Wednesday, July 25, 2012

விரைவில் பிரதமராகிறார் சரத் பவார்?


அண்ணே வணக்கம்ணே !
சுதேசி பத்திரிக்கையில ரெம்ப நாளைக்கு மிந்தி சுதேசி காங்கிரசுன்னு ஒன்னு உருவாகப்போறதா எளுதியிருந்தாய்ங்க. நானும் இதெல்லாம் வேலைக்காகவா போகுதுன்னு கண்டுக்கிடலை.ஆனால் இன்னைக்கு பல அதிர்ச்சிகரமான சமாசாரம்லாம் தெரியவந்தது..

ஒரு வெளி நாட்டு கார பொம்பளை பி.எம் ஆகக்கூடாதுன்னு போர்க்குரல் எழுப்பி வெளிய வந்த கட்சி பவாரோட என்.சி.பி ( நேஷ்னலிஸ்ட் காங்கிரஸ் பார்ட்டி)

நேஷ்னலிஸ்டுக்கு எதிர்பதம் என்ன? அப்ராட் ?

சமீப காலமா பவார் சோனியாவை பேதியாக்கிக்கிட்டிருக்கிறது தெரிஞ்ச மேட்டருதேன். சோனியா ஒத்துக்கமுடியாத டிமாண்டையெல்லாம் வச்சு - கடுப்பாக்கி சோனியாவே வெளியே அனுப்பறாப்ல பண்றது பவாரோட ப்ளான்.

வெளிய வரும்போது நாலஞ்சு கூட்டணி கட்சிகளையும் கிளப்பிக்கிட்டு வர்ரது அவரோட ஸ்கெட்ச். அதுக்கு கொஞ்ச நாளாச்சும் கூட இருந்து தானே ஆகனும்.அதனாலதேன் இந்த கண்ணாமூச்சி.

அதுவும் ஸ்டேட்ல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி - முதல்வரை மாற்ற டிமாண்டு இத்யாதிக்கு பின்னணியில இருக்கிறதே பவாருதானாம். நீங்க சென்டர்ல பலசாலின்னு தானே எங்களை இன்சல்ட் பண்றிங்க. ஸ்டேட்ல நாங்க பலசாலி உங்களை இன்சல்ட் பண்றோம்னு சொல்லாம சொல்றாரு பவார்.


1.மகாராஷ்டிராவுக்கு போன பிரணப் முகர்ஜி "என்னை ப்ரபோஸ் பண்ணதே சரத் பவார் தான்"ன்னு சொல்லியிருக்காரு. பவாரோட சிவசேனா தலைவர் பால் தக்கரே வீட்டுக்கு போயிருககருங்கோ.. இதுக்கு பின்னணியில உள்ள வியூகம்லாம் பின்னாடி வருது.

2.சோனியா, நாம பிரணப்பை ஜனாதிபதி வேட்பாளரா அறிவிச்சதுமே தாளி யுபிஏவுக்கு வெளிய இருந்து கூட ஆதரவு பிச்சுக்கிச்சுன்னு நினைச்சுருப்பாய்ங்க போல. மேட்டர் இன்னாடான்னா ராகுல் காந்திக்கு பட்டம் கட்ட ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தப்பயே - ஒன்னரை மாசத்துக்கு மிந்தியே சரத் பவார் சோனியா அம்மாவுக்கு காராசாரமா ஒரு லெட்டர் ரெடி பண்ணி வச்சிருந்தாராம். ஆனால் பிரணப் தான் கைய காலை பிடிச்சு ஸ்டாப் பண்ணாராம். அப்பத்தேன் பவாருக்கு பிரணப்புக்கும் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டிருக்கு. இதன் விளைவுதான் சரத்பவார் பிரணப்பை ப்ரப்போஸ் பண்ணது. பரண்ல போட்டு வச்சிருந்த அந்த லெட்டரைதேன் சமீபத்துல மேடத்துக்கு அனுப்பினாரு பவாரு.

3.வெறுமனே ப்ரப்போஸ் பண்றது மட்டுமில்லை மண்ணின் மைந்தரான (?) சிவசேனா தலீவரை ப்ராக்கட் பண்ணி ஆதரவு தேடி கொடுத்திருக்காரு, முலாயம் ,மம்தா ஆதரவு தரவும் சரத்பவார் தான் காரணமாம்.

இன்னாடா டீலுன்னா : சோனியா ராகுலை கொண்டுவரப்போறாய்ங்க. யு.பி.ஏ உருப்படாது. நான் வெளிய வந்துரப்போறேன். இன்னொரு தேர்தல் இல்லாமயே அதிகார மாற்றம் நடக்கும் -அதுக்கு நாம ஒத்துமையா இருந்து பிரணப்பை ஜெயிக்க வைக்கனும்.. அதிகார மாற்றத்துக்கு ஒரு ஜனாதிபதியாக பிரணப் நமக்கு உதவுவாருங்கறதுதேன்.

4.காங்கிரசுன்னாலே கண் சிவக்கிற ஜகனோட அப்பா ஒய்.எஸ்ஸுக்கும் -பவாருக்கும் ஆதி நாட்கள்ளருந்தே நல்ல அண்டர்ஸ்டாண்டிங். விவசாயிகளுடைய பிரச்சினைகளை பத்தி தில்லியில போராட்டம் நடத்தின ஜகன் அப்பமே பவாரை சந்திச்சு மனுல்லாம் கொடுத்ததை ஞா படுத்திக்கங்க. இதுவே இல்லிங்ணா பவாரை சந்திச்சுட்டு நேஷ்னல் சானல்ஸுக்கு பேட்டி கொடுத்த ஜகன் சென்டர்ல யுபிஏவை சப்போர்ட் பண்ணுவம்னு வேற சொன்னாரு.

நான் கூட சோனியா சேர்மனா இருக்கிற யு.பி.ஏவுக்கு இந்த புள்ள என்னாத்த சப்போர்ட் கொடுக்கிறதுன்னு குழம்பிட்டேன். இப்பத்தேன் புரியுது சோனியா இல்லாத யு.பி.ஏங்கறதுதான் இதனோட அருத்தம்.

அல்லாரும் என்ன நினைச்சாய்ங்கன்னா ஓஹோ ஜகன் சி.பி.ஐ கேஸுக்கு பயந்துக்கிட்டாரு. இங்கன பிரணப்புக்கு ஓட்டுப்போட்டு அங்கன பெயில் வாங்க பார்க்கிறாருன்னு நினைச்சாய்ங்க.

ஆனால் பெயில் பெட்டிஷன் விசாரணைக்கு வர இருந்த தினமே ஜகன் தன் ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கிட்டாரு.

இதுலருந்து என்ன தெரியுது? கொய்யால .. நாளைக்கு சென்டர்லயே எங்காளுக்கு பவர் வரப்போவுது. அப்பம் பார்த்துக்கறேன்னு தானே அருத்தம்.

இன்னொரு ஹஞ்சும் மைண்ட்ல சிறகடிக்குது. பவாரும் -சங்மாவும் பேசி வச்சிக்கிட்டு நாடகமாடினாய்ங்களோங்கறதுதான். சங்மா புண்ணியத்துல என்.டி.ஏலருந்து சிவசேனா வெளிய நின்னு பிரணப்பை சப்போர்ட் பண்ணது ஒரு ஷாக் ட்ரீட்மென்டா இருக்கலாம்.

அதுவுமில்லாம சங்மா வேற புதுசா ஒரிசாகாரரான நவீன் பட் நாயக், ஜெயலலிதா அம்மாவோட ஆதரவை வேற திரட்டிட்டாரு.

பவார் பக்கம் யுபிஏ கூட்டணி கட்சிகளில் சில + சிவசேனா + சங்மாவுக்கு ஆதரவளித்த நவீன் பட்னாயக், ஜெயலலிதா இருக்காய்ங்க.

மதவாதமா? செக்யூலரான்னாதான் பா.ஜ.க தீண்டத்தகாத கட்சி. இதுவே விதேசி காங்கிரஸா, சுதேசி காங்கிரசான்னு வரும்போது ?

பட்சி சொல்றது நெஜமா இருந்தா சோனியா அம்மா சீக்கிரமே பல்பு வாங்கப்போறாய்ங்க. மஹாராஷ்டிரால காங்கிரஸை பிளந்தாப்ல சென்டர்லயும் பிளக்கப்போறாரு பவாரு.

சோனியா இல்லாத காங்கிரஸ் , காங்கிரஸ் இல்லாத யுபிஏ தத் என்னென்னமோ மைண்ட்ல ஓடுது. அம்பேல்.

ஆனால் ஒன்னு என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. நடக்கிறது எதுவோ நாட்டுக்கு நல்லதா நடந்தா செரி..