டல் சூப்பிரணன்டு"
அடங்கொய்யால இவனுகளையெல்லாம் என்ன பண்ணலாம்? சஜஸ்ட் ப்ளீஸ்! ஆமா இந்த பதிவுக்கான படம் என்னனு சொல்லவே இல்லியே?
எங்கூர்ல ஓல்டேஜ்,பென்ஷன், விடோ பென்ஷன் எல்லாம் இப்படி மரத்தடில வச்சுத்தான் கொடுக்கிறது வழக்கம். இந்திய ஜனாதிபதியாகனும்னா ( அதுவும் டைரக்ட் எலக்சன்ல ) கொஞ்சம் போல கிரவுண்ட் ஒர்க்கும் செய்யனும்ல. அதனாலதான் இந்த இன்டராக்சன். ஹௌ ஈஸ் இட்?
கூட இருக்கிறது சி.பி.ஐ கட்சி செல் செக்ரட்டரி கிட்டு பாய் ( எ ) எஸ்.ஏ.அம்ஜத், ஏஐடியுசி டவுன் ஜெனரல் செக்ரட்டரி கம் ஆட்டோ டிரைவர் ரமேஷ் .