Sunday, April 29, 2012

புத்தாண்டு பலன் : மேஷம் To மீனம் (2012-13)

சில பதிவுகளுக்கு தலைப்பு வேறயா இருக்கேன்னு டர்ராயிராதிங்க. எல்லாமே ராசிகளுக்கான புத்தாண்டு பலன் தான். சென்சேஷனுக்காவ வேற விஷயத்தை டாப்ல கொடுத்து உள்ளே அடுத்தடுத்த ராசிகளுக்கு பலனை கொடுத்திருப்பம்

http://anubavajothidam.blogspot.in/2012/04/blog-post_3393.html
2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : மேஷம்

http://anubavajothidam.blogspot.in/2012/04/2012-13.html
2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : ரிஷபம்

http://anubavajothidam.blogspot.in/2012/04/2012-13_17.html
2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : மிதுனம்

http://anubavajothidam.blogspot.in/2012/04/2012-13_18.html
2012-13 தமிழ் புத்தாண்டு பலன் : கடகம்

http://anubavajothidam.blogspot.in/2012/04/blog-post_19.html
சினிமா வினியோகஸ்தராகிறார் ஜெ ! ( சிம்மம்)

http://anubavajothidam.blogspot.in/2012/04/2_20.html
உணவும் -உடலுறவும்: பகுதி 2 (கன்னி)

http://anubavajothidam.blogspot.in/2012/04/blog-post_21.html
கொலைகாரனுக்கு கொடி பிடிக்கும் மீடியா ( துலா)

http://anubavajothidam.blogspot.in/2012/04/blog-post_22.html
காங்கிரஸ் எம்பியின் கில்மா வீடியோ (விருச்சிகம்)

http://anubavajothidam.blogspot.in/2012/04/blog-post_24.html
பா.ஜ.க காங்கிரஸ் கூட்டு சதி? (தனுசு)

http://anubavajothidam.blogspot.in/2012/04/vs_25.html
அம்மா" உசுருக்கு ஆபத்து Vs ஸ்டாலின்-அழகிரி அலப்பறை (மகரம்)

http://anubavajothidam.blogspot.in/2012/04/blog-post_27.html
சிறு நீர் தெளித்து பிரபல ஹீரோவுக்கு மொட்டை (கும்பம்)

http://anubavajothidam.blogspot.in/2012/04/blog-post_28.html
தமிழ் புத்தாண்டு பலன்: மீனம்

Sunday, April 8, 2012

திருமணத்தடை : சோதிட ஆய்வு


அண்ணே வணக்கம்ணே !

லக்னாதிபதி எங்கே இருந்தாலும் திருமணத்தடைக்கு வாய்ப்பிருக்கிறதை ஒரு தொடரா ஆரம்பிச்சு எளுதிக்கிட்டிருந்தம். இடையில எண் கணிதப்படி எட்டாம் மாசம் மாட்டிக்கிச்சா கேப் விளுந்துருச்சு. விட்டதை தொடரப்போறோம். இதுவரை லக்னாதிபதி 1 முதல் 8 ஆமிடங்களில் இருந்தால் என்ன பலன் -அது எப்படி திருமணத்தடையை ஏற்படுத்தும்னு பார்த்துட்டு வந்தோம்.

இன்னைக்கு லக்னாதிபதி 9 ல இருந்தா திருமணத்தடை எப்படி நிகழும்னு பார்ப்போம். Read More

Friday, April 6, 2012

அ (சு) ம்மா மந்திரிகள் Vs கிரகங்கள்


அண்ணே வணக்கம்ணே !
நம்ம அரசியல் சாசனம் என்ன சொல்லுதுன்னா " எம்.எல்.ஏ/எம்.பிங்களை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பாய்ங்க.
அவிக தங்களோட சட்டமன்ற /பாராளுமன்ற கட்சி தலைவரை தேர்ந்தெடுத்துக்குவாய்ங்க. அந்த தலீவருதான் சி.எம் அ பி.எம்.
மேற்படி சி.எம்/பி.எம் மந்திரிசபையை அமைப்பாய்ங்க. மந்திரி சபைய அமைக்க எதுனா விதிமுறைகள் இருக்கான்னு கேட்டா இல்லேன்னு சொல்லனும். (நமக்கு தெரிஞ்சு).
அரசியல் சாசனத்தை வடிவமைச்சவுகளோ ட்ராஃப்டிங் செய்து இறுதி வடிவம் கொடுத்த அம்பேத்கரோ எதிர்காலத்துல எப்படியாகொத்த ..............................பார்ட்டிங்க அரசியலுக்கு வருவாய்ங்கன்னு கெஸ் பண்ணாம பெரீமன்ஸ தராவா சாய்ஸ் விட்டுட்டாய்ங்க.
அது அம்மாவுக்கு ரெம்ப வசதியா போச்சு. ஒரு அம்மா மட்டும் டிசைட் பண்ணா பரவால்லை.ரெண்டு அம்மா. ரெண்டு அம்மா மட்டும்னாலும் ஏதோ பேர் சொல்லும்.
ரெண்டாவது அம்மா சைட்லருந்து ஒரு படையே வேலை செய்திருக்கு.மந்திரி போஸ்டிங் ஏறக்குறைய .... மாதிரி ஆயிருச்சு.
ஸ்தூலமா பார்த்தா அல்லாரும் மந்திரி தேன். ஆனால் அந்த மந்திரியில எத்தனை கேடர்..(மத்தியில கேபினட் மினிஸ்டர்-ஒப்புக்கு சப்பா மினிஸ்டருன்னு வேற இருக்கு)
ஸ்டேட்டை பொருத்தவரை அல்லா மந்திரியும் பொம்மை கொலுவுல பொம்மை மாதிரிதேன். இருந்தாலும் சின்னம்மா வச்ச மந்திரி -சின்னம்மாவோட ஆளுங்க வச்ச மந்திரின்னு வித்யாசமும் இல்லாம இல்லே.
இதையெல்லாம் சொல்ல வந்தது ஒரு ராசியில ஒரு கிரகம் உள்ளதை பார்த்துட்டு எடுத்தேன் கவிழ்த்தேன்னு பலன் சொல்லப்படாது.
அந்த கிரக்த்தோட நிலை என்ன? பலம் என்னன்னு பார்த்துத்தேன் பலன் சொல்லனும். தமிழ்ல நாம நிலைங்கறோம். சமஸ்கிருதத்துல அவஸ்தான்னு சொல்றாய்ங்க.
இதென்னடா அவஸ்தையா போச்சுன்னு புலம்பாதிங்க. இந்த பதிவை படிச்சு -படிச்சதை மனசுல வாங்கி கிரகங்களோட பலத்தை அசெஸ் பண்ணி பலன் சொன்னா பெட்டர் ரிசல்ட் கிடைக்குங்ணா..
கிரகங்களின் அவஸ்தா ( நிலை) :
1.ஒரு கிரகம் அதன் உச்சராசியில் இருந்தால் அது தீப்தாவஸ்தா
2 ஒரு கிரகம் தன் சொந்த வீட்ட்ல் இருந்தால் அது .ஸ்வஸ்தாவஸ்தா
3 ஒரு கிரகம் நட்பு வீட்டில் இருந்தால் அது .முதித்தாவஸ்தான்னு ( எந்த கிரகத்துக்கு எந்த ராசி நட்பு வீடுன்னு ஒரு படமே தரப்பட்டிருக்கு.டோன்ட் ஒர்ரி)
4.ஒரு கிரகம் சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அது சாந்தாவஸ்தா.
மேற்படி 4 அவஸ்தாவுக்கும் பலன்:
குறிப்பிட்ட கிரகம் மற்றும் அது நின்ற பாவ காரகத்வத்தில் நன்மை ஏற்படும்
5.ஒரு கிரகம் வக்ரம் பெற்று இருப்பது சக்தாவஸ்தா:
பலன்:
அது சாதாரணமா நின்னிருந்தா என்ன பலனை தரனுமோ அதுக்கு நேர் எதிரிடையான பலனை தரும்
6.ஒரு கிரகம் தான் நின்ற ராசியின் முதல் பாதத்தில் அல்லது கடைசி பாதத்தில் இருந்தால் அது பீடித்தாவஸ்தா . அந்த கிரகம் முழுபலனை தராது ( டிகிரி வைஸ் சொன்னா 0 முதல் 6 டிகிரியில் மற்றும் 25 முதல் 30 டிகிரியில் இருக்கிறது)
7.ஒரு கிரகம் தன் பகை வீட்டில் நிற்பது தீனாவஸ்தா: இது தீமை செய்ற நிலையில இருந்தா தீமை கூடும். நன்மை செய்ற நிலையில இருந்தா நன்மை குறையும்
8.ஒரு கிரகம் அஸ்தங்கதம் அடைந்திருந்தால் அது விகலாவஸ்தா ( சூரியனுடன் சேர்ந்திருந்து எரிக்கப்படுவது) இது அளவு கடந்த ஈகோவை கொடுத்து - நட்பு உறவு வட்டங்களில் இருந்து தனிமை படுத்திரும்.
எந்த கிரகம் சூரியனுக்கு எத்தனையாவது டிகிரியில இருந்தா எரிக்கபடுமோ ? அதுக்கான பட்டியல் இங்கே:
சந்திரன் - 12 டிகிரி ;செவ்வாய் -17டிகிரி ; குரு -11 டிகிரி ,சுக்கிரன் - 9 டிகிரி ,சனி -15 டிகிரி
9 ஒரு கிரகம் தன் நீசராசியில் இருப்பது .கலாவஸ்தா ( இந்த கிரகம் நின்ற பாவத்தோட காரகத்வங்கள் லோ ஓல்ட்டேஜ் சமயத்து வீடு கணக்கா இருண்டு கிடக்கும் - குறிப்பிட்ட பாவ காரகத்வத்தால் ஜாதகர் நாயடி படுவார் )
எச்சரிக்கை: நம்ம லக்னத்துக்கு பாவி - துஸ்தானாதிபதில்லாம் நீசமானா நல்லதுங்கோ
10.ஒரு கிரகம் அதிசாரத்துல முன் கூட்டியே ராசி மாறி வந்திருப்பது கிரகம் பீத்தாவஸ்தா:
பலன்: அந்த கிரகம் நின்ற பாவ பலனை கெடுக்கும் -அதுவே துஸ்தானமா இருந்தா தூள்..

Monday, April 2, 2012

திரட்டிகளில் நெம்பர் 1 எது?


அண்ணே வணக்கம்ணே !
சாதாரணமா நமக்கு இந்த டேட்டா -ஸ்டேட்டிஸ்டிக்ஸ்-சென்சஸ்னாலே பயங்கர கடுப்பு. நம்மை செயல்படவைக்கிறதே நம்ம எதிரிங்க தானே.ஏதோ வேலையத்த நாதாரி ஒரு பத்து மெயில் ஐடிய வச்சுக்கிட்டு தமிழ்10 ல நம்மை பதிவை "புதைக்கிறதா" படிச்சு ரோசிக்க ஆரம்பிச்சம்.

கொய்யால ..மனசுக்கு பிடிச்ச பதிவுக்கு ஓட்டுப்போடலாம்னு பார்த்தாலே நெட்,சைட்டுன்னு கடுப்பேத்தி விட்டுருதுங்க. இதுல இந்த பன்னாடை பரதேசி ,பிக்காலி எப்டி இவ்ள பொறுமையா இந்த வேலைய பார்க்குதுன்னு ஆச்சரியப்பட்டேன்.

மறுபடி ரோசிக்க ஆரம்பிச்சேன். அதென்ன தமிழ்10 ல மட்டும் இப்படி செய்யனும்? ஒரு வேளை தமிழ் 10 தான் திரட்டிகள்ள நெம்பர் ஒன்னோ அதுக்குத்தேன் தேடிப்பிடிச்சு வேலையத்த .....பொஞ்சாதி தலைய சிரைச்ச மாதிரி சிரைக்கிறாய்ங்களோன்னு ஒரு டவுட்டு வந்தது.

திரட்டிகளோட ஜாதகத்தை அலசினேன். நம்ம டவுட்டு கரீட்டு. திரட்டிகள்ள தமிழ்10 தான் நெம்பர் டூ ( யாமறிந்த திரட்டிகளில்) .

சரிங்கொய்யால தமிழ்10 ஓட்டுப்பட்டைய சேர்த்து நம்மாளுங்களை ஓட்டுப்போட சொன்னா ஒழியுதுன்னு விட்டுட்டன்.

மத்த திரட்டிகளோட ஜாதகத்தையும் உங்க பார்வைக்கு வச்சிருக்கேன் பார்த்திங்கல்ல. அதுக்கு மிந்தி இன்னொரு முக்கிய தகவல் நம்ம கொள்கைகளில் முக்கியமான கொள்கை பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் அதைபற்றிய மீள் பதிவு ஒன்னும் போட்டிருக்கேன்.அதை இங்கன அழுத்தி படிச்சுருங்க..


எல்லாம் சரி தமிழ்மணத்தை எங்கேப்பா காணோம்னு கேட்கிறிங்களா?

அதை சொல்ல வெட்கப்படறேன் -வேதனை படறேன்.அலெக்ஸா தளம் நோ டேட்டா அவெய்லபிள்ங்குது.

அதாவது அலெக்ஸா கணக்கு வச்சுக்கிற ரேஞ்சுல கூட தமிழ் மணம் இல்லியாம்..

இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்கடா.. நெல்லா டெவலப் ஆயிருவிக..

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கு வாரத்துல 2 ஆவது நாள். நாட்டு நடப்பை கிளிக்கனும். நேத்திக்கு பெரீ மன்சங்களையும், விகடனாரையும் கிளிச்சம்.

நாட்ல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கு. அதுக்கெல்லாம் தனித்தனியா தீர்வும் இருக்கும். ஆனால் நம்ம தலீவருங்களுக்கு எந்த வீட்டுக்கு போறது,எந்த பொஞ்சாதிக்கு பொறந்தவனை தலீவராக்குறதுங்கற பிரச்சினைதான் பெரும் பிரச்சினை இவிக தொழில் கொள்ளையடிக்கிறது.உபதொழில் கொள்ளையடிச்சதை காப்பாத்தறது+ கோர்ட்டுக்கு அலையறது.

பிரச்சினைகளை ரீடெயிலாவும் தீர்க்கலாம். ஹோல் சேலாவும் தீர்க்கலாம். லாங் டெர்ம் ப்ராசஸ்லயும் தீர்க்கலாம் ( ஆப்பரேஷன் இந்தியா 2000) ஷார்ட் டெர்ம் ப்ராசஸ்லயும் தீர்க்கலாம். (பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்)

சமீபத்துல பி.பி,ஷுகர்,பைல்ஸ்,மனப்பிறழ்வுன்னு ஒரு பதிவை போட்டேன். அதுல பி.பி,ஷுகர், பைல்ஸ் கேஸை மட்டும் அனலைஸ் பண்ணோம். வே ஆஃப் திங்கிங் கரீட்டா இருந்தா வே ஆஃப் லைஃப் கரீட்டா இருக்கும். இது ரெண்டும் கரீட்டா இருந்தா பாயும் இல்லை நோயும் இல்லை.

இன்றைய ஐடி யுகத்துலயும் மனிதனோட மண்டையில ஆறிலிருந்து அறுபது வரை சீரணமாகம சீரழிக்கிறது செக்ஸு. இந்த ஒரு மேட்டர்ல எப்படியா கொத்த ஜீனும் தடுமாறிருது.எப்படியா கொத்த அறிவு கொழுந்தும் வாடிப்போகுது .

நாட்ல உள்ள பல பிரச்சினைகளுக்கு இதுவே ஆணி வேரா இருக்கு. ஆண்,பெண்ணுக்கு குற்ற உணர்ச்சியற்ற - சட்டப்பூர்வமான -தங்குதடையற்ற செக்ஸ் மட்டும் அவெய்லபிள்ள இருந்தா பல பிரச்சினைகள் தீர்ந்து போயிரும்.

நான் ஏதோ திருமணத்துக்கு எதிரின்னு நினைச்சுராதிங்க. திருமணங்கற நிறுவனம் கரப்ட் ஆகாம இருக்கனும்னா அதுக்கு தகுதியில்லாத தத்தாரிகளை அதுக்குள்ள விடப்படாது. அவிகளுக்கு ஒரு ஆல்ட்டர்னேட்டிவ் இருக்கனும். அப்பத்தேன் இந்த நிறுவனம் இன்னொரு 25 வருஷத்துக்காச்சும் தொடரும்.

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வ‌ழ‌ங்குவ‌தால் ஏற்ப‌ட‌க்கூடிய‌ ந‌ன்மைக‌ளை பார்ப்போம்.
1.உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களே வ‌ன்முறையாக,அதிகார வெறியாக, பண பித்தாக வெடிக்கின்ற‌ன. எனவே இவை யாவும்குறையும்.

2.ம‌னித‌ர்க‌ள் ப‌ல்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டு வேலைக‌ளைத்தான்.1.சாத‌ல் 2.சாகசடித்தல் .இவை இர‌ண்டுமே செக்ஸில் சாத்திய‌மாவ‌தால் ஸ்தூலமான கொலைகள், தற்கொலைகள், மறைமுக, தவணை முறை கொலை, தற்கொலைகள் குறையும்

3.செக்ஸை மீண்டும் மீண்டும் அடைய மனிதர்கள் எதற்கும் துணிகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அதை குற்ற உணர்ச்சியுடன் அணுகி, அரைகுறையாக ஈடுபட்டு, ஆழத்துக்கு செல்லாது பாதி வழியில் திரும்புகிறார்கள். கவிஞனின் மனம் தான் முடிக்காத‌ கவிதையையே எண்ணி மருகுவது போல் மனித மனம் மீண்டும் மீண்டும் அதையே வட்டமிடுகிறது
இதனால் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பங்களிப்புகள் குறைகின்றன.

4.மனிதனை நீ மிருகம் என்று ருசுப் படுத்துவது உயிர்பயமும்,பசியும்,
செக்ஸும் தான். மனிதன் மிருகமாகிவிட்டால் அவனை அரசு, சமுதாயம் ,மதம் இத்யாதி எதுவும் கட்டுப் படுத்த முடியாது.


5.ம‌னித‌ருக்குள் இருப்ப‌து ஒரே ச‌க்தி. அது பாலிய‌ல் ச‌க்தி. பாலிய‌ல் ச‌க்தியே ப‌டைப்பு ச‌க்தியாக‌வும்,வ‌ன்முறையாக‌வும், ப‌ண‌,அதிகார வெறியாக‌வும்,யோக‌ச‌க்தியாக‌வும் வெளிப்ப‌டுகிற‌து. அது மேனோக்கி பாய்ந்தால் (ஸ்தூலமாக அல்ல உன்னதங்கள் நோக்கி என்று புரிந்துகொள்ளுங்கள்) அது யோகிக் பவர். கீழ் நோக்கி பாய்ந்தால் அது செக்ஸ் பவர்.

6.மேனோக்கியா, கீழ் நோக்கியா (எல்.ஜி. இல்லையா) என்பது கேள்வியல்ல. முதற்கண் அந்த சக்தி அசைய வேண்டும் எதையோ நோக்கி பாய வேண்டும். அது அசையவோ,பாயவோ துடித்துக்கொண்டே இருக்கும். தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாதென்ற பாஸ்கலின் விதி தெரியுமல்லவா? அதை அழுத்தி வைத்தால் வெடிக்கிறது. சிலர் ரேப்புகிறார்கள், சிலர் பணத்தை துரத்துகிறார்கள்

6.ம‌னித‌ர்க‌ள் எது செய்தாலும் அதை தூண்டுவ‌து செக்ஸ்தான். அத‌ன் பின் இருப்ப‌து செக்ஸ்தான். ப‌ண‌ம்,புக‌ழ்,ஒழுக்க‌ம்,துற‌வு,தியாக‌ம் எத‌ன் பின்னும் இருப்ப‌து செக்ஸ்தான். பொத்தி பொத்தி வைத்து அவனவன்/அவளவள் ஆய் போக ஒதுங்கறச்ச கூட தப்பு பண்ணிட்டு கண்ட நோயை வாங்கி/கொடுத்து நாறிப்போனது ஒரு பக்கம், அதால கொலை/தற்கொலை மறு புறம் , இன்னொரு பக்கம் பார்த்தா அடுத்த தலைமுறை ? அதன் ஆரோக்கியம் (உடல் மனம் ) .

உதவாத விசயங்கள், பிரிலிமினரி ஃபேக்ட்ஸ்...

1.பெண்களுக்கு தாயே மாதாந்திர விலக்கின் போது சுத்தப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால் தேவையற்ற ரோமங்களை நீக்கிவிடு என்று எந்த தாயாவது கூறியிருக்கிறாளா ? இல்லை .

2.இரவில், தூக்கத்தில் கண்ட கனாவின் பலனாய் தான் தன் ஜட்டியில் போட்ட மேப் காரணமாய் அரண்டு போன பையனை " தம்பி அதெல்லாம் ஒன்னுமில்லடா அணை நிரம்பி வழியறமாதிரி தான் என்ரு எந்த தகப்பனாவது கூறியிருக்கிறானா ? இல்லை

காரணம் என்ன ஹிப்பாக்ரசி .அவள் வயிற்றில் வாங்கி கொண்டு வந்துவிட்டாலோ ? இவன் கொனேரியா, சிஃபிலிஸ் வாங்கிக்கொண்டு விட்டாலோ வாயிலும் வயிற்றிலும் அடித்து புலம்புவது . தேவையா /


ஆணுறை க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌ இந்த‌ யுக‌த்தில் கூட இளைஞர்களும்,யுவதியரும் தாம் பருவமடைந்த பிறகும் ஏறக்குறைய இருபது வருடங்கள் தங்கள் உறுப்புகளை சிறு நீர் கழிக்க மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று நினைப்பது ம‌டிச‌ஞ்சிதனம் மட்டுமல்ல. முட்டாள் தனம். ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌ம்.

இது அவர்களை மன நோய்களுக்கு ஆளாக்குமே தவிர, தகாத உறவு, கள்ள உறவு, சுய இன்பம் இத்யாதிக்கு துரத்துமே தவிர ஒரு இழவும் நடக்காது.

என‌வே பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்கிவிட்டால் செக்ஸ் என்ப‌தை மிக எளிதாக மாண‌வ‌,மாண‌விய‌ர் க‌ட‌ந்துவ‌ந்துவிடுவார்க‌ள்.

அதில் ஈடுபட்டால் வரும் தீமைகளை விட ( வித் அவுட் காண்டோம்) அதை நினைப்பதால், அதை பேசுவதால் / பேச முடியாததால் வரும் தீமைகள் அதிகம்.

பெரியவர்கள் ஹிப்பாக்ர‌ட்டுக‌ளாய் வாழ்ந்து இளைய‌த‌லைமுறையை ப‌லி கொண்ட‌து போதும்.

இப்போதாவ‌து ய‌தார்த்த‌வாதிக‌ளாகி நேர்மையுடன் சிந்திப்போம். 40 வ‌ய‌துவ‌ரை இளைய‌ த‌லைமுறையை செக்ஸ் த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ங்க‌திக‌ளை யோசிக்க‌விடாம‌ல் செய்த‌து போதும். இனியாவ‌து புதிய‌ இளைய‌ பார‌த‌த்தை ப‌டைப்போம்

மேலும் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதால். நிறைவான செக்ஸுக்கு வாய்ப்பில்லாத போலீசார்,ரவுடிகள், குட்டித்தலைவர்கள் கூட பலன் பெறுவார்கள். லாக்கப் டெத் குறையும், குற்றமும் குறையும் . அரசியலில் ஊழல் கூட குறையும்

மனிதன் பணம் சம்பாதிப்பதே உள்ளூற அதை பலான விசயத்துக்கு பயன்படுத்தலாம் என்ற ஊமை எண்ணமே என்று மனோதத்துவம் கூறுகிறது

Sunday, April 1, 2012

விகடனும் நானும்

அண்ணே வணக்கம்ணே !
வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பு -அடுத்த 3 நாள் சோசிய படைப்புனு ஒரு விதிய வச்சுக்கிட்டு எளுதிக்கிட்டு வர்ரம்.

நாம என்னமோ இதை பெரிய தியாகமா நினைச்சுத்தேன் ஆரம்பிச்சம். மேட்டர் இன்னாடான்னா சகட்டுமேனிக்கு சோசிய பதிவுகளை தொடர்ந்து போட்ட காலகட்டத்தை விட இப்பத்தேன் ஹிட்ஸ் அதிகம்.புதிய வாசகர்கள் வர்ராய்ங்க.

விகடனும் நானும்னு தலைப்பை வச்சுட்டு என்னத்தையோ பினாத்த ஆரம்பிச்சுட்டாருப்பா. சித்தூர் பக்கம் வெயில் சாஸ்தி போலன்னு நினைச்சுராதிங்க. இதோ பாய்ண்டுக்கு வந்துட்டன்..Read More