ஆந்திரத்தில் வசிப்பதால் அப்படி தமிழ்நாடு,இப்படி ஆந்திர அரசியலை நெருக்கமாய் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது.
தமிழ்நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு ஆந்திர அரசியல் என்றாலே ஒரு இளக்காரம். என்.டி.ஆர் என்றதும் ஆந்திரத்து எம்.ஜி.ஆர் என்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால் ஆந்திர/தமிழக அரசியலை ஒப்பிட்டால் என்.டி.ஆர் பெரியாரின் பாத்திரத்தை தான் தாங்கியுள்ளார் என்று நான் கூறுவேன்.
என்.டி.ஆர் சினிமாக்காரர். சிரஞ்சீவியும் சினிமாக்காரர் என்பதை தவிர வேறெந்த ஒற்றுமையும் அவர்களிடையில் கிடையாது.
என்.டி.ஆர் தன் கையால் கரணம் போட்டு முன்னுக்கு வந்தவர். என்.டி.ஆர் காலத்து தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,தொழில் நுட்பகலைஞர்கள் வேறு. அவர்களிலிருந்த சின்ஸியாரிட்டி வேறு.அவர்களோடு பணிபுரிந்ததே என்.டி.ஆரின் திறமைக்கும்,சின்ஸியாரிட்டிக்கும் ஒரு ஆதாரமாகும்.
என்.டி.ஆர் அரசியல் பிரவேசம் நடந்தபோது அரசியல் மியூசிக்கல் சேர் ஆட்டத்தில் காலியிடமிருந்தது. இப்போ? அப்போ காங்கிரஸை விட்டா வேறு கட்சி கிடையாது. ஆந்திரத்து முதல்வர்கள் கால்பந்து கணக்காய் டெல்லி தலைமையால் பந்தாடப்பட்டனர்.
இப்போது ? பலம் வாய்ந்த எதிர்கட்சியாக தெ.தேசம் இருக்கிறது. முதல்வர் ஒய்.எஸ்.ஆர் என்.டி.ஆருக்கும் அதிகமான நற்பெயர் பெற்றுள்ளார். சிரஞ்சீவிக்கு மூக்குடைப்பு நிச்சயம்.