Showing posts with label suggestions. Show all posts
Showing posts with label suggestions. Show all posts

Saturday, July 5, 2014

மோடிக்கு ஒரு ஆன்லைன் ஆப்பு

அண்ணே வணக்கம்ணே !
மோடிய மெசய்யா ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாய்ங்க. ஒரு ராட்சத பலூன் கணக்கா ஊதினாய்ங்க. இப்பமே காத்து இறங்கிக்கிட்டுதான் இருக்கு.
பஞ்சர் பண்ணா எப்படி இருக்கும்னு ரோசிச்சன்.

சமீபத்துல நான் பிரதமரானால்ங்கற டேக் லைனோட பல நிலைச்செய்திகள் போட்டேன்.

அதை எல்லாம் தொகுத்து நண்பர் திருமுருகன் கார்த்திகேயனுக்கு அனுப்ப அவரு இங்கிலீஷ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணி அனுப்பினாரு.

அதை அப்படியே நம்ம இங்கிலீஷ் ப்ளாக்ல போட்டு அதனோட லிங்கை மத்திய அரசாங்கத்தோட ஆன்லைன் மனு பைசல் மையத்துக்கு அனுப்பினன்.
அவிக என்னமோ ஒரு ரெஃபரன்ஸ் நெம்பர் மெயில் பண்ணாய்ங்க (ஆட்டோமேட்டட் தான்)  நேத்திக்கு  போது போகாம மனு என்னதான் ஆச்சுன்னு நோண்டினேன்.



பலான ஆஃபீசர் பார்க்கிறாய்ங்க.அவிக டீட்டெய்ல்ஸ் இதுன்னு வந்தது. ஒடனே அந்த கன்செர்ன் ஆஃபீசருக்கும் ஒரு பொட்டலம் அனுப்பிட்டன். (ராமர் கோவில் சுண்டல் மாதிரி)

பார்ப்போம் தப்பித்தவறி அது மோடி டேபிளுக்கு போகனும். (அதுல நிறைய உள் குத்தெல்லாம் இருக்குங்கோ)  அப்பாறம் இருக்கு கூத்து..

இதுவரை நான் பிரதமரானால் நிலை செய்திகளை நீங்க படிக்கலின்னா இங்கே அழுத்தி படிக்கலாம். தமிழ் ஆங்கிலம் ரெண்டுலயும் தந்திருக்கம்.

Wednesday, September 15, 2010

புதிய பதிவர்களுக்கான யோசனைகள்

இந்த தலைப்புல டெக்னிக்கலா நிறைய யோசனைகளை ஏற்கெனவே பல பேர் தந்தாச்சு. அதனால எதை எழுதலாம்,எதை எழுத கூடாது, எப்படி எழுதனும், எப்படி எழுத கூடாதுங்கற மேட்டரை மட்டும் நான் டச் பண்றேன்.ஏதோ 16 மாசத்துல 2 லட்சத்து 25 ஆயிரத்து சில்லறை ஹிட்ஸ் வாங்கின தகிரியத்துல இந்த பதிவை போடறேன்.

1.மொதல்ல ஒழுங்கா தமிழ் எழுத/தட்டச்ச கத்துக்கிடுங்க. அதுவரை சொம்மா வேடிக்கை பாருங்க.பதிவுலகத்தை பத்தி ஒரு ஐடியா வரும். அருவறுப்பான எழுத்துப்பிழைகளை தவிர்த்தே ஆகனும்.
2.எடுத்ததும் பெரிய பெரிய மேட்டரா போட்டு கலக்கனும்னு ஆத்திரப்படாதிங்க. ஆரம்பத்துல சின்ன சின்ன விஷயமா செலக்ட் பண்ணிக்கிட்டு சுவாரஸ்யமா எழுதப்பாருங்க. ரெம்ப கிரமாட்டிக்கலா இல்லாம எளிய மொழிய உபயோகிச்சா நல்லது
3.தினசரிகள்ள வெளி வந்த, அல்லது நாளை வெளிவரப்போற ( டிவி?) நியூஸையெல்லாம் பதிவா போடாதிங்க. செய்திய ஓரிரு வரிகள்ள சொல்லி உங்க கருத்தை தெரிவிக்கலாம் .அதுவேற விஷயம்.
4.நான் செக்ஸ் எழுதறதை பார்த்து ஒரு கூட்டமே செக்ஸ் எழுதுது. புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக்கிட்ட கதையாயிரும். நான் செக்ஸ் எழுத காரணம் அதை நான் ஆன்மீகத்துக்கான த்ரெஷோல்டா பார்க்கிறதுதான். இது மாதிரி ஏதாச்சும் வலுவான காரணம் இருந்தா ஓகே இல்லேன்னா கிளுகிளுப்புக்காக எழுத ஆரம்பிச்சா நாஸ்தி ஆயிருவிங்க.
5.பதிவுலக அரசியல்ல சிக்கிக்காதிங்க. ஒரே ஒரு ஓம்கார் சுவாமிகள், ஸ்மார்ட் டமில் தவிர மத்தவுக மேட்டர்ல அம்பேல்.
6.வெறுமனே பிரச்சினையை எழுதிராம அதை அனலைஸ் பண்ணவும், அதனோட ஆணிவேரை பிடிச்சு உலுக்கவும் முயற்சி பண்ணுங்க
7.ஒரு எழுத்தாளனுக்கு சமூக பொறுப்பு, சமூக பார்வை முக்கியம். அதில்லேன்னா உங்க எழுத்தெல்லாம் பாசாங்காத்தான் இருக்கும்.
8.வெறும் டேட்டாவை போட்டு நிரப்ப பார்க்காதிங்க. இன்டர் நெட்ல டேட்டா கொட்டிக்கிடக்குது. டேட்டாவுக்கு நேட்டிவிட்டி,ஹ்யூமன் டச், பொறுப்புடன் கூடிய அனலைஸ், டைஜஸ்ட் முக்கியம். இல்லைன்னா கந்தலாயிரும்.
9.எழுதறதை பத்தி எழுதாதிங்க.( சக பதிவர்கள் அதிலயும் ஜூனியர்ஸ்,புதுமுகங்கள்  படிப்பாய்ங்களோ என்னமோ ..மத்தவுக அலட்சியப்படுத்திருவாய்ங்க)
10.என்னத்தை எழுதன்னு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து ரோசிக்காதிங்க. உங்க மனசுல ஒரு முடிவுக்கு வந்தபிறகு  ஒரு ஃபார்ம் வந்த பிறகு மட்டுமே கம்ப்யூட்டர் முன்னாடி உட்காருங்க
11.மலச்சிக்கல், பல் வலி, பசியின்மை, அதிக எடை இப்படி எத்தனையோ உபயோகமான மேட்டர் இருக்கு. கொஞ்சம் அக்கறையா டேட்டா கலெக்ட் பண்ணி, அனலைஸ் பண்ணி அக்கறையா எழுதினா  நல்ல வரவேற்பிருக்கும்.
12.வெறுமனே அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளான்னு பத்து பேரு விமர்சனம் எழுதின படத்துக்கே விமர்சனம் போடறது, பதினாறு பேர் கிழிச்ச மேட்டரையே கிழிக்க இறங்கறதுல்லாம் வீண் சாகசம்.
13.காமெடி,ட்ராஜடி, அங்கதம், வஞ்ச புகழ்ச்சி, உயர்வு நவிற்சியணி இப்படி எந்த ஸ்டைல்ல வேணம்னா எழுதுங்க. சின்ன சின்ன வாக்கியங்கள், சிம்பிள் வோர்ட்ஸ் போதும். அதை விட்டுட்டு பரிணாமம், அவதானம் அது இதுன்னு கஷ்டப்பட்டு படிக்கிறவுகளையும் கஷ்டப்படுத்தாதிங்க

( இன்னம் நிறைய சொல்ல வேண்டியது இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்)