Monday, April 25, 2011

சத்ய சாய்பாபாவுக்கு கேன்சர்?

சத்ய சாய்பாபா கேன்சரால் அவதிப்பட்டதாக பிரபல மருத்துவர் ஒருவர் தனியார் தெலுங்கு சேனலில் சொன்னார்.அதுவும் ஆண்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய  ப்ரோஸ்டட் சுரப்பியில் 17 வருடங்களுக்கு முன் கேன்சர் வந்ததாகவும் ஒரு அறுவை சிகிச்சையின் மூலம் அது  நீக்கப்பட்டதாகவும்  அவர் தெரிவித்தார்.

நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் ப்ரோஸ்டட் சுரப்பி என்பது சிறு நீர்பாதையில் விந்துவை உந்தி தள்ள இயற்கை வைத்துள்ள ஏற்பாடு.

முதியவர்கள் விஷயத்தில் இந்த சுரப்பி தேவையின்றி வளர்ந்து கொண்டே போவதால் தான் அவர்களுக்கு அடிக்கடி சிறு நீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு இது கேன்சராகவும் பரிணமிப்பதுண்டு. யோகி ராம் சுரத்குமாரும் இதே நோயால் அவதிப்பட்டது நினைவிருக்கலாம்.

கேன்சர் என்பது தேவையற்ற வளர்ச்சி. அதி விரைவு வளர்ச்சி. மனித உடலில் எந்த பார்ட் எல்லாம் விரைவில் வளருதோ அந்த பார்ட்ல எல்லாம் கேன்சர் வர்ரது யதேச்சையானதுனு சொல்லமுடியாது. உ.ம் பெண்களில் மார்பகம், கருப்பை, ஆண்களில் ப்ரோஸ்டட்

இன்னம் டீப்பா தெரிஞ்சிக்கவிரும்பறவுக இங்கிலிபீஸ்ல படிச்சுக்கங்கப்பா!


Prostate is a glandular organ present only in males. It surrounds the neck of bladder & the first part of urethra and condributes a secretion to the semen. The gland is conical in shape and measures 3 cm in vertical diameter and 4 cm in transverse diameter.It has got five lobes anterior,posterior,two lateral and a median lobe.Since the first part of the urethra pass through it any lesion in the prostate will produce difficulty in passing urine.

சோர்ஸ்:www.findarticles.com

டாக்டர் மேலும் சொன்னதாவது:

மேற்படி கேன்சர் எலும்புக்கு பரவியிருக்கு. அதனால எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கு. அதனாலதான் பாபா வீல் சேர்ல வாழவேண்டியதாயிருச்சு. இந்த வலியை சமாளிக்க டாக்டர்கள் ஸ்லீப்பிங் பில்ஸ் மற்றும் மயக்க மருந்துகளை ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்காய்ங்க. இதனாலதான் கிட்னி, கல்லீரல் எல்லாம் பாதிக்கப்பட்டது. பாபா ஒரு க்ரானிக்  ஷுகர் பேஷண்ட்.