Showing posts with label கூகுல். Show all posts
Showing posts with label கூகுல். Show all posts

Thursday, August 25, 2011

அல்லாருக்கும் கூகுல் ஆட்சென்ஸ்: நெஜமாலுமே


வணக்கம்ணே.

கூகுல் ஆட் சென்ஸ்னா அல்லாருக்கும் தெரியும். அதுக்கு முயற்சி பண்ணாதவுகளை விரல் விடு எண்ணிரலாம். ஆரம்பத்துல ராமர் கோவில்ல சுண்டல் மாதிரி கச்சா முச்சான்னு கொடுத்த சமயம் நாம ஊர்ல இல்லை . இப்பம் ஆயிரத்தெட்டு கண்டிஷனு.

ஆனால் ஆட் சென்ஸ் மூலமா சில்லறை தேத்த ஒரு குறுக்கு வழி இருக்குதுங்ணா அதை சொல்லத்தேன் இந்த பதிவு.

.என்னடா இது ஆத்தாளை விட்ட மாதிரி பாலபாடத்தையும் திராட்டுல விட்டுட்டானான்னு பேஜார் படாதிங்கண்ணே. இன்னைக்கும் பால பாடம் தொடருது. நாளைக்கு ஆத்தாவும் வந்துருவா. மொதல்ல ஆட் சென்ஸ் கதைய பார்ப்போம்.

ஓசில எஸ்.எம்.எஸ் அனுப்பவே மஸ்தா சைட்டுங்க கீது. அதுல் இண்ட்யா ராக்ஸும் ஒன்னு. நாம டைரக்டா போயி ஆட்சென்ஸ் கேட்டாத்தானே கூகுல் காரன் டகுலு காட்டறான்.இண்ட்யா ராக்ஸ் காரவுக சூப்பர் ஆஃபர் வச்சிருக்காய்ங்கண்ணா.

ஒன்னுமில்லை இதே சைட்ல வலப்பக்கம் இருக்கிற இண்ட்யா ராக்ஸ் விளம்பரத்தை க்ளிக் பண்ணி அங்கே போய் சைன் அப் பண்ணிக்கங்கோ.

ஒருபத்து ஃபோட்டோ அப்லோட் பண்ணனும். ( கூகுல் காரன் கண்டிஷன்ஸுக்கு ஒத்துவரலைன்னா சங்குதேன்.போர்னோ வயலன்ஸ் தவிர்க்கவும்)

உங்க ப்ரொஃபைலை 50% ஃபில் அப் பண்ணிருங்கோ .கூகுல் ஆட்சென்ஸுக்கு நீங்க குவாலிஃபை ஆயிருவிங்கோ. (ப்ரிலிமினரியா) . கங்க்ராஜுலேஷன்ஸ் யுவார் குவாலிஃபைட் ஃபார் ஆட்சென்ஸுன்னு இன்ட்யா ராக்ஸ் சொல்லும்.அப்படியே நம்பிராதிங்க.

அதுக்கப்பாறம் இங்கே போயி கூகுல் ஆட்சென்ஸுங்கற ஐட்டத்தை க்ளிக் பண்னுங்கோ . உங்க மெயில் ஐடியை கேட்கும். ஏற்கெனவே ஆட்சென்ஸுக்கு அப்ளை பண்ணி ஊத்திக்கிட்ட ஐடிய தராதிங்க.

உங்க மெயில் ஐடி ஓகே ஆனதும் கூகுல் ஆட்சென்ஸ்லருந்து உங்களுக்கு மெயில் வரும் ( நீங்க கொடுத்த ஐடிக்கு) அதுல உள்ள லிங்கை க்ளிக் பண்ணி ஆட்சென்ஸ் அப்ளிக்கேஷனை ஃபில் அப் பண்ணனும்.

அதுல கடைசியில கிரான்ட் ஆக்சஸ் டு இண்ட்யா ராக்ஸுன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதுக்கு சம்மதிச்சு சப்மிட் பண்ணிருங்கோ.

உங்க ப்ரொஃபைல் ,உங்க ஃபோட்டோஸ்ல வில்லங்கம் எதுவும் இல்லின்னா ஆட்சென்ஸ் வந்தே உடும்.

துள் பண்ணுங்க.

இது மட்டுமில்லிங்ணா அஃபிலியேட் ப்ரோக்ராம்லாம் தர்ராங்கோ. அவிக குடுக்கற html கோடை கொண்டாந்து நம்ம சைட்ல போட்டுக்கினா போதும். நம்ம சைட்டுக்கு வர்ர சனம் அதை கிள்ளி அடச்சீ க்ளிக் பண்ணி அங்கன போயி -ஆட்சென்ஸுக்கு குவாலிஃபை ஆவனுங்கோ. அப்பத்தேன் சில்லறை . இல்லைன்னா நாயர் கடை பொறை.


இன்னாடா இது முருகேஸு அள்ளி உடறாரு போலன்னு சம்ஸயமா இருந்தா இங்கே பாருங்கோ. இப்பம் புரியுதா?

இதுல இன்னா இன்னாமோ ஆஃபர் எல்லாம் குடுத்துக்கிறாங்கோ. நம்ம மூலமா ஒரு பார்ட்டி இண்ட்யாராக்ஸ்ல சேர்ந்து அந்த பார்ட்டி கூகுல் ஆட்சென்ஸுக்கு குவாலிஃபை ஆயிட்டா தலைக்கு ரூ.15 வெட்றாய்ங்களாம்.

ச்சொம்மா ச்சொம்மா அக்கப்போருங்களை பட்ச்சிக்கினு கண்ணை டப்ஸாக்கிற நேரத்துல இதை ட்ரை பண்ணி பார்க்கலாம்ல.வெந்தா தலைக்கு பதினைஞ்சு இல்லாங்காட்டி பத்து நிமிட் வேஸ்டா போச்சுன்னு சமிச்சுருங்க நைனா..

இன்னாபா இது பாலபாடத்தை படிக்காம போய்க்கினே கீறே.. இன்னாது மொதல்ல இண்ட்யாராக்ஸா .. சரி பாஸு .. அதை முடிச்சுட்டு வந்து பால பாடம் பட்ச்சிக்கினம். கேள்வியெல்லாம் கேப்போமில்லை.

சந்திர சனி சேர்க்கை:
பொதுவாக சனி,சந்திர சேர்க்கை ஜாதகருக்கு நல்லதல்ல. இதனால் அடுத்தவரை அச்சுறுத்தி வேலை செய்யவைக்கும் தன்மை ஏற்படும் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு பிறர் மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். எதிர்காலத்தில் இவருக்கு நுரையீரல் ,சிறு நீரகம் ,மனம், கால், ஆசனம் ,நரம்பு தொடர்பான பிரச்சினைகளும் வரலாம்.

லக்னம் மிதுனமாகி 9ல் சந்திர சனி சேர்க்கை:
சந்திர சனிகள் தங்கள் லக்னத்துக்கு 10+ 4/5 க்கு அதிபதிகளானதால் இதன் இம்பேக்ட் மேற்சொன்ன விதத்தில் தொழில்,உத்யோகத்திலும் இருக்கும். வீட்டிலும் தொடரும். தாய் ,வீடு,வாகனம், புத்தி, மன அமைதி, நற்பெயர் வகைகளில் ஒரு வித அஸ்திரமான ( நிலையற்ற) தன்மை இருக்கும். மாதத்தின் ஒரு 14 நாட்களுக்கும் அடுத்த 14 நாட்களுக்கும் பெருத்த வித்யாசம் இருக்கும்.
பரிகாரம்:
கன்னியா குமாரி அம்மனை வழிபடவும்.( அம்மன் பாவாடை சட்டை அணிந்து பெரிய மூக்குத்தியுடன் இருப்பார்) நிலாச்சோறு தின்னவும். ஊஞ்சலில் ஆடவும். வண்ண மீன்கள் வளர்க்கவும். தியானம் அத்யாவசியம். தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் அதிகமானவை என்னவோப்பா நல்லாதான் போய்கிட்டிருந்தது திடீர்னு அப்டி ஒரு முடிவை ஏன் எடுத்தேனு தெரியலை இப்படி ஆயிருச்சு என்பதாகவே இருக்கும்.

புத்ரஸ்தானாதிபதி+ரோகாதிபதி:
குழந்தை பேறு தொடர்பான வேலைகள் அனைத்தையும் கடன் வாங்கியே செய்யவும். ( உறவுக்கு முன் அருந்தும் பால், இரட்டைகட்டில்/பாய் வரை )
பாக்யாதிபதி ஐந்தில்:
இது ரொம்ப விசேஷமான அமைப்பாகும் . எனவே தங்கள் தந்தை இறந்திருந்தால் அவருடைய அல்லது அவர் வழி முன்னோரில் ஒருவரது மறுபிறவி உங்களுக்கு வந்து பிறக்கலாம்.
சூரியன் ரோகஸ்தானத்தில்/ விரயஸ்தானத்தில்/அஷ்டமஸ்தானத்தில்:
தந்தை வழி முன்னோரை நினைத்து சனிக்கிழமை தோறும் காகத்துக்கு சோறு வைத்து ப்ரீதிசெய்யவும்.

குழந்தை பிறப்புக்கு தடை :
2/8 ல் ராகு /கேது குடும்பம் பெருகுவதை தடை செய்யும் .உடல் நலத்தில் தற்போதைய வைத்தியத்தால் கண்டுபிடிக்க முடியாத/ தீர்க்க முடியாத பிரச்சினைகளை தரும்.
.செவ்வாய்+ கேது சேர்க்கை:
செவ்வாய் ரத்தத்துக்கு அதிபதி/ நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜைக்கு அதிபதி இவரே . இவர் கேதுவுடன் சேர்வது நல்லதல்ல
சனியுடன் சந்திரன்:
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர்



சூரியன் சுபனாகி பலம் பெற்றால்:
ஜாதகருக்கு தந்தை,சிறிய தந்தை , பெரிய தந்தை போன்றோரின் அன்பு, ஆதரவு கிட்டலாம்.
9 ஆம் பாவம் சுபபலமாகி அந்த பாவம் சரமானால்:
தூர தேச பிரயாணம், அங்கு வேலை வாய்ப்பு, ,தந்தை வழி சொத்து வகையறாவிலும் அனுகூலமே.
சுக்கிரன் சுபனாகி பலம் பெற்றால்:
தென் கிழக்கு திசையில் உள்ள நாடுகள் , ஊர்கள் ,பெண் பெயர் கொண்ட ஏரியா,ஊர்,மாவட்டம் அனுகூலம்.
4ல் சனி :
தாய் பெரிதாக கல்வியறிவில்லாதவராக, காலில்/ நடையில் பிரச்சினை உள்ளவராக, கரிய நிறம் கொண்டவராக நீண்ட ஆயுள் படைத்தவராக இருக்கலாம். என்றாலும் ஜாதகருக்கு கல்வியில் தடை ஏற்படலாம். ஓரிரண்டு கல்வியாண்டுகள் வீணாகலாம்.
2ல் சூரியன் /செவ்வாய்:
கண் ,( சிவத்தல், எரிச்சல்) தொண்டை தொடர்பான பிரச்சினை வரலாம். ஜாதகர் அனாவசியமாக பேசி எதிராளிக்கு கோபம் வரவைப்பவராகவும் இருக்கலாம். வீண் செலவுகளை அஞ்சாது செய்வார்.குடும்பத்தின் அமைதியை குலைப்பவராகவும் இருக்கலாம்.
சந்திரன் பாவனாகி லக்னம் அ ஏழில் :
ஜாதகருக்கு மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். தூக்கத்தில் உளறுதல். கெட்ட கனவாய் காணுதல். இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸை ஃபாலோ செய்தலும் இருக்கலாம். ஜாதகர் தம் கருத்தை, நட்பு வட்டத்தை, காதலியை ,பிசினஸ் பார்ட்னரை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் இயல்புடையவராக இருப்பார். இவை கட்டுக்குள்ளிருக்கவே மேற்படி பரிகாரங்கள்.
6+8/12
ஜாதகர் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர்/இவர் வழக்கில் பிரதிவாதி ஒருவர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார் ஜாதகருக்கு எவ்வித சுகவீனம் ஏற்பட்டாலும் அது விரைவில் குணமடையும். ஜாதகர் எவ்வளவு கடன் வாங்கினாலும் அது தீர்ந்துவிடும். அதே நேரத்தில் ஜாதகருக்கு பொருளாதார நெருக்கடியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
லக்னம் கன்னி/மிதுனமாகி லக்னாதிபதி பலம் பெற்று விரயத்தில் நின்றால்:
ஒரே நேரத்தில் பல விஷயங்களில் தலையிடும் குணமிருக்கும். அவற்றை இவர் தனக்காக செய்யாமல் ஒரு கன்சல்டன்ட் /லைசன் ஆஃபீசர்/பி.ஆர்.ஓ /அஃபிஷியல் ஸ்போக்ஸ் மேன் என்ற வகையில் தம் கட்சிக்காரர்களுக்காக செய்தால் பிரச்சினை குறையும்.
சூரியன்+புத
ஜாதகர் உடலில் எங்கேனும் வெள்ளை தேமல் போன்று இருக்கலாம். இது வியாதியல்ல யோகத்தின் அறிகுறி. கவலை வேண்டாம்.
5ல் சனி:
புத்திக்குறை,மானபங்கம், தோல்விகள் ஏற்பட்டிருக்கலாம். பித்தர் போல் பேசுதல், வாதம் செய்தலும் நடந்திருக்கலாம்.
6ஆமிடம் சுபபலமானால்: ( ஐ மீன் கெட்டு நாசமா போகனும்)
நினைத்ததை சாதிக்கும் வல்லமை ஏற்படும் கடன் தீரும். நோய் குணமாகும். எதிரிகள்,போட்டியாளர்கள் ஓடி ஒளிவர். வரவேண்டிய கடன் வசூலாகும். (ஜாதகருக்கு / குடும்பத்துக்கு வரவேண்டியவை வந்து சேரும்)
கோசாரத்தில் 6 ல் சனி வந்தால்:
சமீப காலமாய் ஜாதகர் மனதில் எதிராளிகளை பற்றிய ஒரு அலட்சிய பாவம்/தான் சொன்னதே சரி என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. இது ஓவராகாமல் பார்த்துக்கொள்ளவும்.






Wednesday, June 23, 2010

குரான் படிக்கத்தக்கதல்ல

அண்ணே வணக்கம் இந்த சுறு சுறு விறு விறு பதிவோட அன்று மெக்சிக்கோ இன்று இந்தியாங்கற தலைப்புல இந்திய அரசாங்கம் சனங்க கிட்ட கை மாத்துகேட்டு எஸ்.எம்.எஸ் .கொடுக்கிற நாள் கிட்டே இருக்குன்னு நிரூபிச்சு அன்று மெக்சிகோ இன்று இந்தியாங்கற தலைப்புல  ஒரு தனி பதிவையும் போட்டிருக்கேன். படிங்க. உங்க கருத்தை சொல்ல மறக்காதிங்க.

பாக் நீதிமன்றம் கூகுல், யாஹூ, எம்.எஸ்.என் போன்ற பிரபல வலைதளங்களுக்கு தடை விதிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டுள்ளது.  காரணம் குரானுக்கு எதிரான விஷயங்கள் மேற்படி வலைதளங்களில் வெளியாகிறதாம்.

பராசக்தி சினிமாலயே கலைஞர்"ஆண்டவன் ஆணைக்கே காரணம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்"னு வசனம் எழுதிட்டாரு. அன்னைக்கு ஆண்டவன் கட்டளைக்கான காரணத்தை  டீ கடைலயும், தெருமுனை கூட்டங்கள்ளயும்  கேட்டாய்ங்க இன்னைக்கு வலைதளத்துல கேட்கிறாய்ங்க. அதான் வித்யாசம்

குரான் என்பது ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரையோ   என் சைக்ளோ பீடியாவோ  அல்ல . அதில் சொல்லப்பட்டதெல்லாம் விஞ்ஞான பூர்வமாக  இருந்தாகவேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

ஆன்மீகத்தின் இலக்கு வேறு. விஞ்ஞானத்தின் இலக்கு வேறு . ஆன்மீகத்தின் வீச்சு வேறு . விஞ்ஞானத்தின் வீச்சு வேறு.  இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்வதே ஆன்மீக வாதிகளின் பிழைப்பாய் போயிற்று.

ஒரே செய்தியை கலைஞர் டிவி ஒரு விதமாய், ஜெயா டிவி ஒரு விதமாய் கூறுவதை போல் ஒரே விதமான ஆன்மீக அனுபவத்தை  பெற்ற மனிதர்கள்  தம்  அனுபவத்தை  பல விதமாய் சொல்லியிருக்கிறார்கள். அந்த வெளிப்படுத்தலில் அவரவர் அகந்தை, சுயம், கால ,தேச,வர்த்தமானங்களின் தாக்கம் ஆகியன அவர்களையும் அறியாது  சற்றே கலந்திருக்கலாம். 

இங்கு எது ஒன்றுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. அப்பாற்பட்டதென்று மூடி வைத்துக்கொண்டால் அது நாற்றமெடுத்துப்போகும். இந்து மதத்தின் பல விஷயங்களை ஒரு இனம் இப்படி மூடி வைத்ததால் தான் நாற்றமெடுத்து போனது. அவற்றின் உண்மையான விளக்கங்கள் பல தலைமுறைகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டன. டேமேஜ் ஆன ப்ளாக் பாக்ஸ் ஆகிவிட்டன.

நாற்றம் என்பது அழுகலின் விளைவு. அடைப்பின் விளைவு. தேக்கத்தின் விளைவு. நாற்றத்தை உணர்ந்ததும் நாம் செய்ய வேண்டியது அடைப்பை நீக்குவதே. சிலருக்கு வாய்ல பீ நாத்தம் அடிக்கும். அவன் செய்ய வேண்டியது வாய்க்கு தடை விதிப்பதல்ல. ஆசனத்துக்கு ஏற்பட்டுவிட்ட தடையை நீக்குவது .

ஒரு சில வலை தளங்களுக்கு தடை விதித்த மாத்திரத்தில் குரான் குறித்த விமர்சனங்கள் மாயமாய் மறைந்துவிட போவதில்லை. வேறு ஒரு ஊடகத்தில் ,வேறு ஒரு தளத்தில் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும். இந்த விமர்சனங்களை உரிய வாதங்களுடன்,ஆதாரங்களுடன் முறியடிக்க வேண்டுமே தவிர  தடை என்பது கையாலாகாதோர் செயலாகும்

உண்மையில் சில விஷயங்களின் மீதான தடைகள் தாம் அவ்விஷயங்களின் கவர்ச்சியை கூட்டியுள்ளன. உ.ம் செக்ஸ்

"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"

தடை விதிப்பது நோய் பிடித்த மனதின் அறிகுறி.  ஆயிரம் கருத்துக்கள் மோதும்போதுதான் சத்தியம் மின்னலாக பளீரிடும். இன்னும் சொல்லப்போனால் ஆன்மீகம் குறித்த விமர்சனங்களே இளைய தலைமுறையை ஆன்மீகத்தின் பால் ஈர்க்கும்.

இதை பாக் நீதிமன்றம் உணராமல் போனது வருந்தத்தக்கது.  உடல், மனம்,புத்தி ஆகியவற்றை கடந்தால் தான் ஆன்மா தரிசனம் அளிக்கும்.

ஆன்ம தரிசனம் கருத்துப்புயலுக்கு பின் கிடைக்கக்கூடியது. குரான் வெறுமனே படிக்கத்தக்கதல்ல. புரிந்துகொள்ள தக்கதல்ல. சைக்காலஜி கூறும் கான்ஷியஸ்,சப்கான்ஷியஸ் மைண்ட்ஸ தாண்டி உள்ள  உள்ளார்ந்த ஒருமை உணர்வுகளால் உணரத்தக்கது. அதை உணர படிப்பவர் மனதில் பிக் பேங் , என்ற  மகாவெடிப்பே நிகழ வேண்டும். அதை விமர்சனங்கள் நிகழ்த்தும். எனவே பாக் அரசு கருத்து தடை என்ற பெயரில் ஆன்மீக பாய்ச்சலுக்கு தடை விதித்து விடக்  கூடாது.

பி.கு: விமர்சனங்கள்  சரோஜாதேவித்தனமாக சாக்கடை நடையில்  இருப்பின் குறிப்பிட்ட அந்த வலைதளங்களை தடை செய்யலாம். அதை விட்டு தேடு தளங்களையே தடை செய்வது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதே .