மனிதன் சமூக பிராணி ,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை இதெல்லாம் உடான்ஸு. மனிதன் ஒரு தீவினைப் போன்றவன். ஆடைக்குள் அவன் ஒரு மிருகம். மனிதரில் நிறம்,உரம் பலவிதமாக இருப்பது போல் தரமும் பலவாக உள்ளது.
எனவே கூடி வாழ்வதால் உரம் மிகுந்தவன்,தரம் மிக்கவன் நஷ்டப்படுகிறான். பலவீனன்,சோம்பேறிக்கு லாபம் ஏற்படுகிறது.
ஆண் பெண் உறவின் போது ஆணின் விந்தில் மில்லியன் கணக்கான உயிரணுக்கள் இருந்தாலும் தகுதி படைத்த ஒன்றே கருமுட்டையை துளைத்து உயிர் உருவாகிறது.
இது இயற்கையின் விதி. தகுதி படைத்தது உயிர்வாழும். அதுவற்றது செத்துத் தொலையும். மனிதன் கழிவறையிலும்,கட்டிலறையிலும்,பசி வேளைகளிலும் மிருகமாகிறான். அவன் மனதில் கட்டி வைக்கப்பட்ட மிருகம் சற்று உலாவி இளைப்பாறுகிறது. இந்த இளைப்பாறுதல் கிட்டாத போதுதான் அரசின் கட்டுப்பாடு கட்டுடைத்துக்கொண்டுவிடுகிறது.
இந்த உண்மைகளை ஹிப்பாக்ரஸி காரணமாய் கண்டு கொள்ளாத அரசும்,நிர்வாகமும் நிர்வாகத்தில் கோட்டை விடுவது சர்வ சகஜம்.
அரசாங்கத்தின் சோஷியலிசம் குடிகளுக்கு உயிர்காப்பு,உணவு,உடை,இருப்பிடம் ,செக்ஸ் இவற்றை பெற அவசியத் தேவையான வேலைவாய்ப்புகளை தருவதோடு முடிந்து விடும். அதை விடுத்து கண்டதிலும்
வெல்ஃபேர், வெங்காயம் என்று மெனக்கெட்டால் நிர்வாக சீர்கேடு உறுதி.
அரசின் நிர்வாக் சீர்கேடுகள் ஏழ்மைக்கு காரணமாவது போலவே, மக்களின் ஏழ்மையும் சில நேரங்களில் நிர்வாக சீர்கேடுகளுக்கு காரணமாகிவிடுகிறது.