Friday, October 29, 2010

டோண்டுவின் பத்தினி (?) கூச்சல்

ஒரு ஏரியாவுல ஒரு பலான பார்ட்டி வந்து சேர்ந்ததுனு வைங்க.  அதும்பாட்டுக்கு தொழில் பண்ணிக்கிட்டு போகாது. ஏரியால இருக்கிற  பொம்பளைகளோட நடத்தையையெல்லாம் ஓன் மேக்  லென்ஸ் வச்சு பார்க்கும்.  அய்யோ அய்யோ இந்த அ நியாயத்தை பாரேன் இந்த அக்கிரமத்தை பாரேனு கூச்ச போட்டுக்கிட்டே இருக்கும். இதைத்தான் சுருக்கமா பத்தினி கூச்சல்ங்கறது. இப்ப இது மேல பேட்டண்ட் ரைட் எனக்கே எனக்குத்தான்னு டோண்டு சார் கிளம்பியிருக்காரு


பார்ப்பனீயத்தை எதிர்க்கிற மத்தவுகளுக்கும் எனக்கும் ஒரு வித்யாசம் உண்டு. அது இன்னாடான்னா "ஒத்தனை ஜெயிக்க முடியலியா காப்பியடிச்சிரு"ங்கறது என் ஸ்டைல்.

ஜாதகப்படி, வாழ்க்கை முறையின் படி நானே ஒரு பிராமணந்தான். அதனால உங்க பப்பெல்லாம் வேகாது அய்யா!

பெரியார் சொல்வாரு "எங்கயோ குலைக்கிற நாய்க்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்னு"

நமக்கு அந்த ரேஞ்சில்லையே அதனால பதில் சொல்ல வேண்டியதாயிருக்கு. நீங்க போற போக்குல உச்சா அடிச்சிட்டு போயிட்டிங்க ஓகே. அட்லீஸ்ட் அதனோட லிங்கை எனக்கு அனுப்பியிருக்கலாம்.

மொதல் கடுப்பு இதான். அடுத்த கடுப்பு நீங்கல்லாம் மெத்த படிச்சவுக அறிவாளிங்க. நானெல்லாம் பிக்காலி. குன்ஸுல ( அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்) காலத்த ஒட்டற பார்ட்டி  உங்களுக்கு  தெரியாதது என்ன?

டோன்டு டோன்டு தான் முருகேசன் முருகேசன் தான். நீங்க என்னை மாதிரி ரோசிக்க முடியாது. நான் உங்களை மாதிரி ரோசிக்க முடியாது.

என்னுது பண்ணையாள் மென்டாலிட்டி. "அய்யா வேட்டி கொடுத்தாரு ,சட்டை கொடுத்தாருன்னுட்டு அய்யாவுக்கு எது ஒன்னுன்னாலும் அரிவாள தூக்கிருவன். என்னை இந்த சனம் ஃபீட் பண்ணாய்ங்க. இவிக ரத்தத்தை,உழைப்ப எனக்கு கொடுத்து என் பசியாத்தினாய்ங்க.

உங்களாவா மாதிரி என் பார்ப்பன பாத்திரம் எனக்கு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸை தரலை. இன்ஃபிரியரா ஃபீல் ஆனேன். என் வயித்த நிரப்பின இவிக வாழ்க்கைய வெளிச்சத்துல நிரப்பனும்னு துடிச்சேன்.

உங்களுது அசலான அய்யர் மென்டாலிட்டி. நீங்க உ.வ படமாட்டிங்க.  இருட்டை சபிப்பிங்க. அப்பாறம் உங்க வேலைய பார்த்துக்கிட்டு போயிருவிக. ஆனால் நான் என் கொழுப்பையெல்லாம் எடுத்து திரி போட்டு ஒரு விளக்கை ஏத்தி வச்சிருக்கேன்.

நான் என்ன சொல்லவரேன்னா உங்களுக்கு புரியாதப்ப - சீரியஸ்னெஸ் உறைக்காதப்ப அம்பேலுன்னுட்டு போயிரனும். அதைவிட்டுட்டு உங்க மேதைமைய ப்ரூவ் பண்ணிக்க என்னை மட்டம் தட்ட வேண்டிய அவசியமே இல்லை.


ஒரு சீனியர் ப்ளாகரா உங்களுக்கு என்னை விமர்சிக்க முழு உரிமை இருக்கு. ஆனால் அதை நேர்மையா செய்யனும். முதுகுல குத்த கூடாது.  உங்க ப்ளாக்ல கீழ்காணும் பத்தியோ அதற்கான லிங்கோ  வெளியிடப்பட்டிருக்கு

சித்தூர் சோசியன் ஒருத்தன் இருக்கான்... அவன்கூட இந்த மாதிரி பல திட்டங்கள் வச்சிருக்கான்னு அப்பப்போ சனாதிபதிக்கு எல்லாம் தந்தி அடிப்பானாம். அதுல எதையாவது படிச்சிட்டு இவன் ஒரு மறை கழண்ட கேஸுன்னு நினைக்காதவங்க கைதூக்குங்க பாப்போம். பொது புத்தி அப்படித்தான் நினைக்கும். அது மாதிரி பலருக்கும் பல நினைப்பு வரத்தான் செய்யும்.. உடனே ஓவரா அதுக்கு செண்டிமெண்ட் பீலிங் கொடுக்காதீங்க.

இது ஒரு பெரிய மன்சன் பண்ற வேலையா?  ஏதோ ஒரு நாய் எங்கயோ குலைச்சிட்டுத்தான் இருக்கும்னு விட்டுர நான் என்ன பெரியாரா? சிறியன்.

//இம்மாதிரி பார்ப்பன குசும்பு என பொதுப்படையாக லேபல் போட்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்?//

பாஸ்!
ஓஷோ சொன்ன மாதிரி சாவியையே பூட்டா மாத்திட்டிங்களே அதுக்குண்டான கஜானாவை கண்டுபிடிச்சு கொள்ளையடிச்சு ராபின் ஹுட் மாதிரி என் சகோதரர்களுக்கு வாரி வழங்கபோறேன்.

வைக்கோல் போர் மேல படுத்த நாய் மாதிரி கிடக்கிற உங்க இனத்தை விரட்டி ஞான செல்வத்தை பகிரப்போறேன்.

நாணயஸ்தன் வரான் இரும்பு பெட்டிய பூட்டும்பாய்ங்களே அதே கதைதான். உசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாருன்னு உசார் பண்றதுதான் நம்ம சாதனை.
இதுக்கு காரணம் பல யுகத்து வேதனை.

//முன்பு ஒரு முறை பார்ப்பன துபாஷிகள் பற்றி ப்ரூவ் செய்வதாகச் சொன்னீர்கள்.அதன் பிறகு ஒன்றையும் காணோம். //
ஆஹா.. என்னே உங்க ஞா சக்தி. நான் மொத்தம் 1500 பதிவுகளுக்கு மேல எழுதியிருக்கன். அது ராம் மந்திர் விவகாரத்துல உங்களாவாவோட சுய லாபம் மாதிரி எங்கனயோ ஒளீஞ்சிருக்கு.  அதுக்குண்டான லிங்கை தாங்க 24 மணி நேரத்துல ப்ரூவ் பண்றேன்.


//திறமை உண்மையில் இருந்தால் எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி வருவீர்கள். //

பாஸ் ! எதிர்ப்பெல்லாம் நமக்கு முந்திரி பருப்பு மாதிரி நொறுக்கி தள்ளிருவம். தாளி சனத்தையும் நம்ம எழுத்தையும் சல்லாத்துணி கட்டியில்ல மறைக்கிறானுவ.. ஓப்பனா கேட்கிறேன். என்னோட 1,500 பதிவுகள்ள ஒரு பதிவு கூட உருப்படியானது இல்லியா? ஹிட்ஸ் குறைவா? ரேங்குல குறைவா? ஏன் இதுவரைக்கும் ஒரு தமிழ் பத்திரிக்கை கூட என் ப்ளாகை தொட்டு பார்க்கலை.

(தினமணில பாவம் தெரியாத்தனமா "தத்துவமா புடி"ங்கற ஐட்டத்தை கோட் பண்ணீட்டாய்ங்க. அது எங்க ஆத்தா பண்ண மாயை)

//வரவில்லை என்றாலும் முயற்சி செய்து கொண்டே இருக்கவும். அதுதான் ஒரே அவ்ழி.//

என்ன வச்சி காமெடி கீமிடி பண்ணலையே . கதவிருக்க வேண்டிய இடத்துல சுவத்தை கட்டிவச்சிருக்கானுவ. அடிச்சு தூள் பண்ணி நுழைய வேண்டிய சமாசாரம் தலைவா.. தட்டிக்கிட்டே இருக்க சொல்றியா? - இதைத்தான்  உங்க குசும்புன்னு சொல்றது.

//பார்ப்பனர்களால் என் குடியே கெட்டது என நீங்கள் சொல்வது உங்கள் மனதுக்கு ஆறுதலாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதனால் காலணா பிரயோசனம் இல்லை.//

நான் தனி மனிதனா இருந்திருந்தா - பிழைப்புக்கே பிறந்தவனா இருந்தா ஓகே. நான் என் தாய் நாட்டை தட்டி எழுப்பி வல்லரசாக்க வந்தவன்.

20- - ல் இந்தியாவை  வல்லரசாக்கி காட்டிய  முருகேசன் 1997 லேயே தம் முயற்சியை துவக்கியும் அது தாமதமானதற்கு என்ன காரணம்?

இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படும். அப்போ இதுக்கு சரித்திரம் பதில் சொல்லும்.

"அச்சு ஊடகம் மற்றும் அரசு தலைமை செயலகங்களில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்"னுட்டு.

பாஸ்!
கடவுளே உங்க இனத்தை கை விட்டுட்டாரு.  நீங்க எதுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டிருக்கிங்க வீணா..

எச்சரிக்கை:
"என் வழியில நான் போறேன். உங்க வழில நீங்க போங்க. உங்க வழிக்கு நான் வரலை. என் வழிக்கு நீங்க வராதிங்க"

வந்தாலும் புல்டோசரோட வாங்க சார்.. இதென்ன சார்  சாணி நாத்தம் அடிக்கிற புல்லுக்கட்டெல்லாம் கொண்டாந்து போட்டுக்கிட்டு ..

ரஜினி சொல்வது அச்சத்தால் நான் சொல்வது தங்கள் நலம் கருதி, தங்கள் இனத்தின் நலம் கருதி..