Showing posts with label selection. Show all posts
Showing posts with label selection. Show all posts

Friday, January 14, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் :8

இது வரை பல முறைகளை (ஹி ஹி சில) பார்த்தோம். இதுல எது பெஸ்டுன்னு சிண்டை பிச்சுக்குது சனம். இதை தெரிஞ்சுக்கனும்னா உடலுறவோட நோக்கம் என்னனு தெரிஞ்சிக்கிடனும். நோக்கத்தை பொறுத்துதானே முறைய தேர்வு செய்யனும்.

என்னங்கடா இது முறைகளை பத்தி சொல்லிக்கிட்டிருந்த பார்ட்டி படக்குனு நோக்கத்துக்கு டைவர்ட் ஆயிட்டாருனு கன்ஃப்யூஸ் ஆகாதிங்க. ஆக்சுவலா நோக்கத்தை மொதல்ல சொல்லியிருக்கனும். சில பிக்காலிங்க நோகாம காபி பேஸ்ட் பண்ணிர்ரதால அவிகளை சிண்டை பிச்சுக்கவைக்கத்தேன் இப்படி ( படா சால்ஜாப்பு பா!)

உடலுறவின் நோக்கங்கள்:

உடலுறவின் நோக்கம் சந்தானம்ங்கறது ஜல்லியாயிரும். எவனும்,எவளும் பெத்துக்கறதுக்காக படுத்துக்கறதில்லை.படுத்துக்கறாய்ங்க. எதிர்பாராவிதமா கர்பமாயிருது. ஆனால் இவிகளை உடலுறவுக்கு தூண்டறதே இயற்கையின் இனப்பெருக்கம் குறித்த உந்துதல்தான். இயற்கை தன் அஜெண்டாவை நிறைவேத்திக்க என்னென்னமோ பிரமைகளை மனுச மனசுக்குள்ள விதைச்சுருது. அதுல ஒன்னுதான் " எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப்போலவே இருப்பான்" எட்செட்ரா. லைஃப்ல நினைச்சதை  சாதிக்க நினைக்கிறவன், அதுக்கான முயற்சில இருக்கிறவன், தன் முயற்சி மேல முழு நம்பிக்கை வச்சிருக்கிறவன் எவனும் மகன் சாதிக்கனும்னு நினைக்கவே மாட்டான். மகன்/மகள் சாதிக்கிறதுங்கறது அடுத்தவன் விளையாடற  மேட்ச் மாதிரி. நீங்க பார்வையாளராயிருவிக. மிஞ்சிப்போனா கோச். அதே நேரம் சாதிச்சுக்கிட்டிருக்கிறவனுக்கு மரண பயம் வந்துருது அவன் தன் நிழலா/ நகலா தன் வாரிசை கனவு காண ஆரம்பிச்சுர்ரான்.

1.எல்லா உயிரும் ஒரு செல் அங்கஜீவியான  அமீபாலருந்து  பிரிஞ்சுவந்த கதை ஞா  இருக்கும்னு நினைக்கிறேன். ஓருடல் ஓருயிரா இருந்தப்ப நிச்சிந்தையா இருந்தோம். பிரிஞ்ச பிற்பாடு பல பிரச்சினை . மறுபடி ஓருடல் ஓருயிரா மாற விருப்பம். இது உடலுறவுல சாத்தியமாகுது. (சாதாரணமான்னா நிமிடக்கணக்கு -சில கில்மா டிப்ஸ் தெரிஞ்சா இதை அரைமணி ஒரு மணி நேரத்துக்கும் நீட்டிக்கலாம்.

2.ஓருயிரா மாற தடை இந்த உடல்ங்கற தப்பான எண்ணம் (பிரமை) நமக்குள்ள இருக்கு.அதனாலதான் மனிதன் பண்ற ஒவ்வொரு செயலுக்கு பின்னாடியும் கொலை அ தற்கொலை எண்ணம் இருக்கு. (இதை சைக்காலஜியே சொல்லுதுங்கோ). செக்ஸ்ல கொல்லும்,கொல்லப்படும் இச்சை ரெண்டும் நிறைவேறுது.

3.செக்ஸில் ஆண் அடையும் உச்சமானது மேம்போக்கானதா இருக்கு.(உடலுறவு  நிமிசக்கணக்குல நடக்கும்போது ) ,பெண் அடையும் உச்சம் ஆழமானது,அலை அலையா தொடரக்கூடியது, நீடிக்க கூடியது. இருவரும் சிலபல டிப்ஸை ஃபாலோபண்ணி உடலுறவு நேரத்தை நீடிக்கச்செய்தா ஆணும் ஆழமான உச்சத்தை பெற முடியும். பெண்ணும் உச்சம் பெற முடியும். இன்னைய தேதிக்கு 7 முதல் பத்து சதம் பெண்கள் கூட உச்சம் பெறுவதில்லைனு ஒரு கணக்கு. ஆழமான நீடித்த உடலுறவில் ஏற்படும் ஆழமான,அலை அலையான உச்சம் உடலை மறக்கச்செய்கிறது. நம்மை இயற்கையிலருந்து பிரிச்சு வச்சிருக்கிற ஈகோ ஒரு செகண்ட் டிம் அண்ட் டிப் அடிக்குது.

4.குழந்தை ஈகோ இல்லாம வருது. ஆனால் சனம் அதனோட ஈகோவை வளர்த்து அதை இயற்கையிலருந்து சம்பூரணமா பிரிச்சுர்ராய்ங்க. அதனொட எண்ணம் தன் மேலயே மையம் கொண்டிருக்கு.  மன்சன் அடுத்தவுகளை நாடறதே /அடுத்தவுக மேல டிப்பெண்ட் ஆறதே/அடுத்தவுகளை பத்தி உண்மையா நினைக்கிறதே உடலுறவுக்கான அழைப்பு விடுக்க எண்ணும்போது தான். இவனையே மையம் கொண்டிருந்த இவனோட எண்ணங்கள் அடுத்த பார்ட்டிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகுது. ஈகோ மெலியுது. ஈகோ மெலிஞ்சப்ப அவன் இயற்கையோட இன்டராக்ட் ஆகறான். ஆக்சுவலா உடல் ரீதியான சக்தி பூத்துக்குலுங்கற இளைஞனோட மைண்ட்ல ஈகோ தலைவிரிச்சு ஆடனும். ஆடுது.ஆனால் அவன் காதல்ல விழுந்தா அவனோட எண்ணம் அடுத்தவள் மேல மையம் கொள்றதால தன்னோட ஈகோவின் அழுத்தம் குறையுது. இதனாலதான் லவ் பண்றவன் கண்கள் போதையில மிதக்குது.குரல் தழுதழுக்குது. இந்த ப்ராசஸ்  உடலுறவுல பக்காவா ஒர்க் அவுட் ஆகுது. ஆனால் நிமிசக்கணக்குல முடிஞ்சு போவுது. இதனாலதான் சிட்டுக்குருவி கணக்கான கூடலுக்கு பின்னாடி தம்பதிகள்/காதலர்கள் இடையில வெட்டுப்பழி குத்துப்பழி நடக்குது.

5.ஆணைப்பொருத்தவரை உடலுறவுங்கறது தாயின் கருப்பைக்குள் மீண்டும் நுழையும் முயற்சி. (அவன் நிச்சிந்தையா இருந்தது அங்கனதானே ) பெண்ணைப்பொருத்தவரை அவளுக்குள்ள ஒரு எம்ப்டினெஸ் இருக்கு. அது கருப்பையாவும் இருக்கலாம் அதர் தேன் கருப்பையாவும் இருக்கலாம். அதை நிரப்பிக்கனுங்கற இன்ஸ்டிங்ட் உடலுறவுல நிறைவேறுது.

6.ஜோதிடம் ஆன்மீகத்தை நோக்கிய பயணத்திலான   முதல் அடி, படின்னு அடிச்சுவிட்டது ஞா இருக்கலாம். ஜோதிடம்னா என்ன தன் மேலான கோள்களின் ஆதிக்கத்தை ஏத்துக்கறது.கோள்கள் இறைவனின் படைப்பு. கர்த்தருக்கு (படைத்தவர்) பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்னு பைபிள் சொல்லுது. படைப்புக்கும்,படைத்தவருக்கும் எந்த வித்யாசமுமில்லே. படைப்புல படைப்பாளிய பார்க்கலாம். ஒகே.. ஓகே கமிங் டு தி பாய்ண்ட். செக்ஸுங்கறது ஆன்மீகத்தை நோக்கிய பயணத்தில் இறுதிப்படி. இங்கருந்தே குகைப்பாதைக்கு அந்தப்பக்கம் உள்ள ஒளி வெள்ளத்தை தரிசிக்கமுடியுங்கண்ணா. ஆனால் பல தரம் சொன்னாப்ல உடலுறவு பெண் மனசை விட ஆழமா இருக்கனும்.அப்பத்தேன் இது ஒர்க் அவுட் ஆகும். கடவுளை சச்சிதானந்த ஸ்வரூபன்னு சொல்றாய்ங்க. சத் - நல்ல , சித் -மனசு நல்ல மனசுல ஏற்படக்கூடிய ஆனந்தம்தேன் பகவான். நாமெல்லாம் சச்சிதானந்த ஸ்வரூபனான பகவானோட சந்தானங்கள்.  நமக்குள்ள ஆனந்தம் மீதான வேட்கை இல்லைன்னா தான் தப்பு. நாம ஆனந்த வேட்டைக்கு புறப்படலைன்னாதான் தப்பு.  ஆனை வேட்டைக்கு போறவன் ஆரம்பத்துல காட்டுப்பூனைய வேட்டையாடறதில்லையா அதுமாதிரிதான் செக்ஸும். ஒவ்வொரு உயிரும் முக்திக்கான கூப்பனை கையில (மூளையின் ஏதோ ஒரு கண்ணறையில)  வச்சிருக்கு. அந்த கூப்பன் தேன் உடலுறவுக்கு தூண்டுது. இது ட்ரெய்லர். அது சினிமா தட்ஸால்.

பிரிஞ்சுப்போன உசுரு எல்லாம் சேரனும். நிம்ஃபோஸ்,செக்ஸ் மேனியாக்ஸ்குள்ள எல்லாம் இந்த தவிப்பு அதிகமா இருக்குமோனு ஒரு சம்சயம். என்னடா ஒரு இம்சைன்னா இந்த இணைப்பு புதுசா ஏற்படவேண்டிய அவசியமே இல்லை. ஆல்ரெடி நெட் கனெக்சன் இருக்கு. ஜஸ்ட் ஒரு ரீ ஸ்டார்ட் கொடுத்தா போதும்.

ஆக உடலுறவின் பல  நோக்கங்களில் சந்தானங்கறது ஜஸ்ட் ஒரு அம்சம்தான். இதுவும் உங்க அஜெண்டா இல்லை. இயற்கையோட அஜெண்டா. அதனால எந்த உடலுறவு முறை நேரத்தை நீட்டிக்க உதவுமோ அதுதான் உங்களோட ஆப்ஷனா இருக்கனும்.

வேணம்னா  ஒரே இரவுல கூட எல்லா பொசிஷனையும் ஒரு தடவை பார்த்துர்ரது நல்லது. பொசிஷன் மாறும்போது எல்லாமே அடியை பிடிடா பரதப்பட்டானு ஆயிரும். பேக் டு தி பெவிலியன்.


அனைவருக்கும் என் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள். ( சொல்லலைன்னா ஒதைப்பாங்க போலிருக்கு. ஆனா பொங்கல் வாழ்த்து சொல்றதுல எனக்கு கில்ட்டி ஏதும் கிடையாது. இயற்கைக்கு நன்றி சொல்ற பண்டிகை ஆச்சே .. வசதி வாய்ப்பை பொருத்து இன்னிக்கு ஒரு நாளாச்சும் பயிர் பச்சைனு பார்த்துட்டு வாங்க பாஸு)