Monday, January 30, 2012
கில்மா கனவுகள் : 1
யார் வாழ்வில் ஒவ்வொரு சம்பவமும் அதன் இறுதி இலக்கை நோக்கியே அமைகிறதோ அந்த வாழ்வு சரித்திரமாவது சத்தியம்.
என்ன பாஸ் .. கில்மா கனவுகள்னுட்டு படு மொக்கையா ஆரம்பிக்கிறிங்கன்னு நொந்துக்காதிங்க. நாயோட படுத்தா உண்ணியோட தான் எந்திரிக்கனும்.மேலும் நாம கில்மா கனவுகள்னு ஆரம்பிச்சதுமே "கொய்யால . இந்தாளு ஒருத்தன் போதும்யா வலையுலகத்தையும் -சோசியத்தையும் நாறடிக்க"ன்னுட்டு நாலு பெரிய மன்சன் முணுமுணுக்க ஆரம்பிச்சிருப்பாய்ங்க. அவிகளையும் கன்வின்ஸ் பண்ணியாகனுமே.
ஒரு எம்.பி.பி.எஸ் மாணவி பார்ட் டைமா கொள்ளையடிச்சிருக்கா. மனித உரிமைகள் பேர்ல நடக்கிற தொண்டு நிறுவனக்காரவுக வங்கியையே கொள்ளையடிக்க பார்த்திருக்காய்ங்க. இவிக இறுதி இலக்கு கம்பி எண்ணறது போலும்.
ஆனால் நம்ம இறுதி இலக்கு முக்தி. சதா சர்வ காலம் இந்த ஜேஜிங்களை கட்டி மாரடிச்சிட்டிருந்தா போரடிக்குது. அதே நேரம் லோகாயதமா கொஞ்சம் போல பொளப்பை பார்ப்போம்னு நினைச்சா முனியடிச்சாப்ல ஆயிருது.
இதுக்கு ஒரு தீர்வா எனக்கு கிடைச்சதுதேன் ஆப்பரேஷன் இந்தியா 2000. நேரிடை ஜன நாயகம் வரட்டும் ஜனாதிபதியா கன்டெஸ்ட் பண்ணி .. கிளிச்சுர்ரலாம்னு ஒரு சுய நல இலக்கை காளை மாட்டுக்கு பச்சை புல்லு காட்டின கதையா காட்டி இன்ன பிற லோகாயத இம்சைகள்ளருந்தெல்லாம் தப்பி பிழைச்சுட்டு இருக்கம்.
ஒரு வகையில என் தாய் நாட்டுக்கான என் செய்தி இதுதான். இதை பெற - தரத்தான் பிறந்து வந்தேனோ என்னமோ? அதுக்கும் கில்மா கனவுகளுக்கும் என்ன சம்பந்தம் .. இத்தீனி நாள் ஆ.இ.2000 என்னாச்சுன்னு கேப்பிக.
நம்ம எழுத்துக்களுக்கு 1000 முதல் 1,500 வரை ஹிட்ஸ் கிடைச்சிட்டிருக்கிறது நெஜம் தான்.ஆனால் சீரியசா எதையாச்சும் ஆரம்பிச்சா படக்குனு விழ ஆரம்பிச்சுருது.
ஆருமே படிக்காத ப்ளாக்ல ஆ.இ.2000 பத்தி சொல்றதை விட கில்மா கலந்து ஆயிரம் பேரை படிக்க வச்சு - சீசனலா ஆ.இ பத்தி சொல்லலாம்ல.
மேலும் நீங்க - நான் ஆரு வேணா சரி ஆக்டிவா இருக்கனும்னா அதுக்கு கில்மாங்கற வேக்குவம் அவசியம். கில்மா பற்றிய புரிதல் இல்லாம பிரம்மச்சரியம் அது இதுன்னு மொக்கை போட்டா வாழ்க்கை துக்க வீடு மாதிரி தான் இருக்கும். நம்மால இந்த சமுதாயத்துக்கோ நாட்டுக்கோ உலகத்துக்கோ நாலணா உபயோகம் கூட இருக்காது.
இந்த கில்மா மேட்டர்லாம் உங்களை உற்சாகப்படுத்த மட்டுமில்லை - மலரும் நினைவுகள் கணக்கா நம்மையும் உ.படுத்துது.
அதே சமயம் ஆ.இ மானவ சேவா மாதவ சேவான்னு ஜல்லியடிக்கிற அளவுக்கு இல்லின்னாலும் கு.பட்சம் உலக வாழ்க்கையில நாம சிக்கி சீரழிஞ்சு காணாம போயிராம நம்மை சேஃப் கார்ட் பண்ற ஐட்டமாவும் ஆ.இ.2000 இருக்கு.
குருட்டாம்போக்குல ஒரு ப்ளாக் வச்சு பினாத்திக்கிட்டிருக்கிறதென்ன? பத்தோட பதினொன்னா நமக்கு தெரிஞ்ச சோசிய மேட்டரை அவுத்துவிடறதென்ன? அது பத்திக்கிறதென்ன? இப்பம் புஸ்தவமாவும் வெளிவர்ரது என்ன?
நம்ம கனவு திட்டமான ஆ.இ.200 பற்றிய கட்டுரையை இந்த புஸ்தவத்துல கடேசி பக்கத்துல கொடுத்திருந்தாலும் நம்ம மொத இலக்கு இறுதி இலக்கு எல்லாமே ஆ.இ.2000 தேன். அதுவும் 2012 புஸ்தவ கண்காட்சிக்கு போறதென்ன? அங்கன தாத்தாவோட சத்திய சோதனை புஸ்தவத்தை வாங்கறதென்ன.. பரீட்சைக்கு படிக்கிறாப்ல படிக்கிறதென்ன? தாத்தாவோட நினைவு நாளான ஜனவரி 30 ஆம் தேதி இந்த புஸ்தவத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கிற தாக்கத் வர்ரதென்ன?
ஒரு வேளை இந்த ஆ.இ.2000 பற்றிய செய்தி உங்களுக்கெல்லாம் சேரனும்னு தாத்தாவோட ஆவிதான் நமக்கு அந்த தில்லை கொடுத்ததோ என்னமோ? ஜனவரி ரெண்டாவது வாரத்துல வெளிவர வேண்டிய புஸ்தவம் அப்பம் வெளிவராம போக அதுவரை இந்த தாக்கத் -ஹிம்மத் இல்லாததே காரணம்.
நாம வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்தின கில்மா ஜோதிடம் " ஜோதிட ஓஷோ "ங்கற பட்டத்தை வாங்கி கொடுத்ததால சோதிட நூல் வெளியீட்டு வரலாற்றில் முதல் முறையா காதலர் தினத்தன்னைக்கு இதை ரிலீஸ் பண்றோம்.
ஒருவேளை தாத்தா கடந்த பிறவியில பிரம்மச்சரியம் அது இதுன்னு குழப்பிக்கிட்டதை மறு பரிசீலனை செய்துக்கிட்டாரோ என்னமோ ? தன் தவறை இன்றைய தலைமுறை தொடரக்கூடாதுன்னு நெனச்சதோ என்னமோ? ஆவி அமுதா என்ன சொல்றாய்ங்கனு கேட்டு சொல்லுங்கண்ணே !
1.நிறைவேறாத ஆசைகள் 2.முழுமை பெறாத அனுபவங்கள் 3.கடந்த பிறவிகளின் நினைவுகள் இந்த மூன்றுதான் கனவுகளுக்கு அடிப்படை.
மேஷம்:
இவிக லைஃப்ல ரெம்ப ஆக்டிவா இருப்பாய்ங்க. இவிக லட்சியம் நெம்பர் ஒன்னா இருக்கிறது. அதுக்காவ அடிபட்டு உதைப்பட்டு கதை பாட தயங்க மாட்டாய்ங்க.
ஆனால் பெண் இந்த மாதிரி பார்ட்டிகளை டிவிலயோ ,கிரவுண்ட்லயோ பார்த்து வேணா ரசிச்சுட்டு போயிருவாளே தவிர கண்ணாலம் அது இதுன்னு ப்ரொசீட் ஆனால் கழண்டுக்கவா.
டீன் ஏஜ்ல இந்த ஸ்ட்ரக்ளிங் நேச்சர் அதிகமா இருக்கும். இது தாய்குலத்தை மிரட்டும். அதே போல இசை நடனம் பாட்டு மாதிரி கலைகள் இவிகளை பெரிசா கவராது. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸும் குறைவுதான். தாயுடனான நெருக்கத்துலயும் நிறைய அன்சர்ட்டெனிட்டி இருக்கும்.
இதனால இவிக கனவுகள்ள ரெம்ப ப்ராக்டிக்கலா இருப்பாய்ங்க. நெம்பர் ஒன்னாவது மண்ணாவது "என் ஆளு" விரும்பறாப்ல வாழ்ந்திருந்தா போதும்னு இருப்பாய்ங்க. கனவுகள்ள ஏதோ ஒரு கலையில் டேலன்டட் ஆ இருக்கிறாப்ல வரலாம்.பெண்கள் அந்த கலையை நாடி இவிகளை நெருங்கறாப்ல இருக்கலாம். அவிக கிட்டே " ஸ்வீட் நத்திங்ஸ்" கூட பேசலாம். கனவுகள்ள இவிக அம்மா அந்த காலத்து சினிமால பண்டரி பாய் மாதிரி பாசத்தை பொழிவாய்ங்க. வீடு வினோத்ஜீயின் கனவு இல்லம் மாதிரி இருக்கும்.
இவிகளுக்கு தொலை நோக்கு அதிகம்ங்கறதால டே டு டே அஃபேர்ஸ்ல சிக்க்னத்தை கடைப்பிடிப்பாய்ங்க. தொலை நோக்குன்னா பைனாகுலர் இல்லிங்ணா. எதிர்காலம் பற்றிய விழிப்புணர்ச்சி. சோகம் இன்னாடான்னா இவிக சேமிப்பெல்லாம் விரயமா போகும். (ஐ மீன் வாரிசுகள் அனுபவிப்பாய்ங்க) . ஒர்க்கஹாலிக்ஸா இருப்பாய்ங்க. வேலை வேலைன்னு உழைச்சு ஓடா தேய்வாய்ங்க..அந்த உழைப்பின் பலனை ஆரோ அனுபவிப்பாய்ங்க.
அதனால கனவுகள்ள சில்லறைய வாரி இறைப்பாய்ங்க. வேலை செய்றது எவ்ள முக்கியமோ வேலை செய்யாம இருக்கிறதும் அவ்ளோ முக்கியம் தான். எப்ப வேலை செய்யனும் -எப்ப ஃப்ரீயா இருக்கனும்னு எனக்கு தெரியும்னு வசனம்லாம் விடுவாய்ங்க.
கில்மா கனவுகள்னா ரண்டக்க ரண்டக்கன்னு அய்யராத்து அழகெல்லாம் கிராஸ் ஆகலாம். பூசை அறை,கோவில்,கோவில் குளக்கரைகள்ள சில்மிஷம் பண்றாப்ல கனவுகள் வரலாம்.இவிகளோட புறப்பாடே ஒரு சைனியத்தின் புறப்பாடு மாதிரி இருக்கும்.பற்குறி -நகக்குறில்லாம் சகஜமுங்கோ ..
உஸ்..அப்பாடா கில்மா கனவுகள் தொடரின் மொதல் அத்யாயத்தை எழுதியாச்சு 1/12 பேரை திருப்தி படுத்தியாச்சு . நாளைலருந்து கு.ப ரெண்டு ரெண்டு ராசியா எழுதறேங்ணா.