Monday, January 2, 2012

புத்தாண்டில் பிரபலங்கள்: விஜய்காந்த்

எச்சரிக்கை:1
புத்தாண்டு புத்தாண்டுன்னு பீத்திக்கறோமே தவிர புத்தாண்டுங்கறதே ஒரு மாயா. ஜனவரி 15 க்காச்சும் சூரியன் மாறுவாரு. ஜனவரி 1 ஆம் தேதி அந்த இழவும் கடியாது. குரு வக்ர நிவர்த்தியும் டிசம்பர் 25 ஆம் தேதியே நடந்துருச்சு. செவ் வக்ர சஞ்சாரம் கூட ஜனவரி 23 ஆம் தேதிதான் துவங்குது.சனி கூட டிசம்பர்லயே மாறிட்டாரு .ஞா இருக்குல்ல. குரு 2012 மே மாசம் தேன் மேசம் டு ரிசபம் ஷிஃப்ட் ஆறாரு

சொந்த ஜாதகத்துல தசாபுக்தியில ஏதேனும் மாற்றம் வந்தாலே தவிர, வருடக்கோள்கள் எதுனா மாறினாலே தவிர புத்தாண்டுக்கு ஒரு மண்ணும் மாறாதுன்னு தெரிஞ்சுக்கங்க.

இருந்தாலும் வெளிய சொல்ல முடியாத சில காரணங்களால புத்தாண்டில் பிரபலங்கள்னுட்டு வி.ஐபிகளோட ஜாதகங்களை வரிசையா அலச முடிவு பண்ணியிருக்கேன். (ச்சொம்மா ரிவிஷன் மாதிரி வச்சுக்குவம். இப்படி ரிவிஷன் பண்ணாத காரணத்தாலதேன் எங்க ஒய்.எஸ்.ஆர் வெற்றிய கணிச்ச நம்மால அவரோட மரணத்தை கெஸ் பண்ண முடியாம போயிருச்சு. அதேன் ஒரு எச்சரிக்கைக்கு இந்த ரிவிசன்.

இருக்கிறதெல்லாம் இருக்கட்டும் கிழவியை தூக்கி மனையில வைங்கற மாதிரி விஜய்காந்த் ஜாதகத்துக்கு ஏன் இந்த ப்ரியாரிட்டின்னு கேப்பிக. என்னதான் பக்கத்து மானிலத்துல வாழ்ந்தாலும் தமிழன்னு ஒரு உணர்வும் - தமிழ் சனம் தேன் வாழ வைக்கிறாய்ங்கங்கற விஸ்வாசமும் இருக்கு.

கொண்டவன் கோலால் அடித்தால் கண்டவன் காலால் உதைப்பாங்கற மாதிரி தமிழன் நிலை ஆயிருச்சு. இதை தட்டிக்கேட்க வை.கோ இருந்தாலும் அவரு ஆர்ட் ஃபிலிம் மாதிரி. தாத்தாவுக்கு கனிமொழியோட எதிர்காலத்தை கனிய வைக்கிறதை விட்டா வேற சிந்தனையே கடியாது. அம்மா பாவம் நம்பினவுக வச்ச ஆப்பை பிடுங்கியெறியதுல பிசி.

மன்மோகனார் சென்னை விசிட் அடிச்சப்ப கொஞ்சம் சினிமாட்டிக்கா இருந்தாலும் நெத்தியடியா ,"ப்ளான் பண்ணி" கருப்பு கொடி காட்டி நம்ம எதிர்ப்பையெல்லாம் பதிவு செஞ்சாரு. அம்மா அடிச்சா மாமா கிட்டே ஓடறாப்ல அம்மா அடாவடி அடிச்சா அதை தட்டிக்கேட்கற விஜய்காந்த் கிட்டே தான் ஓடியாகனும்.

மாமாவோட ஜாதகத்துல விசயமே இல்லேன்னு ஏற்கெனவே டிசைட் பண்ணியிருக்கம். இருந்தாலும் இந்த சைக்கிள் கேப்ல எதுனா மாற்றம் வந்திருக்கான்னு பார்த்துரலாமே..

எச்சரிக்கை: 2
நூலை போல சேலைம்பாய்ங்க. அப்படி பர்த் டீட்டெயில்ஸை வச்சுத்தேன் ஜாதகம். ஏதோ நம்மாளு ஒருத்தரு கும்ப லக்னம்னு கொடுத்த க்ளூவை வச்சு ஒரு ஜாதகம் கணிச்சு அதனோட அடிப்படையில போடற பதிவு இது.

இருந்தாலும் நம்ம ஸ்டைல்ல அனுபவத்தையும் - கிரகஸ்திதியையும் மொதல்ல க்ராஸ் செக் பண்ணிருவம். ஐ மீன் இந்த ஜாதகத்துல விசயகாந்த் தெரியறாரா பார்த்துருவம்.

லக்னாதிபதியே எட்டுல கீறாரு ( இதுக்கு எங்க ஊரு சோசியர் கொடுத்த பலன் என்ன தெரியுமா தானும் கெட்டு, தன்னை நம்பினவுகளையும் கெடுத்து ஊரையும் கெடுத்துரும்) .

ஆனால் கும்ப லக்னத்தை பொருத்தவரை சனி விரயாதிபதியாவும் இருக்காரு. அதனால விரயாதிபதி 12 ல் மறைந்த யோகமும் வேலை செய்யனும் .

அனுபவத்தில் பார்க்கும் போது இப்படி ஒரே கிரகத்துக்கு ரெண்டுவித ஆதிபத்யம் ஏற்படும் போது அது முதல் பாதியில் (ஆயுளில்/ தன் தசையில்) தீமையையும் அடுத்த பாதியில் நன்மையையும் செய்கிறது.
இதற்கு ஜாதகரின் ஆயுள் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். நான் ஆயுர்தாயம் செய்வதில்லை. பின்னே எப்படிங்கறிங்களா? எந்த வயசுல ஜாதகருக்கு கால் ,நரம்பு,ஆசனம் சம்பந்த பட்ட பிரச்சினை உச்சக்கட்டத்துக்கு போகுதோ அங்கருந்து அந்த வயசைப்போல இரண்டு மடங்கு வாழ்வாரு. வாழ்க்கையின் ரெண்டாவது பாகம் ஆரம்பிக்கும். அந்த ரெண்டாவது பாகம் ராஜயோகத்தை தரும்.

2/11 க்கு அதிபதி போய் 3 ல மாட்டினாரு. ரிஸ்க் எல்லாம் ரஸ்கு சாப்ட மாதிரின்னுட்டு சம்பாதிச்ச காசையெல்லாம் செல்ஃப் ஷேவ் பண்ணி தொலைச்சுக்கட்டிருவாருங்கோ. ( கூடவே குளிகன் மாந்தியும் இருக்காய்ங்க - அப்போ நிலைமை எவ்ள தீவிரமா இருக்கும்னு பாருங்க )

5/8 க்கு அதிபதியான புதன் போய் ஆறுல நின்னாரு கூட கேது சேர்ந்தாரு. அஞ்சுதான் நேம் அண்ட் ஃபேமை,வாரிசுகளை, அதிர்ஷ்டத்தை காட்டற இடம் . இவருக்கு பேருனு வந்தா " மொத்தறதாலயோ" "ரேங்கறதாலயோ தான்" வரும்.

எலக்சன் டைம்ல மொத்தினாரு .பேரு வந்தது. இப்பம் மன்மோகனார் மேல ரெங்கினாரு பேரு வந்தது. இவரோட சிந்தனையே நெகட்டிவா இருக்கும். ஆரை ரேங்கலாம்ங்கற மாதிரி. இவரை பொருத்தவரை இவரோட வாழ்க்கையே இவர் கட்டின கல்யாண மண்டபம் மாதிரிதான். நல்லாவே இருக்கும். ஆனா இருக்காது. படக்குனு புல்டோசர் வந்து குப்பையாக்கிட்டு போயிரும்.(ஜெவுடனான கூட்டணியும் இப்படித்தானே ஆச்சு) இதே பலன் தான் இவரோட வாரிசுகளுக்கும்.( பார்த்திருக்கிங்கல்ல. சினிமா பக்கம் வந்தா நாறிரும்)

இந்த கெட்டதுல ஒரு நல்லது இருக்கு. அது என்னடான்னா அஷ்டமாதிபத்யம் வாங்கின புதன் 6 ல நின்னது. இதனால கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும். கடன் தீரலை.ஆனால் எதிரிங்க ஒழிஞ்சுட்டாய்ங்க ( வடிவேலு ,ராமதாசு,கலைஞரு)

இப்பம் நடக்கிற தசையே புத தசை தான் . இதனோட பலன் என்ன? கடன் தீரனும் அல்லது எதிரி ஒழியனும். எதிரி ஒழியனும்னு நினைச்சா கடன் தீராது. கடன் தீரனும்னு நினைச்சா எதிரி ஒழியமாட்டான்.

ஏழாவது இடத்தை பாருங்க. இங்கன சுக்கிரன் நின்னாரு. 7 ல சுக்கிரன் நின்னாலே நாஸ்தி. இதுல அவரு சூரியனோட வேற சேர்ந்திருக்காரு. மனைவியால யோகம்னு சொல்றது தவறு. 7 ல சுக்கிரன் நிக்கிறது ஜாதகரை போலவே அவரோட மனைவிக்கும் நல்லதில்லை. கூட சூரியன் சேர்ந்தது அதைவிட மொக்கை. சுக்கிரனை எரிக்கப்பட்டுட்டாரு. மனைவி பெண்களுக்கே உரிய மென்மை தன்மையை இழந்து மேன்லியா மாறிட்டு வருவாய்ங்க.

அடுத்துபாருங்க பாக்ய பாவத்துல சந்திரன் நிக்காரு. ஒரு ஜாதகனோட நீண்ட கால திட்டங்களை எல்லாம் காட்டறது 9 ஆமிடம் . அங்கே ரெண்டே கால் நாளைக்கொரு தாட்டி ராசி மாறிர்ர சந்திரன் நிக்கிறாரு. இவரோட ப்ளான் ரெண்டே கால் நாளைக்கொருதாட்டி கம்ப்ளீட்டா மாறிரும். ஒரு ரெண்டே கால் வருசம் ஏறுமுகம்னா அடுத்த ரெண்டேகால்லயே இறங்கு முகம் ஆரம்பமாயிரும்.

மேலும் சந்திரனுக்கு ரோகாதிபத்யம் வேற கிடைச்சிருக்கு. இதனால எதிரி நண்பனாதல் - நண்பன் எதிரியாதல் எல்லாம் இவர் லைஃப்ல சகஜமப்பா. சசி அண்ட் கோ அம்மாவுக்கு ஆப்படிச்சா அந்த சமயம் பார்த்து அம்மாவுக்கு கை கொடுத்தாலும் நான் ஆச்சரிய படமாட்டேன். அட கட்சியை கலைச்சுட்டு அம்மா கட்சியில ஐக்கியமாயிட்டா கூட ஆச்சரியப்படமாட்டேன்னா பார்த்துக்கங்களேன்.( அப்பம் டூ இன் ஒன்னா கடனும் தீரும் - எதிரிகளும் ஒழிவாய்ங்க -ஐ மீன் எதிரி நட்பாயிருவாருன்னு சொல்றேன்)

சிரஞ்சீவியாச்சும் பரவால்லை . நாய் பிடிக்கிற வண்டிய முனிசிபாலிட்டில நிறுத்தின மாதிரி நிறுத்தினாரு. நம்மாளு அதுகூட செய்யமாட்டாரு. பாதிவழில இறக்கி "வண்டி இதுக்கு மேல போகாதுன்னிருவாரு"

பத்துல செவ்வாய் நிற்கிறார். இவர் 3,10 க்கு அதிபதி. 3 ன்னா தைரியம் , பத்துன்னா தொழில் . பேசாம போலீஸ் வேஷம், மிலிட்டரி வேஷம் போட்டுக்கிட்டு காலத்தை கழிச்சிருக்கலாம். அந்த சான்ஸும் போச்சு.

ராசிப்படி பார்த்தா ஏழரை ஆரம்பம். அடுத்து வரப்போறது ஜன்ம சனி. இதன் காரணமாக நிறைய அலையனும் ,சட்டை போடாதவனை கூட அணைச்சுக்கிட்டு பேசனும். இதெல்லாம் பொலிட்டிக்கலா லாபம் தரும்லியா?

சனின்னா தொழிலாளிகள், ஏழைகள்,பிற்படுத்தப்பட்டோர். இவிக ஆதரவு ஓரளவு கிடைக்கலாம் (சனி உச்சமா வர்ரதால ) இவர் 3 ஐ பார்க்கிறதால தகிரியம் கூடலாம். 7 ஐ பார்க்கிறதால கட்சியில பிளவும் வரலாம். மனைவியே எதிரியாகலாம் அ நீச ஸ்த்ரீ ஒருவரால் இம்சை வரலாம். டேக் கேர்

மே 8 வரை குரு 6 ல .ஆக எதிர்கட்சியிலதான் கிடக்கனும். குரு 7 க்கு வந்த பிற்காடு அம்மாவோட ஓரளவு ஒத்துப்போக வாய்ப்பிருக்கு.

மே 16 முதல் ராகு கேது 2/8 ல இருந்துக்கிட்டு சகட்டு மேனிக்கு சீறச்செய்வாய்ங்க தேசீய .பாதுகாப்பு சட்டம் பாயாம பார்த்துக்கனும்.

எதிர்காலம்:
இப்பம் புததசையில சுக்கிர புக்தி தேன் நடக்குது ( 20/Aug/2010 => 20/Jun/2013 ) இந்த காலகட்டத்துல சுக்கிரனோட பலன் மருந்துக்கு கூட நடக்காது. சூரியன் தேன் 7ல இருந்து மனைவிக்கும், லக்னத்தை பார்த்து ஜாதகருக்கும் தூக்கமில்லாம செய்வாரு. கை கால் வலி, முதுகு வலிதான் மிச்சமாகும். வேணம்னா ஒன்னு சொல்லலாம் இவர் மேல மனைவியோட கமாண்ட் அதிகமா இருக்கும். ஆனால் இதனால மனைவிக்கு நோய்கள் தான் வருமே தவிர இவரு திருந்தவும் போறதுல்லை. வருந்தவும் போறதில்லை.

பொஞ்சாதி சொல்லை கேட்டு நடக்கிறதை விட சூரிய ஆதிக்கம் பெற்ற "அம்மா" பேச்சை கேட்டு நடந்தா பொளப்பு நாறாம இருக்கும்.

இதான் நம்ம அனாலிசிஸ். நமக்கு விசயகாந்துக்கும் வரப்பு தகராறு - வாய்க்கா தகராறு ஏதும் கிடையாதுங்கண்ணா. இன்னம் சொல்லப்போனா ரஜினி ரசிகனா இருந்து அவரால ஏமாத்தப்பட்ட
( வருவேன்..ஆனா வரமாட்டேன்)நமக்கு வந்தே உட்ட விசயகாந்த் மேல ஒரு மதிப்பு கூட உண்டுங்கண்ணா.