Sunday, April 13, 2008

பெண்கள் வயதுக்கு வரும்போது ஜல்லடை வைத்து தண்ணீர் ஊற்றுவது போல


சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
சத்தியமாக நான் ஏதும் பானத்தை சிபாரிசு செய்யப்போவதில்லை. நான் சாதித்தவை மற்றெந்த சாதனையாளருக்கும் குறைந்தவை இல்லை. அதே நேரம் அந்த சாதனைகளுக்கான எனர்ஜி மட்டும் என்னுடையதல்ல . இதை அடித்து சொல்வேன்.(கன்னத்தில் அல்ல).

நான் இளமையில் (இளமையில் என்ன இப்போதும் என் தனிப்பட்ட விஷயங்களில் ) பெரிய கோழை. என் உடலும் பூஞ்சைதான். பெண்கள் வயதுக்கு வரும்போது ஜல்லடை வைத்து தண்ணீர் ஊற்றுவது போலதான் எனக்கு என் அம்மா தண்ணீர் ஊற்றுவார்கள். காரணம் மூச்சுத்திணறும்.

ஒரு கால‌க‌ட்ட‌ம் வ‌ரை யாரும் என்னை ஒரு அடி கூட‌ அடிக்க‌ மாட்டார்க‌ள். கார‌ண‌ம் கேவி கேவி அழும்போது அப்ப‌டியே இழுத்துவிடும் மூச்சு பேச்சு இருக்காது. (யாரோ ஒரு ச‌திகாரி அப்ப‌டி மூச்சு நின்னு போனா வாய்ல‌ வாய‌ வ‌ச்சு ஊதுங்க‌ ச‌ரியாபோயிரும் என்று சொல்லிவிட்ட‌தால் தைரிய‌மாக‌ அடிக்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள்/ந‌ம்ம‌ சேஷ்டைக‌ள் அப்ப‌டி/

எவ‌ரேனும் ஒரு பேச்சு சொல்லிவிட்டால் தாங்காது. சிறு வ‌ய‌தில் என் அண்ண‌ன் "ப‌ல் தேய்க்காம‌ சாப்பிட‌ற‌தை விட‌ ம‌ல‌ந்தின்னு போடா" என்று சொன்னதால் வேலூருக்கு போய்விட்டேன். (வ‌ரும்போது ந‌ட‌ந்தே வ‌ந்த‌து வேறு க‌தை)

இந்த நிலையில் ஒரு முதலமைச்சர் மேல் புகார் கொடுத்து விட்டு எம்.ஜி.ஆர் படம் மாதிரி நானே வாதாடியபோது அதற்கான சக்தி எங்கிருந்து வந்தது என்பதை யோசித்து பார்த்தேன்.

நான் தவறு செய்யவில்லை. என் செய‌லில் சுய‌ந‌ல‌மில்லை என்ற‌ உண‌ர்வே தெய்வீக‌ ச‌க்தி என் உட‌லில் பாய‌ வ‌ழிவ‌கை செய்திருக்‌க‌ வேண்டும்.