Thursday, September 1, 2011

கழிவறையில் கண்ணீர்


அண்ணே வணக்கம்ணே!
ரம்லான் ,வினாயகர் சதுர்த்தின்னு அல்லாரும் ஹாலிடே மூட்ல இருந்திருப்பிங்க. சொந்த ஊருக்கு போயிருக்கலாம். நம்ம பொளப்பு " பண்டுக நாடூ பாத்த மொகுடே" கணக்கா ஓடுது. இதுக்கு அருத்தம் "பண்டிகை நாள்ல கூட பழைய புருஷனேவா" தெலுங்குல இந்த மாதிரி கில்மா பழமொழிங்க மஸ்தா கீதுங்ணா. இனி சந்தடி சாக்குல அப்பப்போ எடுத்து விடுவம்ல.

நாம ப்ளாக்ல எழுதிக்கிட்டிருந்தவரை கட்டற்ற சுதந்திரம் இருந்தது. வானத்திற்கு கீழானவை மட்டுமல்லன்னு ஒரு ஸ்லோகனை வச்சு செமை கலக்கு கலக்கிக்கிட்டிருந்தம். அனுபவஜோதிடம் சைட் வந்த பிறகு காற்றுக்கு வேலி போட்ட கதையா போச்சு.

மேலும் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை ப்ரஷர் வேற. (இன்னைய தேதிக்கு 20 ஜாதகம் வரை பெண்டிங் ) ஆண் பெண் வித்யாசங்கள் தொடர் போயிட்டிருந்தவரை ஒரு கன்டின்யுட்டி -ஒரு கமிட்மெண்ட் இருந்தது. அவன் அவள் அதுவும் ஓகேதான். ஆனால் ஹிட்ஸ் குறைய ஆரம்பிச்சுருச்சு. அதை பேலன்ஸ் பண்ணத்தேன் ஜோதிடபால பாடம் ஸ்டார்ட் பண்ணோம். ஆனால் அவன் அவள் அது தொடரவே மாட்டேங்குது.

இடையில சம்பந்தா சம்பந்தமில்லாம ரஜினி ஸ்டைல்ல ஒரு குட்டிக்கதை.

மகாபாரதத்துல பாண்டவர்களோட வனவாச காலத்துல அருச்சுனனும் - அனுமாரும் மீட் பண்றாய்ங்க. கொஞ்ச நாழி ஜாலியா கடலை போட்டுக்கிட்டு இருக்கிறச்ச அர்ச்சுனன் சொன்னானாம்

" ஹனுமா ! ..இந்த ராமன் இருக்கானே (இருந்தானே) சரியான வாழைத்தண்டு. பெரிய வில்வீரங்கறாய்ங்க.. இலங்கைக்கு படையெடுத்து போக குரங்குகளை வச்சு பாலம் கட்டினான்ங்கறாய்ங்க. நானா இருந்தா அம்புலயே பாலம் கட்டியிருப்பேன்"

அனுமாரு என்னென்னமோ சமாதானம் சொல்லிப்பார்த்தாரு அருச்சுனன் கேட்கலை.( ஈகோ) அனுமாரு கடுப்பாயி "கொய்யால .. நீ அம்பால பாலம் கட்டுவே சரி. அது மேல பயணம் போக வேண்டியது மன்சங்க இல்லை. நீ கட்டற அம்பு பாலம் என் ஒருத்தனுக்கு பதில் சொல்லாது"ன்னுட்டாரு.

ரெண்டு பேரும் சட்டமன்றத்துல ஆ.க -எ.க எம்.எல்.ஏ மாதிரி வீராவேசமா பேசிக்கிட்டே போக அது பந்தயத்துல முடிஞ்சது. இன்னாடா பந்தயம்னா அருச்சுனன் அம்பால பாலம் கட்டனும்.அது அனுமாரை தாங்கினா அருச்சுனன் தீக்குளிக்கனும். பாலம் அனுமாரை தாங்கலின்னா அனுமாரு தீக்குளிக்கனும்.

அருச்சுனன் அம்பால பாலம் கட்டினான். அனுமாரு ராமனை நினைச்சு வலது காலோட கட்டை விரலால பாலத்தை ச்சொம்மா டச் பண்ணாரு. பாலம் ஊழலால உளுத்துக்கிடக்கிற மத்திய அரசு மாதிரி தொபுக்கடீர்.

பந்தயப்படி அருச்சுனன் தீ மூட்ட ஆரம்பிச்சான். அதுல பாய இருந்த சமயம் நம்ம கிட்ண பரமாத்மா என்ட்ரி கொடுக்கிறாரு. ஜட்ஜ் இல்லாம பந்தயம் கட்னது செல்லாது. இப்பம் நான் ஜட்ஜா இருக்கேன். அருச்சுனன் மறுபடி பாலம் கட்டட்டும். அனுமாரு மறுபடி அதை டெஸ்ட் பண்ணட்டும்னுட்டாரு.

அருச்சுனன் பீதியில பேதியாகியிருந்தான். பிரபாகரன் உயிரோட தான் இருக்காரு. ஈழத்துல இறங்கிட்டாருன்னு கேள்விப்பட்ட ராஜபக்சே மாதிரி அருச்சுனனோட ஈகோ காணாம போயிருச்சு.

கிட்ணரை நினைச்சு பயபக்தியா அம்பால பாலம் கட்டினான். அனுமாரு ஏற்கெனவே எழுதின பரீட்சைதானே - இம்ப்ரூவ்மெண்டுக்குத்தானே மறுபடி எழுதறோங்கற எண்ணத்துல இருந்துட்டாரு. பாலத்து மேல ஏறினார். இறங்கினார். நாக்க முக்க நாக்க முக்கன்னு பேயாட்டம் போட்டாரு. பாலம் ஸ்விஸ் வங்கியில இருக்கிற இந்திய கருப்பு பணம் மாதிரி ஆடலை -அசையலை.

இந்த கதைய இங்க சொல்ல ஒரு காரணம் இருக்கு. அம்மனுக்காவ நாம எழுதின கவிதைகளை (தெலுங்கு) வலையேற்றம் செய்ய ஒரு நண்பனுக்கு ஒரு பி.சி ஏற்பாடு செய்தோம். நள்ளிரவு பின் பக்க கதவை உடைச்சு உள்ளாற வந்த திருடங்க சிபியுவை கவுத்துப்போட்டுட்டு (ஏனோ) மானிட்டரை மட்டும் தள்ளிக்கிட்டு பூட்டாங்கோ.

நம்மளோட இன்னொரு ஃப்ரண்ட் ஒருத்தரு அரை டஜன் மானிட்டர் வேணம்னாலும் ஃப்ரீயா தரேன்னு ஏற்கெனவே ஆஃபர் பண்ணியிருந்தாரு. (பயிற்சி மையம் நடத்தறாரு) ஆத்தா ! நீ சிபியுவை காப்பாத்தி கொடுத்ததே போதும்.மானிட்டர் கதைய நான் பார்த்துக்கறேன்னு ஓவ்ர் கான்ஃபிடன்டா நினைச்சுட்டம்.

இப்பம் இன்னாடா நிலைமைன்னா பயிற்சி மைய ஃப்ரெண்ட் பரண்ல இருந்ததெல்லாம் ச்சொம்மா அடைச்சிட்டு இருக்கேன்னு மொட்டைமாடியில போட்டுவச்சுட்டாராம் மொத்தம் நனைஞ்சு நாசமா போயிருச்சாம். கலர் மானிட்டர் வேணம்னா தரேனேங்கறாரு (இதுக்கும் காசு வாங்கமாட்டாரு -அதான் பிரச்சினை) வெளிய போனா பழசுன்னாலும் ஆயிரமாவது வைக்கனும்.

அந்த 20 ஜி.பி சிஸ்டத்துக்கு கருப்பு வெள்ளை மானிட்டரே அதிகம். (பாலிசி).இதுல கலர் வாங்கினா ஜானகிராமனுக்கு சிறந்த பதிவர் பட்டம் கொடுத்தாப்ல ஆயிரும். இப்பம் வலையேற்ற பந்து நம்ம கோர்ட்ல வந்து நின்னுருச்சு.

வேற வழி ..சப்ஜெக்டை ஆத்தா கோர்ட்டுக்கே அனுப்பிர்ரன்.( சாட்சி நீங்கதேன்). மேற்படி அருச்சுனன் - ஹனுமார் கதை ப்ளஸ் நம்ம அனுபவத்தை எல்லாம் வச்சு பார்த்தா என்ன புரியுது? தாளி ..ஈகோங்கறது நாலணா காசுக்கு கூட உதவாது.

தன்னம்பிக்கைங்கறது வேற ஓவர் கான்ஃபிடன்ஸ் வேற. தன்னம்பிக்கை தமிழ் நாட்டு பக்கத்து ஊறுகாய் மாதிரி. லேசா அப்பப்பம் தொட்டுக்கலாம். ஓவர் கான்ஃபிடன்ஸ் எல்லாம் எங்கப்பக்கத்து ஆவக்காய் ஊறுகாய் மாதிரி என்னதான் டப்பாடப்பாவா நெய் ஊத்தி பிசைஞ்சு அடிச்சாலும் கழிவறையில கண்ணீர் வடிக்கவேண்டியதுதான்.

இது ஏதோ உங்களுக்கு நான் தர்ர உபதேசம்னு நினைச்சுராதிங்க. எனக்கு நானே ஞா படுத்திக்கிற உபதேசம்.

பால பாடம் , அவன் அவள் அது தொடர் எல்லாம் நாளையிலருந்து தொடரும்னு நினைக்கிறேன். உடுங்க ஜூட்.