Monday, April 28, 2008
கஜூரஹோ கண்டு வந்தோம்: கார்த்திகேயன்,சித்தூர்
கஜூரஹோ கண்டு வந்தோம்
(கார்த்திகேயன்,சித்தூர்)
சித்தூரில் காலை 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு போபால் சேர்ந்தோம்.ஒரு தமிழ் ஓட்டலில் குளித்து டிபன் சாப்பிட்டோம். சாஞ்சிக்கு செல்ல
ஆட்டோ பற்றி ஓட்டல் காரர்களையே விசாரித்தோம். அவர்களே ஒரு ஆட்டோ பேசி தர புறப்பட்டோம்.(100 கி.மீ, போய்வர ரூ 400) வழியில் தேனீர்,சமோசா,ஜிலேபி வேகவைத்த முட்டை..எதுவுமே ரூ.3 க்கு அதிகமில்லை. இங்கு இரவு இட்லி கடைகள் போலே அங்கு முட்டை கடைகள். வேகவைத்த முட்டை ரூ.3, பிரட் ஆம்லெட் ரூ.10 .பஜ்ஜி,போண்டா வடைக்கு பதில் சமோசா,ஜிலேபி.
அசோகர் ஸ்தூபம் எல்லாம் பார்த்துக்கொண்டு 6 மணியளவில் ரயில் நிலையம் வந்தோம்.
அடுத்து கஜூரஹோ செல்வதற்கு இரவு 8 மணிக்கு ரயில். கஜூரஹோ செல்வதற்கு மஹோபா என்ற ஊரில் இறங்கி,80 கி.மீ தூரம் பேருந்தில் செல்ல வேண்டும்.மஹோபா அதிகாலை 3 மணிக்கு சென்றோம். ரயில் நிலையத்திற்கு வெளியே ஸ்வீட்ஸ்டால்கள் மற்றும், தேனீர் கடைகள் இரவு முழுக்க திறந்திருக்கின்றன. குளிர மிக அதிகமாக இருக்கிறது. ரயிலுக்கு காத்திருப்போர் எரியும் பொருள் எதுவாயிருந்தாலும் பொறுக்கி எடுத்துவந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். நாங்களும் ஜோதியில் கலந்தோம். அந்த குளிரிலும் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளை கொண்டு தம் ஆட்டோக்களை நிரப்புவதில் மும்முரமாயிருந்தனர். எல்லோரும் பார்க்க அழுக்காகவே காட்சியளிக்கிறார்கள். எல்லோர் வாயிலும் வகை வகையான பாக்கு தூள். எங்கு பார்த்தாலும் துப்பியபடி உள்ளனர். நம் மீதே துப்பிவிட்டார்களோ என்று பார்த்துக்கொள்ளும் படி இருக்கும். காலை பேருந்து நிலையம் சென்று கஜூரஹோ செல்லும் பேருந்தில் 9 மணிக்கு ஏறினோம். 80 கி.மீட்டர் பயணத்தில் கண்டக்டரும், ட்ரைவரும் 5, 6 இடங்களில் இறங்கி டீ குடித்தபடி 4 1/2 மணி நேரமாக்கிவிட்டனர். வழியெல்லாம் ஆட்கள் துப்பாக்கிகளுடன் நடமாடுகின்றனர். வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். தோட்டாக்கள் அடங்கிய பெல்ட்டை பூணூல் மாதிரி அணிந்திருக்கிறார்கள்.
மதியம் 2 மணிக்கு கஜூரஹோ போய் சேர்ந்தோம். தங்குவதற்கான அறைகள் ரூ.300 முதல், 3,5,10 ஆயிரங்கள் வரை இருக்கிறது. எல்லாம் வெளிநாட்டு பயணிகள் தான்.அனைத்து நாட்டு உணவகங்களூம் உள்ளன. ஆனால் தென்னக உணவகங்கள் மட்டுமில்லை. தாலி என்று ரூ.70,100 ,150,200 க்கு கிடைக்கிறது. ரொட்டி சாதம் பருப்பு,பொரியல்,ஸ்வீட் அனைத்தும் அடங்கிய ஸ்பெஷல் பேக்கேஜ். இதை விட்டால் இருக்கவே இருக்கிறது வணிகளில் பிரட் ஆம்லெட்,முட்டை,பானிபூரி,வேர்கடலை நாங்கள் தங்கிய அறையில் ரூ.400 க்கு 3 படுக்கைகள்.. வசதியாகவே இருந்தது. எங்கள் பக்கத்து அறையில் இத்தாலி நாட்டினன் ஒருவன் 15 நாட்களாக தங்கியிருப்பது தெரிய வந்தது. அவனே சமைத்து சாப்பிட்டுகொள்கிறானாம்.
சிற்ப கோவில்கள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு மறுநாள் மாலை 5 மணிக்கு பேருந்து மூலம் மஹோபா திரும்பினோம். அன்று இரவு 12 மணிக்கு காசிக்கு பயணமானோம்.மறுநாள் மதியம் 12 மணிக்கு காசி. அங்கு திருப்பதி சமீபத்திலுள்ள ஏற்பேடு ஆசிரம கிளை ஒன்று உள்ளது. இதை நண்பன் ஒருவன் மூலம் ஏற்கெனவே அறிந்திருந்ததால் அங்கு சென்றோம். ஒரு சாமியாரின் உதவியுடன் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தோம். வழி நெடுகிலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன்,கோவிலை சுற்றி,சாலைகளில் 200 மேற்பட்ட ராணுவ தொப்பிகள். காசி நகரத்து சாலைகளில் நெரிசல் அதிகம். இதில் ரிக்ஷாக்கள் மிக அதிகம். 8 கி.மீ தூரத்தை கடக்க 2 மணி நேரம் ஆகியது. ஆட்டோ டிரைவரை விசாரித்தால் 3 மணி நேரமாகுமென்றார். சாலைகளில் அந்த அளவுக்கு நெரிசல். கோவிலுக்கு செல்ல சின்ன சின்ன சந்து போன்ற தெருக்கள் வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. தெருவெங்கும் கடைகள். பால்,வெண்ணைய்,பன்னீர் அதிகமாக தென்படுகிறது.சிறு மண்பாண்டங்களில் பாலில் தயாரித்த வகை வகையான லஸ்ஸிகள் கிடைக்கின்றன.
Wednesday, April 23, 2008
தத்துவங்கள்
1.எவன் இனிக்க இனிக்க பேசுகிறானோ அவனே நமக்கு எமன்
2.எவ்னொருவன் நூறுகளை வீணாக செலவழிக்கிறானோ அவனுக்கு ஆயிரங்களில் கடனிருக்கும்
3.நீ உன்னை உன் எதிர்காலத்தை மனதில் வைத்து எடை போடுகிறாய்.சமுதாயம் உன் கட்(ச)ந்த காலத்தை மனதில் வைத்து.
4. யாவும் அனுகூலமாய் இருக்கும் போதான தன்னம்பிக்கை டுபாகூர். யாவும் பிரதிகூலமாயிருக்கும்போதும் தொடரும் தன்ன்னம்பிக்கையே உண்மையானது.
5.பணத்துக்கு (பொருட்களுக்கும்) சுயகவுரம் அதிகம். அதை அவமானப்படுத்தினால்(பால் பாயிண்ட் பேனாவில் காது குடைவது) வேறு இடம் பார்த்துக்கொண்டு விலகி விடும்.
6.இங்கு எதிலும் முழுமையில்லை. எவனும் 100 சதவீதம் நல்லவனுமில்லை, 100 சதவீதம் கெட்டவனுமில்லை
7.ஆண் பெண் இணைந்து மேலுக்கு என்ன பேசினாலும் அடி மனதில் ஓடுவது என்னவோ உடலுறவு குறித்த எண்ணங்களே
8.வீரியமும் மலம் போன்றதே! அவரவர் உடல் இயற்கைக்கு ஏற்றபடி, அவ்வப்போது வெளிப்படுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் மனோவியாதிகள் நிச்சயம்.
9.அடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் இச்சையே வன்முறைக்கு விதை.
10.பயத்தில் இருப்பவனே பயமுறுத்துவான்
11.பணத்துக்கு மதிப்பை தருவது அது கைக்கு கிடைக்கும் நேரமே
12.மனைவிகளின் ராஜ்ஜியத்தில் கணவன் என்பவன் ஆஃபீஸ் பாய்
பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை உடலுறவில்
பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை உடலுறவில்
வீரியம், வீரியத்திலான எக்ஸ்,ஒய் அணுக்களின் மூலம் ஆண் நிர்ணயிக்கிறான் என்பது உயிரியல். பல்வேறு அம்சங்கள் இதை நிர்ணயிக்கின்றன என்பது என் வாதம். ஒரு வீட்டில் குடியேறி ஒன்றரை வருடங்கள் ஆன பின்பு அவ்வீட்டின் வாஸ்து ,மேற்படி தம்பதிகளின் உடலையும்,மனதையும் பாதிக்கின்றன. அவ்வீட்டில் ஈசான்ய திசை பள்ளமாகவும்,திறந்த வெளியாகவும், ஈரமானதாகவும் இருந்தால் ஆண் குழந்தை நிச்சயம். அதே போன்று ,ஒரு வீட்டின் நைருதி திசை முதல் வாரிசை காட்டுமிடம். இது உயர்ந்தும்,கதவு ஜன்னல் ஏதுமின்றியும் இருந்தால் தான் தலை வாரிசு ஏற்படும். இது ஒரு கோணம்.
இதே போன்று கிரகங்களில் ஆண்,பெண்,அலி நிர்ணயம் உள்ளது. மேலும் ராசிகளிலும் பால் வேறுபாடு உண்டு. ஆண் ராசிகளில்,ஆண் கிரகங்கள் வலிமையுடன் தங்கிய ஜாதகத்தில் பிறந்தவர்க்கு ஆண் குழந்தை நிச்சயம். அந்த கிரகங்கள் அந்த ஜாதகத்துக்கு யோக காரகர்களாகவோ, மித்திரர்களாகவோ இருக்க வேண்டும்.
மேலும் அந்த ஜாதகரின் ஜாதகத்தில் புத்திரகாரகரான குரு,புத்திரஸ்தானாதிபதி, வலிமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அந்த குரு ஐந்தில் இருப்பதோ,ஐந்தை பார்ப்பதோ கூடாது.
அசல் விஷயம் :
உடலுறவுக்கு உகந்த நாள் பெண் குளித்து (மாதவிலக்கான 5 நாட்கள் கழித்து)சுத்தமான பிறகு சந்திரோதயத்துக்கு பின்,ஆரூட லக்கினத்துக்கு ஐந்தில் ஆண் கிரகம் (குருவை தவிர) இருக்க உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் இது நிச்சயம்.
Wednesday, April 16, 2008
வருகிறார் புதிய கேமரா கலைஞர்..பராக் பராக்
வருகிறார் புதிய கேமரா கலைஞர்..பராக் பராக்
யாருன்னு முழிக்காதிங்க.. ஹி ஹி..சாட்சாத் சித்தூர் .முருகேசனாகிய நானே அந்த புதிய கேமரா கலைஞர். தினத்தந்தி நிருபனாய் ,போட்டோகிராஃபர்களோடு முட்டிமோதி அலுத்து தானமாய் ஒரு ஸ்டில் கேமரா,ரூ.500 க்கு ஒரு ஸ்டில் கேமரா வாங்கியும் வேறு வழியின்றி இன்று டிஜிட்டல் கேமரா வாங்கியே வுட்டேன். இனி பாத்துக்கங்க நம்ம சைட்ல போட்டோங்களா தூள் கிளம்ப போவுது ..கபர்தார்..
Sunday, April 13, 2008
பெண்கள் வயதுக்கு வரும்போது ஜல்லடை வைத்து தண்ணீர் ஊற்றுவது போல
சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
சத்தியமாக நான் ஏதும் பானத்தை சிபாரிசு செய்யப்போவதில்லை. நான் சாதித்தவை மற்றெந்த சாதனையாளருக்கும் குறைந்தவை இல்லை. அதே நேரம் அந்த சாதனைகளுக்கான எனர்ஜி மட்டும் என்னுடையதல்ல . இதை அடித்து சொல்வேன்.(கன்னத்தில் அல்ல).
நான் இளமையில் (இளமையில் என்ன இப்போதும் என் தனிப்பட்ட விஷயங்களில் ) பெரிய கோழை. என் உடலும் பூஞ்சைதான். பெண்கள் வயதுக்கு வரும்போது ஜல்லடை வைத்து தண்ணீர் ஊற்றுவது போலதான் எனக்கு என் அம்மா தண்ணீர் ஊற்றுவார்கள். காரணம் மூச்சுத்திணறும்.
ஒரு காலகட்டம் வரை யாரும் என்னை ஒரு அடி கூட அடிக்க மாட்டார்கள். காரணம் கேவி கேவி அழும்போது அப்படியே இழுத்துவிடும் மூச்சு பேச்சு இருக்காது. (யாரோ ஒரு சதிகாரி அப்படி மூச்சு நின்னு போனா வாய்ல வாய வச்சு ஊதுங்க சரியாபோயிரும் என்று சொல்லிவிட்டதால் தைரியமாக அடிக்க ஆரம்பித்தார்கள்/நம்ம சேஷ்டைகள் அப்படி/
எவரேனும் ஒரு பேச்சு சொல்லிவிட்டால் தாங்காது. சிறு வயதில் என் அண்ணன் "பல் தேய்க்காம சாப்பிடறதை விட மலந்தின்னு போடா" என்று சொன்னதால் வேலூருக்கு போய்விட்டேன். (வரும்போது நடந்தே வந்தது வேறு கதை)
இந்த நிலையில் ஒரு முதலமைச்சர் மேல் புகார் கொடுத்து விட்டு எம்.ஜி.ஆர் படம் மாதிரி நானே வாதாடியபோது அதற்கான சக்தி எங்கிருந்து வந்தது என்பதை யோசித்து பார்த்தேன்.
நான் தவறு செய்யவில்லை. என் செயலில் சுயநலமில்லை என்ற உணர்வே தெய்வீக சக்தி என் உடலில் பாய வழிவகை செய்திருக்க வேண்டும்.
Monday, April 7, 2008
அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தரப்படுகிறதா?
சமீபத்தில் இந்தியா டு டே வில் ஒரு கட்டுரையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொட்டிக்கொடுக்கப்படுவதாகவும், இதனால் மாநிலங்களின் நிதிநிலை பாதிக்கப்படுவதாகவும் படித்தேன். என்னைப்பொருத்தவரை இதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. கோளாறு ஆரம்பமாவது எங்கே என்பதை பார்த்து அதை சீராக்கிவிட்டால் இதெல்லாம் ஜுஜுபி. அரசு ஊழியன் என்பவன் ஒரு வித்யாசமான பிரகிருதி. அவனுக்கு வெளி உலகம் தெரியாது.அவனது மேலதிகாரிதான் அவனுக்கு தெய்வம். இவனுக்கு முன்னால் இவனது சீட்டில் வேலை செய்த ஆசாமிதான் எல்லாமே. ஒன்றுக்கு போக அனுமதி கேட்கும் கடிதத்தை கூட சொந்தமாக ட்ராஃப்ட் செய்ய துணியமாட்டான். சதா சர்வ காலம் அர்ரியர்ஸ்,பி.எஃப்.,கிராச்சுடி,எஃப்.பி.எஃப்,ஹெச் ஆர் ஏ தவிர ஒரு இழவும் தெரியாது. இந்த நரக வாழ்க்கைக்கு அவன் சம்மதித்து வாழ்வதே மலை. இதற்கே அவனுக்கு கொட்டி கொடுக்க வேண்டும்.
இன்றைக்கு அரசுத்துறைகள் செய்யும் வேலைகளை மூன்றாக பிரிக்கலாம்.
1.கொள்கை வடிவமைப்பு
2. நிதி வசூல்
3.செலவு செய்தல்
4.சூப்பர் வைஸ் செய்தல்
கொள்கை வடிவமைப்பு என்பது சரியாக இருந்தால், அதனால் செல்வம் உண்டாவதாய் இருந்தால் மற்ற 3 வேலைகள் சரியாக நடக்கும். கொட்டிக்கொடுத்தாலும் தவறில்லை. நம் நாடு விவசாய நாடு. மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கிறார்கள். இங்கு ஜப்பான் போன்று எரிமலைகள் இல்லை,பூகம்பம் இல்லை. இந்தியா பாலவன பூமியல்ல,வருடம் முழுதும் பனிப்பொழிவோ இல்லை.
உலகத்தில் உண்மையிலேயே உற்பத்தி என்பது நடப்பது ஒரு விவசாயத்துறையில் மட்டுமே. மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். கால்நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். புல்லைப்போட்டு,புல்லை பாலாக்கிறோம்.
ஒரு ரேடியோ பெட்டியை புதைத்து வைத்தால் அது நாசமாகுமே தவிர ஒரே ஒரு ரேடியோ பெட்டி கூட முளைக்காது. எனவே அரசாங்கம் எமது நாடு விவசாய நாடு,எமது தொழில் விவசாயம் என்று முடிவு செய்து,விவசாயத்தில் உள்ள இடைஞ்சல்களை (பாசனப்பற்றாக்குறை,இரசாயண உரங்கள், காபீடு இன்மை..) ஒழித்து கட்டிவிட்டால் போதும். இன்றுள்ள அரசு இயந்திரத்துக்கு அரசு செலவிடும் சம்பள தொகை வீணாகாது.
விவசாயம் செழித்தால் நிதி வசூல்,நிதி பங்கீடு,மேற்பார்வை யாவற்றையும் அந்தந்த பஞ்சாயத்திலான விவசாயிகள் சங்கத்துக்கு விட்டு விடலாம். எப்படி உங்கள் வசதி?
இன்றைக்கு அரசுத்துறைகள் செய்யும் வேலைகளை மூன்றாக பிரிக்கலாம்.
1.கொள்கை வடிவமைப்பு
2. நிதி வசூல்
3.செலவு செய்தல்
4.சூப்பர் வைஸ் செய்தல்
கொள்கை வடிவமைப்பு என்பது சரியாக இருந்தால், அதனால் செல்வம் உண்டாவதாய் இருந்தால் மற்ற 3 வேலைகள் சரியாக நடக்கும். கொட்டிக்கொடுத்தாலும் தவறில்லை. நம் நாடு விவசாய நாடு. மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்கிறார்கள். இங்கு ஜப்பான் போன்று எரிமலைகள் இல்லை,பூகம்பம் இல்லை. இந்தியா பாலவன பூமியல்ல,வருடம் முழுதும் பனிப்பொழிவோ இல்லை.
உலகத்தில் உண்மையிலேயே உற்பத்தி என்பது நடப்பது ஒரு விவசாயத்துறையில் மட்டுமே. மற்றதெல்லாம் கன்வெர்ஷன் தான். கால்நடை வளர்ப்பு கூட கன்வெர்ஷன் தான். புல்லைப்போட்டு,புல்லை பாலாக்கிறோம்.
ஒரு ரேடியோ பெட்டியை புதைத்து வைத்தால் அது நாசமாகுமே தவிர ஒரே ஒரு ரேடியோ பெட்டி கூட முளைக்காது. எனவே அரசாங்கம் எமது நாடு விவசாய நாடு,எமது தொழில் விவசாயம் என்று முடிவு செய்து,விவசாயத்தில் உள்ள இடைஞ்சல்களை (பாசனப்பற்றாக்குறை,இரசாயண உரங்கள், காபீடு இன்மை..) ஒழித்து கட்டிவிட்டால் போதும். இன்றுள்ள அரசு இயந்திரத்துக்கு அரசு செலவிடும் சம்பள தொகை வீணாகாது.
விவசாயம் செழித்தால் நிதி வசூல்,நிதி பங்கீடு,மேற்பார்வை யாவற்றையும் அந்தந்த பஞ்சாயத்திலான விவசாயிகள் சங்கத்துக்கு விட்டு விடலாம். எப்படி உங்கள் வசதி?
Thursday, April 3, 2008
ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு
ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் சுருட்டிய பத்திரிக்கைகள் அந்த பணத்தை திருப்பித்தரவேண்டும். ஆட்டுக்காரன்,மாட்டுக்காரன் என்று வண்ண வண்ண விளம்பரங்களை அள்ளிவிட்டு மக்கள் பணத்தை வேட்டு விட்டு மாயமாய் மறைந்து போன ஃபைனான்ஸ் கம்பெனிகளின் கதை நமக்கு மறந்திருக்கலாம். ஆனால் ஏமாந்த மக்களுக்கு? நின்று போன திருமணங்கள் எத்தனை? நின்று போன இதயங்கள் எத்தனை? உடனே தமிழக அரசு பத்திரிக்கைகள் ஊத்தி மூடிவிட்ட ஃபைனான்ஸ் கம்பெனிகளின் விளம்பரங்களை வெளியிட்டு வாரி சுருட்டிய பணத்தை பத்திரிக்கை உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும். அல்லது பத்திரிக்கைகளையும் மோசடி வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.
Wednesday, April 2, 2008
பேசிப்பழகும் ஆண் பெண்களே!
தற்கால சமுதாயத்தில் ஆண் பெண் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?
அந்த காலத்தில் அதாவது எனக்கு நினைவு தெரிந்த 1972 நாட்களில் காதலர்கள் சந்திப்பது மூத்திர சந்துகளில் தான். தற்போது நிலைமை ரொம்பவே மாறியிருக்கிறது.(நான் வாழ்வது டவுனில் என்பதை நினைவில் வைக்கவும்). என்ன ஒரு லொள்ளு என்றால் மாரில் கைவைப்பதும்,படுக்கையில் சாய்ப்பதுமே ஆண்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. எங்கே மார்பில் கைவைத்துவிடுவானோ என்ற சந்தேகத்துடனேயே பெண் பழகவேண்டியிருக்கிறது.
நான் கூட ஒரு சில கேஸ்களில் தப்பாய் (காஞ்சு போயிருக்கு,கை வச்சா படிஞ்சுரும்) என்று அவசரப்பட்டு மூக்குடைபட்டது உண்டு. என்றாலும் 1967 ல் பிறந்த நான் 1986 முதலே செக்ஸுக்கு இடமில்லாத எதிர்பால் நட்புக்கு ஏங்கி வருவது நிஜம். கச்சா முச்சானு அனுபவிச்சு தொலைச்சுட்டதால செக்ஸ் என்பதே காலைக்கடன் மாதிரி தவிர்க்க முடியாத,உபாதை ஆகிவிட்டது. அதற்காக அடுத்தவர் வீட்டில்,அல்லது மனையில் சென்று நெம்பர் 2 போக முடியாதல்லவா. அதற்காக வீட்டோடு ஒரு சிறு கழிவறை. (உடனே பெண்ணுரிமைவாதிகள் ஆகா பெண்ணை கழிவறையுடன் ஒப்பிடுவதா என்று பொங்கி எழுவார்கள் என்று தெரியும்)
இதற்கு முன்னான என் பதிவுகளில் ஆண் பெண் உறவுகள் பற்றி நான் எழுதியுள்ள வற்றை படித்து பாருங்கள்.பிறகு பொங்கி எழுவதோ..கொதித்தெழுவதோ செய்யலாம். ஆண்,பெண் உறவில் செக்ஸ் என்பது ஒரு பெரும் தடையாக உள்ளது என்பதை தான் கூற வந்து மேற்படி கழிவறை உதாரணத்தை சொல்ல வேண்டியதாகி விட்டது. மனம் கலந்த பெண்ணுடன் உடல் கலந்தால் அது காலைக்கடனாகாது. மனமே கலவாத விலைமகளுடனான உறவு என்றாலும் அது உபயோகமானதாக இருக்கிறது. காலைக்கடனை கழிக்க உதவிய பேருந்து நிலைய கழிவறை மாதிரி.
நான் சொல்ல வந்தது பெண்ணுடன் பேசி,பழக செக்ஸ் ஒரு தடை. எனவே அந்த உபாதையை வேறெங்காவது தீர்த்துக் கொண்டுவிட்ட பின் உறவாடலாமே என்பது தான் என் கான்செப்ட். பெண் என்பவள் ஒரு கிரியா ஊக்கி.அதிலும் செக்ஸுக்கு இடமில்லாத ஆண்/பெண் உறவு மாபெரும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.
எனவே தான் நான் கூறுகிறேன். பேசிப்பழகும் ஆண் பெண்களே!
செக்ஸ் என்பது காலைக்கடன் மாதிரி. அதை வேறெங்காவது/வேறெப்படியாவது தீர்த்துக்கொண்டுவிட்டால் (உதாரணமாக: சுய இன்பம்) ஆண் பெண் உறவு இன்னும் மேம்படுமே என்பது தான் என் யோசனை
Subscribe to:
Posts (Atom)