Saturday, August 2, 2008

விஷயம் தெரிஞ்ச ஆளுங்கறதால கோபம் வர மாட்டேங்குது.

விஷயம் தெரிஞ்ச ஆளுங்கறதால கோபம் வர மாட்டேங்குது..இரக்கம் தான் பிறக்குது. ஒரு பார்ட்டி. என் தம்பிக்கு க்ளாஸ் மேட். பஸ் ஓனர்ஸா இருந்த குடும்பத்து வாரிசு. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி "அழிஞ்சுபழஞ்சோறா" போயி, ஏதோ ஒரு ஆங்கில (?)பத்திரிக்கைல ரிப்போர்ட்டரா ஒப்பேத்திக்கிட்டிருந்து பிறகு ஒரு பிரபல தமிழ் தினசரிக்கு தாவி, அங்க பண விஷயத்துல ஆட்டம் போட்டு சகல கல்யாண குணங்களோட எங்க மாமா சிவாஜி மாதிரி ஆயிபோயிருக்கு. இந்த ஆசாமி ரிப்போர்ட்டரா இருக்கிற பத்திர்க்கைக்கு நான் ஒரு செய்திகட்டுரை அனுப்பினேன், அதுவும் எதை பற்றி? உடல்,மன‌ ஊனமுற்றோருக்கான ஆசிரமத்தை பற்றி.

இவர் இதுக்கு முன்னாடி குப்பை கொட்டின பத்திரிக்கைல தான் நான் இப்ப குப்பை கொட்டிகிட்டிருக்கேன். மானம்,மரியாதை எல்லாத்தயும் கழட்டி வச்சுட்டா தான் இங்க குப்பை கொட்ட முடியும்.


நான் ஏதோ நதிகள் இணைப்பு,நண்டு குழம்புன்னு லட்சியம் வச்சிக்கிட்டு அதை நிறைவேற்ற தியாகம் பண்றேன். இந்த ஆசாமிக்கு என்ன கேடு. இவரும் இன்னைக்கு நானெப்படி மானம் விட்டு,மரியாதை விட்டு குப்பை கொட்றேனோ அப்படியே தான் அன்னைக்கு இவரும் குப்பை கொட்டியிருப்பார். என்ன ஒரு வித்யாசம் என்னோட‌து தியாகம். இவரோடது சுயநலம். சரி ஒழியட்டும். நான் நேற்று ரிப்போர்ட்டர். நாளைக்கும் ரிப்போர்ட்டரானு சொல்ல முடியாது. இந்த பார்ட்டி நல்லா ருசிகண்டு போயிருக்கு. இதுக்கு இதை விட்டா வேறு பிழைப்பு கிடையாது.

இவர் ரிப்போர்ட்டருன்னா..வெளியாள் அந்த பத்திரிக்கைக்கு கான்ட்ரிப்யூட் பண்ணக்கூடாதா? என்ன சமாச்சாரம் தெரியலை. ஒருவேளை அந்த செய்தி கட்டுரையோட நடைய மோகிச்சு பத்திரிக்கை நிர்வாகம் இது மாதிரி நீங்களும் ஏன் எழுதக்கூடாதுனு கேட்டுருச்சா? புரியல. சரி ஒழியட்டும். குடியை,மசாலாவ குறைச்சுக்கிட்டு, கல்யாணம் கட்டிக்கிட்டு உருப்பட்டா சரி. இல்லன்னா..இருக்கிற வெயிட்டுக்கு,படற டென்ஷனுக்கு மேசிவ் ஹார்ட் அட்டாக்குதான்..


ரகுபதிராகவ ராஜா ராம் பதீத பாவன சீதாராம்
ஈஸ்வ‌ர‌ அல்லா தேரே நாம்
ச‌ப் கோ ச‌ன்ம‌தி தே ப‌க‌வான் (எல்லாருக்கும் ந‌ல்ல‌ புத்திய‌ குடு ப‌க‌வானே)