Wednesday, July 25, 2012

3 மனைவியரால் கற்பழிக்கப்பட்டு கணவன் மரணம்


அண்ணே வணக்கம்ணே !
நைஜீரியா நாட்டின் பென்யூ மானிலத்தை சேர்ந்தவர் உரோகோ ஒனோஜா. பெரும்பணக்காரரான இவருக்கு மொத்தம் 6 மனைவியர். ஒனோஜா லேட்டஸ்டா கண்ணாலம் கட்டின குட்டியோடயே கூத்தடிச்சிக்கிட்டிருந்தாரு. மத்த 5 மனைவியர் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டிருந்தாய்ங்க.ஆனால் பார்ட்டி கண்டுக்கலை.

தசரதன் கைகேயி மேல வச்சிருந்தது போல 6 ஆவது மனைவி மேல "பாசம்" வச்சிருந்தாரு. கடந்த வாரம்
ஒனோஜா 6 ஆவது மனைவியுடன் கில்மாவில் ஈடுபட்டிருந்த சமயம்.. மத்த 5 மனைவியரும் கூட்டு சேர்ந்து பயங்கர ஆயுதங்களோட படுக்கையறையுள் நுழைந்தனர்.

தங்களோடும் உடலுறவில் ஈடுபடவேண்டும் என்று தாக்கினர். 5,4,3 ஆவது மனைவிகள் அவரை கற்பழித்தனர்(?) அவிக காரியத்தை முடிச்சு 2 ஆவது மனைவிக்கு சான்ஸ் கொடுத்தாய்ங்க. அதுக்குள்ர அண்ணாச்சியோட "கதை" முடிஞ்சு போச்சு.

ஒடனே கூட்டு கற்பழிப்பில்(?) ஈடுபட்ட 5 மனைவியரும் காட்டுக்குள்ளே ஓடிட்டாய்ங்களாம். ஆறாவது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடிப்போன மனைவியரை வலைவீசி தேடி வர்ராய்ங்களாம்.

இந்த சம்பவம் நைஜீரிய பத்திரிக்கையான டெய்லி போஸ்ட்டில் பிரசுரமாகியுள்ளது

ஆதாரம்: சாட்சி ,தெலுங்கு தினசரி

விரைவில் பிரதமராகிறார் சரத் பவார்?


அண்ணே வணக்கம்ணே !
சுதேசி பத்திரிக்கையில ரெம்ப நாளைக்கு மிந்தி சுதேசி காங்கிரசுன்னு ஒன்னு உருவாகப்போறதா எளுதியிருந்தாய்ங்க. நானும் இதெல்லாம் வேலைக்காகவா போகுதுன்னு கண்டுக்கிடலை.ஆனால் இன்னைக்கு பல அதிர்ச்சிகரமான சமாசாரம்லாம் தெரியவந்தது..

ஒரு வெளி நாட்டு கார பொம்பளை பி.எம் ஆகக்கூடாதுன்னு போர்க்குரல் எழுப்பி வெளிய வந்த கட்சி பவாரோட என்.சி.பி ( நேஷ்னலிஸ்ட் காங்கிரஸ் பார்ட்டி)

நேஷ்னலிஸ்டுக்கு எதிர்பதம் என்ன? அப்ராட் ?

சமீப காலமா பவார் சோனியாவை பேதியாக்கிக்கிட்டிருக்கிறது தெரிஞ்ச மேட்டருதேன். சோனியா ஒத்துக்கமுடியாத டிமாண்டையெல்லாம் வச்சு - கடுப்பாக்கி சோனியாவே வெளியே அனுப்பறாப்ல பண்றது பவாரோட ப்ளான்.

வெளிய வரும்போது நாலஞ்சு கூட்டணி கட்சிகளையும் கிளப்பிக்கிட்டு வர்ரது அவரோட ஸ்கெட்ச். அதுக்கு கொஞ்ச நாளாச்சும் கூட இருந்து தானே ஆகனும்.அதனாலதேன் இந்த கண்ணாமூச்சி.

அதுவும் ஸ்டேட்ல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி - முதல்வரை மாற்ற டிமாண்டு இத்யாதிக்கு பின்னணியில இருக்கிறதே பவாருதானாம். நீங்க சென்டர்ல பலசாலின்னு தானே எங்களை இன்சல்ட் பண்றிங்க. ஸ்டேட்ல நாங்க பலசாலி உங்களை இன்சல்ட் பண்றோம்னு சொல்லாம சொல்றாரு பவார்.


1.மகாராஷ்டிராவுக்கு போன பிரணப் முகர்ஜி "என்னை ப்ரபோஸ் பண்ணதே சரத் பவார் தான்"ன்னு சொல்லியிருக்காரு. பவாரோட சிவசேனா தலைவர் பால் தக்கரே வீட்டுக்கு போயிருககருங்கோ.. இதுக்கு பின்னணியில உள்ள வியூகம்லாம் பின்னாடி வருது.

2.சோனியா, நாம பிரணப்பை ஜனாதிபதி வேட்பாளரா அறிவிச்சதுமே தாளி யுபிஏவுக்கு வெளிய இருந்து கூட ஆதரவு பிச்சுக்கிச்சுன்னு நினைச்சுருப்பாய்ங்க போல. மேட்டர் இன்னாடான்னா ராகுல் காந்திக்கு பட்டம் கட்ட ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தப்பயே - ஒன்னரை மாசத்துக்கு மிந்தியே சரத் பவார் சோனியா அம்மாவுக்கு காராசாரமா ஒரு லெட்டர் ரெடி பண்ணி வச்சிருந்தாராம். ஆனால் பிரணப் தான் கைய காலை பிடிச்சு ஸ்டாப் பண்ணாராம். அப்பத்தேன் பவாருக்கு பிரணப்புக்கும் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டிருக்கு. இதன் விளைவுதான் சரத்பவார் பிரணப்பை ப்ரப்போஸ் பண்ணது. பரண்ல போட்டு வச்சிருந்த அந்த லெட்டரைதேன் சமீபத்துல மேடத்துக்கு அனுப்பினாரு பவாரு.

3.வெறுமனே ப்ரப்போஸ் பண்றது மட்டுமில்லை மண்ணின் மைந்தரான (?) சிவசேனா தலீவரை ப்ராக்கட் பண்ணி ஆதரவு தேடி கொடுத்திருக்காரு, முலாயம் ,மம்தா ஆதரவு தரவும் சரத்பவார் தான் காரணமாம்.

இன்னாடா டீலுன்னா : சோனியா ராகுலை கொண்டுவரப்போறாய்ங்க. யு.பி.ஏ உருப்படாது. நான் வெளிய வந்துரப்போறேன். இன்னொரு தேர்தல் இல்லாமயே அதிகார மாற்றம் நடக்கும் -அதுக்கு நாம ஒத்துமையா இருந்து பிரணப்பை ஜெயிக்க வைக்கனும்.. அதிகார மாற்றத்துக்கு ஒரு ஜனாதிபதியாக பிரணப் நமக்கு உதவுவாருங்கறதுதேன்.

4.காங்கிரசுன்னாலே கண் சிவக்கிற ஜகனோட அப்பா ஒய்.எஸ்ஸுக்கும் -பவாருக்கும் ஆதி நாட்கள்ளருந்தே நல்ல அண்டர்ஸ்டாண்டிங். விவசாயிகளுடைய பிரச்சினைகளை பத்தி தில்லியில போராட்டம் நடத்தின ஜகன் அப்பமே பவாரை சந்திச்சு மனுல்லாம் கொடுத்ததை ஞா படுத்திக்கங்க. இதுவே இல்லிங்ணா பவாரை சந்திச்சுட்டு நேஷ்னல் சானல்ஸுக்கு பேட்டி கொடுத்த ஜகன் சென்டர்ல யுபிஏவை சப்போர்ட் பண்ணுவம்னு வேற சொன்னாரு.

நான் கூட சோனியா சேர்மனா இருக்கிற யு.பி.ஏவுக்கு இந்த புள்ள என்னாத்த சப்போர்ட் கொடுக்கிறதுன்னு குழம்பிட்டேன். இப்பத்தேன் புரியுது சோனியா இல்லாத யு.பி.ஏங்கறதுதான் இதனோட அருத்தம்.

அல்லாரும் என்ன நினைச்சாய்ங்கன்னா ஓஹோ ஜகன் சி.பி.ஐ கேஸுக்கு பயந்துக்கிட்டாரு. இங்கன பிரணப்புக்கு ஓட்டுப்போட்டு அங்கன பெயில் வாங்க பார்க்கிறாருன்னு நினைச்சாய்ங்க.

ஆனால் பெயில் பெட்டிஷன் விசாரணைக்கு வர இருந்த தினமே ஜகன் தன் ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கிட்டாரு.

இதுலருந்து என்ன தெரியுது? கொய்யால .. நாளைக்கு சென்டர்லயே எங்காளுக்கு பவர் வரப்போவுது. அப்பம் பார்த்துக்கறேன்னு தானே அருத்தம்.

இன்னொரு ஹஞ்சும் மைண்ட்ல சிறகடிக்குது. பவாரும் -சங்மாவும் பேசி வச்சிக்கிட்டு நாடகமாடினாய்ங்களோங்கறதுதான். சங்மா புண்ணியத்துல என்.டி.ஏலருந்து சிவசேனா வெளிய நின்னு பிரணப்பை சப்போர்ட் பண்ணது ஒரு ஷாக் ட்ரீட்மென்டா இருக்கலாம்.

அதுவுமில்லாம சங்மா வேற புதுசா ஒரிசாகாரரான நவீன் பட் நாயக், ஜெயலலிதா அம்மாவோட ஆதரவை வேற திரட்டிட்டாரு.

பவார் பக்கம் யுபிஏ கூட்டணி கட்சிகளில் சில + சிவசேனா + சங்மாவுக்கு ஆதரவளித்த நவீன் பட்னாயக், ஜெயலலிதா இருக்காய்ங்க.

மதவாதமா? செக்யூலரான்னாதான் பா.ஜ.க தீண்டத்தகாத கட்சி. இதுவே விதேசி காங்கிரஸா, சுதேசி காங்கிரசான்னு வரும்போது ?

பட்சி சொல்றது நெஜமா இருந்தா சோனியா அம்மா சீக்கிரமே பல்பு வாங்கப்போறாய்ங்க. மஹாராஷ்டிரால காங்கிரஸை பிளந்தாப்ல சென்டர்லயும் பிளக்கப்போறாரு பவாரு.

சோனியா இல்லாத காங்கிரஸ் , காங்கிரஸ் இல்லாத யுபிஏ தத் என்னென்னமோ மைண்ட்ல ஓடுது. அம்பேல்.

ஆனால் ஒன்னு என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. நடக்கிறது எதுவோ நாட்டுக்கு நல்லதா நடந்தா செரி..

Tuesday, July 24, 2012

சில காட்டமான கேள்விகளும் -என் பதில்களும்

அண்ணே வணக்கம்ணே !
கொய்யால ஒரு பதிவுக்கே சிங்கியடிச்சுக்கிட்டிருந்தம். எப்படியோ உங்கள் ஆயுள்பலம் எப்டி மினி தொடருக்கான 6 ஆவது அத்யாயத்தை ஒப்பேத்தியாச்சு.

போது போகாம அனுபவஜோதிடம் சைட்டுக்கு வந்த பழைய கமெண்டுகளை படிச்சுக்கிட்டிருந்தப்போ - ரஞ்சன் என்ற பிரிட்டானியா காரரு சில காட்டமான கேள்விகளை எல்லாம் கேட்டிருந்ததை பார்த்தேன்.

சில கமெண்டுகளுக்கு விளக்கமா பதில் தரனும்னு நினைச்சு பிறவு மறந்து போறது வழக்கம். அப்படி விடுபட்ட கமெண்ட் அது. அதுக்கான பதிலைத்தான் இன்னைக்கு பதிவா படிக்க போறிங்க. உடுங்க ஜூட்..


1. ஜோதிடம் உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?
கடவுளை நம்பாதவன் கூட ஜோதிடத்தை நம்பறானே. கடவுள் பேரை சொல்லி ஏமாத்தறவனை விட ஜோதிடத்தின் பேரால் ஏமாத்தறவுக நெம்பர் அதிகமா இருக்கே.

கடவுளையும் -ஜோதிடத்தையும் மனிதர்களின் நினைவிலி மனம் நம்புகிறது.அதற்கும் முற்றும் உணர்ந்த ஆன்மாவுக்கு கூப்பிடு தூரம் தான். அதுக்கு எப்பயோ இந்த ரெண்டு மேட்டரும் அவெய்லபிளா இருந்திருக்கு.அதனாலதான் இப்பயும் தேடி ஓடுது.

2. ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன ஆகிவிடும்?
ஒன்னும் ஆகாது. நடக்கவேண்டியது நடந்துக்கிட்டே இருக்கும். ( நாம கடியாரத்தை பார்க்காட்டாலும் அதும்பாட்டுக்கு ஓடிக்கிட்டே தானே இருக்கு)

3. ஜோதிடம் பார்த்தும் பலருக்கு அதன்படி பலன்கள் நடக்கவில்லையே அது ஏன்?

ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை.
அது பொய்த்தால் ஜோதிடனின் சிறுமை

4. ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாகப் பலன் கூறுகிறார்களே அது எப்படி?
அந்த ஜோதிடரின் " நான்" ஜோதிடத்துக்குள் பிரவேசிப்பதால் ஏற்படும் மாற்றம் இது. நான் விலகி நின்னாதான் எதிர்காலம் தரிசனம் கொடுக்கும்.

5. ராகு, கேது பாம்புகள், கிரஹணத்தின் போது சந்திரனை, சூரியனை விழுங்கும் என்பதெல்லாம் பொய் என்று விஞ்ஞானம் நிருப்பித்திருக்கிறதே அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

ஹ்யூமன் மைண்ட்ல ரைட் லெஃப்டுன்னு டிவிஷன்ஸ் இருக்காம். படத்தை பார்க்கிறது லெஃப்ட் டிவிஷன்.அது லாஜிக் பார்க்காது.

பாடத்தை புரிஞ்சிக்க பார்க்கிறது ரைட் மைண்ட் அது லாஜிக் பார்க்கும்.

அந்த காலத்துல சனங்களுக்கு லெஃப்ட் மைண்ட் நெல்லா வேலை செய்தது.அதுக்கு படம் காட்டனும். படம் காட்டி கதை சொல்லனும்.அப்பத்தான் ஏத்துக்கும்.

அப்படி படம் காட்டி சொன்ன கதைதான் அது.


7. அதது இயற்கையாக நடந்து கொண்டிருக்கும் போது, ஜாதகம் போன்றவற்றை நம்புவது பகுத்தறிவிற்கு முரணாக உள்ளதை அறிவீர்களா?

மழை கூட இயற்கையாதான் பொழியுது.அப்ப எதுக்கு வானிலை அறிவிப்பு மையம்? குடை கொண்டு போகலாம்னுதானே.. கடலுக்குள்ள மீன் பிடிக்க போகாம இருக்கலாம்னு தானே

8. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்தும் விவாகரத்துகள் நடக்கின்றன, சிலர் இறந்து போகிறார்கள், மனைவியைக் கொலை செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி? எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதுதான் ஜோதிடம் என்றால் எப்படி உங்களால் இவற்றைக் கணிக்க முடியவில்லை.

ஜோதிடம் பொய்க்க பல காரணம் உண்டு. ஜோதிடர் டுபாக்கூரா இருக்கலாம். உங்க பிறப்பு விவரங்கள் தவறா இருக்கலாம். மேன்யுவலா கணிக்கும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம்.

ஜோதிடர் கிரகங்களின் பலத்தை கணிப்பதில் கோட்டை விட்டிருக்கலாம்.
மேற்சொன்ன காரணங்கள் இல்லாமலும் ஜோதிடம் பொய்க்கிறது. காரணம் ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்..


9. பரிகாரம் என்ற பெயரிலும் யாகம் என்ற பெயரிலும் ஜோதிடர்களும் புரோகிதர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்களே, இது நியாயமா?

நியாயமில்லைதான் . உங்களுக்கு நம்ம நவீனபரிகாரங்களை பத்தி தெரியாதுன்னு நினைக்கிறேன்

10. விதிப்படி தான் அனைத்தும் நடக்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம். அப்புறம் ஏன் ஜோதிடம்?
ஒரு க்யூரியாசிட்டி தான். முன்னாடி தெரிஞ்சுக்கிட்டு முன் கூட்டியே கவலைப்படலாம்ங்கறது மசாக்கிசம் தான்.

11. விஷ்ணு ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?
இது "அவாளுக்கு" போக வேண்டிய கேள்வி.

12.பட்சி சாஸ்திரம், சகுனம், ராகு காலம், எம கண்டம் இவையெல்லாம் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?
சகுனம் பலதும் ஒர்க் அவுட் ஆகியிருக்கு (நம்ம அனுபவத்துல) ராகுகாலம்னா ஞா கிழமை மட்டும் நிறைய தாட்டி பல்பு வாங்கியிருக்கோம். மத்த மேட்டர்ல நானும் உங்க கட்சிதான்.

13. செவ்வாய் தோஷம், மூலம் என்றெல்ல்லாம் பெண்களை ஜோதிடம் கொடுமைப்படுத்துகிறதே, இது நியாயம் தானா?

சத்தியமா நியாயமில்லை. இதுக்கெல்லாம் செமர்த்தியான,அயனான லாஜிக்கல் ரெமிடீஸ் தந்திருக்கேன். நம்ம சைட்டை துழாவுங்க.

14. கிழக்கே சூலம், மேற்கே சூலம் என்றால் என்ன?
தெரியாதுங்ணா.. இதையெல்லாம் நாம ஃபாலோ பண்றதே கடியாது.

15. பிறக்கும் நேரத்தைத் தவறாகச் சொல்லி ஜாதகம் கணித்தால் என்ன ஆகும்?
தவறா சொன்ன டயத்துக்கு கரீட்டா பொறந்தவுகளுக்கு அந்த பலன் நடக்கும்.

16. பிறந்த தேதியே தெரியாதவர்களுக்கு எப்படி ஜாதகம் கூறுவீர்கள்?

இதை பத்தி நிறைய எழுதியிருக்கேங்ணா சைட்ட துழாவுங்க..

- ரஞ்சன், பிரிட்டானியா

Friday, July 13, 2012

மன்னிக்க வேண்டுகிறேன்!


அண்ணே வணக்கம்ணே !
கொக்குக்கு ஒன்றே மதிங்கறாப்ல நம்ம எழுத்துக்களை தேடி வந்த உங்களுக்கு நன்றி.ஆனால் சமீப காலமா இந்த ப்ளாக்ல புது ஐட்டங்களை போடறதில்லிங்ணா.

ஆனால் நம்ம வலைதளம் தினசரி புது புது ஐட்டங்களோட அப்டேட் ஆகிட்டே இருக்கு. அதிலான நம்ம லேட்டஸ்ட் பதிவுகளை படிக்க இங்கே அழுத்துங்க.

Sunday, July 8, 2012

பெற்ற தாயை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற மகன்

இந்திய பம்பாடு,கலாசாரம், தாய்ப்பாசம்னு தொண்டை தண்ணி வறள பேசறோம் -கீ பேட் தேஞ்சு போற அளவுக்கு பக்கம் பக்கமா அடிச்சு கிளிக்கிறோம்.ஆனால் பெத்த அம்மாவை தன்னோட ரெண்டு ஃப்ரென்ட்ஸை கூட்டு சேர்த்துக்கிட்டு கற்பழிச்சு கொன்னிருக்கான் ஒரு மகன்.

ஆந்திர மானிலம் ,ரங்கா ரெட்டி மாவட்டம், பஷீராபாத் மண்டலம், தாண்டூர் கிட்டே ஒரு வில்லேஜ். பேரு இந்தர்செட்.

இங்கே லஷ்மம்மா (50) கள்ளு கடை நடத்தி வவுறு வளர்த்துக்கிட்டிருந்தாய்ங்க. இவிகளுக்கு ரெண்டு மவனுங்க. பெரியவன் செத்து போயிட்டான்.அவன் பொஞ்சாதி இவிகளோடவே இருக்கு.

சின்னவன் ஸ்ரீனிவாஸ் கவுட்.இவனுக்கும் கண்ணாலமாச்சு. வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டிருந்தவனுக்கு குடிப்பழக்கம் ஒட்டிக்கிச்சு. மது அடிமையா மாறிட்டான்.

எப்பப்பாரு குடிக்க காசு கேட்கிறது - இல்லாட்டி கள்ளை ஊத்துங்கறது இதான் ஃபுல் டைம் ஜாப். இவிகளுக்கு 2 ஏக்கர் நிலமும், ஒரு வீடும் இருக்கு.

தான் இப்படி சுத்திக்கிட்டிருக்கிறதால அம்மா சொத்தையெல்லாம் அண்ணி பேருக்கு எழுதிருவாளோன்னு சந்தேகம். இது விஷயமா அப்பப்போ வாய் தகராறு அடி தடில்லாம் நடந்துக்கிட்டிருந்திருக்கு.

ஒரு கட்டத்துல கவுட் தன் நண்பர்கள் பஸப்பா,ரமேஷுக்கு விஷயத்தை சொல்லி - ஆளுக்கு பத்தாயிரம் தரேன் கிழவியை போட்டு தள்ளிரலாம்னு ப்ளான் பண்ணியிருக்கான்.

கடந்த ஜூலை 4 ஆம் தேதி ராத்திரியும் லஷ்மம்மாவுக்கும் -கவுடுக்கும் சண்டை நடந்திருக்கு. கவுடு வெளிய போயிட்டான்.

அம்மாக்காரி வீட்ல தூங்கிக்கிட்டிருக்கிறச்ச - நள்ளிரவு சமயம் ஓட்டை பிரிச்சு உள்ளாற இறங்கியிருக்கானுவ.

டெல் யுவர் ஃப்ரெண்ட் ஐ வில் டெல் வாட் யுவார்னு சொல்றாய்ங்களே அப்படி கவுடுவோட ஃப்ரெண்ட்ஸும் இவன் கேட்டகிரி தான் போல .ஆல்க்கஹாலிக்ஸ்.

அம்பது வயசான லஷ்மம்மாவோட வாய்ல துணியை திணிச்சு சத்தம் போடாம செய்துட்டு ஒவ்வொருத்தனா கற்பழிச்சிருக்கானுவ.

கடைசியில கவுடு தன் அம்மாவோட கழுத்தை நெறிச்சு கொன்னிருக்கான். அம்மா கழுத்துல காதுல மூக்குல இருந்த ரூ .9 ஆயிரம் மதிப்புள்ள நகைகளையும் - கையில இருந்த ரூ.53 ரூபாயையும் எடுத்துக்கிட்டு தலைமறைவாகியிருக்காய்ங்க.

மறு நாள் விடிஞ்சு லஷ்மம்மா வெளிய வராம போகவே அக்கம் பக்கம் உள்ளவுக கதவை தட்டி அலுத்து பக்கத்து தெருவுல உள்ள லஷ்மம்மாவின் தம்பிக்கு தகவல் கொடுத்திருக்காய்ங்க.அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவக்க விஷயம் மொத்தம் வெளிய வந்திருக்கு.

கடந்த சனிக்கிழமை ( நேத்து) மேற்படி 3 பேரையும் பிடிச்சு உள்ளாற போட்டிருக்காய்ங்க. இதான் இந்திய கலாசாரம் போல. இதான் இந்திய பண்பாடு போல.

நாம பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கனும்னு எளுதினா மட்டும் நீதி சொல்ல புறப்பட்டுர்ராய்ங்க.

மனைவிய பிரிஞ்சு வாழ்ந்த அந்த கவுடுவுக்கும் - அவனோட நண்பர்களுக்கும் செக்ஸ் அவெய்லபிளா இருந்திருந்தா அவிக குடிக்கவே போயிருக்க மாட்டாய்ங்க ( நிப்பிள் காம்ப்ளெக்ஸ்) அம்பது வயசு கிழவியை - கற்பழிச்சும் இருக்கமாட்டாய்ங்க.

ஒரு அரசாங்கம் குடும்பங்களை குலைச்சு போடற - குடி மகன்களோட குடலை ஜல்லியாக்கிற மதுவை விற்கும்போது -குடி,சூது,வன்முறை,கிரைம்,கொலை,தற்கொலை எல்லாத்தையும் தவிர்க்கக்கூடிய பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க ஏன் தயங்குது. ஹிப்பாக்ரசி.. ஜஸ்ட் ஹிப்பாக்ரசி .