Wednesday, April 23, 2008
தத்துவங்கள்
1.எவன் இனிக்க இனிக்க பேசுகிறானோ அவனே நமக்கு எமன்
2.எவ்னொருவன் நூறுகளை வீணாக செலவழிக்கிறானோ அவனுக்கு ஆயிரங்களில் கடனிருக்கும்
3.நீ உன்னை உன் எதிர்காலத்தை மனதில் வைத்து எடை போடுகிறாய்.சமுதாயம் உன் கட்(ச)ந்த காலத்தை மனதில் வைத்து.
4. யாவும் அனுகூலமாய் இருக்கும் போதான தன்னம்பிக்கை டுபாகூர். யாவும் பிரதிகூலமாயிருக்கும்போதும் தொடரும் தன்ன்னம்பிக்கையே உண்மையானது.
5.பணத்துக்கு (பொருட்களுக்கும்) சுயகவுரம் அதிகம். அதை அவமானப்படுத்தினால்(பால் பாயிண்ட் பேனாவில் காது குடைவது) வேறு இடம் பார்த்துக்கொண்டு விலகி விடும்.
6.இங்கு எதிலும் முழுமையில்லை. எவனும் 100 சதவீதம் நல்லவனுமில்லை, 100 சதவீதம் கெட்டவனுமில்லை
7.ஆண் பெண் இணைந்து மேலுக்கு என்ன பேசினாலும் அடி மனதில் ஓடுவது என்னவோ உடலுறவு குறித்த எண்ணங்களே
8.வீரியமும் மலம் போன்றதே! அவரவர் உடல் இயற்கைக்கு ஏற்றபடி, அவ்வப்போது வெளிப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் மனோவியாதிகள் நிச்சயம்.
9.அடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் இச்சையே வன்முறைக்கு விதை.
10.பயத்தில் இருப்பவனே பயமுறுத்துவான்
11.பணத்துக்கு மதிப்பை தருவது அது கைக்கு கிடைக்கும் நேரமே
12.மனைவிகளின் ராஜ்ஜியத்தில் கணவன் என்பவன் ஆஃபீஸ் பாய்