
ஒஷோவின் உதாரணத்தோட இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்.எலக்ட்ரிக் பல்பை கண்டுபிடிச்சவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஒரு தாட்டி கிராமத்துலருந்து அவரோட சொந்தக்காரரு இவரை பார்க்க வந்தார். ரா தங்க வேண்டியதாயிருச்சு.
எடிசன் தன் உறவுக்காரரை இரவு சாப்பாட்டுக்கு பிறகு மாடி அறைக்கு கூட்டிக்கிட்டு போனாரு. ஸ்விட்ச் போர்டை நோக்கி நாலடி வச்சாரு. ஸ்விட்சை போட்டாரு பல்பு எரிஞ்சது. ஓகே நீங்க படுத்துக்கங்கனு சொன்னாரு .இறங்கி போயிட்டாரு.
http://www.blogger.com/img/blank.gif
உறவுக்காரர் படுக்கையில படுத்துக்கிட்டாரு. ஆனால் தூக்கம் வரலை .அவருக்கு பல்புல்லாம் பார்த்து பழக்கமில்லை. வெளிச்சம் உறுத்துது. தூக்கமே வரலை. கஷ்டப்பட்டு அந்த பல்பை ஊதி ஊதிப் பார்க்கிறாரு அணைக்க முடியலை. அரண்டு போயிட்டாரு. அன்னைய ராத்திரி சிவராத்திரி ஆயிருச்சு. Read More