Tuesday, August 26, 2008

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு :திருப்பதியில் சிரஞ்சீவி பேச்சு

திருப்பதியில் சிரஞ்சீவி ,ஆட்சியை பிடித்து முதல்வரானால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவோம் என்று பேசினார்.சிரஞ்சீவி உதிர்த்த முத்துக்களும் என் கருத்துக்களும் வருமாறு

ஊழலுக்கு காரணங்கள்; 1.பசி,2.தேவை, 3.பேராசை

ரூபாயின் ம‌திப்பை அதிக‌ரிக்க‌ச்செய்வோம் (எம்.ஜி.ஆர் போஸ்ட் கார்டு விலையை குறைப்பேன் என்ற‌தை நினைத்துப்பாருங்க‌ள்)


நான் கான்ஸ்ட‌பிள் ம‌க‌ன். அப்பா ட்ரான்ஸ்ஃபரை தவிர்க்க லாஸ் ஆஃப் பேயில லீவ் போட்டு வீட்டுல இருந்தப்ப ட்ர‌ங்க் பெட்டிய‌டியில் காசு பொறுக்கி சோறாக்கிதின்ன‌ நாளுண்டு. ( இதான் க‌ட‌மை உண‌ர்வுங்க‌ மாற்ற‌லை த‌விர்க்க‌ லீவ் போட்ட‌வ‌ராச்சே அப்பா) . விற‌கு வாங்கிவ‌ர‌ப்ப‌ ரிக்ஷாவுக்கு காசில்லாம‌ ரெண்டு த‌வ‌ணைல‌ கொண்டு வ‌ந்திருக்க‌ன்

அப்பா நில‌ம் வாங்கிட்டார்(கான்ஸ்ட‌பிள்) அதுல‌ எல்லா வேலையும் செய்திருக்க‌ன். (ஓகே.. உன் வீட்டு நில‌ம்தான‌ப்பா0

ஃபிக்ச‌ன் ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்க‌லை(அட‌ப்பாவிங்க‌ளா..முக்காலே மூணு வீச‌ம் அதான‌ப்பா ந‌டிச்ச‌)யாதார்த்த‌ பாத்திர‌ங்க‌ள்ள‌ ந‌டிச்சேன், அதெல்லாம் இன்ஸ்பைர் ப‌ண்ணிருச்சு. (அட‌ங்கொப்புரான‌ ..ஆனான‌ப்ப‌ட்ட‌ என்.டி.ஆர் ராம‌ர் வேஷ‌த்துல‌ வெளுத்து க‌ட்டி ரெண்டாவ‌து க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ல‌யா இதெல்லாமா அர‌சிய‌லுக்கு வர தேவையான த‌குதி)


ர‌த்தவ‌ங்கி வ‌ச்சேன்(ஊர் பிள்ளைங்க‌ ர‌த்த‌த்தை வாங்கி பேர்வாங்கிகிட்டே.. இந்த‌ அறியாப்புள்ள‌ங்க‌ உங்கூட‌ ப‌ட‌மெடுத்துக்க‌ ஆசைப்ப‌ட்டு கொடுத்துதுங்க‌/ஆமா அதையெல்லாம் த‌னியார் ஆஸ்ப‌த்திரிங்க‌ளுக்கு விக்க‌ற‌தா சொல்றாங்க‌ /சாட்சாத் ம‌ந்திரிங்க‌/ அதுக்கு உங்காளு ஒருத்த‌ரு இல்லை இல்லை பாதிதான் விக்க‌றோம்னு கூட‌ சொன்னாரே/) ட்ர‌ஸ்ட் வ‌ச்சேன் (இன் க‌ம் டேக்ஸ் கார‌னை ஏமாத்த‌ ப‌ண‌ம் ப‌டைச்ச‌வ‌ங்க‌ ப‌ண்ற‌ அதே வேலை தானே)

1.பெரிய அணைகள் மட்டும் போதாது/தடுப்பணை கட்டணம்/சந்திரபாபு காலத்துல கட்டினாங்களே/ஒவ்வொரு மழைக்கும் அடிச்சிட்டு போயிருமே அதானே

2.வலது கையால கொடுத்து (சமூக நலதிட்டங்கள்) இடது கையால பறிக்கறதா?(மது விற்பனை)/எல்லாம் சரி/ மது விலக்குன்னு குலைக்க வேண்டியது தானே அதுல என்ன கட்டுப்பாடு/அதெல்லாம் முதல் ரவுண்டு வரைக்கும் தான் நைனா

நக்ஸலிசம்: வழிதவறிப்போன இளைஞர்கள்/வறுமையே காரணம்/வறுமையை ஒழிப்பேன்.

தெலுங்கானா:பிரிஞ்சுதான போகனும்னா ஒத்துழைப்பேன்.

அம்மா 22 வருசம் வளர்த்தாங்க தம்பி தங்கையை பார்த்துக்க சொன்னாங்க பார்த்துக்கிட்டேன்
நீங்க(மக்கள்) 30 வருசம் வளர்த்திங்க/எங்களை பார்த்துக்கன்னு கூப்புடறிங்க தோ வந்துட்டன்.


அரசியலுக்கு அழைப்பு பற்றி அம்மாக்கு சொன்னேன் கண்டபடி வைவாங்களேப்பான்னாங்க/இல்ல கலாம் வரசொல்றாருன்னேன்/அவரையே கேளுன்னாங்க /அவர் சொன்னார் ட்ரான்ஸ்பரண்டா இரு/யாரு காறி துப்பினாலும் படாதுன்னார்