Friday, April 6, 2012

அ (சு) ம்மா மந்திரிகள் Vs கிரகங்கள்


அண்ணே வணக்கம்ணே !
நம்ம அரசியல் சாசனம் என்ன சொல்லுதுன்னா " எம்.எல்.ஏ/எம்.பிங்களை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பாய்ங்க.
அவிக தங்களோட சட்டமன்ற /பாராளுமன்ற கட்சி தலைவரை தேர்ந்தெடுத்துக்குவாய்ங்க. அந்த தலீவருதான் சி.எம் அ பி.எம்.
மேற்படி சி.எம்/பி.எம் மந்திரிசபையை அமைப்பாய்ங்க. மந்திரி சபைய அமைக்க எதுனா விதிமுறைகள் இருக்கான்னு கேட்டா இல்லேன்னு சொல்லனும். (நமக்கு தெரிஞ்சு).
அரசியல் சாசனத்தை வடிவமைச்சவுகளோ ட்ராஃப்டிங் செய்து இறுதி வடிவம் கொடுத்த அம்பேத்கரோ எதிர்காலத்துல எப்படியாகொத்த ..............................பார்ட்டிங்க அரசியலுக்கு வருவாய்ங்கன்னு கெஸ் பண்ணாம பெரீமன்ஸ தராவா சாய்ஸ் விட்டுட்டாய்ங்க.
அது அம்மாவுக்கு ரெம்ப வசதியா போச்சு. ஒரு அம்மா மட்டும் டிசைட் பண்ணா பரவால்லை.ரெண்டு அம்மா. ரெண்டு அம்மா மட்டும்னாலும் ஏதோ பேர் சொல்லும்.
ரெண்டாவது அம்மா சைட்லருந்து ஒரு படையே வேலை செய்திருக்கு.மந்திரி போஸ்டிங் ஏறக்குறைய .... மாதிரி ஆயிருச்சு.
ஸ்தூலமா பார்த்தா அல்லாரும் மந்திரி தேன். ஆனால் அந்த மந்திரியில எத்தனை கேடர்..(மத்தியில கேபினட் மினிஸ்டர்-ஒப்புக்கு சப்பா மினிஸ்டருன்னு வேற இருக்கு)
ஸ்டேட்டை பொருத்தவரை அல்லா மந்திரியும் பொம்மை கொலுவுல பொம்மை மாதிரிதேன். இருந்தாலும் சின்னம்மா வச்ச மந்திரி -சின்னம்மாவோட ஆளுங்க வச்ச மந்திரின்னு வித்யாசமும் இல்லாம இல்லே.
இதையெல்லாம் சொல்ல வந்தது ஒரு ராசியில ஒரு கிரகம் உள்ளதை பார்த்துட்டு எடுத்தேன் கவிழ்த்தேன்னு பலன் சொல்லப்படாது.
அந்த கிரக்த்தோட நிலை என்ன? பலம் என்னன்னு பார்த்துத்தேன் பலன் சொல்லனும். தமிழ்ல நாம நிலைங்கறோம். சமஸ்கிருதத்துல அவஸ்தான்னு சொல்றாய்ங்க.
இதென்னடா அவஸ்தையா போச்சுன்னு புலம்பாதிங்க. இந்த பதிவை படிச்சு -படிச்சதை மனசுல வாங்கி கிரகங்களோட பலத்தை அசெஸ் பண்ணி பலன் சொன்னா பெட்டர் ரிசல்ட் கிடைக்குங்ணா..
கிரகங்களின் அவஸ்தா ( நிலை) :
1.ஒரு கிரகம் அதன் உச்சராசியில் இருந்தால் அது தீப்தாவஸ்தா
2 ஒரு கிரகம் தன் சொந்த வீட்ட்ல் இருந்தால் அது .ஸ்வஸ்தாவஸ்தா
3 ஒரு கிரகம் நட்பு வீட்டில் இருந்தால் அது .முதித்தாவஸ்தான்னு ( எந்த கிரகத்துக்கு எந்த ராசி நட்பு வீடுன்னு ஒரு படமே தரப்பட்டிருக்கு.டோன்ட் ஒர்ரி)
4.ஒரு கிரகம் சுபகிரகங்களுடன் சேர்ந்திருந்தால் அது சாந்தாவஸ்தா.
மேற்படி 4 அவஸ்தாவுக்கும் பலன்:
குறிப்பிட்ட கிரகம் மற்றும் அது நின்ற பாவ காரகத்வத்தில் நன்மை ஏற்படும்
5.ஒரு கிரகம் வக்ரம் பெற்று இருப்பது சக்தாவஸ்தா:
பலன்:
அது சாதாரணமா நின்னிருந்தா என்ன பலனை தரனுமோ அதுக்கு நேர் எதிரிடையான பலனை தரும்
6.ஒரு கிரகம் தான் நின்ற ராசியின் முதல் பாதத்தில் அல்லது கடைசி பாதத்தில் இருந்தால் அது பீடித்தாவஸ்தா . அந்த கிரகம் முழுபலனை தராது ( டிகிரி வைஸ் சொன்னா 0 முதல் 6 டிகிரியில் மற்றும் 25 முதல் 30 டிகிரியில் இருக்கிறது)
7.ஒரு கிரகம் தன் பகை வீட்டில் நிற்பது தீனாவஸ்தா: இது தீமை செய்ற நிலையில இருந்தா தீமை கூடும். நன்மை செய்ற நிலையில இருந்தா நன்மை குறையும்
8.ஒரு கிரகம் அஸ்தங்கதம் அடைந்திருந்தால் அது விகலாவஸ்தா ( சூரியனுடன் சேர்ந்திருந்து எரிக்கப்படுவது) இது அளவு கடந்த ஈகோவை கொடுத்து - நட்பு உறவு வட்டங்களில் இருந்து தனிமை படுத்திரும்.
எந்த கிரகம் சூரியனுக்கு எத்தனையாவது டிகிரியில இருந்தா எரிக்கபடுமோ ? அதுக்கான பட்டியல் இங்கே:
சந்திரன் - 12 டிகிரி ;செவ்வாய் -17டிகிரி ; குரு -11 டிகிரி ,சுக்கிரன் - 9 டிகிரி ,சனி -15 டிகிரி
9 ஒரு கிரகம் தன் நீசராசியில் இருப்பது .கலாவஸ்தா ( இந்த கிரகம் நின்ற பாவத்தோட காரகத்வங்கள் லோ ஓல்ட்டேஜ் சமயத்து வீடு கணக்கா இருண்டு கிடக்கும் - குறிப்பிட்ட பாவ காரகத்வத்தால் ஜாதகர் நாயடி படுவார் )
எச்சரிக்கை: நம்ம லக்னத்துக்கு பாவி - துஸ்தானாதிபதில்லாம் நீசமானா நல்லதுங்கோ
10.ஒரு கிரகம் அதிசாரத்துல முன் கூட்டியே ராசி மாறி வந்திருப்பது கிரகம் பீத்தாவஸ்தா:
பலன்: அந்த கிரகம் நின்ற பாவ பலனை கெடுக்கும் -அதுவே துஸ்தானமா இருந்தா தூள்..