கணபதியே உனை கை தொழுதேன்
தொழாத நேரம் தான் நான் அழுதேன்
அச்சன் என்றும் பாராதே
அச்சு முறித்தவன் நீ
புல்லெடுத்து சூட்டிவிட்டால்
புரவலனாய் தருபவம் நீ
எருக்க மாலையிட ஏழ்மை கருக்கி
தொலைப்பவன் நீ
புலியென்று அலட்டிடுவர்
வலி வந்தால் அரண்டிடுவர்
எலி மேல் அமர்ந்தவனே அலட்டி தீர்ப்பதற்கும்
அரண்டு தவிப்பதற்கும் நீயன்றோ ஆதி மூலம்
சரித்திர சாக்கடைக்கெல்லாம்
நாயகனே நீயன்றோ மறுக்கவொண்ணா நதி மூலம்
நான் சொல்ல நினைப்பதெல்லாம்
என் சொல்லில் அடங்கிடவே
அய்யன் நீ அருள் செய்வாய்
மடமை தன் சிரத்தினையே மகேசி மைந்தனே நீ
ஒரு கணத்தில் உடன் கொய்வாய்
நினைவில் - சொல்லில் நிற்கும் எண்ணமெல்லாம்
செயலாகி நெருப்பாறாய் ஓடிட ஆணை கொடு
வில் அது விரட்டிட்ட அம்பென ஆக்கிவிடு
வீண் தேக்கம் யாவினையும் இங்குடன் போக்கிவிடு
கணம் ஏவும் சனம் உண்டு- அவர்க்கே
தினம் ஏசும் மனம் உண்டு
கண நாதன் நீயன்றோ கணமெலாம் நின் சேனையன்றோ
தளபதி நின் தாள் பிடித்தேன்.
நீ உண்டென் பின் என்றே தயங்காது வாள் பிடித்தேன்
நின் சேனை எனை தாக்க காவாதிருப்பதுவோ?
தாளிடு தாளிடு தடைகளுக்கே
கந்தன் வேலெடு வேலெடு விரட்டிடவே
Friday, May 20, 2011
சோரத் திலகங்கள்
ஆசு கவி இங்கெனக்கே வார்த்தைகளின் கண்ணாமூச்சி
அசடன் என் நாவில் நடம் புரியும் நாமகளே இன்று உனக்கென்னாச்சி
யான் பெற்ற இன்பமெலாம் பெறுக இவ்வையம் என்றே
போட்டுடைக்க நான் முனைந்தால்
ஏதோ சக்தி இடை வந்து மைந்தன் என்னை வாட்டுவதோ
சக்தி உன்னை பேயெல்லாம் போவென்றேதான் விரட்டுவதோ
நீயல்லால் ஒரு சக்தியுண்டோ
என்னைப்போல் ஒரு பித்தனுண்டோ
உண்டோ பகர்வாய் நின் படைப்பில்
நீயும் அடித்து சென்றாயோ விதிவாய்க்காலின் உடைப்பினிலே
முன் கதை சுருக்கம் முழுக்கத் தந்து
என் முடிவை முன் கூட்டி அறிவித்தாய்.
வாழ்வுக்கொரு பொருள் நீ தந்தாய் -என்
தாழ்வுக்கும் ஒரு முடிவினையே முற்றிலுமாக நீ தந்தாய்
அன்று ஒரு நாள் உம் சபை தனிலே
உன் கொள்கை முடிவெலாம் எதிர்த்தாலும்
என் அலப்பறை யாவும் நீ சகித்தாய்
விதியறியாத மதி தந்து மக்களை வாட்டுதல் தவறேன்றேன்
அதுவும் அவர் விதி என்றேதான் விண்ணவர் எல்லாம் வாதிட்டார்
எனக்கொரு வாய்ப்பு தந்திட்டால்
உம் சதிகள் யாவும் விரித்துரைப்பேன்
பின் வேகாது அவணியில் உம் பருப்பு
என்றேன் .வந்தேன் .அதனாலே தேவர்க்கெல்லாம் பெரும் வெறுப்பு
அவர் தம் கடுப்பை கண்ணுற்றும்
கண்ணே போய்வா என்றேதான்
விடை கொடுத்திங்கு அனுப்பி வைத்தாய்
விடையில்லாத வினாக்களுக்கே விடைகள் தந்து விடை கொடுத்தாய்.
உன்னை மறைக்கும் யாவினையும்
வி(ள)லக்க வந்தேன் விசுவத்தில்
பழுதாய் கிடந்த பாவி நானே என்னவர் இன்னல் போக்கிடவே
நினைந்தது ஒன்றை சாக்கிட்டு
சிக்கென்றே தான் பற்ற வைத்தாய் அம்மா நினது பொன்னடியே
பற்றிய பின் தானே திரி பற்றிய அதிர் வேட்டாய்
முழங்கி அதிர்வித்தேன்.
வானப்பந்தலிலே படர்ந்த கொடி மிசை பழுத்த பழமெல்லாம்
மண் மிசை உதிர்வித்தேன்
தாய் மண்ணும் நின் வடிவம்
தாய் மொழி நின் உருவம்
இவை காக்க களம் கண்டால்
அவை கூட்டி ஆதரிப்பாய்
வீரத்திலகம் தான் தீட்டி வழி அனுப்பிடுவாய்
சோரத்திலகங்கள்
சொக்குப்பொடி போட்டாலும்
சொக்க வைத்து சிக்கவைப்பாய்
வேட தாரிகளை இச்சாதாரி போல பல வடிவம் எடுத்தேதான்
பாடம் கற்பிப்பாய்
ஒன்றிரண்டா புரிவித்தாய்?
நம்மிடை மதில் எல்லாம் மாதா நீ சரிவித்தாய்
முப்பிறவி பயிற்சியெல்லாம் இப்பிறவி தனில் தந்து
முப்போதும் பாடுவித்தாய்
பாரோர் பாடெல்லாம் பட்டுப்போக வைக்கும்
பரம் பொருள் நிறை சிந்து
ஏழ்மை ஒன்றுதானே சிக்கலின் துவக்கமென்று
கீழ்மை நான் விட்டு கிழக்கு நோக்கி புறப்பட்டேன்.
பாதையெல்லாம் பாம்பாய் கிடக்க
விண்ணவர் வீம்பெல்லாம் விளக்கி கூறிட்டாய்.
வீணன் எனக்காக வீணை நீ தாங்கி புதுக்கலைகள் தந்திட்டாய்
பாணன் என் பாட்டுக்காய் பாவி என் வறுமையிலே வண்ணமகள் வெந்திட்டாய்
முன்னவரில் மூலம் சொன்னவர்கள்
சொல்லுக்குள் சுருக்கி வைத்த
சூக்குமமெல்லாம் காட்சி தரவைத்தாய்
மண்ணுலகில் மருவெனவே கிடந்த என் மீதே அருள் கூட்டி
அவணி மிசை மாட்சி பெற வைத்தாய்
ஆருமிலை இங்கெனக்கு என்றே உனை அடுத்தேன்
ஊருமிலை எனக்கென்றே பாச்சரம் நான் தொடுத்தேன்
அது தீச்சரமாய் விழுந்தாலும் நுதல் விழியில் ஏற்றிட்டாய்
ஏழ்மை எனை எரிக்க பனிப்பார்வை ஒன்றாலே அந்நிலை மாற்றிட்டாய்
பாடொன்று வந்தாலே பாடென்று சொல்லுவதாய்
ஏடொன்று நான் எடுத்தால் எழுத்தாகி வந்துற்றாய்
பாட்டி வீட்டினிலே பாட்டிசைத்து மகிழுதற்போல்
மகேசி உன் மடியில் மகவு நான் இசைத்திருந்தேன்.
படியெடுக்கும் ஆள்காரன் எனக்கென்ன தெரியும்
அடுத்தவரி விழுந்த பின் தான் பொருள் எனக்கு புரியும்.
செவியமர்ந்து சேதி சொல்லும் சேச்சி
ஆவி சோர நானமர்ந்தால் தாவி வரும் ஆச்சி
எல்லாம் நீ தானே
உன் கைப்பொருள் நான் தானே
செலவழித்தல் சேமித்தல் யாவும் உன் விருப்பம் -
உனை சேவித்தல் ஒன்றுதானே என் வாழ்வில் புது திருப்பம்
கோள் எல்லாம் நின் காற்சிலம்பு பரலாமோ? - ஞான
வாள் எடுத்து பிளந்திட்டால் கோலவிழிதனிலே கோபம் வரலாமோ?
ஈங்கிவரை ஈன்றவளே!
தாங்கிவரை கடைசி வரை !
போதை கண்ணடிக்க
பாதை தவறுகின்றார் - நல்
வழி காட்டும் வழி காட்டி நானே வழி தவற
பழி வருமே பார்மிசை
மீன் விழி தூங்காதாம்
துளி தூக்கம் உள் வாங்காதாம்
உன்னாட்சி மீன் ஆட்சி
என்றே உன் நாமம் மீனாட்சி என்றாச்சாம்.
நல்லாட்சி தருவதும் தான் மீனாட்சி கடமையன்றோ?
சொல்லாட்சி தந்திட்டாய் நானுன் உடமையன்றோ?
என் கடமை நான் முடிக்க தாயே நீ சக்தி கொடு
உன் உடமை நானன்றோ எனை ஏற்க முக்தி கொடு

Wednesday, May 18, 2011
ராகுல் விட்டதெல்லாம் ரீலு : ஐ.பி.என் சானலில் அம்பலம்
உ.பி மானிலம் நொய்டாவில் கற்பழிப்புகள் நடந்ததாகவும், 70 கிளர்ச்சிக்காரர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் வருங்கால நிரந்தர பிரதமர் ராகுல் இஷ்டேத்துக்கு ரீலு விட்டது அல்லாருக்கும் ஞா இருக்கும்.
சாலை அமைக்கும் பணிக்காக நஷ்ட ஈடு வழங்கி உ.பி.அரசு விளை நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால் திடீர் என்று மக்கள் அரசு கொடுத்த நஷ்ட ஈடு போதாது என்று கூடுதல் நஷ்ட ஈடு கேட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் பின்னணியில் எந்தெந்த அரசியல் கட்சியோட லாபம் எல்லாம் இருந்திருக்கும்னு தெரியாத பப்பாவா நீங்க
(அங்கன பி.எஸ்.பி ஆட்சி நடக்குது. அது காங்கிரஸுக்கு ஆகாத கட்சி - ஆனால் இவிக பிரதமர் மேல நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவா ஓட்டெடுப்பில் கலந்துக்கக்கூடாதுன்னு மடிப்பிச்சை கேட்கிறப்ப ஆகும் கட்சிங்கறத ஞா வச்சுக்கிட்டு படிங்க)
ராகுலை பாவம் சொம்மா சொல்லக்கூடாது காங்கிரசை ஒழிச்சுக்கட்டவே ஸ்டேட் ஸ்டேட்டா போற பார்ட்டி. பீகார் ஆச்சு, கேரளா ஆச்சு,தமிழ் நாடு ஆச்சு ஆந்திரா ஆச்சு இப்பம் உ.பி.
விடிஞ்சும் விடியாத நேரத்துல பெரிய ஹீரோ மாதிரி பைக்ல லிஃப்ட் வாங்கி நொய்டா போனாரு.ஏறக்குறைய 20 மணி நேரம் அங்கனயே சாயா குடிச்சு,சமூசா தின்னு டைம் பாஸ் பண்ணிக்கினாரு. சாஸ்திரத்துக்கு அரெஸ்ட் ஆகி அதுக்குனே காத்திருந்த மாதிரி " நானும் தியாகிதான் நானும் தியாகி"தான்னு கூவிக்கிட்டே ஊட்டுக்கு பூட்டாரு.
இதுல இந்தியன்னு சொல்லிக்கவே வெட்கப்படறேன்னு ஒரு வசனம் வேற. ஆம்பளைன்னு சொல்லிக்க வெட்கப்படறேன்னா அறுத்துக்க சொல்லலாம்.
இந்தியன்னு சொல்லிக்க வெட்கப்படறவுகளை என்ன சொல்ல? ஓ இத்தாலிக்கு போயிருன்னு சொல்லலாம்ல.
இதெல்லாம் நடந்த கதைங்கண்ணா. லேட்டஸ்ட் அப்டேட் என்னன்னா நொய்டா டு தில்லிக்கப்பாறம் உ.பி நொய்டாலருந்து கிராமத்தினர் சிலர் ,ஒரு பெண் ஆகியோரை கூட கூப்டுக்கினு போய் மன்மோகனாரை பார்த்திருக்காரு.
மீடியால உட்ட ரீலு,டகுலு அல்லாத்தையும் மன்மோகனார் காதுல போட்டுட்டாரு. இதற்கிடையில் உ.பி ஜெயலலிதா மாயாவதி ஓவர் ஆக்சன் பண்ண போலீஸ்காரவுகளை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாய்ங்க.
இதை எல்லாம் பார்த்த ஐ.பி.என் சேனல் நொய்டால உண்மையா என்னதான் நடக்குதுன்னு துருவ ஆரம்பிச்சுட்டாய்ங்க.
அவிக துருவல்ல நொய்டாவில் கற்பழிப்புகள் நடந்ததாகவும், 70 கிளர்ச்சிக்காரர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் வருங்கால நிரந்தர பிரதமர் ராகுல் விட்டதெல்லாம் ரீலுன்னு ப்ரூவ் ஆயிருக்கு. போட்டுக்கிழிக்க ஆரம்பிச்சிருக்காய்ங்க.
ராசா வீட்டு முட்டை ஏழை வீட்டு அம்மியை உடைக்கும்ங்கற மாதிரி கீதுபா.. இந்த மானங்கெட்ட காங்கிரஸ் தலைவருங்க ஒடனே அடப்பம் தூக்கிக்கினு ராசா மகனுக்கு வக்காலத்து வாங்கிக்கினு கீறாய்ங்க. தூத்தெறிக்க..
அந்த ராகுலு நெஜமாலுமே சத்திய சந்தன்னா இதே வேகத்தை ஈழத்தமிழர்கள் மேட்டர்ல காட்டியிருக்கலாம்லியா? அட காங்கிரஸ் ஆளும் மானிலங்கள்ள நில கையகப்படுத்தலே நடக்கலியா? அங்கன எல்லாம் விவசாயிங்க கிளர்ச்சியில ஈடுபடலியா?
பிணத்தை கட்டியழும் போதும் தாண்டவக்கோனே ..பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோனேங்கறது கரீட்டா கீதுங்கண்ணா..
விதிவழியே மதின்னா இதான் ராகுல் ஜாதகபலனை படிக்க இங்கே அழுத்துங்க

Friday, May 6, 2011
ஒபாமா இனி உனக்கு ஆப்பும்மா
உஜிலா தேவி என்னடான்னா இண்டியன் மெடிசினை முஸ்லீம் ஆட்சியாளர்கள் ஒழிச்சுக்கட்டிட்டாய்ங்கன்னு பிலாக்கணம் பாடிக்கிட்டிருக்காரு. நாம என்னடான்னா ஒசாமா நம் காலத்து நாயகன்னுட்டு ஓ போடறோம்.
இன்னா பண்றது நைனா இன்னாதான் அக்வார்டா இருந்தாலும் நெஜம் நெஜம்னு ஒன்னு கீதுல்லியா. அமெரிக்காவை கிழிக்க ஒரு பெரிய கூட்டமே கீது. அமெரிக்காவுக்கு பாரதமாதாவை கூட்டிக்கொடுக்க ஒரு கூட்டமே காத்துக்கினு கீது ( இன்னாது கா -கூ -ட்டிக்கொடுத்தாச்சுங்கறிங்களா? ஓஹோ அணு ஒப்பந்தம் பத்தியா அது சரி)
ஆனால் பாருங்க இப்ப அமெரிக்க ஆயுத கம்பெனிங்க கமிஷன்லாம் தர்ரதில்லையாம் அதனால நம்ம நாடு பிரான்ஸ் நாட்டு விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்காம். ( அமெரிக்க கம்பெனியோட இருந்த ஒப்பந்தத்தை ரத்து பண்ணி - ஆயிரம் தான் இருந்தாலும் பைசா மே பரமாத்மா கீறாருப்பா.)
ஒசாமாவ போட்டு தள்ளிட்டாய்ங்க. அதுவும் பாக்கோட அனுமதி இல்லாம பாக் டெரிட்டரில நுழைஞ்சு. பாக் உதவியோட செய்து - பத்தினி வேஷம் போட்டிருந்தாலும் ஓரளவுக்கு டைஜஸ்டபிள். ஆனால் பாக் அரசுக்கு தெரியாதுங்கறாய்ங்களே இது மட்டும் நெஜமா இருந்தா? பகீருங்குதுப்பா.
இதை முன்னுதாரணமா காட்டி சீனாக்காரன் தலாய்லாமா இந்தியாவுல இருக்கிறப்ப தூக்கிட்டா இன்னாபா பண்றது? "எங்கெங்கு காணினும் சக்தியடா"ங்கறாப்ல உலகத்துல எங்கன பார்த்தாலும் பதவி வெறிதேன் தலைவிரிச்சு ஆடுது.
ஒபாமா விழுந்து கிடக்கிறதை ( இமேஜை சொன்னேங்க) தூக்கி நிறுத்த ஒசாமாவ போட்டு தள்ளிட்டாரு. இது இத்தோட போச்சா? ஆலமரம் சாயறப்பவே என்னென்னவோ நடந்து போச்சு ( ராஜிவ் காந்தி படுகொலைய சொல்றேன்) இது இன்னா மரம்னு எதிர்காலம் சொல்லும்.
இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பிறவு அமெரிக்க அரசு ஒசாமாவை இதோ பிடிச்சுட்டோம் அதோ பிடிச்சுட்டோம்னு சீன் போட்டுக்கிட்டிருந்தப்ப ஜஸ்ட் ஒசாமாவோட பேரை நம்ம Astro Nemo Namology படி அனலைஸ் பண்ணி குறைஞ்ச பட்சம் 7 வருசத்துக்கு உங்களால பிடிக்க முடியாது - அந்தாளு நிழலுக்கு பிறந்தவன் - நிழல் மாதிரி - லங் கேன்சர் வரலாம் அது இதுன்னு சென்னைல இருக்கிற அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கு கூரியர் மூலமா தெரிவிச்சேன்.( கன்சோலன்ட் ஆஃபீஸா?)
ஒசாமாவை ஏன் ந.கா.நாயகன்னு சொல்றேனு இந்த பதிவை முழுக்க படிச்சா புரியும்.
ஒருபக்கம் இமேஜ் பிக் அப் ஆயிருச்சுங்கற சந்தோசம் இருந்தாலும் - ரெண்டாவது தபா கூட ஜனாதிபதி ஆயிரலாங்கற குஜிலி ஒரு பக்கம் இருந்தாலும் தேன் கூட்டை கலைச்சுட்டமோங்கற ஃபீலிங் ஒபாவாவுக்கு இருக்கும்.
இந்த சிட்சுவேஷன்ல ஒபாமா நம்ம கிட்டே வந்து ஐடியா கேட்டா எப்டி இருக்கும்னு கற்பனை குதிரைய தட்டிவிட்டேன்.
ஒபாமா: வணக்கம் மிஸ்டர் முருகேசன்! ஒரு காலத்துல..எப்படியோ இருந்த நாங்க நேத்துவரை எப்படியோ ஆயிட்டிருந்தம். இந்த ஒசாமாவை போட்டுத்தள்ளி இப்போ கொஞ்சம் ஆறுதலா இருக்கு.
முருகேசன்: மொதல்ல இந்த ஹிப்பாக்ரசிலருந்து வெளிய வாங்கசார். என்னைக்குமே நீங்க புலியில்லை. சொம்மா புலி தலைய மூஞ்சிக்கு வச்சி பூச்சி காட்டிக்கிட்டிருந்திங்க. ஒசாமா அதை தட்டிவிட்டுட்டாரு..
லேட்டஸ்ட்ல இருந்து பார்ப்போம். பொருளாதாரம்னா.. அரசாங்கத்துலருந்து , குடிமக்கள் வரை ஆட்டை தூக்கி மாட்ல போட்டு ,மாட்டை தூக்கி ஆட்ல போட்டு எல்லாமே கடன்ல ஓடிக்கிட்டிருந்தது. முதல்ல் வீட்டுக்கு ஒரு கார்னிங்க, அப்புறம் அவுட்டிங் போக ஒரு கார், ஆஃபீஸ் போக ஒரு கார்னிங்க. அப்புறம் ஆத்துக்காரிக்கு ஒரு காரு, ஆத்துக்காரருக்கு ஒரு காருன்னிங்க. உங்க பெட் ரோல் உற்பத்தின்னு பார்த்தா காலணா கூட கிடையாது. கன்சம்ப்ஷன்ல மட்டும் ஒன்னே முக்காலணா..
ஒபாமா: என்னப்பா நீ .. நான் ஏதோ பிரச்சினைய சொல்லி ஐடியா கேட்கலாம்னு வந்தா குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறே..
முருகேசன்: ஒபாமா சார் ! ஒரு பொம்பள வந்து கரும்பு தோட்டத்துல பலானவன், கத்திரித்தோட்டத்துல பலானவன்னு , பலாந்து பலாந்து நடந்ததுனு சொல்லி சொல்யூஷன் கேட்டால் சொல்லலாம். நீங்க ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி வயிறு மட்டும் வீங்கியிருக்குன்னு பேசினா என்ன பண்றது அதான் கேஸ் ஹிஸ்டரிய எடுத்து விட்டேன்
ஒபாமா:இங்கே கேமரா கீமரா இல்லேல்லியா?
முருகேசன்: நான் ஹோமோ கிடையாது. உங்களை பத்தியும் அப்படி இப்படி கேள்வி பட்டதில்லை. திடீர்னு ஏன் கேமராவ பத்தி கேட்கிறிங்க.
ஒபாமா:(மனதுக்குள்) என்னடா இது ..........காட்டி புண்ணாக்கிக்கிட்ட கதையா ஆயிருச்சு (வெளியே) சரிப்பா மேட்டருக்கு வாப்பா. எப்படியோ ஒசாமா போட்டு தள்ளிட்டம். இப்பம் பார்த்தா நூறு ஒசாமா வந்துருவாய்ங்க போல இருக்கு. சுண்டைக்காய் இலங்கை கூட சீனா கிட்டே குலாவுது. பாக்கை பாரு கொட்டி கொடுத்தும் - அவிகளை வெட்டி விட்டுத்தேன் ஒசாமாவ போட்டுத்தள்ள முடிஞ்சது பொருளாதாரமா டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு. ஒசாமா ஃபீவர் ஒரு வாரம் தான் தாங்கும். எலக்சனுக்கு இன்னம் நாளிருக்கே.
முருகேசன்: நீங்க பேசறத பார்த்தா என்னமோ ஒருகாலத்துல பிக் ஃபைவே உங்க பாக்கெட்லருந்த மாதிரி அர்த்தம் வருது
( பிக் 5 ன்னா அஞ்சு பெரிய நாடுங்கண்ணா. அமெரிக்கா,பிரிட்டன்,ஃப்ரான்ஸு,சீனா, ரஷ்யா .இவிகளுக்கு ஐ நா சபையோட பாதுகாப்பு சபைல நிரந்தர மெம்பர்ஷிப் உண்டு. வீட்டோ பவர் உண்டு. அதாவது ஐ. நா சபை எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் போடாங்கோத்தான்னிரலாம். தீர்மானம் ஃபணாலாயிரும். என்னதான் ரஷ்யா துண்டு துண்டா போயிட்டாலும் இன்னைக்கும் இந்த ஹோதாவ கொடுத்துதான் வச்சிருக்காய்ங்க)
ஒபாமா: நொந்து வந்தவனை இப்ப.......டி நோகடிக்கிறியேப்பா..
முருகேசன்:சரி சரி.. இப்போ முதல் கோணை முத்தும் கோணைன்னுவாங்களே அப்படி முதல் கோணைலருந்து திருத்தம் சொல்ல நான் தயார் . திருத்திக்க நீங்க தயாரா..?
ஒபாமா:சொல்லுப்பா ஏதோ ஒன்னு செய்யனும். எங்க ஊரு பேங்க் காரனெல்லாம் மானாவாரியா ஹவுசிங் லோனை கொடுத்துட்டு லோன் திரும்பாம , வீடுகளை ஜப்தி பண்ணி அதை ஏலம் விட்டா மார்க்கெட்ல அதை வாங்க நாதியில்லாம அவனவன் கார்லயே வாழ்ந்துக்கிட்டிருக்காம்பா..
முருகேசன்: நாம யார்கிட்டே டீல் பண்றமோ அவிக கேரக்டரை புரிஞ்சி கிட்டு டீல் பண்ணனும். உங்காளுங்களை நரிக்குறவங்க கணக்கா தயார் பண்ணது நீங்க. யூஸ் அண்ட் த்ரோ. கல்சரை கொண்டு வந்தது நீங்க. இந்த கல்ச்சர்ல வளர்ந்தவன் சொந்த வீடு கட்ட நினைப்பானா? இல்லே நீங்க தான் புது புது விளம்பர யுக்திகளை வச்சு பெருமாளையே லட்டு வாங்க வைக்கிறவக ஆச்சே. எங்காளுங்க அங்கே மானாவரியா வந்து சேர்ந்ததால அவிகள பார்த்து, உங்க விளம்பரங்களை பார்த்து வாங்கி தொலைச்சிருப்பாய்ங்க. திருப்பி கட்டற காலம் வந்தப்ப கீதை ஞா வந்திருக்கும். தத் இதென்னடா பரதர்மத்துல மாட்டிக்கிட்டோம் ஆயிரம் தான் இருந்தாலும் சுதர்மம் தான் பெட்டர்னு கை தூக்கிட்டிருப்பாய்ங்க.
ஒபாமா: யப்பா படம் வரைஞ்சு பாகம் குறிக்கிறியேப்பா.
முருகேசன்:இதுமட்டுமில்லிங்கண்ணா. தனியார் மயம், தனியார் மயம்னு கண்டதையும் தனியார் மயமாக்கினிங்க.கார் விற்பனைய கூட்ட பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட்டை வீக் பண்ணமாதிரி , மருத்துவம்,குடி நீர் சப்ளை ,சுத்தம்,சுகாதாரம், இன்ஷ்யூரன்ஸுன்னு சகலத்தையும் தனியார் மயமாக்கினிங்க.மக்களோட காஸ்ட் ஆஃப் லிவிங் ஏறிக்கிட்டே போச்சு.
மக்களோட தேவை கூடிக்கிட்டே போச்சு. அந்த தேவையோட நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆனைப்பசிக்கு சோளப்பொறி கணக்காயிருச்சு. உங்க சனங்க சைக்காலஜியே மாறிப்போச்சு. நீ என்னவேணா பண்ணிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆவது கார் வந்தே ஆகனும்னு ஃபிக்ஸ் ஆயிட்டாய்ங்க.
தனியார் மயம் தனியார் மயம்னு யுத்த தளவாட உற்பத்தியை கூட தனியார் மயமாக்கிட்டிங்க. வியாபாரிக்கு எப்பவு தன் உற்பத்தி ,தன் லாபம்தான் முக்கியம். பிள்ளை செத்தாலும் பரவால்லை மருமகள் தாலியறுக்கனும்ங்கற நேச்சர் தான் அவிகளுக்குண்டு. இங்கே டெலிகாம் கம்பெனிங்க எப்படி யாரு மந்திரியா இருக்கனும்னு கமாண்ட் பண்ற ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்களோ அப்படியே அமெரிக்கா எந்த யுத்தத்தை ஆரம்பிக்கனும்னு அவிக டிசைட் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க
ஒபாமா: கரெக்டு தான் கரெக்டுதான்
முருகேசன்:அது மட்டுமில்லிங்கண்ணா யுத்ததளவாட உற்பத்தி நிறுவனங்கள் யுத்தத்துக்காக தார் குச்சி போட கன்ஸ் ட்ரக்சன் கம்பெனிங்க யுத்தத்தால எரிஞ்ச நாடுகள்ள புனர் நிர்மாண காண்ட்ராக்டு கிடைக்கும்னு இருந்தாய்ங்க.
ஒபாமா: நேர்ல பார்த்த மாதிரி சொல்றியேப்பா
முருகேசன்:அந்த அளவுக்கு உலகமெல்லாம் நாறிப்போச்சுங்கண்ணா உங்க கதை
ஒபாமா:ஆமா ஏதோ முத கோணை முற்றும் கோணைனு ஆரம்பிச்சே..
முருகேசன்:ஆங் மண்ணின் மைந்தர்களான ரெட் இண்டியன்ஸை மொக்கை பண்ணி தானே நீங்க அரியணை ஏறினிங்க. அந்த பாவம் சொம்மா விடுமா? இன்னைக்கு ஸ்ரீ லங்கால ராஜ பக்சே பவிசா ஆண்டுரலாம்னு அத்தினி லட்சம் மக்களை கொன்னு குவிச்சாரு. ஆணடுருவாருங்கறிங்க. இல்லை. இல்லிங்கண்ணா முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும். எளியவனை வலியவனடிச்சா வலையவனை தெய்வம் அடிக்கும்
ஒபாமா: இப்ப என்ன அமெரிக்காவை ரெட் இண்டியன்ஸுக்கு ஒப்படைச்சுட்டு எங்களை ஓடிப்போக சொல்றியா?
முருகேசன்:ஒபாமாண்ணே, சனத்துக்கு இன்னிக்கு நேத்தா ஐடியா தரேன். தாளி கடப்பாறைய முழுங்கினவனுக்கு சுக்கு கசாயத்தை ரெக்கமண்ட் பண்ணாத்தான் மறுபடி வரான் . நான் என்ன செய்யட்டும். ஓஞ்சு போவட்டும். அவிகளையும் உங்காளுங்களுக்கு சமமா நடத்துமய்யா.
ஒபாமா: ஓகே நெக்ஸ்ட்?
முருகேசன்: இந்த இஸ்ரேல் கதைய எடுத்துக்க. காட்டுத்தீக்கு நடுவுல கட்டி கற்பூரம் மாதிரி இந்த விச பரீட்சை தேவையானு ஒரு செகண்ட் ரோசிச்சிருந்தா.. முஸ்லீம் நாடுகளோட விரோதம் வந்திருக்குமா?
ஒபாமா:இப்ப என்னத்தான் சொல்றேப்பா இஸ்ரேலை மாத்திர சொல்றியா?
முருகேசன்:இல்லிங்கண்ணா அவிகளுக்கு கட் அண்ட் ரைட்டா சொல்லிரு. தபாருப்பா நாங்களே கெட்டு நொந்து கிடக்கோம். ஒரு காலத்துல ஏதோ அகங்காரத்துல பண்ண வேலை இது. நீங்க அக்கம் பக்கம் அனுசரிச்சிக்கிட்டு போங்கனு சொல்லிருங்க. இதை பத்தி எவ்ளோ செலவாச்சு, எத்தனை நாடு விரோதமாச்சு, எத்தனை யுத்தம் நடந்துச்சு செப்டம்பர் 11 சம்பவத்துக்கு இஸ்ரேல் சமாசாரம் எந்த அளவுக்கு காரணம்னு ஒரு வெள்ளை அறிக்கை கூட விடுங்க தப்பில்லே.
ஒபாமா: ரொம்ப கவுரதை குறைச்சலா இருக்குமேப்பா.
முருகேசன்: இதானே வேணாங்கறது. கவுரதை பார்த்திருந்தா சுடுகாட்ல இருக்கிற வெட்டியான் கணக்கா போர் கருவிகள் விக்கனும் யுத்தம் நடக்கனும் சனம் சாகனும் ரீ கன்ஸ்ட் ரக்சன் காண்ட் ராக்ட் வரனும்னு ஸ்கெச் போட்டு பிடுங்கி தின்ன பிணம் கிடைக்குமான்னு காத்திருந்த நரி மாதிரி வாழ்ந்ததை விட கவுரதை குறைச்சலா இது?
இத்தனை நாள் நீங்க விடாத உலக அமைதி கோசமா? என்ன அப்போ அதுல உண்மையில்லை. இப்போ நவ துவாரத்துலயும் காத்து போயி வந்துக்கிட்டிருக்கிறதால தலைக்கு ஏறியிருந்த அகங்காரம் இறங்கி வந்திருக்கிறதால அதுல உணர்ச்சியும் இருக்கும், உண்மையும் இருக்கும் அதை தொடர்ந்து ஆக்சனும் இருக்கும்.
ஒபாமா:சரிப்பா அடுத்ததா என்ன நடவடிக்கை எடுக்கனும்?
முருகேசன்: அணு ஆயுத ஒழிப்புன்னு ஒரு கோசம் உங்க கொடவுன்ல இருக்கில்லை. அதையும் தூசு தட்டி எடுத்து ஃபா லோ பண்ணுங்க. அணுமின்சாரம் தயாரிக்கிறதே தற்கொலை பண்ணிக்கிற மாதிரி.இதுல அணு ஆயுதம்லாம் கொலைகாரனுவ பண்ற வேலை அண்ணாத்தை
ஒபாமா: நெக்ஸ்ட்?
முருகேசன்: ஈராக்ல அத்தினி ஆயிரம் அணு ஆயுதம் இருக்கு இத்தினி ஆயிரம் கிருமி ஆயுதமிருக்குனு பூந்து அடி அடினு அடிச்சிங்க. என்னத்த பிடிச்சிங்க? ஒரு ம...ருமில்லை. எங்காளுங்க சென்ட் ரல் ஹோம் டிப்பார்ட்மெண்ட்ல அய்யர் பசங்க பேச்சை கேட்டுக்கிட்டு தமிழ் ஈழத்துல வரதராஜனுக்கு முடி சூட்னாப்பல இல்லாம ஈராக்ல இருக்கிறதுலயே ஜூரி எவனோ அவனை ச்சூ காட்டிட்டு ராணுவத்தை வாபஸ் வாங்கிரு ராசா? ஈரானுக்கு டகுலு விடறதுக்கு மிந்தி தபாரு எங்க கிட்டே இத்தனை அணு ஆயுதம் இருக்கு. இதுல இத்தினி ஆயுதத்தை அழிச்சுர்ரம்னு ஆரம்பி. இப்போ ஐ . நா வை வெத்து மிரட்டல் மிரட்டறாப்ல இல்லாம தர்மமா நடந்துக்கிட்டு உன் பின்னாடி தர்மத்தை வச்சி ஐ.நா வுக்கு அழுத்தம் கொடு. எல்லாபயலும் வழிக்கு வரான்.
ஒபாமா:இந்த ஒசாமா அல்கொய்தா மேட்டரு ?
முருகேசன்: அந்த பார்ட்டிய ஊட்டி ஊட்டி வளர்த்து ரஷ்யா காரன் மேல விட்டதே நீங்க தானே பார்ட்டி.வளர்த்த கடா முட்ட வந்தாப்ல முட்டிட்டான். இப்ப அவனை நீங்க போட்டுட்டிங்க
ஒபாமா: தீர்வை சொல்லுப்பா..ரொம்பவே நொந்து போயிருக்கம்.
முருகேசன்:ஒசாமாவோட சாவுக்கப்பறமும் இத்தனை பீதி பேதியாக்க பேஸ் என்ன அவிக மதம் அழிஞ்சுருமோ, அவிக கலாசாரம் காலாவதியாயிருமோனு நீங்க க்ரியேட் பண்ண டெர்ரர்தான்.
இஸ்லாம்ல எத்தனையோ நல்ல அம்சங்கள் இருக்கு. அதையெல்லாம் போற்றி பாடுங்க. முடிஞ்சதை அமல் படுத்துங்க. பெட் ரோல் தாகத்தால இஸ்லாம் நாடுகளோட ரத்தம் குடிக்கிற குடிகேடித்தனத்துக்கு குட்பை சொல்லுங்க.
ஆல்ட்டர்னேட்டிவ் பவர், ஃப்யூயலுக்கு ஆராய்ச்சியை முடுக்கி விடுங்க . எங்க ராமர் பிள்ளை டகுல் வேலையையெல்லாம் விட்டுட்டு பாவம் இப்போ நிஜமாவே ஏதோ வச்சிருக்கிற மாதிரி இருக்கு. அதை ட்ரை பண்ணி பாருங்க.
ஒபாமா:சரிப்பா எங்க சனம் வளர்ச்சி வளர்ச்சிங்கறாய்ங்களே..
முருகேசன்:எங்க நாட்ல நித்யானந்தா, கல்கி மட்டுமில்லே இன்னைக்கும் உண்மையான சாமியாருங்க இருக்காய்ங்க. அவிக கைல கால்ல விழுந்து உங்க நாட்டுக்கு கூட்டிப்போய் ஆன்மீகத்தை போதிக்க சொல்லுங்க. போதுமென்ற மனமே பொன்செய் மருந்து.
ஒபாமா:சரிப்பா ஆயுத வியாபாரம் கூடாதுன்னிட்ட. வேற ஏதாவது ப்ராஜக்ட்ல பணத்தை போட்டாத்தானே
முருகேசன்:ஏன் எங்க நாட்டு நதிகளோட இணைப்பு மேல இன்வெஸ்ட் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி பாக்கிஸ்தானுக்கு ஸ்ட் ரிக்ட் வார்னிங்க் கொடுங்க.. பொழப்பை பார்க்க சொல்லி. விட்டா அவிக நாட்லயும் இந்த நதி இணைப்பு வேலை ஏதாச்சும் இருந்தா இன்வெஸ்ட் பண்ணுங்க..
ஒபாமா: தேங்க்யூப்பா.. இன்னைக்கே இந்த நிமிசமே வேலைய ஆரம்பிச்சுர்ரன்
முருகேசன்:அடிச்சு தூள் கிளப்புங்க. கார்ப்பசேவ் மாதிரி படக்குனு புலி மேலருந்து இறங்கிராதிங்க.. புலி மேல சவாரி பண்ணிக்கிட்டே ஏதாச்சும் வாகா கிளை கிடைச்சா படக்குனு பிடிச்சிக்கிட்டு காலை தூக்கி மேல போட்டுக்கிட்டு புலியை உஸ்கோ உஸ்கோன்னிருங்க
ஒபாமா: சூப்பர்மா.. ஊருக்கு போய் செக் அனுப்பி வைக்கிறேன்.
முருகேசன்:அதெல்லாம் எதுக்கு தலை .. நான் சொன்னதை எல்லாம் அப்ளை பண்ணு உலகமே உருப்படும். அதுக்கு மிஞ்சின புண்ணியம் என்ன இருக்கு..
ஒபாமா:வித்யாசமான ஆளுப்பா..
முருகேசன்:அதனால தான் வித்யாசமா யோசிச்சு வித்யாசமான ஐடியா எல்லாம் கொடுத்திருக்கன். பை தி பை இந்த ஐடியாவை எல்லாம் அப்ளை பண்ணனும். இல்லேனு வை " ஒபாமா இனி உனக்கு ஆப்பும்மா"
அது எப்போ எப்படின்னு உன் ஜாதகத்தை நோண்டி நொங்கெடுத்து அப்பாறமா சொல்றேன்.

Subscribe to:
Posts (Atom)