Wednesday, May 7, 2008

சின்ன‌ வேலை..என் தாய் நாட்டுக்கு நாலு வார்த்தை


அம்மா!
நீயின்றி ,உன் அருட்கரத்தின் நிழலிலன்றி நான் ஒரு கணமேனும் உயிர் வாழ முடியாது என்பது என் அனுபவம். இது வெறும் உப‌ச்சார‌ வார்த்தைய‌ல்ல‌. என் ர‌த்த‌ம் ,க‌ண்ணீர் தோய்ந்த‌ அனுப‌வ‌ம்.
யுக‌ பிர‌பாவ‌த்தின் கார‌ணமாய் ம‌க்க‌ள் மாக்க‌ளாகி அழிவு ச‌க்திக‌ளுக்கு ச‌த்திர‌மாகி இட‌ம் கொடுத்து ,ம‌ட‌த்தை ப‌றி கொடுத்து வாழும் நிலையில் திரேதாயுக‌த்து சிந்த‌னைக‌ளுட‌ன் நான் வாழ‌ முடிவ‌து அதிலும் உயிருட‌ன் வாழ‌ முடிவ‌து நீ போட்ட‌ பிச்சைய‌ன்றி வேறில்லை.

என் த‌குதி என்கிறாயா? க‌ட‌க‌த்தான் என்ற‌ கார‌ண‌த்தாலே ஸ்திர‌ புத்தி யின்றி, சூதாடி போல் வாழும் என்னில் எத்த‌னை த‌குதிக‌ள் இருந்தாலும் நின்ன‌ருள் இன்றி நான் நிற்ப‌து க‌டின‌ம். இதில் திற‌மையை காட்டுவ‌தும், உரிமையுள்ள‌ விருதுக‌ளை பெறுவ‌தும் எந்த‌ கால‌த்திற்கு.

அம்மா!
ப‌டைப்பின் ர‌கசிய‌ங்க‌ளை காட்டுவித்தாய்
நின் அருளோடு என்னை கூட்டுவித்தாய்

போதும் தாயே போதும்

நான் நிர‌ந்த‌ர‌த்துவத்துக்கு ஆசைப்ப‌டுவ‌து ப‌டைப்புக்கே எதிரான‌து(ஓஷோ)
ஏனோ என் ம‌ன‌ம் ஃபினிஷிங் ட‌ச் /ஐயே விரும்பி க‌ன‌வு காண்கிற‌து.

மூட்டை முடிச்சுக‌ளை க‌ட்டி வைக்க‌ துடிப்ப‌து மீண்டும் மீண்டும் பிரித்து பார்த்து ம‌கிழ‌ அல்ல‌

உன்னைய‌ல்லால் வேறு சிந்த‌னை இன்றி வாழ்ந்திட‌வே

சின்ன‌ வேலை..என் தாய் நாட்டுக்கு நாலு வார்த்தை ந‌ன்றாக‌ உறைக்கும்ப‌டி சொல்லிவிட்டால் போதும். பின் அவ‌ர்க‌ள் பாடு.

பிரதமரை நேரடியா தேர்ந்தெடுங்க‌
10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு நதிகளை இணைச்சுருங்க‌
விளைநிலங்களை தேசீய அளவிலான விவசாயிகள் சங்கத்துக்கு லீசுக்கு கொடுத்துட்டு
கூட்டுறவு பண்ணை விவசாய முறையை அமல் படுத்துங்க‌

இப்போ இருக்கிற கரன்ஸிய ரத்து பண்ணி புதிய கரன்ஸிய கொண்டு வந்து ப்ளாக் மணியை ரூட் அவுட் பண்ணுங்க.(பழைய கரன்ஸி உள்ளவங்க அதனோட அக்கவுண்டபிலிட்டிய காட்டி வங்கி மூலம் புதுசு வாங்கிக்கலாம்)