Monday, April 7, 2008

அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறதா?

சமீபத்தில் இந்தியா டு டே வில் ஒரு கட்டுரையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொட்டிக்கொடுக்கப்படுவதாகவும், இதனால் மாநிலங்களின் நிதிநிலை பாதிக்கப்படுவதாகவும் படித்தேன். என்னைப்பொருத்தவரை இதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. கோளாறு ஆரம்பமாவது எங்கே என்பதை பார்த்து அதை சீராக்கிவிட்டால் இதெல்லாம் ஜுஜுபி. அரசு ஊழியன் என்பவன் ஒரு வித்யாசமான பிரகிருதி. அவனுக்கு வெளி உலகம் தெரியாது.அவனது மேலதிகாரிதான் அவனுக்கு தெய்வம். இவனுக்கு முன்னால் இவனது சீட்டில் வேலை செய்த ஆசாமிதான் எல்லாமே. ஒன்றுக்கு போக அனுமதி கேட்கும் கடிதத்தை கூட சொந்தமாக ட்ராஃப்ட் செய்ய துணியமாட்டான். சதா சர்வ காலம் அர்ரியர்ஸ்,பி.எஃப்.,கிராச்சுடி,எஃப்.பி.எஃப்,ஹெச் ஆர் ஏ தவிர ஒரு இழவும் தெரியாது. இந்த நரக வாழ்க்கைக்கு அவன் சம்மதித்து வாழ்வதே மலை. இதற்கே அவனுக்கு கொட்டி கொடுக்க வேண்டும்.

இன்றைக்கு அரசுத்துறைகள் செய்யும் வேலைகளை மூன்றாக‌ பிரிக்கலாம்.
1.கொள்கை வடிவமைப்பு
2. நிதி வசூல்
3.செலவு செய்தல்
4.சூப்பர் வைஸ் செய்தல்

கொள்கை வ‌டிவ‌மைப்பு என்ப‌து ச‌ரியாக‌ இருந்தால், அத‌னால் செல்வ‌ம் உண்டாவ‌தாய் இருந்தால் ம‌ற்ற‌ 3 வேலைக‌ள் ச‌ரியாக‌ ந‌ட‌க்கும். கொட்டிக்கொடுத்தாலும் த‌வ‌றில்லை. ந‌ம் நாடு விவ‌சாய‌ நாடு. ம‌க்க‌ள் தொகையில் 70 ச‌த‌வீத‌ம் பேர் விவ‌சாய‌த்தை சார்ந்து வாழ்கிறார்க‌ள். இங்கு ஜ‌ப்பான் போன்று எரிம‌லைக‌ள் இல்லை,பூக‌ம்ப‌ம் இல்லை. இந்தியா பால‌வன பூமியல்ல,வருடம் முழுதும் பனிப்பொழிவோ இல்லை.

உலகத்தில் உண்மையிலேயே உற்பத்தி என்பது நடப்பது ஒரு விவசாயத்துறையில் மட்டுமே. மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். கால்நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். புல்லைப்போட்டு,புல்லை பாலாக்கிறோம்.

ஒரு ரேடியோ பெட்டியை புதைத்து வைத்தால் அது நாசமாகுமே தவிர ஒரே ஒரு ரேடியோ பெட்டி கூட‌ முளைக்காது. என‌வே அர‌சாங்க‌ம் எம‌து நாடு விவ‌சாய‌ நாடு,எம‌து தொழில் விவ‌சாய‌ம் என்று முடிவு செய்து,விவ‌சாய‌த்தில் உள்ள‌ இடைஞ்ச‌ல்க‌ளை (பாச‌ன‌ப்ப‌ற்றாக்குறை,இர‌சாய‌ண‌ உர‌ங்க‌ள், காபீடு இன்மை..) ஒழித்து க‌ட்டிவிட்டால் போதும். இன்றுள்ள‌ அர‌சு இய‌ந்திர‌த்துக்கு அர‌சு செல‌விடும் ச‌ம்ப‌ள‌ தொகை வீணாகாது.

விவ‌சாய‌ம் செழித்தால் நிதி வ‌சூல்,நிதி ப‌ங்கீடு,மேற்பார்வை யாவ‌ற்றையும் அந்த‌ந்த‌ ப‌ஞ்சாய‌த்திலான‌ விவ‌சாயிக‌ள் ச‌ங்க‌த்துக்கு விட்டு விட‌லாம். எப்ப‌டி உங்க‌ள் வ‌ச‌தி?