Thursday, June 23, 2011

பேரண்ட்ஸ் Vs சில்ட்ரன்

நாம எதையெல்லாம் வளர்ச்சின்னு நினைக்கிறோமோ அதெல்லாம் நமக்கு ஆப்பாவே முடியுது. உ.ம் இந்த சைட். ப்ளாக் என்னமோ வித் அவுட் அப்டேஷன் மினிமம் 700 ஹிட்ஸோட சக்கை போடு போடுது.  சைட் என்னமோ பஸ்ட் ஆன லாரி ட்யூபுக்கு காத்தடிச்ச கணக்கா -க்ளைமேக்ஸுல ஹீரோயின் பல்ஸ் மாதிரி 1000 க்கும் 300க்கும் இடையில ஃப்ளக்சுவேட் ஆயிட்டு  கிடக்கு.

நாம ஏற்கெனவே டிக்ளேர் பண்ண மாதிரி நமக்குள்ள ஆயிரத்தெட்டு திறமைகள் இருக்கு. ஆனால் உலகம் சோசியத்தை மட்டும்தேன் அங்கீகரிச்சிருக்கு. நமக்கும் பைசா தேவைதான். ஆனால் பைசா மட்டும்தேன்னா சாரி.

ஏறக்குறைய உருசு/ திருவிழால ரோபோ வடிவத்துல கம்ப்யூட்டர் (?) சோசியம் சொல்ற பொம்மை மாதிரி ஆயிட்டன்.  என் ப்ரியாரிட்டிஸ் - என் லட்சியங்கள் எல்லாம் சைடு வாங்கி சோசியம் சோசியம்னு சுத்திவர ஆரம்பிச்சதுல ரெம்ப சுஸ்தாயிட்டன்.

அதனால ரூட்டை மாத்தி 360 டிகிரியில வலம் வரலாம்னு ஒரு ப்ளான். அனுபவஜோதிடத்துல ஜோதிட ஆராய்ச்சி தொடரட்டும். அவசியம்னு பட்டா நானும் கலந்துக்கிடறேன். இந்த புதுலைன் அப்ல இன்னைக்கு பேரண்ட்ஸ் வெர்சஸ் சில்ட்ரன்

வாத்தியார் என்னமோ ..( ஷார்ட்ஸ் போடற பார்ட்டிகள் கவனிக்கவும். வாத்யாருன்னா எம்.ஜி.ஆர்)

"தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள் - நோய்
 தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்"

என்று பாடி வைத்துவிட்டார். ( பாடல்: புதுமைப்பித்தன்?)

ஆனால் பிராக்டிக்கலா பார்க்கும்போது உலகம்/ குறிப்பா உலகத்திலான சர்வைவல்/ போட்டிகள் /பருவ குழப்பங்கள்/காதல்/கத்திரிக்காய்/ ஈவ் டீசிங்/ சமூகத்தின் ஒரு பக்கம் அம்பானியின் புதுவீடுத்தனமான செழிப்பு மறு பக்கமோ வறுமை வறுமை பத்து ரூபாய்க்கு கைக்குழந்தையை விற்றுவிடும் வறுமை இத்யாதியால் ஏற்படும் தாங்கமுடியாத  வலிக்கு  மார்ஃபின் தனமாகவே இருந்தாலும் பெற்றவர் புகழுரைகள்  அவசியம் தேவைப்படுகின்றன..

அந்த புகழுரைகள் ஆத்மார்த்தமாக இருக்கும்போது நிச்சயம் பலனளிக்கின்றன. அம்மாக்காரி சீட்டு ஏலத்துல, ஊர் பஞ்சாயத்துல பிசியா இருந்துக்கிட்டு உதட்டளவுல - உயிர் இல்லாத  படாடோப வார்த்தைகளில் புகழ்ந்துரைக்கும் போது அவை வேலை செய்வதில்லை.

புகழ்ந்துரைக்கனும்ங்கற அவசியம் கூட இல்லை. ஒரு பார்வை போதும். பையன்/பொண்ணு எதையாவது சாதிச்சு காட்டின சந்தர்ப்பத்துல "சரி சரி.. ஒடம்பை பார்த்துக்க ..கண்ணெல்லாம் உள்வாங்கி டொங்கு விழுந்துக்கிட்டுருக்குன்னு சிடு சிடுத்தா கூட போதும்"

ஆனால் இப்பம் என்ன  நடக்குது? சுஜாதா ஒக்காபிலரில சொன்னா இன்னம் கொஞ்சம் எலக்ட்ரானிக், பிளாஸ்டிக் குப்பைகளுக்காக தங்கள் நேரத்தை விரயமாக்கிக்கொண்டு -  பசங்களுக்கு தங்களோட  நேரத்தை /கவனத்தை தரமுடியாத பெற்றோர் அந்த கில்ட்டிய கொல்ல பணம் கொடுக்கறாய்ங்க.

பசங்களுக்கோ  அ  கல்வி நிறுவனத்துக்கோ? பணம் தர்ராய்ங்க. அந்த பணம் தெண்டப்பணம் (அபராதம்) . தெண்டப்பணம் தெண்டமா போகுது.  அந்த பணத்தை பெறும் கல்வி  நிறுவனம் அந்த பிள்ளைகளை மேலும் கொஞ்சம் இம்சிக்குது.

எங்க ஊர்ல ஒரு தனியார் பள்ளி புது ஸ்கீமை கொண்டுவந்திருக்காய்ங்க. அஞ்சாங்கிளாஸ்ல சேர்ரச்ச ரூ.1 லட்சம் ஸ்கூல்ல டெப்பாசிட் பண்ணிரனும். டிசி வாங்கிட்டு போறச்ச அந்த பணம் திருப்பித்தரப்படும். வட்டி கடியாது.

ங்ககொய்யால  டொனேஷனே வாங்கி வாயில போட்டுக்கிறதை கூட புரிஞ்சிக்கலாம். ஆனால் இது ரெம்ப கடுப்பாக்கிருச்சு.. காரணங்கள் சிலவே.

1.கண்டதுலயும் பெஸ்ட் - நெம்பர் ஒன் -டாப்புனு அலட்டிக்கற இவனுகளுக்கு வங்கிக்கடன் கிடைக்காதா?

2. நூத்துக்கு ரெண்டு வட்டின்னாலும் மாசத்துக்கு ரெண்டாயிரம் ஆகுது -5, 6,7, 8, 9 எல்லா கிளாஸுக்கும்  ஒரே ஃபீஸா?  -ஃப்ளாட் ரேட் -  ஓஹோ ! அஞ்சாம் வகுப்புல ரெட்டியா வாங்கின ஃபீஸ்ல அடிஷ்னல் ஃபீஸை பத்தாவதுல அஜீஸ் பண்ணிர்ராய்ங்களா? அது சரி முன் கூட்டி கட்டின ஃபீசுக்கு வட்டி ஆரு கணக்கு?

3.அந்த ஒரு லட்சம் ஸ்கூல் மேலதான் இன்வெஸ்ட் ஆகுதுன்னு என்ன கியாரண்டி? இவன் ரியல் எஸ்டேட் பண்றதுக்கு பெத்தவுக தாலியறுக்கனுமா?

4.எல்லாத்தயும் விட முக்கியமானது அந்த ஸ்கூல் பி.டி மாஸ்டர் ஒரு சைக்கோ. மரச்சேரை தூக்கி அடிச்சு ஒரு பையனுக்கு கை முறிஞ்சு போச்சு . இதுக்கு என்னப்பா சொல்றேனு கேட்டா கரெஸ்பாண்டென்ட் ஏ.சி ரூம்ல சீமை  சாராய வாசத்தோட விளக்கெண்ணையா பேசறான்.

நம்ம ஜெனரேஷன்ல அப்பா எஸ் .எஸ்.சி - நாம பிகாம். ஏற்கெனவே சொன்னாப்ல அப்பாவுக்கு  ஜில்லா ஜில்லாவா ட்ரான்ஸ்ஃபர். லீவுல வீட்டுக்கு வரும்போது "டே பையா இப்ப என்ன க்ளாஸ் படிக்கிறே" என்று விஜாரிப்பார் .தட்ஸால்.

இப்பம் அப்பன் டாக்டருன்னா -பையனும் டாக்டருக்கு படிக்கிறான் - அப்பன் இஞ்சினீருன்னா பிள்ளையும் இஞ்சினீருக்கு படிக்கிறான். அப்பங்காரன் அவுட் டேட்டட் ஆகியிருந்தாலும் அப்டேட் பண்ணிக்கிறான். பையன்/ பெண்ணை ரேஸ் குதிரை கணக்கா மெயின்டெய்ன் பண்றான். தோத்துப்போனாலோ - கால் முறிஞ்சாலோ துப்பாக்கியால சுடறதில்லைங்கறதுதான் ஒரே ஆறுதல்.

இது பாட்டின்  மொதல்வரிக்கான வியாக்கியானம். அடுத்தவரியை பாருங்க." நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்"

கற்றவர்னா என்ன? தியரியை படிச்சவனை வேலை வாய்ப்பு மார்க்கெட்ல மியூசிய பிறவி மாதிரி பார்க்கிறாய்ங்க. இதெல்லாம் தள்ளு கேஸு. சரித்திரம் போனியாகத கேஸு. தமிழ் தள்ளி வைக்கப்பட்ட கேஸு. சன் நியூஸ்ல வர்ர ஃப்ளாஷ் நியூசை பாருங்க. எழுத்துப்பிழை - பொருட்பிழை சகலமும் இருக்கு.

தியரியை விட்டுத்தள்ளுங்க. டெக்னிக்கல் ஸ்டடீஸ் மட்டும் என்ன வாழுது? பையனுக்கு கத்துக்கொடுக்கிற பார்ட்டி போன வருசம் படிச்சுட்டு வந்தவன். அப்படியே அந்த பார்ட்டி சரக்குள்ள பார்ட்டியா இருந்து ஒழுங்கா கத்துக்கொடுத்தாலும் இந்த பிக்காலி அவன் கிட்டே  படிச்சு முடிச்சு வெளிய வர்ரதுக்குள்ள மொத்தமே மாறிப்போகுது. நோ சான்ஸ் ஃபார் அப்டேஷன்.

அரசியல் பின்னணி உள்ள ப்ரைவேட் காலேஜ்/யூனிவர்சிட்டி  மேனேஜ்மெண்டையெல்லாம் பார்த்தா வா.வெ. ( வாழ்க்கையே வெறுத்துரும்)

எங்க ஊருல ஒரு ப்ரைவேட் காலேஜ் ஃபவுண்டரோட ஃப்ளாஷ் பேக். ஹீரோ மெஜஸ்டிக் டூ வீலர் வந்த புதுசுல அதை வச்சு  பம்பர் லாட்டரி நடத்தினவர். மாசாமாசம் குலுக்கல் .காங்கிரஸ் கட்சியில தில்லிவரை பெட்டி கொடுத்து கச்சா முச்சான்னு சீட் வாங்கி ஒவ்வொரு தாட்டியும் தோத்த பார்ட்டி.அம்பது வயசுல பயாஸ்கோப்புல ஹீரோவா வேசம் கட்டின பார்ட்டி..

இவிக சைக்காலஜிதான் என்ன? இவிகளை நம்பி இவிக காலேஜ்ல சேர்ந்து படிக்கிறவன் சைக்காலஜிதான் என்ன? ஒன்னம் புரியமாட்டேங்குதுங்ணா. தூத்தெறிக்க.

கற்றவர்னா என்ன? ஒரு டெஃபனிஷன் ப்ளீஸ். நான் பார்த்த கற்றவர் எல்லாம் .. பிகில் ரவுடி "இன்னா இன்னா"னுட்டு வந்தாலே கக்கூஸ் பூடற பார்ட்டிங்க. எனக்கு கற்றவர் மேல எல்லாம் மரியாதையே இல்லிங்ணா இதுல அவிக அறிவுரைகள்னா மாணாம் கெட்டவார்த்தையா வருது.


கடேசியா ஒரு முடிவான மனோதத்துவ உண்மை:

பெற்றவர் பேச்சு /செயல்களுக்கு காரணம்:

அய்யய்யோ.. நாம சின்னவயசுல எப்படி இருந்தமோ அப்படியே இருக்கானே.. இவன்/இவள்   நமக்கப்பாறம் இந்த  உலகத்தை எப்படி ஃபேஸ்  பண்ணப்போறான்/ள்

அடுத்த தலைமுறையின் பேச்சு செயல்களுக்கு காரணம்:

இந்த ஆளு/ இந்த பொம்பள பேச்சை கேட்டா இந்த ஆளை/பொம்பளை  போலவே  வாழ்ந்து முடிச்சுர வேண்டியதுதான்