Showing posts with label sankaraachari. Show all posts
Showing posts with label sankaraachari. Show all posts

Monday, January 10, 2011

மகா பெரியவா Vs முன்னாள் மந்திரி : டகுலு மாமே!



கல்கி "சிறப்புப்பக்கங்கள்"ள முன்னாள் மந்திரி ராஜாராம் மகா பெரியவா பத்தி ஒரு டகுலு விட்டுக்கிறாரு பாருங்க. சிரிச்சு சிரிச்சு வவுறே நோவெட்த்துக்கிச்சி.இவரு விவசாய மந்திரியானப்ப மழையே இல்லையாம். இவுரு உடனே மகாபெரியவா கிட்டே போய் மேட்டரை அவுத்து வுட்டாராம். உடனே பெரியவுக பக்கத்துலருந்த ஐயருமாரை நாளைக்கே யாகம் பண்ணுங்கோன்னுட்டாராம்.

மந்திரி ரிட்டர் ஆவுறாராம்.ஸ்ரீ பெரும்புதூர் கிட்டயே மழை பிச்சிக்கினு ஊத்துதாம். அடங்கொய்யால உங்க லாஜிக் பிரகாரம் பார்த்தாலும் யாகம் பண்ணபிறவுதானே மழை ஊத்தனும்.

தாளி.. அவ்ளோ பவர் இருக்கிற பார்ட்டிய வச்சுக்கிட்டு இன்னாத்துக்கு வானிலை ஆராய்ச்சி மையம்லாம் ஊத்தி மூடிட்டு மகா பெரியவாளுக்கே கோவணம் துவைச்சுப்போட்டுக்கிட்டிருந்திருக்கலாமே.

ஆமாங்கண்ணா இப்ப உள்ள பார்ட்டிய (ஜெயேந்திரா) பத்தி இந்த மாதிரி டகுலு கூட வர்ரதில்லையே ஏன்?

சிறப்புப்பக்கங்கள்னா குறிப்பிட்ட இஷ்யூவுக்கு விளம்பரம் கொடுத்தவுக மனோபீஷ்டப்படி போடற பக்கங்கள்னு அர்த்தம் தெரியுமோ?

Thursday, June 17, 2010

சூத்திர கருப்பைகளில் பிராமண வித்து

ஜெயேந்திர சரஸ்வதி டேக் கேர்!


அரசியல் வாதிகளுக்கு மட்டுமில்லே சாமியார்களுக்கும் மக்களோட மறதி மேல இன்னா நம்பிக்கைப்பா? ஜெ.ச திரும்பிப்பார்..னிட்டு ஆரம்பிச்சு பத்து பக்கத்துக்கு வசனம் எழுதலாம். ஆனால் இங்கிலீஷ் மீடிய பார்ட்டிங்க கண்டுக்கிட மாட்டாங்களே. தாளி இந்தாளு சங்கர மடம் பாலிடிக்ஸ் காரணமா படக்குன்னு அப்ஸ்காண்டட் ஆனாரே அதை மறந்துட்டாரு. பாலிட்டிக்ஸ் என்ன? பாலிடிக்ஸ்? நம்மாளு சந்திரசேகரர் காலத்துலயே கெட்ட ஆட்டம் போட முயற்சி பண்ணியிருப்பாரு. பெரியவா விரைய பிசைஞ்சிருப்பாரு அதான் பார்ட்டி உட்டுது சவாரி. இதை கூட நியாயப்படுத்தி பாலகுமாரன்ங்கற லீடிங் ரைட்டர் நாவல் எழுதினாரு . விசயத்துக்கு வரேன் ஜெ.ச திருப்பதில துவங்க உள்ள மெடிக்கல் காலேஜுக்கு நில ஒதுக்கீடு பத்தி ஏற்கெனவே எழுதியிருக்கேன். ஒய்.எஸ் பாதி ஃப்ரீ, பாதி மார்க்கெட் வேல்யூக்கு தரேன்னாரு. ஜெ.ச முறுக்கிக்கிட்டு போனாரு. ஒய்.எஸ். ஃப்ரீயா தரேன்ன நிலத்தை பெண்டிங்ல வச்சு மீதிய தி.தி.தேவஸ்தானத்துக்கு ஒதுக்கிட்டாரு.ஒய்.எஸ். மறைவுக்கு பிறகு ரெண்டையும் முழுங்கிட்டு இன்னைக்கு பார்ட்டி இன்னா சொல்லுது தெரியுமா?



"நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. " இது எந்த ஊரு நியாயம் நைனா? ஒரு கோயிலுக்கு 40 ரூ ட்யூப் லைட் தானம் பண்ணனுவனுக்கே அது எரியுதா இல்லையா? பக்தர்களுக்கு உபயோகமா இருக்கா இல்லையா (இல்லை அய்யரு ஆசை நாயகி வீட்டுக்கு அனுப்பிட்டாங்களா?) ன்னு தெரிஞ்சிக்கிற அதிகாரம் இருக்கு. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கொடுத்த அரசோட ரோல் ஓவராம்.



அடங்கொய்யால.. கடந்த பதிவுலயே சொல்லியிருக்கேன்.இவிக கட்டப்போற மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் ஸ்விம்ஸ் மருத்துவமனைய உபயோகிச்சுப்பாங்கன்னும் ஒரு ப்ரப்போசல் இருக்கு. (அது மொட்டைச்சுவர் பாருங்க.. பஞ்ச கச்சங்கள் மூத்திரம் விட்டுட்டு போகலாம். அதும் பஞ்ச கவ்யம்னு பீலா விடுவானுங்களோ என்னமோ?)



இந்த நிலைல "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு ஒரு டயலாக் வருது.

இவிக சூத்திர பெண்களோட கர்பங்கள்ள பார்ப்பன வித்துக்களை ஊனி ( புத்ர காமேஷ்டி ?) ஆராய்ச்சி செய்வாக ) அரசாங்கம் என்னங்கடா இதுனு கேட்டா "நிலம் கொடுத்ததோட உங்க ரோல் ஓவர்.. "னு சொல்வானுங்க போல.



சங்கர்ராமன் கொலைவழக்கு, காபரே வழக்கு, அனுராதாரமணன் சமாசாரம் இப்படி பலதும் இருக்கு . மிஸ்டர் ஜெ.ச டேக் கேர். யாராச்சு பப்ளிக் இன்டரஸ்டட் பிடிஷன் போட்டு வழக்கு ஆந்திரத்துக்கு மாற்றப்பட கூட வாய்ப்பிருக்கு. கொஞ்சம் பார்த்துப்போ ராசா?



ஏழுமலையானோட சன்னிதிலயே இந்த பூணூலுக பண்ற அகாத்தியம் இருக்கே.. அட அட.. அதையெல்லாம் விவரிக்கனும்னா ஒரு தொடர்பதிவு போடனும் . கோவில் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சித்துலுன்னு ஒருத்தர் இருக்கார். அம்பானி திருமலை வந்தா கெஸ்ட் ஹவுசுக்கே போய் யாகம் பண்ணி ஆசி வழங்குவார். (சம்பளம் தேவஸ்தானத்துல ஆசிர்வாதம் அம்பானிக்கு அதுவும் கெஸ்ட் ஹவுஸ்ல இன்னா ரூலுப்பா இது. ஆறாயிரம்,ஏழாயிரம் சம்பளம் வாங்கற ஸ்கூல் வாத்தியாரையே தனியா ட்யூஷன் சொல்லக்கூடாதுன்னு ரூல் போடறாய்ங்க. இவிகளுக்கு அந்த மயித்து ரூல் எல்லாம் கிடையாது.



இவரை ஏதோ குடுமி அய்யருன்னு நினைச்சுராதிங்கோ. மைக்ரோ பயாலஜில (அஸ்வமேதம் எல்லாம் வருதா தலை) பி.ஹெச்.டி பண்ணியிருக்காரு. அதவிட இதுல ஆதாயம் சாஸ்தின்னு கணக்கு போட்டு ட்ராக் மாறின பார்ட்டி. இவருக்கு 3 தங்க மகன்கள் . கோவில்ல இவிகளுக்கு ட்யூட்டி மாறி மாறி வரும். அதாவது எல்லாத்துக்கும் மெயின் கோவில்ல ட்யூட்டிக்கு சான்ஸு வராப்ல (அப்பத்தானே எதுனா தேத்தமுடியும்) . இவிக வருசத்துக்கு கு.ப 40 அ.ப 100 நாள் தான் வேலை பார்த்திருக்காங்க. இதை தேவஸ்தான ஜெ.இ.ஓ தர்மா ரெட்டி ( ரெட்டி அண்டர் லைன்) பாயிண்ட் அவுட் பண்ணிட்டாரு. அவ்ளதான்யா பாஞ்சாலி மாதிரி நியாயம் கேட்க புறப்பட்டுட்டாரு தீட்சிதர். ஹைதராபாத்ல கேம்ப் அடிச்சு முதல்வர்ல இருந்து சகலரையும் வலம் வந்தாரு. இவருக்கு ஆதரவா பிராமண சங்கம் குரல் கொடுக்குது.



என்னங்கடா இது நியாயம்? ஏம்பா ரோசய்யா கிட்டே வந்தேன்னா அரசும், அற நிலையத்துறையும் தேவஸ்தானத்துக்கு கொடுத்த கோ ஆப்பரேசனுக்கு நன்றி சொல்ல வந்தாராம். ரோசய்யாவுக்கு பாவம் வேற பிரச்சினையே கிடையாது பாருங்க

(ரத்த மூலம் வந்த மாதிரி குடம் குடமா கொட்டுதங்கே) என்ன தீட்சித்துலூ ஜெ.இ.ஓ இன்னா சொல்றாருன்னு கேட்டாரம். அதனால இவரு ஜெ.இ.ஓ பத்தி சொன்னாராம்

அவ்ளாதான்யா.

பாவம் நித்யானந்தா .. பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும்னு கிரோசின் கடத்தல் வழக்குல வேற சிக்கியிருக்காரு. பெயில் வந்த குஜிலல பஞ்சாக்னி யாகம்னு ஒரு யாகம் பண்ணாருல்ல. அதுக்கு ரேஷன்ல கொடுக்கிற ப்ளூ கிரோசின் உபயோகிச்சாய்ங்களாம். வருவாய் துறை அதிகாரிகள் ரெய்டு அடிச்சு 180 லி ப்ளூ கிரோசினை கைப்பத்தியிருக்காய்ங்க.

Wednesday, February 17, 2010

சங்கராச்சாரியாரின் மொ.மா. தனம்

மதவாதிகள்,சாமியார்கள், ச(ன்)னியாசிகளின் அரசியல் ஆர்வம் எந்த காலத்திலுமே பெரிதாய் பலன் தந்ததில்லை.உண்மை நிலை இப்படியிருக்க இந்த கலிகாலத்தில் தம் முதுகு நிறைய அழுக்கை வைத்திருக்கும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி தெலுங்கானா விசயத்தில் திருவாய் மலர்ந்தருளி வாங்கிக்கட்டிக்கொண்டுவிட்டார்.

" நுணலும் (தவளை) தன் வாயால் கெடும்"
"ஆப்பசைத்த குரங்கு"
"வாயை கொடுத்து .... ஐ புண்ணாக்கிக்கொள்ளுதல்"

எதிர்காலத்தில் மேற்படி சொலவடைகள்,பழமொழிகளையெல்லாம் கஷ்டப்பட்டு சொல்ல தேவையில்லை. தெலுங்கானா விசயத்துல சங்கராச்சாரி மாதிரி என்று சிம்பிளாக சொல்லலாம்.

அட கருத்தை சொன்னதோடு நிறுத்திக்கொண்டிருந்தாலும் பரவாயில்லை. ஏதோ அவசர குடுக்கை என்று விட்டிருக்கலாம். தம் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பை கண்டு உடனே யு டர்ன் அடித்து அந்தர் பல்டியில் அரசியல் வாதிகளையே தோற்கடித்துவிட்டார் சங்கராச்சாரியார்.

முதல் கருத்து:
வென்யூ: ஆந்திர மானிலம் குண்டூர்
தனி தெலுங்கானா வந்தால் நக்சல் பிரச்சினை வரும். இதர மதங்களின் பிராபல்யம் பெருகும். உலகத்தையே குடும்பமாய் கருதுவதே நம் கலாச்சாரம்.தனிதெலுங்கானா கோருவது நம் மதம்,கலாச்சாரத்துக்கு விரோதம்

எதிர்ப்பு அலை:
ஏற்கெனவே தெலுங்கானா வாதிகள் நவத்வாரத்திலும் புகையுடன் இருக்க ஜெ.சரஸ்வதியின் கருத்து பெட்ரோல் ஊற்றியது போலாகிவிட சங்கராச்சாரியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி "சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்" என்று சொல்லிவிட்டனர்.மடத்தில் நடை பெற்ற கொலை ( சங்கர்ராமன்) , தலை மறைவு (அதாருங்க டக்குனு ஞா வரமாட்டேங்குது) ,வங்கி மோசடி (இது ஆரோ ஒரு தாய்குலம்னு நினைக்கிறேன் .கரெக்டா?) எல்லாவற்றையும் தூக்கி வீசினர்.

சங்கராச்சாரி குடுமி ஆட காரணம்:
ஏற்கெனவே ஒரு பதிவில் விவரித்ததை போல ஸ்வாமிகள் மடம் சார்பில் திருப்பதியில் மெடிக்கல் காலேஜ் கட்ட இருக்கிறார். சமக்யவாதிகளின் பிராபல்யம் உள்ள திருப்பதியில் தலைவர்களை லைனில் வைக்க மேற்படி கருத்தை அள்ளித் தெளித்துவிட்டார் போலும். தெலுங்கானா வாதிகள் ரவுண்டு கட்டி சவுண்ட் விட அந்தர் பல்டி அடித்து விட்டார்.

யு டர்ன்:
வென்யூ: குண்டூர்
" நான் தெலுங்கானா கூடாதுன்னு சொல்லல. தலைவர்கள் ஹைதராபாத்ல இருக்க கூடாது .கிராமத்துக்கு போகனும். மாணவர்களை போராட்டத்துல இழுக்க கூடாதுனு தான் சொன்னேன்"

அந்த காலத்துலயே:
ராமாயண காலத்தை ஆகா ஓகோனு புராணங்கள் சொல்லுது.அன்னைக்கே இந்த சாமியார்களால ஒரு காசுக்கும் உபயோகமில்லேனு தெரியுது. தசரதன் தலை வார்ரப்ப தலைல ஒரு வெள்ளை முடிய பார்க்கிறார்.பார்த்ததுமே "அடடா நமக்கு வயசாயிருச்சு. ராமனுக்கு முடி சூட்டிர வேண்டியதுதான்னு முடிவு பண்ணி அரசவை கருத்தை கேட்கிறார். வசிஷ்டர் தான் ராஜ குரு. "பேஷா பண்ணலாமே"ன்னு சொல்லிர்ரார்.அப்புறம் நடந்ததுதான் தெரியுமே. ராமன் காட்டுக்கு போகவேண்டியதாயிருச்சு.

தசரதன் இந்த ப்ரபோசலை சொன்னதுமே " த பாருப்பா .. நீ கைகேயிக்கு குடுத்த ரெண்டுவரத்தை அவள் கேட்க போறாள் . ராமன் காட்டுக்குதான் போகப்போறான். பரதன் தான் நாட்டை ஆளப்போறான்"னுவசிஷ்டர் முன் கூட்டியே சொல்லியிருக்கலாம்லியா !

இதை விடுங்க ராம் தேவ் பாபானு ஒரு பார்ட்டி. இவரு ஒரு யோகா குரு. இவர் தன்னோட ஆயுர்வேத மருந்து தொழிற்சாலைல மருந்து தயாரிப்புக்கு மிருக எலும்பு ,மனித எலும்பெல்லாம் உபயோக்கிறார்னு பெரிசா அகுடாகி ( புரளி கிளம்பினு அர்த்தம்) ஒரு மாதிரியா புழுதி அடங்கியது. இப்ப அவர் சொல்றார் " லஞ்சத்தை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கனுமாம் இல்லேன்னா அவரோட ஆட்கள் அவர் இயக்கம் சார்பா தேர்தல்ல நிப்பாகளாம்.

ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுடாங்கனு புலம்பாதிங்க. நம்ம ஜெயேந்திர சரஸ்வதியை விட பாபா பெட்டரில்லையா தேர்தல்ல நிக்கறேங்கறார். நம்ம பார்ட்டிக்கு அந்த தில்லு கூட இல்லியே.

நான் என்ன சொல்றேன்னா.. நீ சாமியாரோ இல்லியோ .. நல்லவனோ கெட்டவனோ உன்னையும் மதிச்சு நாலு ஐஏஎஸ்,ஐபிஎஸ், எம்,எல்,ஏ, எம்பி, மந்திரி, வராங்கல்ல அவியளுக்கு நல்லது கெட்டது சொல்லி அவிக மூலமா மக்களுக்கு நாலு நல்ல காரியம் நடக்கறாப்ல பண்றத விட்டுட்டு அரசியல்வாதி கணக்கா ஏன் ஸ்டேட்மென்ட் கொடுப்பானேன் ,பல்டி அடிப்பானேன்.

நினப்புதானே பொழப்பகெடுக்குது. சங்கராச்சாரிக்கு என் அட்வைஸ்
1.முதல்ல மடத்து சொத்து கணக்கை வெளியிடுங்க ( மடத்துக்கான வெப்சைட்லயே வைக்கலாம்)

2.மேற்படி சொத்துக்களையெல்லாம் (மக்களுக்கு பயனின்றி உள்ள ) விற்று தொலைத்து மத்திய அரசின் கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ஸ்கீமில் இன்வெஸ்ட் செய்யுங்கள். வரும் வட்டியில் எம்.ஜி.ஆர் வேலைகள் செய்யலாம். முதலீட்டுக்கும் உரிய வட்டி கிடைத்து கொண்டே இருக்கும். நிர்வாகத்தை உலக அளவில் புகழ் பெற்ற மாசு மருவற்ற சேவை நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டு ஒழுங்கு மரியாதையாக ஒரு மடாதிபதியின் கடமைகளை மட்டும் ஆற்றுங்கள்

3.இந்து மதம் என்றால் விக்கிரக ஆராதனையும், சுய நல அரசியல் பிசாசுகள் செய்யும் யாகங்களும் தான் என்ற இமேஜ் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. இதை மாற்ற இந்துமத சாரத்தை, யோக ரகசியங்களை வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்யுங்கள்


4. இன்னும் மனமிருந்தால் கலவைக்கு போன சந்தர்பம், சங்கர்ராமன் கொலை, எவளோ அப்ஸ்காண்டட் ஆன கதை இத்யாதியில் "உண்மையில் நடந்ததென்ன" என்று வாக்கு மூலம் தந்து மக்களிடம் மன்னிப்பு கோருங்கள்

அதை விடுத்து வேலியோரம் போறதையெல்லாம் எடுத்து காதில் விட்டுக்கொண்டு ஏனய்யா நாளிதழின் பக்கங்களை வீணாக்குகிறீர்.