Tuesday, November 8, 2016

பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம்?

Footnote: ஆந்திர முதல்வர் அலுவலகம் அஃபிஷியலா திட்டத்தை கேட்டு போட்ட நோட்

அண்ணே வணக்கம்ணே !
கவுண்டமணி ஏதோ படத்துல "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன"ம்பாரே அப்படியொரு நிலையில இன்னைக்கு மோடி நம்ம ஆப்பரேஷன் இந்தியா2000 ல முக்கியமான ஒரு அம்சத்தை அறிவிச்சிருக்காரு.

அஃதாவது  நவம்பர்8 நள்ளிரவு முதல் ரூ.500,ரூ 1000 நோட்டுல்லாம் செல்லாதுங்கறது அறிவிப்போட சாராம்சம்.

ஆனால் வங்கியில டெப்பாசிட் பண்ணிக்கலாமாம். ஆக இத்தனை காலம் வரி செலுத்தாத கருப்பு பணமா இருந்த பணம்லாம்   டேக்சபிள் ஆயிரும். இந்த ஒரு அறிவிப்பால நாட்டுக்குள்ள இருக்கிற எல்லா கருப்பு பணமும் வெள்ளை ஆயிருமான்னு கேட்டா ஊஹூம்.

படா கேப்பிடலிஸ்ட்லாம் தன் உத்யோகஸ்தர்கள் பேர்லயும் / கஞ்சிக்கு வழியில்லாத சொந்தக்காரவிக பேர்லயும் டெப்பாசிட் பண்ணி டேக்சஷனை குறைக்கப்பார்ப்பான்.

இதை சனம் ஜஸ்ட் ஆப்ளிகேஷனுக்கு செய்வாங்களான்னா ஊஹூம். பர்சண்டேஜ் என்னன்னு கேட்பாய்ங்க. மேலும் இடையில திடீர்னு ரிவர்ஸ் கியர் போடவும் வாய்ப்பிருக்கு. இத்தனை நாள் நாயே பேயேன்னு அலட்டிவன் கிட்டே சூதானமா நடந்துக்கனும்.

சாதாரணமா இப்படி கருப்பு பணம் வச்சிருக்கிறவிக சூனாவ நம்பாதவனாத்தான் இருப்பான். ஆகவே அதிக சதவீதம் கருப்புபணம் வெள்ளையாகி -அரசுக்கு வருமானம் கூட வாய்ப்பிருக்கு. இல்லேங்கல.

என்னைக்கேட்டா வரிவிதிப்பில் லல்லு  ஃபார்முலாவ இம்ப்ளிமென்ட் பண்ணனும். (ரயில்வே கட்டணத்தை மானாவாரியா குறைச்சு -அதிகம் பேரை பயணம் செய்ய வச்ச மாதிரி ) .இன்னைக்கிருக்கிற வரிவிதிப்புல்லாம் "சம்பாதிக்கிறவனுக்கு போடற அவராதம் மாதிரி "

நிற்க இந்த கரன்சி ரத்து பண்ற மேட்டர்லாம் புதுசு ஒன்னும் கிடையாது . முகமது பின் துக்ளக் நாட் நாட்லயே ட்ரை பண்ண மேட்டருதான்.
மொரார்ஜி தேசாய் ,ஏன் இந்திரா கூட டச்சு பண்ண சப்ஜெக்டுதேன். லேட்டஸ்டா 2005 லனு ஞா யுபிஏ சர்க்கார்ல கூட குறிப்பிட்ட வருசத்துக்கு மிந்தி அச்சடிச்சது செல்லாதுன்னு ரூல் கொண்டு வந்தாய்ங்க.

இது மட்டுமில்ல   நம்ம திட்டத்துல உள்ள அஞ்சு அம்சங்களுமே புதுசொன்னும் கிடையாது. திட்டத்தோட பெசாலிட்டி என்னன்னா அஞ்சு அம்சங்களின் சேர்மானம் தான்.

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்

-இது ஏற்கெனவே பல நாடுகள்ள அமல்ல இருக்கு .இந்திரா எமர்ஜென்சி சமயத்துல இதை கொண்டு வர ட்ரை பண்ணதுண்டு.
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்

-போன சென்னை வெள்ள சமயத்துல கூட ராணுவத்தை டெப்யூட் பண்ணாய்ங்கல்ல.

3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
-அண்டை தேசங்களோட உறவை பலப்படுத்திக்கிட்டா ராணுவத்தை கொண்டே கூட செய்யலாம். மோடி சர்க்கார் என்னடான்னா கங்கையோட புனிதத்தை காப்பாத்த ராணுவத்தை உபயோகிப்போம்ங்குது.

4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.

-இது ரஷ்யன் மாடல்.ஆனால் அங்கே வலுக்கட்டாயமா அடிச்சு பிடுங்கி அரசே விவசாயம் பார்த்ததா ஞா.

5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்.

இந்த ஐந்து அம்சங்களை இன் வேரியஸ் மோட் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் மோடிஜிக்கு தெரியப்படுத்தியிருக்கம். பார்ப்பம் பிச்சைக்காரன் சினிமா டைரக்டருக்கோ அ எனக்கோ பிரதமர் அலுவலகத்துலருந்து நன்றி சொல்லி லெட்டர் வருதான்னு ..