ஒரு காலத்துல சினிமா பார்த்தே கெட்டு குட்டிச்சுவரா போயிருவனு சொல்லாத பெற்றோரே கிடையாது .அந்த காலத்து வீடியோ காஃபி பார்ல பலான படமே பார்த்தும் நான் கெட்டுப்போகல. (அல்லது கெட்டுப்போனதா நினைக்கல). நம்ம ஜாதகத்துல 10 ல ராகு இருந்ததாலயா? அல்லது பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாயோட கேது சேர்ந்து வித்யா ஸ்தானத்துல இருந்ததாலயா கன்ஃபார்மா சொல்ல மிடியலின்னாலும் சினிமாவால நான் பெற்றது அதிகம்.
இதை எல்லாம் ஏற்கெனவே என் ப்ளாக்ல அப்பப்போ பிட்டு பிட்டா எழுதியிருக்கன். உங்களுக்கு பொறுமை இருந்தா அடுக்குமல்லி , தம்பிக்கு எந்த ஊரு ,கிராதகுடு இப்படி தேடிப்பாருங்க.
நமக்கு சினிமா கொடுத்த காட் ஃபாதர் என்.டி.ஆர். அவரோட ஆளுமை -அதன் வீச்சு என்னன்னு தெரியாமயே அவர்பால் கவரப்பட்டதுக்கு காரணம் பூர்வ புண்ணியம்னு தான் நினைக்கேன்.
நம்ம கேரக்டருக்கு கொய்ட் ஆப்போசிட் கேரக்டர் என்.டி.ஆரோடது. (இது அந்த காலத்துல நம்ம நிலையை வச்சு சொன்னது) அவர் விடியல் 3 மணிக்கு எந்திரிச்சுருவாராம் .நாம மதியம் 12. இங்கே ஆரம்பிக்குது கான்ட் ராடிக்சன்.ஆனாலும் ஒரு புள்ளியிலருந்து கோடு போட்டா நம்ம சுயமரியாதை , தன்னம்பிக்கையில ஆரம்பிச்சு ஆன்மீகம்வரை என்.டி.ஆர்ல தான் போய் முடியுது.
லேட்டஸ்டா யோக வேதம்னு ஒரு ஒரு புஸ்தவம் தருவிச்சு படிச்சேன். 400+ ரூவா கொடுத்து வாங்கின புஸ்தவத்தோட சாரம் தலீவரோட ஒரு படத்துல ஒரு பாட்டுல கடேசி சரணத்துல பைசல்னா பார்த்துக்கங்களேன் .
நிற்க . வறுமையால கூட சோத்துக்கில்லாத காலத்துல கூட சினிமாவை என் வாழ்க்கையில இருந்து பிரிக்க முடியல. சினிமா பார்த்து நாளாச்சேனு நினைச்சா அன்னைக்குதேன் அமாவாசை சோறு சிக்கும். கடமைகளை எல்லாம் முடிச்சுட்டு உடு ஜூட்டு.
சினிமாவோட இருந்த தொடர்பு எப்ப கட் ஆச்சுன்னு சரியா ஞா இல்லை. 1997 ஆ ..அடுத்த வருசமா தெரியல அன்னமய்யா -ஸ்ரீராம தாஸு படங்களை பல முறை பார்த்தன். அதே டைரக்டர் பால கிருஷ்ணாவை வச்சு அவரை கிருஷ்ணரா போட்டு ஒரு படம் பண்ணாரு. அதை பார்த்ததுல ஆரம்பிச்சது சனி .சினிமாவை நான் மறந்து போக காரணம் நீங்கல்லாம் வீடியோ மீம்ஸா போட்டு கலாய்க்கிற பாலகிருஷ்ணா படம் தான். கருமம் பேர் கூட ஞா வல்ல. அதோட அலர்ஜி ஆயிருச்சு.
பிறவு நாம தியேட்டருக்கு போயி படம் பார்த்ததெல்லாம் விரல் விட்டு எண்ணிரலாம். சிவாஜி -உத்தம வில்லன் -கடேசியா கபாலி.
சமீப காலமா (ஒரு ஆறு மாசம்?) மறுபடி பழைய சீசன் ஆரம்பிச்சுருக்கு. நிறைய பார்க்கிறேன். மனசுல பதியவே மாட்டேங்குது . எழுதியாவது பார்க்கலாம்னு நினைக்கேன். அப்பமாச்சும் மனசுல பதியுதா பார்ப்பம்